15 ஜூன், 2010

கொடநாடு - திம்மிகள் பரப்பும் வதந்தீ!

திராவிட திம்மிகள் பல நூற்றாண்டுகளாக உலகின் ஒரே உத்தம அம்மாவை கொச்சைப்படுத்தியே பேசிவருவதும், எழுதிவருவதையும் கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு, உள்ளங்கை நெல்லிக்கனி ஆகிய உவமைகளை கொண்டு நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அம்மா எங்கு போனாலும், எதை செய்தாலும் அதை தீவிரவாத கொலைவெறியோடு திம்மிகள் திரிக்கிறார்கள்.

சமீபத்தில் தங்கத்தாரகை விருதுபெற்ற நம் அம்மா காளஹஸ்தி கோயிலுக்கு சென்று, லோக ஷேமத்துக்காக யாகம் செய்தார். அடுத்தவாரமே நடந்தது என்ன? திம்மிகள் ஏதோ சதிவேலை செய்திருக்கிறார்கள். இண்டியன் ஆயில் டேங்கை போல கட்டப்பட்டிருக்கும் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தை அழிக்க ஆண்டவனாக பார்த்து லைலா புயலை அனுப்பினான். அண்டோமேனியா அரசு அதிகாரிகளின் துணையோடு அந்த புயலை காளஹஸ்திக்கு அனுப்பி கோபுரத்தை தரைமட்டமாக்கியிருக்கிறார் மூத்த திம்மி. அம்மா போய்வந்த ஒரே பாவத்துக்காக அந்த கோயில் தரைமட்டமாக்கப்பட்டது எவ்வகையில் நியாயம்? இதை புண்ணிய பாரதத்தின் ஹிந்து பெருமக்கள் தட்டி கேட்க வேண்டும்.

’காளஹஸ்திக்கு போனால்தானே கோபுரத்தை இடிக்கிறார்கள். நான் கொடநாட்டுக்கு போகிறேன். எதை இடிக்கப் போகிறார்கள். பார்க்கலாம்!’ என்ற புரட்சி மனப்பான்மையோடு புரட்சித் தலைவி இப்போது கொடநாட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கே இடிக்க கோபுரம் எதுவும் இல்லாததால் திம்மி அரசு குழம்பிப்போய் கிடக்கிறது. எனவே கொடநாட்டுக்கு அம்மா ஓய்வெடுக்க செல்வதாக பொய்ச்செய்தி பரப்புகிறார்கள்.

இது முழுக்க முழுக்க திம்மிகளின் திருகுவேலை என்பதை அம்மா தெளிவாகவே அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறார். அம்மா கொடநாடு சென்றாலே ஓய்வெடுக்க செல்வதாக பத்திரிகைகள் புழுதி வாரி தூற்றுகின்றன. அவ்வாறு தூற்ற திம்மி அரசாங்கம் பின்னணியில் செயல்படும் என்பதை அம்மா சொல்லாமலேயே நாம் அறிந்துகொள்ள வேண்டும். ”கொடநாடு அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டம் குளிர்பிரதேசம். இங்கே இருப்பவர்கள் சதா சர்வகாலமும் எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா?” என்று லாஜிக்கான கேள்வியை கேட்டு திம்மிக்களை திக்குமுக்காட செய்திருக்கிறார் நமது புரட்சி அம்மா. அம்மாவின் இந்த அறிக்கையை கண்டு நீலகிரி மாவட்டத்து மக்கள் ஆனந்தக்கூத்து ஆடுகிறார்கள். அம்மா அங்கிருக்கும் ஒவ்வொரு நாளையும் பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடுகிறார்கள்.

மேலும் அந்த அறிக்கையில் அம்மா பல விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறார். எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் நம் புண்ணிய கட்சியாம் அம்மா திமுகவுக்கு 17.5 லட்சம் தொண்டர்கள்தான் இருந்தார்களாம். அம்மாவின் ஏகோபித்த பணிகளையடுத்து இன்று ஒன்றரை கோடி தொண்டர்கள் இப்போது இருக்கிறார்களாம். தமிழ்நாட்டின் ஆறரை கோடி பேரில் ஒன்றரை கோடி பேர் சார்ந்திருக்கும் ஒரே கழகம் நமது கழகம்தான். எனவே இதற்காக மூத்த திம்மிக்கு அடிக்கடி நடத்தப்படும் பாராட்டுவிழாவை போல பிரம்மாண்டமான பாராட்டுவிழா ஒன்றினை கொடநாட்டில் கோலாகலமாக நடத்திட வைகோ, நெடுமாறன் போன்றோர் முன்வந்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

“மக்கள் பணி ஆற்றிடத்தான் கொடநாட்டுக்கு வந்திருக்கிறேன்” என்று அம்மா அறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ‘ஈழத்துக்கு ராணுவம் அனுப்புவேன்’ என்று ஈழத்தாய் சொல்லியிருந்தார். ஆனால் அண்டோமேனியா அரசாங்கம் ஏற்கனவே அங்கே இரகசியமாக ராணுவத்தை அனுப்பியிருந்தது அம்மாவுக்கு தெரியாது. அந்த ராணுவத்தால்தான் தமிழர்களுக்கு தொல்லை என்பதை அம்மாவுக்கு யாரோ இப்போது ரொம்பவும் தாமதமாக தெரிவித்திருக்கிறார்கள். எனவேதான் அதை திரும்பப் பெறுவது தொடர்பான ஆலோசனைகளை நடத்த புரட்சித்தாய் கொடநாடு சென்றிருப்பார் என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

28 கருத்துகள்:

  1. இலைக்காரன் வலைப்பூவின் பாஸ்வேர்ட் தொலைந்துவிட்டதால் பெரும் தொல்லையாக இருக்கிறது. கோவியார் அந்த பாஸ்வேர்டை அனுப்பிவைத்தால் தொடர்ச்சியாக அவரைப்போலவே அம்மா புகழ்பாட வசதியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12:58 PM, ஜூன் 15, 2010

    இந்த பதிவை விட அம்மாவின் முழு அறிக்கையே அதிகம் நகைச்சுவை அளிக்கிறது.

    இதோ ஈழத்தாயின் அறிக்கை -

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    நான் முதன் முதலாக தொண்டர்களை சந்தித்து மனுக்களை வாங்கினேன் என்றும், இது எனது கன்னி சந்திப்பு என்றும், ஒரு மணி நேரம் மனுக்களைப் பெற்றுக் கொண்டு நான் போய்விட்டேன் என்றும், இதனால் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துவிட்டதாகவும் 22 ஆண்டுகளுக்குப்பின் நடக்கும் மனு வாங்கும் படலம் என்றும் சில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

    நான் 1982 ஆம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைந்ததில் இருந்து இன்று வரை கழக உடன்பிறப்புகளிடமிருந்து தினந்தோறும் மனுக்களை பெற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். 1982 ஆம் ஆண்டு நான் தலைமைக் கழகம் செல்ல ஆரம்பித்த பிறகு தான் தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது.

    1983 ஆம் ஆண்டு கழக கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டது முதல் தினமும் தலைமைக் கழகத்திற்கு சென்று அங்கு வரும் கழக உடன்பிறப்புகளிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களது குறைகளை கேட்டறிந்தேன்.

    அதற்கு முன்பு புரட்சித்தலைவர் அமைச்சரவையில் இருந்த எந்த ஒரு அமைச்சரும் தலைமைக் கழகத்திற்கு சென்று என்னைப் போன்று கழக உடன்பிறப்புகளிடமிருந்து மனுக்களை பெற்றதும் கிடையாது, அவர்களது குறைகளை கேட்டறிந்ததும் கிடையாது என்று கழக உடன் பிறப்புகளே என்னிடம் தெரிவித்து இருக்கின்றனர். கழகத் தொண்டர்கள் தான் அமைச்சர்களை தலைமைச் செயலகத்திற்கோ அல்லது அவர்களது இல்லத்திற்கோ சென்று பார்ப்பார்களே தவிர, அமைச்சர்கள் யாரும் தலைமைக் கழகம் பக்கம் தலை வைத்துக்கூட படுக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை.


    முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். காலையில் கோட்டைக்குச் சென்றுவிட்டு மதிய உணவிற்காக மாம்பலம் ஆற்காடு சாலையில் இருந்த அலுவலகத்திற்கு வருவார்கள். நானும் தலைமைக் கழகத்தில் காலை முதல் மதியம் வரை தொண்டர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்டு மாம்பலம் அலுவலகத்திற்குச் செல்வேன். அங்கு புரட்சித் தலைவரோடு நானும் மதிய உணவு அருந்துவேன். பின்னர், கழக உடன்பிறப்புகள் என்னிடம் கொடுத்த மனுக்களை, கோரிக்கைகளை புரட்சித் தலைவரிடம் தெரிவிப்பேன். இதன் விளைவாக கழக உடன் பிறப்புகளின் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

    1983 ல் கழக கொள்கை பரப்புச் செயலாளராக நான் நியமிக்கப்பட்ட பிறகு, தமிழ் நாட்டில் என் கால் படாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மாவட்டங்களுக்கும் நான் தொடர்ந்து இடைவிடாது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறேன். அப்போது ஒவ்வொரு ஊரிலும் என்னை சந்தித்த கழக உடன்பிறப்புகளின் மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களது குறைகளை பொறுமையாக கேட்டுக் கொள்வேன்.

    இந்த அளவுக்கு கட்சிப் பணியை நான் ஆற்றியதன் காரணமாகவும், கழக உடன் பிறப்புகளின் கோரிக்கைகளை நான் நிறைவேற்றியதன் காரணமாகவும் தான் கழக உடன் பிறப்புகள் “புரட்சித் தலைவரின் வாரிசு” என்று என்னை ஏற்றுக் கொண்டார்கள். உண்மையான கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் இந்த உண்மைகள் தெரியும். எம்.ஜி.ஆர். இருந்தவரை, அதாவது 1987 வரை பதிவு செய்திருந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 17.50 லட்சம். இன்றோ கழக உடன் பிறப்புகளின் மொத்த எண்ணிக்கை 1.50 கோடி ஆகும்.

    எந்த ஒரு கட்சியின் பொதுச் செயலாளரும் அத்தனை பேரிடமும் ஒரே நாளில் மனுக்களைப் பெற்று அவர்களது குறைகளை நேரில் கேட்பது என்பது நடைமுறையில் இயலாத காரியம். ஏனென்றால் இன்று, கழகம் அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டது. இருப்பினும், அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து மனுக்களை வாங்கிக் கொண்டு தான் இருக்கிறேன். தினசரி தொண்டர்கள் தலைமைக் கழகத்திற்கும், எனது இல்லத்திற்கும் வருகின்றார்கள். கழகத் தொண்டர்கள் கொடுக்கும் மனுக்கள் முறையாக பெற்றுக் கொள்ளப்படுகின்றன. அனைத்துக் கடிதங்களுக்கும் பதில்கள் அனுப்பப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:59 PM, ஜூன் 15, 2010

    எல்லோரையும் நான் நேரில் பார்த்து மனுக்களைப் பெறவில்லை என்று குறை சொல்பவர்கள், ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். 1982 ல் என்னுடைய வயது 34. இன்று எனக்கு வயது 62 என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இருப்பினும், கழக தொண்டர்கள் எல்லோரும் என்னை நேரில் பார்க்க வேண்டும் என்று விரும்புவதால், மாவட்ட வாரியாக சந்திப்பதற்கு ஏற்பாடு செய்தால் சரியாக வராது என்பதால், ஒன்றிய வாரியாகவோ, நகர வாரியாகவோ, அல்லது சட்டமன்றத் தொகுதி வாரியாகவோ சந்திக்கலாமா என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். சட்ட மன்றத் தொகுதி வாரியாக சந்திப்பை ஏற்பாடு செய்தால் கூட, 234 நாட்கள், அதாவது கிட்டத்தட்ட ஒர் ஆண்டு காலம் ஆகும். அப்போதும் ஒவ்வொரு தொகுதியிலும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் வருவார்கள். இருந்தாலும், இதற்கு என்ன வழி என்பதை சிந்தித்து, விடா முயற்சியோடு தொண்டர்களுக்கு நிச்சயம் திருப்தி ஏற்படும் வகையில் செயல்படுவேன்.

    கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு வராமல் இருந்தால் தான் செய்தி. நான் தலைமைக் கழகத்திற்கு வந்தால் அது தான் செய்தி என்று சொல்லியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். கருணாநிதி அண்ணா அறிவாலயத்திற்கு சென்று திமுக தொண்டர்களை தினசரி சந்தித்து இருக்கிறாரா? அதற்கு அத்தாட்சி இருக்கிறதா? நான், போயஸ் கார்டனில் இருந்தாலும், தலைமைக் கழகத்தில் இருந்தாலும், கோடநாட்டில் இருந்தாலும், எந்த நேரமும் கழகப் பணியாற்றிக் கொண்டு தான் இருக்கிறேன்.

    கருணாநிதி தலைமைக் கழகத்திற்குச் சென்று கட்சிக்காரர்களை சந்திக்கிறார் என்றும், நான் தலைமைக் கழகத்திற்குப் போவதற்கு விளம்பரம் கொடுக்கப்படுகிறது என்றும் பேசி இருக்கிறார் மு.க. அழகிரி. கருணாநிதியானாலும், அழகிரியானாலும், ஸ்டாலின் ஆனாலும், இவர்கள் கட்சி அலுவலகத்திற்கு செல்லும் போது ஆட்கள் யாரும் வருவதில்லை. ஏனென்றால் மக்களை ஈர்க்கக் கூடிய சக்தி இவர்களிடம் இல்லை. அறிவாலயம் எப்போதும் கூட்டம் இன்றியே வெறிச்சோடி இருக்கும். ஏதாவது குறிப்பிட்ட நிகழ்ச்சி இருந்தால் தவிர அங்கு கூட்டம் வருவதில்லை.

    ஆனால், நான் தலைமைக் கழகத்திற்குச் செல்லும் போதெல்லாம், ஒவ்வொரு முறையும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வருகின்றார்கள். தலைமைக் கழகம் சென்றால், அவர்களை பார்ப்பதற்கே நேரம் சரியாக இருக்கும் என்பதால், நான் வீட்டில் இருந்தபடியே முக்கியமான கட்சி வேலைகளை கவனிக்கிறேன்.

    அடுத்தபடியாக நான் கோடநாடு சென்றாலே, ஒய்வெடுக்க செல்கிறேன் என்று பத்திரிகைகள் தவறாமல் செய்தியை வெளியிடுகின்றன. கோடநாடு தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ளது. நீலகிரி மாவட்டமே குளிர்ந்த பிரதேசம் தான். அப்படியென்றால், இங்கே இருப்பவர்கள் யாரும் எந்த வேலையும் செய்யாமல் சதா சர்வ காலமும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாமா?

    நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இருக்கிறார். காவல் துறை கண்காணிப்பாளர் இருக்கிறார். நீலகிரி மாவட்டத்தில் எத்தனையோ அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அப்படியானால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆகுமா? நீலகிரி என்றாலே ஓய்வு என்று அர்த்தமா? ஆக, நான் ஓய்வெடுக்க கோடநாட்டிற்கு வரவில்லை. சதா சர்வ காலமும் கட்சிப் பணியையும், மக்கள் பணியையும் செய்து கொண்டுதான் இருக்கிறேன்.

    நீலகிரி மாவட்டம் முழுவதும் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அங்கு ஏராளமான பணியாளர்கள், குறிப்பாக பெண்கள் தினமும் காலை முதல் மாலை வரை
    தேயிலை பறிக்கின்றார்கள். குளிர்ந்த மலைப் பிரதேசத்தில் அவர்கள் வாழ்வதாலேயே, அவர்கள் சதா சர்வ காலமும் ஓய்வெடுக்கிறார்கள் என்று அர்த்தமா? அப்படி கூறுவது அபத்தமாகாதா? அது போலத்தான் கோடநாட்டில் நான் தங்கினால், நான் ஓய்வெடுத்துக் கொண்டு இருப்பேன் என்று சொல்லுவது அபத்தமான கூற்றாகும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்க பாரதம். வாழ்க அம்மா.

    பதிலளிநீக்கு
  5. மதுரைத் திம்மி!1:46 PM, ஜூன் 15, 2010

    \\ இந்த பதிவை விட அம்மாவின் முழு அறிக்கையே அதிகம் நகைச்சுவை அளிக்கிறது. \\

    வழிமொழிகிறேன்!

    இந்த அறிக்கை வந்ததிலிருந்து, நேற்று இரவு வரை நேரம் போனதே தெரியவில்லை, எங்கு பார்த்தாலும் இதே பேச்சும், சிரிப்புமாகத்தான் இருந்தது!

    வடிவேலு, விவேக் போன்றோர் கண்டிப்பாக அம்மையாரிடம் சிறப்புப் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்....

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா1:54 PM, ஜூன் 15, 2010

    Ayya Yuva Krishna, your r very suitable for the post of Kozhhaiparappu Seyalalar in DMK.

    sujai

    பதிலளிநீக்கு
  7. யோசிப்பவன்!1:57 PM, ஜூன் 15, 2010

    @ அம்மையாரின் அறிக்கை!

    \\ எம்.ஜி.ஆர். இருந்தவரை, அதாவது 1987 வரை பதிவு செய்திருந்த கழக உடன்பிறப்புகளின் எண்ணிக்கை 17.50 லட்சம். இன்றோ கழக உடன் பிறப்புகளின் மொத்த எண்ணிக்கை 1.50 கோடி ஆகும். \\

    அதாவது எம்.ஜி.ஆரின் கையில் இருந்து, இந்த அம்மையார் கையில் வந்த பின்னர் அதிமுக 10 மடங்கு வளர்ச்சி அடைந்து விட்டதாம்!

    இதைவிட எம்.ஜி.ஆரை யாரும் அவமானப் படுத்தி விட முடியாது!

    பதிலளிநீக்கு
  8. மதுரைத் திம்மி!2:02 PM, ஜூன் 15, 2010

    @அம்மையாரின் அறிக்கை!
    எதுக்குத் தனித்தனியா சொல்லிக்கிட்டு? ஒட்டு மொத்தமா சொன்னா....

    அம்மா! உங்க அறிக்கை முழுவதும்....

    அற்புதமான கருத்துகள்!
    ஆழமான சிந்தனைகள்!
    சிறந்த விளக்கங்கள்!

    இவ்வளவு சிறந்த அறிக்கய இப்படியே சும்மா விட்டுடாம, இது மொத்தத்தயும் ஒரு கல்வெட்டுல செதுக்கித் தஞ்சாவூர்ப் பெரிய கோவில்ல வச்சுட்டுப் பக்கத்துலயே ஒரு 50-60 அடி உயரத்துல உங்களோட திருவுருவச் செலையயும் செஞ்சு வச்சுட்டங்கன்னா, இனிமே வரப்போற எதிர்காலச் சந்ததிகள் எல்லாம், அதப் படிச்சுப் பாத்துப் புத்தியோட நடந்துக்குவாங்க, இல்லையா? தாயே!...........

    பதிலளிநீக்கு
  9. நன்றாக உள்ளது. அந்தம்மாக்கு ஓட்டு போட இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம்தான்.

    பதிலளிநீக்கு
  10. amma arikkaiye comedyaa irukkuppaa...enna elaila ezhuthaama touch vittu pochchaa...

    :D

    பதிலளிநீக்கு
  11. இந்த காலம்னு ஒன்னு இருக்கு (கோவியார் வலைதளம் இல்லை)தெரியுமா? அது இதே அறிக்கையை கருணாநிதி,ஸ்டாலின், அழகிரினு பேரு மாத்தி போட்டு வரவைக்கும். அப்ப இந்த லக்கிலுக்கு குருப்புகள் உடனேயே எல்லா ஓட்டைகளையும் மூடி மோட்டு ஓட்டையும் பார்க்க வைக்கும்.

    பதிலளிநீக்கு
  12. ragalai pananareenga Yuva .Intha alavuku oru political naiyandiye parthu romba nalachu
    keep it up

    பதிலளிநீக்கு
  13. அம்மாவின் புகழ் ஓங்குக .. ஹி ஹி ஹி

    பதிலளிநீக்கு
  14. அசோக் மூர்த்தி8:32 AM, ஜூன் 16, 2010

    பல நாட்கள் கழித்து என் மன ஆதங்கத்தை இப்போது கொட்டி விடுகிறேன் !

    அம்மா எது செய்தாலும் சில பேர்களுக்கு அவரை குற்றம் சொல்வதே பழக்கம் ஆகி விட்டது !

    சரித்திரத்தை திரும்பி பாருங்கள் !
    ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு காட்டும் அன்பாக கண்ணகியை நினைத்து 'பாவம் இந்த அம்மா எத்தன காலம்தான் வெயில்ல நின்னுட்டு இருக்கும். ? ஏற்கனவே கருப்பு ..இதுல்ல இன்னும் கருப்பாகனுமா 'னு பரிதாபப்பட்டு ஒரு ஓரமாக கொண்டு போய் வைத்தால் , அதையும் திருப்பி கொண்டு வந்து அதே இடத்தில நிக்க வைத்து விட்டார்கள் !

    'மனிதர்கள் மட்டும்தான் சுற்றுலா செல்ல வேண்டுமா ? ஏன் மிருகங்கள் என்ன பாவம் செய்தன ' என தாய் உள்ளத்தோடு யானைகளை பார்த்து ' போய் வாருங்களடா என் செல்லங்களா!'னு அன்பாக அனுப்பி வைத்தால் அதையும் குற்றம் சொல்கிறார்கள் !

    என்னதான் மந்திரியே ஆனாலும் ஆணவத்தை வளர்க்க கூடாது என்ற கீதையின் பொருளை விளக்க பெரியவர்களை பார்த்தால் காலில் விழும் பழக்கத்தை முறைபடுத்தினார் எங்கள் அம்மா ..அதையும் குற்றம் சொல்கிறார்கள் !

    இப்போது கொடநாடு போய் ரெஸ்ட் எடுக்கும்படி என்ன செய்து விட்டார் என்பவர்கள் அம்மா ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து tired ஆகி ரெஸ்ட் எடுக்க போகிறார்கள் என்பதை புரிய இயலாதவர்கள் !

    அப்படி குற்றம் சொல்பவர்களை பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன் ! அடுத்த முறை தேர்தலில் போட்டியிட 'யாருமே இல்லாத கடையில் டீ ஆற்றும் ' வைகோவுக்கு ஒரு சீட்டாவது அம்மா கருணையோடு கொடுப்பார் ! வேறு யார் கொடுப்பார் ?

    சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்!

    பதிலளிநீக்கு
  15. அம்மா செய்யும் தவறுகளால் மட்டுமே அய்யா வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை இந்த தமிழ்ச் சமூகம் உணர்ந்தே இருக்கிறது.

    நகைப்புக்குரியவர்கள் அம்மாவோ (அ) அய்யாவோ அல்ல மக்கள்தான். கோவை வீதிகளில் தெற்கே இருந்து வீசும் குருதி வாடை நுகரும் தமிழனுக்கு மட்டுமே தெரியும்.. புதைக்கப்பட்ட தமிழனின் உரிமை....

    - சென்னைத்தமிழன்

    பதிலளிநீக்கு
  16. பெயரில்லா1:03 PM, ஜூன் 16, 2010

    சில‌ நேர‌ங்க‌ளில் உங்க‌ள் ப‌திவில் பின்னூட்ட‌மிட்டிருக்கிறேன். ச‌மீப‌த்தில், "தேசிய வேளாண் நிறுவனம்!" என்ற‌ ப‌திவிற்க்குப் பின்னூட்ட‌மிட்டேன். நிற்க‌. த‌மிழ‌க‌த்தில் 91-96 ஜெய‌ல‌லிதா ஆட்சியில், நெடுஞ்சாலை துறையில் ஒப்ப‌ந்த‌ ப‌ணி செய்ய‌ நினைக்கும் ஒப்ப‌ந்த‌க்கார‌ர்க‌ள் 13% ச‌த‌விகித‌ ப‌ண‌த்தை அன்றைய‌ ம‌ந்திரி க‌ண்ண‌ப்ப‌னிட‌ம் கொடுக்க‌ வேண்டும். சாலை போட‌ வேண்டிய‌ இட‌ம் ராமேஸ்வ‌ர‌ம் என்று வைத்துக் கொண்டால், அந்த‌ 13% ச‌த‌விகித‌ ப‌ண‌த்தில், 7 ச‌த‌விகித‌ம் க‌ண்ண‌ப்ப‌னுக்கு, 3% ச‌த‌விகித‌ம் தென்ன‌வ‌னுக்கு, 3% ச‌த‌விகித‌ம் ராமேஸ்வ‌ர‌ம் ந‌க‌ர் க‌ழ‌க‌, கிளை க‌ழ‌க‌ உறுப்பின‌ர்க‌ளுக்கு. யார் முத‌லில் ப‌ண‌த்தை கொடுக்கிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் தான் திருநெல்வேலியில் (ம‌ண்ட‌ல‌ அலுவ‌ல‌க‌ம்) செட்யூல் கொடுப்பார்க‌ள். இன்றைய‌ தி. மு. க‌ ஆட்சியில், இது எதுவுமே கிடையாது. மு. க‌. அழ‌கிரி 10 பேரை தேர்ந்து எடுத்து வைத்திருக்கிறார். அவ‌ர்க‌ளுக்குள் ஏரியா அடிப்ப‌டையில் வேலையை பிரித்து எடுத்துக் கொள்கின்ற‌ன‌ர் (சிறு ந‌க‌ர‌ச்சாலைக‌ளின் இன்றைய‌ எஷ்டிமேட் கோடிக‌ளில் என்ப‌தை நினைவில் கொள்க‌) ப‌ஞ்சாய‌த்து யூனிய‌ன் வேலைக‌ளை, யூனிய‌ன் சேர்ம‌னும், அத்தொகுதியின் ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ரும், த‌ங்க‌ள் க‌ட்சிக்கார‌ர்க‌ளுக்கு பிரித்துக் கொடுக்கின்ற‌ன‌ர். இந்த‌ வேலைக‌ளை, சில‌ க‌ட்சிக்கார‌ர்க‌ள் சிறு ஒப்ப‌ந்த‌க்கார‌ர்க‌ளிட‌ம் விற்று விடுகின்ற‌ன‌ர். ஒப்ப‌ந்த‌க்கார‌ர், சாலை போடும் வேலை முடித்து, பில் வாங்க‌ முய‌ற்சி செய்யும் போது, அந்த‌ ஏரியா ம‌ந்திரியின் பி. ஏ. ஃபோன் செய்து 5% ச‌த‌விகித‌ம் கேட்கிறார். ஏற்க‌ன‌வே ப‌ண‌ம் கொடுத்து வாங்கிய வேலைக்கு எத‌ற்குப் ப‌ண‌ம் என்று கேட்டால், "அனாவுக்கு" கொடுக்க‌னும் என்ப‌துதான் ப‌தில். இந்த‌ 5% ச‌த‌விகித‌ம் த‌ராவிட்டால், பில் ப‌ண‌ம் வ‌ர‌ தாம‌த‌மாகும். இப்ப‌டி இருந்தால், சாலைக‌ளின் ல‌ட்ச‌ண‌ம் எப்ப‌டி இருக்கும் என‌ யூகித்துக்கொள்ளுங்க‌ள். ஜெய‌ல‌லிதா ஆட்சியில், ச‌சிக‌லா த‌லையிடுவ‌து மிக‌ப்பெரிய‌ டீலிங்குக‌ளில் ம‌ட்டுமே (டான்சி ஒரு எடுத்துக்காட்டு). இந்த‌ ஆட்சியில், க‌லைஞ‌ர் குடும்ப‌ ஆட்க‌ள், சாத‌ர‌ண‌ சாலை வேலைக‌ளில் இருந்து ஸ்பெக்ட்ர‌ம் வ‌ரை த‌லையிடுகின்ற‌ன‌ர். இந்த‌ இட‌த்தில இன்னுமொரு விச‌ய‌த்தை குறிப்பிட‌ வேண்டும். 2001 2006 ஜெய‌ல‌லிதா ஆட்சியில் அனைத்து ஒப்ப‌ந்த‌ ப‌ணிக‌ளும் முறையான‌ டெண்ட‌ர் அடிப்ப‌டையில் ந‌ட‌ந்த‌து.
    krishnamoorthy

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா1:03 PM, ஜூன் 16, 2010

    க‌ல்வித்துறையை எடுத்துக்கொள்வோம். இந்தியாவில் முத‌ல் மிக‌ப்பெரிய‌ க‌ல்விப்புர‌ட்சி என்ப‌து ஐ. ஐ. டி க‌ளின் (IIT) உருவாக்க‌ம். 1958 ல், ஐ. ஐ. டி க‌ர‌க்பூர், 1959 ல் ஐ. ஐ. டி பம்பாய், 1960 ல் ஐ. ஐ. டி மெட்ராஸ் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இத‌ற்குப்பின்னால், குறிப்பிட‌த்த‌க்க‌து ஐச‌ர்க‌ளின் (IISER) உருவாக்க‌ம்.க‌ட‌ந்த‌ 5 ஆண்டுகளாக‌, ஐச‌ர் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌ இட‌ங்க‌ள், கொல்க‌ட்டா, புனே, போபால் (ஐ. ஐ. டி இன்டோர் ம‌. பியில் தொட‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து), மொஹாலி (ஐ. ஐ. டி ரோப‌ர் ப‌ஞ்சாபில் தொட‌ங்க‌‌ப்ப‌ட்டுள்ள‌து), திருவ‌ன‌ந்த‌புர‌ம். கூர்ந்து க‌வ‌னித்தீர்க‌ளானால், மேற்குவ‌ங்க‌ம், ம‌ஹார‌ஸ்டிரா, ம‌த்திய‌ப்பிர‌தேச‌ம் ம‌ற்றும் ப‌ஞ்சாப்பில், ஐ. ஐ. டி ம‌ற்றும் ஐச‌ர் உள்ள‌து. த‌மிழ‌க‌ம் இதில் ஏன் இட‌ம்பெற‌வில்லை. க‌ட‌ந்த 7 ஆண்டுக‌ளாக‌ ம‌த்திய‌ அர‌சில், உள்ள ம‌ந்திரிக‌ள் என்ன‌ செய்கிறார்க‌ள்?

    ச‌மீப‌த்தில், ம‌த்திய‌ அறிவிய‌ல் தொழில்நுட்ப‌த்துறை அமைச்ச‌ர் பிருத்விராஜ் ச‌வானை ச‌ந்திக்க‌ 30 இள‌ம் விஞ்ஞானிக‌ளை அழைத்திருந்த‌னர். அதில் இருந்த‌ ஒரே த‌மிழ‌ன் நான் ம‌ட்டுமே. இன்னொருவ‌ர் சென்னையில் வ‌ள‌ர்ந்த‌ ஆந்திராக்கார‌ர். சமீப‌த்தில், முனைவ‌ர் ப‌டிப்பிற்கான‌ மாண‌வ‌ர் சேர்க்கை நுழைவுத்தேர்வில் க‌ல‌ந்து கொண்ட‌ 300 பேரில் 5 பேர் த‌மிழ‌க‌ மாண‌வ‌ர்க‌ள். அந்த‌ 5 பேரில் ஒருவ‌ரை ம‌ட்டும் நான் கேட்டுக்கொண்ட‌தால் தெரிவு செய்த‌ன‌ர். ஏன் இந்த‌ நிலை? வைகோவுட‌ன் ந‌டைப்ப‌ய‌ண‌ம் மேற்கொண்ட‌ ச‌பாப‌தி மோக‌ன் தி. மு. க‌ வில் இணைந்த‌வுட‌ன் மானோன்ம‌ணிய‌ம் சுந்த‌ர‌னார் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ துணைவேந்த‌ர் ஆகிறார். அண்ண‌ன் அழ‌கிரி திருப்புக‌ழ் பாடுவ‌தே என் ப‌ணி எனும் திருவாச‌க‌ம சென்னை ப‌ல்க‌லைக‌ழ‌க‌ துணைவேந்த்த‌ர். த‌மிழ‌க‌ க‌ல்வியின் நிலை ப‌ரிதாப‌ம் என்ப‌து ச‌த்திய‌மான‌ உண்மை. ‌ ‌


    என‌து உற‌வின‌ர்க‌ள், தி. மு. க‌ ம‌ற்றும் அ. தி. மு. க‌ ஆட்சியில் ம‌ந்திரிக‌ளாக‌ இருக்கிறார்க‌ள். இன்னும் எழுத‌ முடியும், ஆனால் வேலை ப‌ளுவும், த‌மிழில் எழுதுவ‌தில் உள்ள‌ சிர‌ம‌மும் முக்கிய‌மான‌ த‌டைக‌ள். சுருங்க‌ச்சொன்ன‌ல், த‌மிழ‌க‌த்தின் மிக மோச‌மான‌ ஆட்சிக்க‌ல‌ம் 91-96 ம‌ற்றும் 2006-2011.
    krishnamoorthy

    பதிலளிநீக்கு
  18. கிருஷ்ணமூர்த்தி சார்!

    நான் இப்படி நினைக்கவில்லை. கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் இன்று தமிழகம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரு தென்னிந்திய மாநிலம் இந்த அந்தஸ்தில் இருப்பது நிச்சயமாக - நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் - சாதனைதான்!

    மோசமான ஆட்சியொன்று இத்தகைய வளர்ச்சிநிலையினை கொடுத்திடமுடியும் என்று நான் நம்பவில்லை!

    பதிலளிநீக்கு
  19. அதென்ன இந்த இடுகை முழுவதும் முகமூடிகள் தரும் உண்மைகள் வாரமா?

    கலைஞர் "வளர்ச்சி" முழுக்க அவர் உழைப்பின் மூலம் உருவானதை விட மிக அதிகமாக இது போல எவரோ ஒருவரின் ஓய்வின் மூலமாக ஒவ்வொரு சமயத்திலும் மறைமுகமாக உதவியதாகத்தான் இருக்கிறது.

    செம்மொழி மாநாடு தேவை ஏன் என்ற இடுகைக்கே கருத்தை பதிய வைக்க வேண்டுமென்று நினைத்தேன்? இப்போது உங்கள் பதில் எதிர்பார்த்து?

    சிறந்த நிர்வாகம் மற்றும் மூன்றாவது இடம் என்று "வார்த்தைகளால்" சொல்லியிருப்பதால்?

    1. மூன்றாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில், எல்லா பள்ளிக்கூடங்களிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவுக்கு தேவையான ஆசிரியர்கள் இருக்கிறார்களா?

    2. அரசாங்கத்துக்கு நிதி ஆதாரம் போதாது என்றால் ஆசிரியர்கள் ஒரு நாளைக்கு பணிபுரியும் அதிகபட்சம் மூன்று மணி நேரத்திற்கு கலைஞர் ஏற்றிக்கொடுத்துள்ள மற்ற அரசு ஊழியர்களை விட உச்சத்தில் இருக்கும் இந்த சம்பள உயர்வு சரிதானா?

    3. தமிழ் முதுகலை படிப்பு முடித்தவர்களுக்கு பொதுவாகவே அரசாங்கத்தில் வேலை வாய்ப்புகளில் மரியாதை உண்டா? மற்றவர்களை கையை காட்டாதீர்கள். இவரைத்தான் முத்தமிழ் அறிஞர் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகிறார். இல்லை அவர்கள் வாழ்க்கையும் செம்மு செம்முன்னு செம்முற செம்மொழி போலத் தானா?

    4. சென்ற மாதத்தில் ஆண்டு தணிக்கையாளர்கள், தமிழ்நாடு அரசாங்கம் நிதியை உபயோகித்த விதத்தை அந்த வண்டவாளத்தை போட்டு உடைத்தார்களே முழுமையாக எவருக்காவது நடந்து கொண்டுருக்கும் உள் நிர்வாக லட்சணம் தெரியுமா?

    5. அரசாங்க கணக்குப்படி 700 கோடி (நிச்சயம் 1000 கோடிகள் வரும்) செலவழிக்கும் இந்த மொழி மாநாட்டுக்கு என்ன அவஸ்யம்? அவசரம்? இந்த மாநாடு நடக்காவிட்டால் தமிழ் மொழி செத்துவிடுமா?

    6. பள்ளிக்கு நிர்ணயித்த தொகையை சரியாகத்தான் வசூலிக்கிறார்களா என்று எங்கேயாவது சோதனை நடந்து பிடிபட்ட பள்ளி நிர்வாக பெயர் பட்டியல் உண்டா? பள்ளி திறந்து இரண்டு வாரங்கள் ஆகி விட்டது. இன்று வரையிலும் புத்தகங்கள் வரவில்லை. பத்திரிக்கைகளில் ஒரு மாதத்திற்கு முன்பே அனுப்பப்பட்டுக்கொண்டுருக்கிறது என்று படித்த ஞாபகம்.

    கோபத்தினாலோ கலைஞர் உள்ள வெறுப்பினாலோ இந்த கேள்விகள் அல்ல.

    இவருக்கு அரசியல் என்பது கண்மணியாக எதிர்கால கணக்காகத் தெரிகிறது. மாற்றுக்கருத்து உள்ள அத்தனை பத்திரிக்கையாளர்களைக்கூட ஒன்று சேர்த்து புகழ்பாடும் கூட்டமாக கூட்ட முடிகிறது.

    அவர் இன்னமும் மொத்த அரசியல் மற்றும் எதிர்கால வாழ்க்கையையும் ஒரு பெண்மணி மூலமாகவே பார்த்துக் கொண்டுருக்கிறார்,

    ஒருவர் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து மற்றொருவர் ஓய்வை துரத்தி ஓடிக்கொண்டு?

    என்ன வித்யாசம்? இந்த வளர்ச்சி கண்ணாமூச்சி எல்லாம் காலங்காலமாக வே மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக வாழும் வாழ்க்கை.
    உண்மையிலேயே பலரும் பலன் அடைந்து கொண்டுருக்கும் அந்த ஒரு ரூபாய் அரிசி தவிர கலைஞரின் கடைசி கட்ட வாழ்க்கையை சொல்ல பெரிதாக ஒன்றும் எனக்குத் தெரியவில்லை. என்ன ஒன்று? ஆட்டோ எவர் வீட்டுக்கும் சென்ற ஆட்சி போல் செல்வது இல்லை.

    பதிலளிநீக்கு
  20. ஜோதிஜி!

    உங்கள் கேள்விகளில் சுவாரஸ்யமாக விவாதிக்கக் கூடிய எந்த லாஜிக்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வெட்டியாக விவாதிக்கவும் நேரமில்லை.

    சிறந்த நிர்வாகம் மற்றும் மூன்றாவது இடமென்றெல்லாம் வெறுமனே வார்த்தைகளில் சொல்லியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் பத்திரிகையாளனாக பணிபுரிபவன். ஆதாரங்களின்றி எதையும் மேம்போக்காக சொல்லிவிட்டு போகிறவன் அல்ல என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

    உங்களுக்கு கருணாநிதியை பிடிக்காது என்றால் அது உங்கள் பிரச்சினை. அதற்காக நீங்கள் உங்கள் வீட்டு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம். எனக்கு கவலையில்லை.

    செம்மொழி மாநாடு ஏன் அவசியம் என்றெல்லாம் உங்களை விட நம்மை ஆளுபவர்களுக்கு ஒரு படி அதிகமாகவே தெரியும். உலகெங்கும் இருந்து கோவைக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வரும் தமிழறிஞர்களுக்கும் தெரியும்.

    இது அம்மா புகழ் பாடும் திரி. இங்கே வந்து ஏன் சம்பந்தமில்லாத இந்த பின்னூட்டத்தை இட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  21. உங்களுக்கு கருணாநிதியை பிடிக்காது என்றால் அது உங்கள் பிரச்சினை. அதற்காக நீங்கள் உங்கள் வீட்டு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம். எனக்கு கவலையில்லை.

    முட்ட வைப்பதற்காகவா இத்தனை முயற்சிகள் செய்ய வேண்டும்?

    உங்களுக்கு நிறைய விசயங்கள் தெரியும்? இருக்கலாம். தெரிந்த விசயங்களை (நிறை குறைகளுடன்) எழுதுங்களேன். மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே?

    பதிலளிநீக்கு
  22. திரு.கிருஷ்ண‌மூர்த்தி கேள்வி கேட்டால் //கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் இன்று தமிழகம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஒரு தென்னிந்திய மாநிலம் இந்த அந்தஸ்தில் இருப்பது நிச்சயமாக - நீங்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் - சாதனைதான்!

    மோசமான ஆட்சியொன்று இத்தகைய வளர்ச்சிநிலையினை கொடுத்திடமுடியும் என்று நான் நம்பவில்லை!//
    மேம்போக்காக‌ ப‌தில் சொல்கிறீர்க‌ள்.

    திரு.ஜோதிஜி கேட்டால் //உங்கள் கேள்விகளில் சுவாரஸ்யமாக விவாதிக்கக் கூடிய எந்த லாஜிக்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வெட்டியாக விவாதிக்கவும் நேரமில்லை// என்கிறீர்க‌ள்.

    கேப்ட‌னை ப‌குதி நேர‌ அர‌சிய‌ல்வாதி என்று விம‌ர்சித்த‌ க‌ருணாநிதிக்கு கேப்ட‌ன் கேட்ட‌ ப‌தில் கேள்வி "அவர் அர‌சிய‌லில் இருந்து கொண்டே சினிமாவுக்கு வ‌ச‌ன‌ம் எழுதினால் க‌லைச் சேவை??,நான் சினிமாவில் ந‌டித்துக் கொண்டே அர‌சிய‌லுக்கு வ‌ந்தால் ப‌குதி நேர‌ அர‌சிய‌லா???
    இது வ‌ரை ப‌தில‌ளிக்கப்ப‌ட‌வேயில்லை.

    த‌லைவ‌ன் எவ்வ‌ழியோ தொண்ட‌னும் அவ்வ‌ழி.

    பதிலளிநீக்கு
  23. குடிகார மட்டை!7:57 PM, ஜூன் 17, 2010

    \\அவர் அர‌சிய‌லில் இருந்து கொண்டே சினிமாவுக்கு வ‌ச‌ன‌ம் எழுதினால் க‌லைச் சேவை??,நான் சினிமாவில் ந‌டித்துக் கொண்டே அர‌சிய‌லுக்கு வ‌ந்தால் ப‌குதி நேர‌ அர‌சிய‌லா???\\


    ஆஹா!
    இதுதான் அய்யா கேள்வி?

    பதிலளிநீக்கு
  24. 24மணி நேரக் குடிகாரன்!8:03 PM, ஜூன் 17, 2010

    இவனுக மாசத்துல என்னக்கோ ஒரு நாளு மட்டும் குடிப்பாங்கெளாம், அதனால இவனுக நல்ல்ல்லவங்களாம், ஆனா தெனமும் 24மணி நேரமும் குடிச்சுட்டுத் தெருவுல விழுந்து கெடக்குற நாங்க மட்டும் குடிகாரங்கெளாம்! என்னங்கடா ஒங்க நாயம்?

    எப்படி எங்கேள்வியோட லாஜிக்கு?

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா9:43 AM, ஜூன் 18, 2010

    வேலை ப‌ளு கார‌ண‌மாக‌ தாம‌த‌மாக‌ ப‌தில‌ளிப்ப‌த‌ற்கு ம‌ன்னிக்க‌வும். என்னை சார் என்று அழைக்க‌ வேண்டிய‌தில்லை. என‌து மாண‌வ‌ர்க‌ள் என்னை பெய‌ர் சொல்லியே அழைக்கிறார்க‌ள்.
    நீங்க‌ள் சொல்வ‌து போல், ஒட்டுமொத்த‌ வ‌ள‌ர்ச்சியில் த‌மிழ‌க‌ம் மூன்றாவ‌து இட‌த்தில் இருந்தால் நிச்ச‌ய‌மாக‌ ம‌கிழ்ச்சி. அதே ச‌ம‌ய‌த்தில், க‌ல்வி ம‌ற்றும் தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ முத‌லீடுக‌ள், மாநில‌த்தின் நீண்ட‌ கால‌ வ‌ள‌ர்ச்சிக்கு அவ‌சிய‌ம். க‌ல்வியை ப‌ற்றி ஏற்க‌‌ன‌வே ஆதார‌ங்க‌ளுட‌ன் எழுதி விட்டேன். அத‌ன் தொட‌ர்ச்சியாக‌ ஒரு விச‌ய‌ம். IISER ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ பொழுது, ம‌துரையில் ஒரு IISER ஆர‌ம்பிப்ப‌தாக‌ திட்ட‌ம். ஆனால் அதை காரைக்குடியில் ஆர‌ம்பிக்க‌ வேண்டும் என்று கூறி மொத்த‌த்தையும் குழ‌ப்பி, த‌மிழ‌க‌த்தில் IISER இல்லாம‌ல் ப‌ண்ணிவிட்டார் ஒரு ம‌ந்திரி. இந்த‌ ம‌ந்திரி யார் என்று நீங்க‌ள் யூகித்திரிப்பீர்க‌ள். நிற்க‌. த‌மிழ‌க‌ம் நீண்ட‌ நெடுங்கால‌மாக‌ க‌ர்நாடக‌த்துட‌னும், கேர‌ளாவுட‌னும் ந‌தி நீருக்காக‌ ம‌ல்லுக்க‌ட்டுகிற‌து. த‌மிழ‌க‌த்தின் க‌ட‌ற்க‌ரை நீள‌ம் 1000 கி. மீ. இப்ப‌குதியில் உள்ள‌ க‌ட‌ல் நீரை பாச‌ன நீராக‌ மாற்றினாலே, த‌மிழ‌க‌த்தின் பாச‌ன‌ நீர் பிர‌ச்சினையை தீர்க்க‌ முடியும். ராம‌நாத‌புர‌ம் மாவ‌ட்ட‌ம், ந‌ரிப்பையூரில் க‌ட‌ல் நீரை குடி நீராக்கும் திட்ட‌ம் தொட‌ங்க‌ப்ப‌ட்டு ப‌ர‌வாயில்லாம‌ல் செய‌ல்ப‌டுகிற‌து. இது ஜெய‌ல‌லிதா கால‌த்தில் தொட‌ங்க‌ப்ப‌ட்ட‌து. இங்கு ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டும் முறை "state of the art" method. இத‌ற்கு ஆகும் செல‌வு அதிக‌ம். சூரிய‌ ஒளியை ப‌ய‌ன்ப‌டுத்தி க‌ட‌ல் நீரை பாச‌ன‌ நீராக‌ மாற்றும் ஆர‌ய்ச்சியை மேற்கொண்டால் செல‌வை குறைக்க‌ முடியும். ஒரு 100 கோடி ரூபாயை த‌மிழ‌க‌த்தில் உள்ள‌ இள‌ம் விஞ்ஞானிக‌ளிட‌ம் கொடுத்தால், அவ‌ர்க‌ளால் இத்திட்ட‌த்தை நிறைவேற்ற‌ முடியும். த‌மிழ‌க‌ அர‌சின் செல‌வின‌ங்க‌ளில் 100 கோடி என்ப‌து மிக‌‌ச்சிறிய‌ தொகை. அத‌ற்கான‌ முய‌ற்சியை த‌மிழ‌க‌ அர‌சு எடுக்குமா என்ப‌தே கேள்வி? இதைத் தான் தொழில்நுட்ப‌ம் சார்ந்த‌ முத‌லீடு என்கிறேன்.

    ச‌மூக‌ அக்க‌றையுட‌ன் க‌ட்டுரைக‌ள் எழுதும் உங்க‌ளுக்கு, இது நான் த‌ரும் facts ம‌ட்டுமே.

    சில‌ ஆண்டுக‌ளுக்கு முன், துணை முத‌ல்வ‌ர் ஃச்டாலினை, ஆயிர‌க்க‌ண‌க்கான‌ தி. மு. க‌. தொண்ட‌ர்க‌ள் முன்னிலையில், ம‌துரை ர‌யில் நிலைய‌த்தில், ப‌க‌ல் 11 ம‌ணி அள‌வில் கொலை வெறியுட‌ன் ஒருவ‌ர் தாக்கிவிட்டு த‌ப்பி விட்ட‌ரே. அவ‌ரை பிடிக்க‌ அமைக்க‌ப்ப‌ட்ட‌ 3 த‌னிப்ப‌டைக‌ளும், யாரையும் இன்றுவ‌ரை கைது செய்ய‌வில்லையே ஏன்? krishnamoorthy

    பதிலளிநீக்கு
  26. கோடநாடு திம்மிகள் பத்தி படித்தேன். ஏன் இந்த வன்மம். ஜெயிடம் ஆணவம் இருக்கிறது அது உண்மை. அகங்காரம் இருக்கிறது அது உண்மை. ஆனால் கொஞ்சம் மனசாட்சியும் இருக்கிறது அதுவும் உண்மை. முதன்முறையாக ஜெ ஆட்சி பொறுப்பேற்ற அந்த 5 ஆண்டு காலம் ஒரு ஆட்சி எப்படி இருக்ககூடாது என்பதற்கு உதாரணம். ஆனால் இரண்டாம் முறை அவரின் ஆட்சி ஓரளவு மக்கள் நலம் சார்ந்தே இருந்தது. குறிப்பிட்டு சொல்லும்படியான எந்த ஒரு பெரிய ஊழலும் நடைபெறவில்லை. நிர்வாகம் ஓரளவு சரியாகவே செயல்பட்டது. என்னுடைய உறவினர் ஒருவர் ஒரு மூத்த IAS அதிகாரி. மிகவும் நேர்மையானவர். அவர்தான் சொன்னார், ஜெ ஆட்சின்போது எந்த ஒரு அமைச்சரோ அல்லது கட்சின் முக்கிய நபரோ அதிகாரிகளை மிரட்டவோ அல்லது அவர்களுடைய வேலையில் தலையிடவோ முடியாது என்று. இவ்வளவு எழுதும் உங்களின் பேனா ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றி அல்லது தினகரன் பத்திரிகை எரிப்பு பற்றி, நில விவகாரங்களில் ஈடுபடும் அமைச்சர்கள் பற்றி பணத்தையும் சாராயத்தையும் கொடுத்து சாகடிக்கப்படும் ஜனநாயகத்தை பற்றி எழுதுங்களேன். தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த அரசியல் தலைவரின் மீதும் விரோதம் கிடையாது, ஆனால் நடுநிலையோடு பார்க்கும் போது இந்த ஆட்சி சீரழிவின் உச்சம், ஆணவமும் ஆத்திரமும் கொண்டவர்களெல்லாம் கெடுதல் செயபவர்களுமல்ல, சிரித்துக்கொண்டே பழகுபவர்கள் எல்லாம் நல்லவர்களும் அல்ல. ஏறக்குறைய எல்லா பத்திரிகை ஆசிரியர்களையும் விலைக்கு வாங்கிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது, முதல்வரே பத்திரிக்கை ஆசிரியர்களை தனியாக கவனிக்கிறார், அரசில் என்ன காரியம் என்றாலும் பத்திரிக்கையாளர்களுக்கு உடனே முடித்துகொடுக்கபடுகிறது, சமுதாயத்தின் முக்கிய தூணான பத்திரிக்கை உலகம் எலும்புக்கு அலையும் நாயைப்போல மாறிவிட்டது, நான் ஒன்றும் ஜேவுடைய ஆதரவாளன் அல்ல,
    எனக்கும் அவர் மீது கடுமையான் விமர்சனங்கள் உண்டு ஆனால் பத்திரிகை உலகம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வது கண்டனத்துக்குரியது. இரண்டு அமைச்சர்கள் முன்னிலையில், வெட்டப்பட்டதால் உயிர்க்கு போராடிய அந்த இன்ஸ்பெக்டரின்
    வீடியோ காட்சியை பாருங்கள், அமைச்சர்களின் மனிததன்மையற்ற செயல் புரியும். அந்த செய்தியை பற்றி எந்த பத்திரிக்கையில் கவர் ஸ்டோரி வந்தது? அழகிரியை பற்றி யாராவாது பேச முடியுமா? என்னுடைய இந்த எதிர்வினையை உங்களின் திம்மிகள் பின்னூட்டத்தில் பதிவிட்டு நீங்களும் எலும்புத்துண்டுக்காக காத்திருக்கும் நாய்களில் ஒருவரில்லை என்று நிருபியுங்கள்.

    பதிலளிநீக்கு
  27. பெயரில்லா1:10 PM, ஜூன் 20, 2010

    ம‌த்திய‌ அர‌சினால், Deemed University த‌குதியில் இருந்து நீக்க‌ப்ப‌ட்ட‌ க‌ல‌ச‌லிங்க‌ம் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ துணைவேந்த‌ர், அண்ணா ப‌ல்க‌லைக‌ழ‌க‌ம் (தொழில்நுட்ப‌ம்) துணைவேந்த‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். இதே ப‌ல்க‌லைக‌ழ‌க‌த்தின் ம‌துரை பிரிவிற்கு R. முருகேச‌ன் நிய‌மிக்க‌ப்ப‌ட்டிருக்கிறார். இவ‌ர் சென்று வ‌ந்த‌ நாடுக‌ளின் ப‌ட்டிய‌ல், இவ‌ர் க‌ல்லூரி வ‌லைத‌ள‌த்தில் பிர‌தான‌மாக‌ குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ளது. எந்த‌ ந‌ல்ல‌ ஆராய்சியாள‌ரும், வெளிநாடு சென்றுவ‌ருவ‌தை த‌குதியாக‌ காட்ட‌மாட்டார். Scifinder என்ப‌து ஒரு ஆராய்சியாள‌ன் வெளியிட்ட‌ அனைத்து க‌ட்டுரைக‌ளையும் தேடி ந‌ம‌க்குத் த‌ரும் (ஒரு வ‌ருட‌த்திற்கு ரூ. 45 ல‌ட்ச‌ம் செலுத்தினால் ஒரு License கிடைக்கும். என‌து ஆராய்சி நிறுவ‌ன‌த்திற்கு 3 License உள்ள‌து) இவ‌ர்க‌ள் பெய‌ரை Scifinder ல் கொடுத்தால் ஒன்றும் வ‌ர‌க்காணோம். த‌குதிய‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு இவ்வ‌ள‌வு முக்கிய‌மான‌ ப‌த‌வி கொடுத்தால், நாளைய‌ ச‌முதாய‌ம் சீர‌ழியுமா இல‌லையா? இது போன்ற‌ ப‌ணி நிய‌ம‌ன‌ங்க‌‌ளில் ஊழ‌ல் த‌விர்க்க‌ப்ப‌ட்டு, க‌ல்வித்த‌குதி முன்னிறுத்த‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தே என‌து அவா. krishnamoorthy

    பதிலளிநீக்கு
  28. கழக நிரந்திர பொதுச் செயலாளர்
    இதய தெய்வம், தங்கத் தாரகை,
    கலைமாமணி, புரட்சித் தலைவி,
    டாக்டர் மாண்புமிகு அம்மா,
    அவர்கள் ஒரு சூரியனைப் போன்றவர்,
    சூரியனைப் பார்த்து ஊளையிடும் நாய்களுக்கு
    சூரியன் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
    அதே போல் தான் அம்மாவை குறை கூறுபவர்கள்
    நாய்களைப் போன்றவர்கள்

    அம்மாவின் வழியில்,
    ஆருயிர்த் தொண்டன்,
    அம்மா.K.பிரசாத்.

    பதிலளிநீக்கு