11 ஜூன், 2010

செம்மொழி மாநாடு - ஏன் வரவேற்க வேண்டும்?

முதலில் தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து?

‘செம்மொழி’ என்ற பதத்துக்கான தகுதிகளாக பதினோரு விதிகள் தரப்பட்டிருக்கின்றன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு மற்றும் பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக்கோட்பாடு.

இவ்விதிகள் அனைத்தும் பொருந்தி வருவதாலேயே தமிழ் செம்மொழி எனும் தகுதிநிலையை அடைகிறது.

திராவிட மொழி குடும்பத்தில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 22. இதிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை மட்டுமே இலக்கியத் திறன் பெற்றவையாக அமைந்திருக்கின்றன. கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி உள்ளிட்ட மொழிகள் இலக்கியத்திறனற்று பேச்சு பயன்பாட்டில் இருக்கும் இதர மொழிகளாகும்.

இம்மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக தமிழ் இருக்கிறது. சீனம், ஹீப்ரூ, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை ஏற்கனவே இத்தகுதியைப் பெற்றவை. இன்று வழக்கில் இருக்கும் மொழிகளில் தமிழுக்கு போட்டியாக கருதப்படும் உயர்ந்த மொழிகளான பிரெஞ்சு (600 ஆண்டுகள்), மராத்தி (800 ஆண்டுகள்), வங்காள மொழி (1000 ஆண்டுகள்) ஆகியவற்றை ஒப்பிடும்போது, இவற்றைவிட 2000 ஆண்டுகள் கூடுதல் தொன்மை கொண்டதாக தமிழ் விளங்குகிறது.

தமிழின் தொன்மையையும், பெருமையையும் எடுத்துக்காட்ட நம் வசமிருப்பது சங்க இலக்கியங்கள். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இவ்விலக்கியங்களும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றன.

ஆனால் சங்க இலக்கியங்கள் எவை எவை என்ற தெளிவு நம் எல்லோருக்கும் இருக்கிறதா என்பது ஐயமே. ஐம்பெருங்காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட ஆகியவையே சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுகிறது. மொத்தமாக இவை மட்டும்தான் சங்க இலக்கியங்கள் என்று அறுதியிட்டு கூறிவிட முடியாது. சங்க காலத்தில் உருவாக்கப்பட்டவைகளில் இவை மட்டும்தான் நம்மிடம் இன்று எஞ்சி இருக்கிறது. ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி ஆகியவை நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும் சங்கத்தமிழ் இலக்கியங்களின் பட்டியல் :

தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல்.

எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு

பத்துப்பாட்டு : திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.

பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை.

கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இலக்கியங்கள் இந்தளவுக்கு வேறேதேனும் மொழியில் இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இத்தகைய காரணங்களை சுட்டிக்காட்டி பல்லாண்டுகளாக பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை ஓர் இயக்கமாகவே தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார்கள். பரிதிமாற்கலைஞரால் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை கலைஞரால் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு ‘செம்மொழி’ என்றொரு தனி சிறப்புப் பிரிவை தோற்றுவித்து தமிழை செம்மொழி என்று அறிவித்தது.

இதையடுத்து விருதுகள், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், ஆய்வு உதவித் தொகைகள், செம்மொழி தமிழ் உயராய்வு மையம் ஆகிய உட்பிரிவுகளை கொண்ட மத்திய அரசின் செம்மொழித் தமிழ்த் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழிலக்கியம், இலக்கணம், இசை, கல்வெட்டுகள் மற்றும் நாணங்கள் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது.

2007 ஆகஸ்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக இதற்காக ரூ.76.32 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இதுவரை என்னென்ன செய்திருக்கிறது?

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவை தொடர்புடைய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், பதிப்புகள் ஆகியவற்றை திரட்டுதல் ஆகிய பெரிய பணிகள் முழுமூச்சோடு நடந்துவருகிறது. தொல்காப்பியம், இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களின் பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்து, நூல்கள் வெளியிடப்பட்டு விடும்.

மணிப்பூரி, நேபாளி ஆகிய இருமொழிகளிலும் திருக்குறள் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. நற்றிணை, முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, நானாற்பது ஆகியவற்றின் மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் முடிக்கப் பட்டிருக்கிறது.

பண்டைக்கால தமிழ் இலக்கியங்களை மரபுவழி ஓசை ஒழுங்கோடும், இசையோடும் கற்பிப்பதற்கு குறுந்தகடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழ் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டுகள், நாணயங்கள் தொடர்பான 18 காட்சிப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் முதல் தொகுதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

தமிழகராதிகளில் இதுவரை இடம்பெறாத எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் (அளவைகள், ஆடு மாடுகள், நெல் வகைகள், மீன்பிடிப்புத் தொழில், நெசவுத்தொழில், மண்பாண்ட்த் தொழில், வேளாண்மை தொடர்பானவை) தொகுக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன.

கிட்டத்தட்ட பதினோராயிரம் நூல்களும், பல்வேறு ஓலைச்சுவடிகளின் மின்பதிப்புடன் கூடிய குறுந்தகடுகள் ஆய்வு செய்யும் மாணவர்களின் வசதிக்காக நூலகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

சுமார் ஐம்பது கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டு பல்துறை சார்ந்த அறிஞர்களின் சுமார் 1500 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 94 பிராமிக் கல்வெட்டுகளும் 37 வட்டெழுத்து கல்வெட்டுகளும் HD Video & High Resolution Still Image முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்நிறுவனத்தின் உதவியோடு பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் எனும் ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலமாக பல்வேறு அரிய சங்க காலத் தொல்லியல் சான்றுகள் (காசுகள், சூது பவள மணிகள், பளிங்கு மணிகள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள், மண் பாண்டங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் போன்றவை) எடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுமட்டுமின்றி செம்மொழி விருதுகள், ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்ட மேலாய்விற்கு நிதியுதவி என்று ஏராளமான விஷயங்கள் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இன்று செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறோம் என்று கிளம்பியிருக்கும் சிறுபான்மை கும்பலுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

இம்மாநாடு செம்மொழி தகுதி கிடைத்த மறுவருடமே நியாயமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது நடத்தப்படுவது என்பதே மிகவும் தாமதமானது. 1995ல் தஞ்சையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பிறகான சர்வதேச மாநாடு கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்படவேயில்லை. உலகத் தமிழ் ஆய்வுக் கழகமும் இதற்கான முன்னெடுப்பு எதையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.

கலைஞர் இம்மாநாட்டை அறிவித்தபோது, அது உலகத் தமிழ் ஆய்வுக் கழகம் மூலமாக அறிவிக்கப்படவில்லை என்றொரு சர்ச்சை எழுந்தது. முன்னதாக நடத்தப்பட்ட எட்டாம் உலகத் தமிழ் மாநாடு கூட தமிழக அரசால் – அதாவது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் - அறிவிக்கப்பட்டது என்பதை இங்கே நினைவுகூற வேண்டும். இம்மாநாட்டை உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா எதிர்ப்பதாக பரப்பப்படும் தகவலும் உண்மையல்ல. அவர் 2011ல் நடத்தவேண்டும் என்றே கேட்டுக் கொண்டார். இந்நிறுவனத்தின் பொறுப்புகளில் இருக்கும் 9 பேரில் 6 பேர் இம்மாநாட்டுக்கு இசைவு தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் முக்கியமானது.

2011ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அந்நேரத்தில் நடத்தப்படுவது உசிதமாக இருக்காது என்ற காரணத்தாலேயே 2010, சனவரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு ஜூன் மாதம் ‘செம்மொழி மாநாடு’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. அனேகமாக இந்த தலைப்பில் நடத்தப்படும் ஒரே மாநாடாக இதுதானிருக்கும் என்று தெரிகிறது. அடுத்து நடத்தப்பட்டால் அது 9வது உலகத் தமிழ் மாநாடாக இருக்கும். எனவே இப்போது நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான தனித்துவம் சிறப்பு வாய்ந்தது. ‘எங்கள் மொழியும் செம்மொழிதான்!’ என்று அழகுத்தமிழ் அரசாட்சி உலகுக்கு உரத்து தெரிவிக்கப் போகும் மாநாடு இது.

சங்க காலத்திலேயே உலகோடு பண்பாட்டு, வணிகத் தொடர்பு மையமாக விளங்கிய பகுதி கொங்குப் பகுதி என்பதால், அது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இடமாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

நாளைய வரலாறு தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்ததையும், அதற்காக ஒரு மாநாடு பிரம்மாண்டமாக கோவையில் நடந்ததையும்தான் பதிவு செய்யப் போகிறதே தவிர, சில்லறை எதிர்ப்புகளை அல்ல. வரலாற்றில் இடம்பெற போகும் மாநாட்டை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இதனாலேயே இருக்கிறது.

அண்மைக்கால தொல்லியல், வரலாறு, மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளையொட்டி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தமிழிலக்கிய பண்பாடு தொடர்பான புதிய ஆய்வாளர்களை இனம் கண்டு ஒருங்கிணைப்பதற்கும் இம்மாநாடு அவசியமாகிறது. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்திருக்கும் கணினி தொழில்நுட்பம், அதில் தமிழ் இடம்பெற வேண்டியதின் அவசியம் ஆகியவற்றை எடுத்துக்காட்டவும் தமிழ் கணினி தொடர்பான அரங்கு தனியாக நடைபெறுகிறது. தமிழைப் பொறுத்தவரை முக்கியமாக கருதப்படும் அறிஞர்கள் 95 சதவிகிதம் பேர் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க இசைவு தந்திருக்கிறார்கள்.

இம்மாநாட்டை எதிர்க்கும் ஓரிருவரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தோமானால் அரசியல் மட்டுமே காரணமாகிறது. இது கலைஞரால் நடத்தப்படும் மாநாடு என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே எதிர்க்கிறார்கள். இல்லையென்று அவர்கள் மறுத்தாலும் அடிநாதமான காரணம் இது மட்டுமே. கடந்த காலங்களில் இவர்கள் இணையங்களில் செய்துவரும் பரப்புரைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருவோர் இதை உணரலாம்.

“கடந்த ஆண்டு ஈழத்தில் பல்லாயிரம் பேர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ள துயரச்சூழலில் இந்த கொண்டாட்டம் தேவையா?” என்பதைப் போன்ற செண்டிமெண்டலான கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஆனால் இதே கேள்வியை முன்வைப்பவர்கள் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக தமிழ்விழா கொண்டாடுவார்களாம். இவர்கள் மொழியிலேயே சொன்னால் இழவு வீட்டில் பிரியாணி செய்து சாப்பிடுவார்களாம்.

அதுவும் எப்படி?

பிரியாமணி, லட்சுமிராய் போன்ற தமிழறிஞர்களை வைத்து எங்கள் விழாவுக்கு வாருங்கள் என்று இணையம் முழுக்க வீடியோ ஏற்றி பரப்புரை செய்வார்களாம். செம்மொழி மாநாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையா என்று கிண்டல் அடிப்பவர்கள் தங்கள் விழாவுக்கு ஹாரிஸ் ஜெயராஜையும், சாதனாசார்க்கத்தையும் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்களாம். விக்ரம், திரிஷாவென்று இன்னும் கூடுதல் கவர்ச்சியும் உண்டு.

அதாவது பொருளாதார மேன்மையை எட்டிவிட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஈழப்படுகொலைத் துயரத்தை மறக்க(?) சினிமா நட்சத்திரங்களோடு கொண்டாட்டம் போடலாமாம். போராடி பெற்ற செம்மொழித் தகுதியை கொண்டாட நினைக்கும் தமிழகத்தில் இருக்கும் சாமானியத் தமிழன் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமாம்.

நல்லா இருக்கய்யா இவங்க நாயகம்!

புறக்கணிக்கப்பட வேண்டியது மாநாடல்ல. தமிழ் மீது பற்று கொண்டவர்களாக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டு, அரசியல் காழ்ப்புணர்வோடு போலியாக செயல்படும் இதுபோன்ற கபடவேடதாரிகள்தாம்!

62 கருத்துகள்:

  1. நல்ல பதிவு! நன்றி தமிழ்மானம்!!

    பதிலளிநீக்கு
  2. அன்பரே செம்மொழி மாநாடு அவசியமா? என்றால் அவசியமில்லை என்று சிலர் சொல்லலாம்.

    ஆனால் செம்மொழி மாநாடு கொண்டாடப்படுவதில் தமிழர்களுக்கு மகிழ்ச்சி என்பதில் எந்த மாற்று கருத்தும் இருத்தலாகாது.

    இலங்கையில் தமிழர்களை கொன்றுவிட்டு இங்கு மாநாடா என்று கேட்பதும் கொஞ்சம் நெருடல் தான்.

    ஆனால் கலைஞரின் செம்மொழி பாடலில் மணக்கும் சினிமா வாசத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தி இருக்கலாம் என்பது என் கருத்து.
    அதை அழுத்தி சொல்ல மிக முக்கிய காரணம் மாநாட்டை பெரும் ஈடுபாட்டோடு முன்னின்று நடத்துபவர் கலைஞர்.


    "தமிழ் திரைப்பட துணை நடிகைகள் தமிழார்வ தொண்டு குழுமம்" என்று ஏதேனும் அமைப்பு தமிழ் மாநாடு நடத்தினால் இதை குறையாக யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள்.


    ஆனால் இங்கே முன்னின்று நடத்துபவர் கலைஞர்.

    அதனால் தான் அதில் சினிமா வாசத்தை குறைத்திருக்கலாம் என்று நான் பிரியப்படுகிறாஎன்.ஒருவேளை குறைத்திருந்தால் கலைஞரை இன்னும் நிறைய பேர் நேசித்திருப்பார்கள் என்பதில் ஐய்யமில்லை.

    மற்றபடி அமெரிக்க ஐரோப்ப தமிழ் மாநாடுகளில் கவர்ச்சி அம்சங்கள் இருப்பதால் கலைஞரும் கவர்ச்சியை கலந்து கட்டலாம் என்று ஞாயப்படுத்துவது கலைஞரை நாம் வைத்திருக்கும் அந்தஸ்திலிருந்து கீழ் இறக்கி காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  3. விசா!

    ஆஸ்கர் வென்ற முதல் தமிழன் என்ற அடிப்படையில் செம்மொழி மாநாட்டுக்கான அடையாளப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.

    என் தனிப்பட்ட ரசனை அடிப்படையில் அப்பாடல் நன்றாக வந்திருப்பதாகவே கருதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  4. //ஆஸ்கர் வென்ற முதல் தமிழன் என்ற அடிப்படையில் செம்மொழி மாநாட்டுக்கான அடையாளப்பாடல் ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறேன்.//


    //என் தனிப்பட்ட ரசனை அடிப்படையில் அப்பாடல் நன்றாக வந்திருப்பதாகவே கருதுகிறேன்.
    //

    என் கணிப்பும் அதுவே

    என் ரசனையும் அதுவே.

    ஆனால் முன்னிறுத்தப்பட இன்னும் நிறைய பேர் இத்தமிழ் சமுதாயத்தில் இருக்கிறார்கள். அவர்களை முன்னிறுத்தியிருந்தால் கலைஞரை அவர்கள் நன்றியோடு நினைவுகூர்ந்திருப்பார்கள். அதே சமயம் கலைஞருக்கும் அது மனநிறைவை தந்திருக்கும்.

    ரகுமானை வைத்து இசை அமைத்ததை நான் குறையாக சொல்லவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.

    எனிவே மிக அருமையான கட்டுரை :)

    பதிலளிநீக்கு
  5. //‘செம்மொழி’ என்ற பதத்துக்கான தகுதிகளாக பதினோரு விதிகள் தரப்பட்டிருக்கின்றன//

    யார் அல்லது எந்த அமைப்பு இதை வரையறுத்தது என்று தெரிந்து கொள்ளலாமா? செம்மொழி (Classical Language) என்பதற்கு ஜார்ஜ் ஹார்ட் சொன்ன விளக்கம் தவிர வேறு அறிந்திலன் என்பதாலேயே கேட்கிறேன். அவர் இப்படிச் சொன்னதாகவும் ஞாபகம் இல்லை.

    பதிலளிநீக்கு
  6. எழுத்தாளர் சி.எஸ்.கே.!

    ஜார்ஜ் ஹட்டின் விளக்கம் மட்டுமே விக்கிப்பீடியாவில் இருப்பதால் இதுபோல கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    அவர் ஒரு நான்கைந்து பாயிண்டு மட்டுமே சொல்லியிருப்பார். அந்த பாயிண்டுகளும் இந்த பதினொன்று பாயிண்டுகளுக்குள்ளாகவே இருக்கும்.

    உலகளாவிய அடிப்படையில் இந்த பதினோரு பாயிண்டுகள் இருப்பதாக அறிகிறேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தபோது இந்த பதினோரு பாயிண்டுகளையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சொல்லியிருந்ததாக நினைவு.

    பதிலளிநீக்கு
  7. உங்கள் கட்டுரையில் எந்த தப்புமில்லை, ஆனால்

    //பண்டைக்கால தமிழ் இலக்கியங்களை மரபுவழி ஓசை ஒழுங்கோடும், இசையோடும் கற்பிப்பதற்கு குறுந்தகடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது //

    லக்கி ரகுமானுக்கு செம்மொழிப் பாடலுக்கு இசை அமைக்க முன்னர் இந்த குறுங்தகடைக் காட்டி இருக்கலாம். செம்மொழிப் பாடலுக்கான இசை தமிழிசையா? எமக்கென இசை வடிவம் இருக்கும் போது இசைப்புயல் ஏன் மேற்கத்திய இசையில் செம்மொழிப் பாடலை இசை அமைத்துக் கொல்லவேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. வந்தியத்தேவன்!

    ஏ.ஆர்.ரஹ்மான் செம்மொழிப் பாடலுக்கு இசை அமைத்ததால் செம்மொழி மாநாட்டை புறக்கணித்து விடலாம் என்கிறீர்களா? :-)

    செம்மொழியை ’உலகமயமாக்க’ ஏ.ஆர். அதுபோல இசையமைத்திருக்கலாம். உள்ளூர் ஆட்களை இப்பாடல் அவ்வளவாக கவரவில்லை. ஆனால் என்.ஆர்.ஐ. தமிழர்கள் பலரும் நல்லாத்தானே இருக்கு என்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  9. நல்ல அரசியல் கட்டுரை.

    பதிலளிநீக்கு
  10. யுவகிருஷ்ணா 2:20 PM, June 11, 2010
    வந்தியத்தேவன்!

    ஏ.ஆர்.ரஹ்மான் செம்மொழிப் பாடலுக்கு இசை அமைத்ததால் செம்மொழி மாநாட்டை புறக்கணித்து விடலாம் என்கிறீர்களா? :-)

    குருவே நான் எங்கே மாநாட்டை புறக்கணிக்கச் சொல்லியுள்ளேன். அம்மா போல் ஆராயாமல் அறிக்கை விடாதீர்கள். என்னுடைய ஆசிரியர் ஒருவர் செம்மொழி மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்கவுள்ளா (திருநெல்வேலித் தமிழர் லண்டனில் வசிப்பவர்).

    தமிழ்மொழியின் புகழை யார் பரப்பினாலும் பெருமைப்படவேண்டும்.

    குச்பு போன்ற உடன்பிறப்பிகளை மேடை ஏற்றி மாநாட்டை கொச்சைப் படுத்தமாட்டார்கள் என நினைக்கின்றேன்.

    உங்களின் உலக மயமாக்களுடன் உடன்பட்டாலும் சில இடங்களில் மொழியைப் பிரிப்பதை சகிக்கமுடியவில்லை. குறிப்பாக பிளேசியும் இன்னொரு பெண்ணும் பாடல் வரிகளைக் கொல்லுகின்றார்கள்.

    இன்னொரு கருத்து:
    ரகுமான் மூன்று தலைமுறை பாடகர்களைப் பாடவைத்ததுபோல் மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் என மூவரும் இணைந்து இசை அமைத்திருக்கலாம். மெல்லிசை மன்னர் ஒப்புக்கொண்டாலும் இசைஞானி சம்மதிருக்க சந்தர்ப்பம் மிகவும் குறைவு ஹிஹி.

    பதிலளிநீக்கு
  11. \\Blogger அதிஷா said...

    நல்ல அரசியல் கட்டுரை.\\

    நல்ல அரசியல் பின்னூட்டம்!

    பதிலளிநீக்கு
  12. அவசரம் அவசரமாக தமிழுக்கு செம்மொழி மாநாடு எடுத்து கௌரவிக்க முனைவதென்பது உண்மையில் தமிழ்மொழி மீதான கலைஞரின் அபிமானம் அல்லது பற்று காரணம் என்பதை நம்ப ஈழத்தமிழர் முட்டாள்களா?. கடந்த வருடம் இடம்பெற்ற ஈழத்தமிழர் மீதான வஞ்சக அணுகுமுறைகளால், உலக தமிழர்கள் மத்தியில் உருவாகியுள்ள அதிருப்தி,கசப்பு உணர்வுகளை திசை திருப்ப அல்லது வரலாற்று பழிகளில் தப்பிக்கவே அவசரமாக மாநாடு ஏற்பாடு செய்யப்படுகிறது. உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா கேட்டுக்கொண்டதன் படி 2011 இல் மாநாட்டை நடத்தாமல் இப்பொழுது நடத்துவதால் மட்டும் அப்படி என்ன பெரிய கௌரவத்தை தமிழ் மொழிக்கு வழங்கி விடப்போகிறார்கள். மாநாட்டின் மீதோ தமிழ் மொழி மீதோ எங்கள் யாருக்கும் வெறுப்பு இல்லை.

    பதிலளிநீக்கு
  13. //திருக்குறல்//

    கொஞ்சம் அவசரமா தட்டச்சிட்டீங்களோ..?

    பதிலளிநீக்கு
  14. பிரகாஷ்!

    இதில் அவசர அவசரமென்பது எங்கு வருகிறது? 2004ல் அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்கு 2010ல் மாநாடு என்பது அவசர அவசரமா?

    ஒருவேளை இம்மாநாட்டை 3010ல் நடத்தினால் மகிழ்ச்சியடைவீர்களோ?

    கடந்தாண்டு ஈழத்தில் நடைபெற்றவை மோசமானவை. தமிழினம் நிரந்தரமாக துயர்கொள்ளத்தக்கவைதான். சந்தேகமே இல்லை.

    அதற்காக எதையுமே செய்யக்கூடாதா?

    ஈழத்தமிழறிஞர்கள் பலரும் மாநாட்டில் கலந்துகொள்கிறார்களே? அவர்களை மொழியை விட்டு ஒதுக்கி வைத்து விடுவீர்களா?

    பதிலளிநீக்கு
  15. உங்கள் மிகச் சிறந்த 'நச்' கட்டுரைகளில் இது முதன்மை பெறுகிறது!!

    பதிலளிநீக்கு
  16. @PRAKASH:
    தாங்கள் இக்கட்டுரையை மீண்டும் ஒருமுறை படிக்க வற்புறுத்துகிறேன்!!

    பதிலளிநீக்கு
  17. நல்லவேளையாக சிங்கையில் மணற்கேணி விருது விழா நடத்தினார்கள் - அவர்கள் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க கூடாது என்று கூறாமல் சென்றீர்களே :)-

    பதிலளிநீக்கு
  18. மணிகண்டன்!

    எல்லா இடத்திலும் எல்லா கும்மாளமும்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் செம்மொழி மாநாடு எனும்போது மட்டும் நமக்கு ஈழத்துயரம் நினைவுக்கு வந்துவிடும்!

    பதிலளிநீக்கு
  19. //எழுத்தாளர் சி.எஸ்.கே.!//

    இந்த வார்த்தைகளில் இருப்பது மொழிபெயர்ப்பு மட்டுமே, வன்மம் இல்லை என்று நம்புகிறேன்.

    //ஜார்ஜ் ஹட்டின் விளக்கம் மட்டுமே விக்கிப்பீடியாவில் இருப்பதால் இதுபோல கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.//

    மேலே சொன்ன "நம்புகிறேன்" என்பதை வாபஸ் பெற வைத்து விட்டீர்களே. விஷ‌யம் நான் விக்கிப்பீடியாவை மட்டுமே வாசிப்பவனா இல்லையா என்பதல்ல. நீங்கள் சொல்வது ஆதாரபூர்வமானதா என்பதை அறிந்து கொள்ளவே நான் பின்னூட்டம் இட்டேன் - உங்களைப் பற்றிக் குறைத்து மதிப்பிட்டு அல்ல.

    அதுவும் அப்படி ஆதாரபூர்வமானதெனில் பிறரிடம் அவ்விஷயத்தைப் பகிர்ந்து கொள்வதும், அது பற்றிய எனது அறிவு வங்கியையும், அது தொடர்பான நிலைப்பாடுகளையும் தரமுயர்த்திக் கொள்வதும் நான் எனது நோக்கம்.

    வீண் வம்புக்கு அல்ல.

    //அவர் ஒரு நான்கைந்து பாயிண்டு மட்டுமே சொல்லியிருப்பார். அந்த பாயிண்டுகளும் இந்த பதினொன்று பாயிண்டுகளுக்குள்ளாகவே இருக்கும். உலகளாவிய அடிப்படையில் இந்த பதினோரு பாயிண்டுகள் இருப்பதாக அறிகிறேன்.//

    இன்னமும் நீங்கள் "லாம்" என்கிற தொனியிலேயே பேசுகிறீர்க‌ளே தவிர, நான் கேட்டதற்கு நெற்றிப்பொட்டில் அடித்தாற் போல் இது தான் சங்கதி என்ற பதில் இல்லை.

    நாளைக்கே நான் செம்மொழி அந்தஸ்துக்கான 25 விஷ‌யங்கள் என்று பட்டிய‌லிட்டு விட முடியுமா? இன்ன authenticated அமைப்பு அல்லது ஆசாமி சொன்னது என்று ஆதாரம் வேண்டாமா?

    //தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்தபோது இந்த பதினோரு பாயிண்டுகளையும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சொல்லியிருந்ததாக நினைவு.//

    நினைவிலிருந்து இவ்வாறு பட்டியலிட்டு பதினோரு விஷயங்களை எழுதுகிறீர்கள் என்பது கவனித்துப் பாராட்டத்தக்கது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  20. எழுத்தாளர் சி.எஸ்.கே!

    உங்களோடு பெரிய அக்கப்போராக போகிறது. Reference இல்லாமல் யாரும் எதையும் எழுதிவிட முடியாது. நீங்கள் மட்டுமல்ல, நானும் உடனடி ரெஃபரென்ஸுக்கு விக்கிப்பீடியாவைதான் நாடியாக வேண்டும்.

    ஆயினும் இக்கட்டுரைக்கு வேறு சில ரெஃபரென்ஸ்களை எடுத்திருக்கிறேன். ஒரு வாரக்கால உழைப்பும் இருக்கிறது. தொழில் ரகசியம் எதையும் இணையத்தில் என்னால் பகிர்ந்துகொள்ளமுடியாது.

    பத்திரிகையில் வரும் ஒவ்வொரு கட்டுரைக்கும் போய் authentication கேட்டுக்கொண்டு இருங்கள். பத்திரிகைகள் பிழைத்துவிடும் :-)

    பதிலளிநீக்கு
  21. \\ எல்லா இடத்திலும் எல்லா கும்மாளமும்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் செம்மொழி மாநாடு எனும்போது மட்டும் நமக்கு ஈழத்துயரம் நினைவுக்கு வந்துவிடும்! \\

    ஈழ தெய்வம் அம்மையாருக்குக் கூட -பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிந்த பின்னர்- ஈழத்துயரைப் பற்றிய நினைவு வந்த ஒரே தருணம், செம்மொழி மாநாட்டை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட தருணம்தானே!........

    பதிலளிநீக்கு
  22. //ஆயினும் இக்கட்டுரைக்கு வேறு சில ரெஃபரென்ஸ்களை எடுத்திருக்கிறேன். ஒரு வாரக்கால உழைப்பும் இருக்கிறது. தொழில் ரகசியம் எதையும் இணையத்தில் என்னால் பகிர்ந்துகொள்ளமுடியாது.//

    நிச்சயம் நீங்கள் இதற்கு உழைத்திருக்க வேண்டும் என்பது படிக்கும் போதே புரிந்து விட்டது. உங்கள் வேலை விஷயங்களைப் பொது ஊடகத்தில் பேச முடியாது என்பதும் புரிகிறது. எந்த வகையிலும் உங்களது படைப்பில் குற்றம் காண்பது என் நோக்கமே இல்லை என்பதை மீண்டுமொரு முறை இங்கே ப‌திவு செய்ய விரும்புகிறேன்.

    என்னைத் தெளிவாக்கிக் கொள்ளவே கேள்வி கேட்டேன்.

    //பத்திரிகையில் வரும் ஒவ்வொரு கட்டுரைக்கும் போய் authentication கேட்டுக்கொண்டு இருங்கள். பத்திரிகைகள் பிழைத்துவிடும்//

    பெரிய வணிக பத்திரிக்கைகள் மற்றும் சிறுபத்திரிக்கைகள் எதிலும் இது போன்ற official-ஆன விஷய‌ங்களில் போகிற போக்கில் ஒரு தகவலைச் சொல்லிச் செல்ல மாட்டார்கள் என்றே நினைக்கிறேன் (கிசுகிசுக்கள் தனி). நான் படித்த வரையிலும் அப்படித் தான் இருந்திருக்கிறது. அதனாலேயே உங்களுடையதிலும் அதை எதிர்பார்த்தேன். மற்றபடி, பத்தியின் உரிமையாளர் என்கிற முறையில் நீங்களே ரெஃபெரன்ஸ் தேவையில்லை என்று முடிவு கட்டி விட்டீர்களானால், அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது.

    என் வார்த்தைகள் எங்காவது தடித்திருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா4:33 PM, ஜூன் 11, 2010

    19 லச்சம் ஹிட்சுக்கு வாழ்த்துக்கள் வாத்தியார்

    பதிலளிநீக்கு
  24. கடைசி சில பத்திகளில் தெரியும் நக்கல் இல்லாமல் இருந்திருக்கலாம். மேலதிக தகவல்களும், சிறப்பான நடையும் கட்டுரைக்கு பலம் சேர்க்கின்றன.

    உங்களுக்கு இருந்த அக்கறையும், உழைப்பும் ரகுமானிடம் இல்லாமல் போனதாக உனர்கிறேன், அந்தப் பாடலை கேட்கும்போது.

    பதிலளிநீக்கு
  25. பிற உலக மொழிகளோடு ஒப்பிட்டுள்ளீர்கள், நடுவன் அரசு இந்தியாவை மட்டுமே கட்டுபடுத்த முடியும், அது வ்ழுங்கும் சான்றிதழ் உலக அரங்கில் செல்லுமா!?, அகில உலகமும் ஏற்று கொள்ளும் வண்ணம் நாம் தமிழை செம்மொழியாக்கவில்லையா இன்னும்!?

    ஃபெட்னா அரசியல், ஏற்கனவே மூக்கை நுழைத்து காயப்பட்டு விட்டேன், அதனால் நோ கமென்ட்ஸ்!

    பதிலளிநீக்கு
  26. வால்பையன்!

    இந்திய மொழிகளில் சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் செம்மொழிகளாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  27. கருணாநிதியை தவிர யாரும் செம்மொழி மாநாடு நடத்த தகுதி வாய்ந்தவரே... இனத்தை அழித்து மொழியை காப்பாற்றுவதாக சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்...

    பதிலளிநீக்கு
  28. லக்கி,
    உங்கள் கருத்தோடு உடன் படுகிறேன்!!!

    செம்மொழி மாநாடுக்கு என் ஆதரவு!!!

    பதிலளிநீக்கு
  29. செம்மொழி பாடல் சிறப்பாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மெட்டு விடயத்திலும், வார்த்தைகள் தெளிவாகக் கேட்குமாறு இசையமைப்பதிலும் ரஹ்மான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  30. கொங்குநாடு 8 நூற்றாண்டுகளாக தமிழின் சார்பெழுத்தாய் உயிர்மெய்யை வகைப்படுத்துகிறது. முதலில் பவணந்தி அடிகள், பின்னர் பெரியார், புலவர் குழந்தை, வாசெகு, கொடுமுடி சண்முகம் அண்னன், புலவர் இராசு,
    வேந்தன் அரசு, நான், ... என மிகப்பலர்.

    அதுபற்றி இலக்கண வரலாறு, ...மேலும் அறிய:
    http://groups.google.com/group/santhavasantham/msg/527f5bad99023e62

    கோவையில் பெரியார் சீர்மை எழுத்தும் வேண்டுவோர் பயன்படுத்தக் கணினியில் இருத்தலின் அவசியத்தை வலியுறுத்துவோம்.

    கோவையில் சந்திப்போம்!

    நா. கணேசன்

    பதிலளிநீக்கு
  31. பெயரில்லா9:29 PM, ஜூன் 11, 2010

    /*
    இந்திய மொழிகளில் சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் செம்மொழிகளாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.
    */

    ஆதாரம்?
    சோனியா காந்தியிடம் ஒரிஜினல்'உம் கருணாநிதியிடம் காப்பி'உம் இருக்கிறதோ?
    இதற்காக ஒரு தனி category create பண்ணி தான் தமிழை அதில் சேர்த்திருகிரார்கள், தமிழோடு பிற இந்திய மொழிகள் சிலவற்றையும் சேர்த்தார்கள் (ஏற்கனவே இருக்கும் எந்த ஒரு தகுதியான categoryilum சேர்க்கப்படவில்லை என்பதை உணர வேண்டும், அதற்கு காரணம் மொழிகலப்பு)

    இதற்காக தாங்கள் தான் பெருமை பட்டு கொள்ளவேண்டும்...

    பதிலளிநீக்கு
  32. அற்புதமான கட்டுரை தோழர்

    பதிலளிநீக்கு
  33. பெயரில்லா11:19 PM, ஜூன் 11, 2010

    தமிழ் வாழட்டும் தமிழன் எல்லாம் சாட்டும்! தானைத் தலைவன் வாழ்க! அன்னை சொனியா வாழ்க! மாநாட்டில் செம்மொழித் தமிழ் பற்றி உரையாற்ற வரும் தங்கபாலு, சிறிதர் வாண்டையார் வாழ்க!

    டி.அருள் எழிலன்

    பதிலளிநீக்கு
  34. 'அட ஆமாம்ல’ என தோணும்படியான எழுத்து. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. //நா. கணேசன்
    நீங்கள் கொடுத்த இணைப்பில் உங்கள் கட்டுரையை படித்தேன். மிக நன்று.

    ஓர் ஐயம் ,
    பண்டைய தமிழ் எழுத்துக்களில் ஐநூற்று அறுபது உயிர்மெய் (560)எழுத்துக்கள் இருந்தன எனவும், அவை பதினாறு (16) உயிர் எழுத்துக்களில் இருந்து (35) மெய்யெழுத்துக்கள் மீதேறி புணர்ந்தன எனவும் அவை தற்போதான 'வட்டேழுத்துக்கள்' போலல்லாமல் 'சதுர எழுத்துக்களின்' காலம் எனவும் ஒரு நூலில் படித்தேன்,
    மேலும்
    இதற்கான குறிப்புக்கள் பிற்காலத்தில் எழுதப்பட்ட சில நூல்களில், குறிப்பாக திருமூலர் 'திருமந்திரத்திலும்' உள்ளது எனவும் படித்தேன்.

    இது பற்றியும் 'சந்த வசந்தத்தில்' விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  36. அன்பின் யுவகிருஷ்ணா,
    பயனுள்ள தகவல்கள்.
    இந்தக் கட்டுரையையும் பின்னூட்டங்களையும் வாசித்த பின்பு எழுந்த என் மன உணர்வுகளைப் பதிவிட விரும்புகின்றேன்.
    ஐரோப்பியா, அமெரிக்கா, ஈழம், இந்தியா என்று பாகுபாடற்று, உலகத் தமிழர்கள் பெரும்பாலானோர் களியாட்டக் கலாச்சாரத்துக்கு மாறிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில், தமிழின் தொன்மையை விளம்ப எடுக்கப் படுகின்ற மானாடு ஐயம் திரிபற, காலத்தின் தேவை.
    செம்மொழிப் பாடல் இனிக்கிறது. ஆனாலும், பாடலின் காணொலி இறுதியில் கருணாநிதியைப் பார்க்கும் போது தான், பாடல் கசக்கிறது.
    அவரது தமிழ்ப் புலமைக்கு தலைவணங்குகிறேன்.
    ஆனால், பெண்சிங்கம் படத்தின் இளமை ததும்பும் வசனகர்த்தாவும் அவர் தான்.
    குறுகிய நேர கின்னஸ் சாதனை உண்ணாவிரத கபட வேடதாரியும் அவர் தான்.
    தமிழர் படுகொலைக்கு அலுவலகத்திலிருந்தே கடிதம் அனுப்பி விட்டு, வாரிசுகளின் பதவிக்காக விமானமேறி டெல்லிக்கு போகின்ற ஒரு கீழ்த்தரமான அரசியல்வாதியாகவே உலகத்தமிழர்களுக்கு அவர் தெரிகிறார்.
    மானா‌ட்டை அரசியலாக்கி, தமிழர்களின் தலைவராக முடிசூடிக் கொள்ளவே அவர் விளைகிறார்.
    அவரது இந்தப் பகற்கனவை விடுத்து, மானாடு மிகப் பயனுள்ள ஒன்று.

    பதிலளிநீக்கு
  37. உலகத் தமிழ் மாநாடுகளை அறிவிக்கும் "அதிகாரம்" உள்ள (ஜப்பானில் இருக்கும்) அமைப்பு என்ன சொன்னது, அதிலே எத்தனை பேர் மாநாட்டை ஆதரித்தார்கள் என்ற தகவல் புதியது. நன்றி.

    ஜனவரியில் மாநாடு நடத்தப்படுவதாக இருந்தபோது சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக அல்ல, பல்வேறு தரப்பினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால்தான். போதிய கால அவகாசம் அளிக்காமல் மாநாடு கூட்டுவது முழுமையான, விரிவான ஆய்வுக் கட்டுரைகள் வருவதற்குத் தடையாக இருக்கும், வெறும் கலைஞர் புகழ்மாலைகளோடு முடிந்துவிடும் என்பதால் அந்த எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதன் பிறகுதான் மாநாடு ஜூன் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது.

    புறக்கணிக்கப்பட வேண்டியது மாநாடு அல்ல, அரசியல் காழ்ப்போடு இதற்குத் தெரிவிக்கப்படும் எதிர்ப்புகளும்தான என்பது சரி. அதே போல் அரசியல் ஆதாய நோக்கங்களுக்காக மாநாட்டை நடத்தும் ஏற்பாடுகளும் விமர்சனத்துக்கு உட்பட வேண்டியவையே.

    செம்மொழி உண்மையிலேயே மக்கள் மொழியாக நிலைத்திருப்பதற்கு அரசியல், பண்பாடு, சமுதாயம், நீதித்துறை, நாடாளுமன்றம், அரசாங்கம், கல்வி, பொருளாதாரம் இன்னபிற துறைகளில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற விவாதங்கள், வழிமுறைகள் ஆகியவையும் மாநாட்டில் வரவேண்டும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தோழர்கள் அந்த அணுகுமுறையோடுதான் பங்கேற்கிறார்கள். அதே போல் வேறு பலரும் பங்களிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  38. தமிழை செம்மொழி என்று இந்திய அளவில் அறிவித்தார்களா?இல்லை உலகளவில் அறிவித்தார்களா? செம்மொழி அறிவிப்பால் என்ன உயர்வைக் கண்டோம் நாம். ஆங்கிலம் கலக்காமல் பேச முடியுமா எம்மால்.
    எம் இனம் அழிந்து கொண்டிருக்கையில் வாய் பொத்தி வேடிக்கை பார்ப்போர் செம்மொழி பற்றி மார் தட்டிக்கொள்கின்றார்கள்.

    பதிலளிநீக்கு
  39. நீங்கள் அதில் கலந்து கொள்வது
    முழுக்க முழுக்க உங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு
    உரிய ஒரு விஷயம் . . .

    அதை நியாயப்படுத்த ஏன் இப்படி
    மெனக்கெடுகிறீர்கள் ?

    பதிலளிநீக்கு
  40. பெயரில்லா9:41 AM, ஜூன் 12, 2010

    ஈழத்தாயே தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தும் உரிமை பெற்றவர். அவரின்றி செம்மொழி மாநாடா? அய்யகோ. என் தாய்த்தமிழே இம்மாநாட்டை ஏற்காது.

    பதிலளிநீக்கு
  41. கிருஷ்ணா தெரியாதவங்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கலாம். தெரிந்தே உங்கள மாதிரி கருணாநிதிக்கு பல்லக்கு தூக்குபவர்களை திருத்த முடியாது.

    பதிலளிநீக்கு
  42. ஸ் அப்பா தாங்கமுடியவில்லை. அல்லாத்துக்கும் கருணாநிதிதான் காரணம் என்று கூப்பாடு போடும் மக்களை கண்டால் செம காமெடியாக இருக்கின்றது. அவரால் எதுவும் செய்ய முடியாது என்பது ஊர் அறிந்த விஷயம். மத்திய அரசு இந்த பிரச்சணையில் உறுதியாக இருந்தது. அப்படி இருக்க துரோகி etc etc. Too muchபா.

    முதலில் இலங்கையில் இருக்கும் தமிழர்களை ஒரே குரலில் பேச வையுங்கள். பிறகு தமிழ்நாட்டில் இருக்கும் துரோகிகளை பற்றி பேசலாம்.

    பதிலளிநீக்கு
  43. \\ Blogger வெண்தாடிதாசன் said...

    ஸ் அப்பா தாங்கமுடியவில்லை. அல்லாத்துக்கும் கருணாநிதிதான் காரணம் என்று கூப்பாடு போடும் மக்களை கண்டால் செம காமெடியாக இருக்கின்றது. அவரால் எதுவும் செய்ய முடியாது என்பது ஊர் அறிந்த விஷயம். மத்திய அரசு இந்த பிரச்சணையில் உறுதியாக இருந்தது. அப்படி இருக்க துரோகி etc etc. Too muchபா.

    முதலில் இலங்கையில் இருக்கும் தமிழர்களை ஒரே குரலில் பேச வையுங்கள். பிறகு தமிழ்நாட்டில் இருக்கும் துரோகிகளை பற்றி பேசலாம். \\

    அய்யா! இப்படியெல்லாம் பேசினால், உடனடியாகத் தமிழ்த் துரோகிப் பட்டம் கட்டி விடுவார்கள்! சூதானம்.....

    பதிலளிநீக்கு
  44. பெயரில்லா3:11 PM, ஜூன் 12, 2010

    அய்யோ, உலகத்த பொரட்டுறதுக்கு நெம்புகோலோடு சுற்றிக்கொண்டு திரிபவர்கள் எல்லாம் செம்மொழி மாநாட்டினை புறக்கணித்தால் பொரட்டுற நாள் தள்ளிப் போகாதோ - பொரட்டுறத தள்ளிப் போடவேண்டாமென்று தோழர் ! லக்கி சார்பாக வேண்டி விரும்பி கேட்டு கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

    முகமூடி பேரவை
    கன்னிகைப்பேர் (சுத்த தழிழில் கன்னிப்புத்தூர்)

    பதிலளிநீக்கு
  45. Well researched article. The post was not only well researched but also well communicated. A simple example: Doordarshan Podhigai in the midst of its night 8.15 news was telecasting interview about the Classical Tamil Conference. With due respects to the person being interviewed and his rich contribution to Tamil, let me be frank to say that the interview was boring to me. Added to this it was a channel switch from another channel where the climax was about to come at the end. Everyone in the house could not understand what was being conveyed in the interview. May be due to his old age, we ordinary human beings at house could not grasp what he wanted to convey. Hence, the channel was switched back to the film for others and I started reading your post on why we should welcome the conference. I generally read your posts like vettaikaran film review, anushka photo etc and the interesting comments thereon especially Madipakkam (as I was then working at Pallikaranai) but you have proved that whatever be the subject, you have a unique way of getting the message reach the readers. It only shows the interest you have in whatever you do! Aakkam adharvinai chellum asaivilla ookkam udaiyan uzhai.
    Congratulations and reach still greater heights! - Palai R Ashok rajashokraj@yahoo.com (Also tell me how to write comments in Tamil)

    பதிலளிநீக்கு
  46. 1. தமிழ் செம்மொழி என்பதிலோ, தமிழுக்கு மாநாடு நடத்துவதிலோ யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது.

    2. 2009ம் ஆண்டிலும் அதன் பிறகும் தொடர்ந்து தமிழ் ஈழத்தில் நடந்து வரும் இனப் படுகொலைகளை, இன அழிப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்காமல் தமிழ் நாட்டில் அதிகாரம் செய்து கொண்டிருக்கும் கருணாநிதிக்கு 'உலகத் தமிழ்', 'செம்மொழி தமிழ்' என்று மாநாடு நடத்த வெட்கமாக இருக்க வேண்டும்.

    3. அப்படியே 'அன்றைக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, கையாலாகாதவனாகத்தான் இருக்க முடிந்தது. ஏதாவது செய்திருந்தால் ஜெயலலிதா ஆட்சி அமைத்திருப்பார். அதனால் நான் தொடைநடுங்கியாக இருந்து விட்டேன்' என்று சொன்னால் அந்த வெட்கத்திலாவது இது போன்று 'உலகத் தமிழ்' மாநாடு என்று நடத்தத் துணியக் கூடாது.

    புறக்கணிப்பும், எதிர்ப்பும் தமிழுக்கும் மாநாட்டுக்கும் இல்லை. லக்கிலுக் தெளிவாகச் சொல்வது போல உலகத் தமிழினத்துக்கு பச்சைத் துரோகம் செய்த கருணாநிதி நடத்துவதற்குத்தான் புறக்கணிப்பு.

    பணமும், அதிகாரமும், ஊடக ஆதிக்கமும் தாரை தப்பட்டைகளோடு சத்தம் போட்டாலும், நேர்மையுடனும் உண்மையுடனும் ஒரு சிலராவது தமது உணர்வுகளை பதிவு செய்வது அவசியம் என்ற நோக்கில்தான் இந்த புறக்கணிப்பு பதிவுகள்.

    வரலாற்றில் நாமெல்லாம் புழுக்களாக பதிவு செய்யப்பட்டாலும் கொஞ்சம் துடித்தோம் என்று யாராவது புரிந்து கொள்ளட்டும்.

    பதிலளிநீக்கு
  47. /*
    இந்திய மொழிகளில் சமஸ்கிருதம், தமிழ் இரண்டும் செம்மொழிகளாக உலகளவில் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.
    */
    Are you sure of this?. what about kannada and telugu?

    wikipedia says
    In 2004, the Government of India declared that languages that met certain requirements could be accorded the status of a "Classical Language in India".[17] Languages thus far declared to be Classical are Tamil (in 2004),[18] Sanskrit (in 2005),[19] Kannada (in 2008), and Telugu (in 2008).[20]

    pls see this link s well

    http://pib.nic.in/release/release.asp?relid=44340

    பதிலளிநீக்கு
  48. பத்திரிகையில் வரும் ஒவ்வொரு கட்டுரைக்கும் போய் authentication கேட்டுக்கொண்டு இருங்கள்....

    எழுத்தாளர் CSK பேசாம சுகுணா திவாகரை கேளுங்க, ஆதாரம் என்ன இந்த கட்டுரையோட டிராப்ட் கூட கிடைக்கும் :)

    பதிலளிநீக்கு
  49. லக்கி,

    செம்மொழி பற்றி பதிவு அருமை...

    ஆனால் அரசியலை தவிர்த்திருக்கலாம்... அது கட்டுரையின் திசையை மாற்றி விடுகிறது...

    மாநாட்டில் கலந்து கொள்வதும்... தவிர்ப்பதும்... அவரவர் விருப்பம்... உணர்வு...

    எவரின் தமிழின உணர்வையும்... தமிழ் உணர்வை கொண்டு குறைத்து காட்ட தேவையில்லை...

    ரகுமானின் இசை... தமிழை குதறி போட்டிருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது...

    நான் கண்ட சில தமிழ் அறிஞர்களின் உழைப்பும், தமிழ் பல்கலைக் கழக ஆராச்சி மாணவர்களின் உழைப்பும் இதில் இருப்பதால்... மாநாட்டை பற்றி குறை சொல்ல விரும்ப வில்லை...

    உலக தமிழ் சங்கத் தலைவர் நெபுரு... இந்த மாநாட்டிற்கான எதிர்ப்பை சொன்ன போது... 2011 சனவரிக்கு பிறகு நடத்த சொன்னது ஒரே காரணம் மட்டுமே... கலைஞருக்கு எதிரான ஒன்று...

    மற்ற 5-6 காரணங்களில் ஜெயலலிதாவை... 1995இல் நடத்தை கேடு கெட்ட கூத்தைப் பற்றி நெபுரு காரி உமிழ்ந்திருக்கிறாரே? ஆனால் கேவலமான ஊடங்கள் அதையெல்லாம் மறைத்து விட்டன... அதையும் பதிவு செய்திருக்க வேண்டாமா?

    பதிலளிநீக்கு
  50. அன்புள்ள மா.சிவக்குமார்!

    1. இதையாவது ஒப்புக் கொண்டீர்களே? நன்றி.

    2. 2006 தேர்தலில் ஜெ. ஆட்சிக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்த நீங்கள் இப்படி பேசுவதுதான் நியாயமாக இருக்க வேண்டும். ஜெ.வுக்கு எந்தவித வெட்கமும் இல்லாமல் கொடிபிடித்த / பிடிக்கும் அறிவுஜீவிகள் அனைவரும் இப்படித்தான் வேறுவழியில்லாமல் சிந்தித்தாக வேண்டும். இன்றைய தேதியில் கலைஞரை தவிர்த்து வேறு யாரும் செம்மொழிக்கு மாநாடு எடுத்துவிடக்கூடிய தகுதியிலோ/ஆற்றலிலோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.

    3. ஈழத்தாய் இம்மாநாட்டை நடத்தியிருந்தால் நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பீர்கள் என்று தோன்றுகிறது!

    வரலாறு புழுக்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. உணர்வாளர்கள் சிலரும் இம்மாநாட்டை புறக்கணிக்கிறார்கள். ஆனால் காரணம் வேறு. அவர்களை நிச்சயமாக மதிக்கிறேன். ஆனால் உங்களைப் போன்றோர் புறக்கணிப்பதாக ஃபிலிம் காட்டுவதற்கான காரணம் கலைஞர் மட்டும் தான் என்பதால் வேறு வழியின்றி நான் உங்களுடைய புறக்கணிப்பு அழைப்பைதான் புறக்கணிக்க வேண்டியிருக்கிறது.

    வாழ்க கொடநாட்டு ஈழத்தாய்!

    பதிலளிநீக்கு
  51. 1. எப்போதுமே இனத் துரோகிக்கு எதிர்ப்பு என்றுதான் புறக்கணிப்பு என்று சொல்லியிருக்கிறேன். புதிதாக என்ன ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.

    2. மாநாடு எடுக்க யாருக்குமே தகுதியில்லை இன்றைய நிலையில். அடுத்த குறிப்பைப் பாருங்கள்

    3.
    புழுக்கள்
    =================
    நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
    தேட்டில் விருப்புங் கொண்டே! - கிளியே!
    சிறுமை யடைவா ரடீ!

    சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
    சிந்தை இரங்கா ரடீ! - கிளியே!
    செம்மை மறந்தா ரடீ!

    பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
    துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் - கிளியே!
    சோம்பிக் கிடப்பா ரடீ!

    --- பாரதியார்
    ========
    தமிழ் நாட்டுத் தமிழருக்கு பொதுவாகவும், கருணாநிதி கும்பலுக்கு குறிப்பாகவும் பொருந்தும் வரிகள்!

    பதிலளிநீக்கு
  52. அருமை...ஒரே சொல்...என்ன ஆங்காங்கு சிற்சில எழுத்துப் பிழைகள்...

    பதிலளிநீக்கு
  53. நல்ல பதிவு. நாம் பெருமிதம் கொள்வதற்கான சரியான காரணங்கள் எல்லோரையும் சென்றடையும்படி எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  54. இன்றைய தேதியில் கலைஞரை தவிர்த்து வேறு யாரும் செம்மொழிக்கு மாநாடு எடுத்துவிடக்கூடிய தகுதியிலோ/ஆற்றலிலோ இருப்பதாக நான் நினைக்கவில்லை.
    ++++

    # அத்தகையவரே உலகத்தமிழர்களைக் கை விட்டுவிட்டு இப்படி மக்களை / தமிழர்களை ஏமாற்ற நாடகம் போடுகிறாரே என்பதே நமது ஆதங்கம். அந்த நாடகத்திற்கு என்றோ அவர் தமிழுக்குச் செய்த தொண்டுக்காக இன்று அவர் செய்யும் தில்லுமுல்லுவுக்கு முட்டுக்கொடுக்கலாம் என்று நீங்கள் நினைப்பீர்களானால் ...மன்னிக்கவும் அது எங்களால் முடியாது.

    மற்றபடி ஈழத்தாய் எழவெல்லாம் நாம் பேசவில்லை. பேசவும் மாட்டோம்.

    உங்களின் / உடன்பிறப்புகளின் கவனத்திற்கு சிலவிடயங்கள் எழுதியிருக்கிறேன். நேரமிருந்தால் படிக்கவும்.

    http://lakaram.blogspot.com/2010/06/blog-post_14.html

    பதிலளிநீக்கு
  55. What's the use of this SO CALLED WORLD CLASSICAL TAMIL CONFERENCE.Till now the Indian gvt is not ready to accept languages in the 8th schedule as the official languages of the Union.It set its own criteria for the term CLASSICAL LANGUAGE and awarded it to Telugu and Kannada just like Mr.Vijay was a given a doctorate.


    So far there had been 9 World Tamil Conferences.Why this time there is no 10th World Tamil Conference but WORLD CLASSICAL TAMIL CONFERENCE?Why was MR.MK not able to hold the regular World Tamil Conference? The reason is that he didn't get permission from the related body to hold that because of his involvement in the Genocide of Tamils and that brutal Genocide.

    How many inches has Tamil grown after so many Tamil conferences?Is Tamil the language that is used in courts,union gvt offices in TN. temples,mosques,higher education,business?

    Now Advocates are holding a protest to make Tamil as an official language of the High court .But though there is a constitutional provision to make Tamil TOO as official language the Union and State gvts are in no mood to listen.At first do they have to bring Tamil Name boards in Shops?Just go to Karnataka .You can even see Kannada only Name boards and Number plates on Private property

    I don't know why the Champion of Tamil and Tamils didn't have TAMIL MUSIC .AR.RAHMAN's music has nothing to do with Tamil.The song was really yucky with beats and Thanglish pronunciations .

    it seems that MK wants ordinary citizens to teach him the TAMIL PANNS mentioned in CHILAPADHIKAARAM

    பதிலளிநீக்கு
  56. லக்கி... நல்லாதான இருக்கீங்க.... -சென்னைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  57. பெயரில்லா6:57 PM, ஜூன் 17, 2010

    அருமையான பதிவு லக்கி லுக். எங்கள் காலம் சென்ற தலைவரும் பொங்கு தமிழ் என்று மாகாநாடுகள் நடத்தியவர். ஆனால் அது கலைஞரால் நடத்தப்படும் மகாநாடு மாதிரி அல்லாமல் மக்களை யுத்ததிற்கு உசுப்பேத்தும் மகாநாடு. தலைவரும் யுத்ததை தொடங்கினார். தவைர் எப்போதும் வெல்வார் என்று நம்பியிருந்த எங்களுக்கு மோசமான ஏமாற்றம். தலைவரை காப்பாற்றுவதற்காக யுத்தத்தை நிறுத்துங்கோ என்று தெரு தெருவாக கத்த வேண்டிய நிலை. எங்கள் தலைவர் மீதுள்ள கடுமையான வெறுப்பை கலைஞரை திட்டி கூப்பாடு போட்டு ஆறுதல் அடைகிறோம்.

    பதிலளிநீக்கு
  58. http://dhinamalar.info/Political_detail.asp?news_id=17991
    மேற்கண்ட சுட்டியில் காணப்படும் செய்தியின் படி,செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 'சங்கத்தமிழ் அனைத்தும் தா' என்ற தலைப்பில் கவிதைப் போட்டி என்றும் ,கவிதை சமர்ப்பிக்க இறுதி நாள் மே 20 மற்றும் பரிசுத்தொகை ஒரு லட்சம் என்றும் அமைச்சர் பொன்முடி அறிவித்திருந்தார். அது குறித்த தற்போதைய நிலையை மாநாடு சம்பந்தப்பட்ட எவரும் சொல்வதாகத் தெரியவில்லையே..

    பதிலளிநீக்கு
  59. பெயரில்லா2:49 PM, ஜூன் 21, 2010

    I have seen the posters are saying "JUNE 23" as the date of conference.

    They would have put as "Aani 9".

    Other than that, I would strongly support this conference.

    "Nathi mulam rishi mulam parkkakudathu, appadingara vithathula.... Tamil vazha yaru enna seinchalum NAN support pannuven...."
    :)

    பதிலளிநீக்கு