19 ஜூன், 2010

ராவணன்!

படம் முழுக்க மழை. அல்லது நசநசவென்று ஈரம். படம் பார்த்தவர்களுக்கே சளி பிடிக்கும்போது இரண்டு ஆண்டுகளாக நடித்தவர்களுக்கும், கேமிராமேனுக்கும், இயக்குனருக்கும், யூனிட்டுக்கும் காசநோயே வந்திருந்திருந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. மணிரத்னம் இனி ஆங்கிலப் படங்களை ஹாலிவுட்டுக்கு போய் இயக்கலாம்.

இப்படிப்பட்ட லொகேஷன்களை எங்கேதான் இவ்வளவு நாட்களாக ஒளித்து வைத்திருந்தார்களோ. படம் முழுக்க கருப்பு. நிறம் ஒரு குறியீடாக இருக்கலாம். பாறைகளில் விழுந்து, புரண்டு, உருண்டு, ஓடி, குதித்து நடித்த விக்ரமுக்கும், ஐஸ்வர்யாராய்பச்சனுக்குமே ஏராளமான சிராய்ப்புகள் என்றால், கேமிராவை முதுகில் தூக்கிக்கொண்டு படம்பிடித்த ஒளிப்பதிவாளர் என்ன கதி ஆகியிருப்பார்?

பாரதிராஜா உச்சத்தில் இருந்தபோது ஒருமுறை பேட்டி கொடுத்தார். “மணிரத்னத்தைப் பார்த்தா பயமாயிருக்கு. மேக்கிங்லே மிரட்டுறாரு”. அப்போது மணிரத்னம் அக்னிநட்சத்திரம், நாயகன் எடுத்திருந்தார். பாரதிராஜா இராவணனை பார்த்தால் என்ன சொல்வாரோ? இந்திய சினிமா படைப்புத்திறனின் உச்சம் இப்படம். தி ஒன் அண்ட் ஒன்லி மணிரத்னம்.

இயக்கமும், கேமிராவும், நடிகர்களும் இராவணனில் பாராட்டுகளை சுலபமாக கூடை கூடையாக அள்ளிச்செல்வார்கள். உயிரோட்டமுள்ள செட்டுகளை அமைத்த கலை இயக்குனர் பாவம். ஓவர் ஒரிஜினாலிட்டியோடு செட் போட்டுவிட்டதால், அவையெல்லாம் செட்டுதானென்று கூட பார்வையாளனால் உணரமுடியாது.

சினிமா என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்திக்கொண்டு பார்வையாளனை மிரட்டவைக்கும் ஊடகம் என்று நம்பும் நண்பர்கள் இத்தோடு இப்பக்கத்தை மூடிவிட்டு ‘மணிரத்னத்துக்கு ஆஸ்கர் கொடுக்கணும்’ என்று சிந்தித்துவிட்டு, வேறு வேலையை பார்க்கச் செல்லலாம். இல்லை இந்திய சினிமா கதை சொல்லும் ஊடகம் என்று சொல்பவர்கள், மேற்கொண்டு விமர்சனத்தை தொடரலாம்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ஒரு இயக்குனர் இருந்தார். அவர் பெயர் மணிரத்னம். நடுத்தரக் குடும்ப உணர்வுகளை, சிக்கல்களை அழகாக படம்பிடிப்பார். இளையராஜா என்றொரு இசையமைப்பாளர் இருந்தார். அவரும், இவரும் இணைந்து தந்த படங்கள் இன்றுவரை சூப்பர்ஹிட்டு. மிகச்சரியாக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, திடீரென ஓரிரவில் அந்த தமிழ் இயக்குனர், இந்திய தேசிய இயக்குனர் ஆகிவிட்டார். அதற்குப் பின்னர் அவர் ’அலைபாயுதே’ என்று ஒரே ஒரு தமிழ்ப்படம் எடுத்ததாக தெரிகிறது. இந்திக்காரத் தோழர்களே! எங்கள் ஊர் மணிரத்னத்தை மும்பையிலோ, டெல்லியிலோ பார்த்தால் கொஞ்சம் நினைவுப்படுத்துங்கள். சென்னை என்று ஒரு ஊரும் இந்தியாவுக்குள் இருக்கிறது.

இராவணனின் பிரச்சினைகள் என்னென்ன?

முத்தாய்ப்பாக சொல்ல வேண்டுமானால், நேட்டிவிட்டி. படத்தில் காட்டப்படும் பழங்குடியினர் ஒருவேளை சட்டீஸ்கரிலோ, உத்தரகாண்டிலோ, மேற்குவங்காளத்திலோ இருக்கலாம். திருநெல்வேலி என்று காதுகுத்துவது எந்த ஊர் ஞாயம்? அப்போகலிப்டோ படத்தை தமிழில் டப் செய்து டிவிடியில் பார்ப்பதைப் போன்ற ஃபீலிங்.

அடுத்ததாக கதை. போஸ்டரிலோ, டைட்டிலிலோ ‘கதை’ என்ற பதத்தை பார்த்ததாக நினைவில்லை. படத்தில் இல்லாத ஒரு சமாச்சாரத்தை யாராவது எழுதினார்கள் என்று வீணாக பொய் சொல்வானேன் என்று மணிரத்னம் நினைத்திருக்கலாம். பத்து தலைகளும் பல்லிளிக்கிறது.

வசனம் : சுஹாசினி மணிரத்னம். அய்யோ. அய்யோ. உப்புசப்பில்லாத ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும் ’லே’ போட்டுவிட்டால் திருநெல்வேலி பாஷையாம். இயக்குனர் ஹரிக்கு திருநெல்வேலி டவுனில் சிலை வைக்கலாம். திருடா திருடி ஹீரா மாதிரியே ஐஸ்வர்யா ராய்பச்சன் கத்துகிறார். பச்சன் மட்டுமா கத்துகிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ், ப்ரியாமணி என்று படத்தின் எல்லா பாத்திரங்களுமே கத்தி, கத்திதான் பேசுகிறார்கள். வன்முறையான படத்தில் கத்தியை சரியாக காட்டவில்லை என்பதால், ஆளாளுக்கு கத்தி தொலைக்க வேண்டுமா? கத்தி தொலைத்தாலும் பரவாயில்லை. புரியும்படியாகவாவது கத்தியிருக்கலாம். தமிழ்படத்துக்கு தமிழில் சப்டைட்டில் போடவேண்டிய அவலநிலை இராவணனால் ஏற்பட்டிருக்கிறது.

திரைக்கதை. முதல் காட்சியில் ஐஸ்வர்யா கடத்தப்படுகிறார். போலிஸ் தேடுகிறது. இந்தக் கட்டத்தை தாண்டி ஒரு காட்சிக்கூட முதல்பாதியில் இல்லவே இல்லை. இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக் ஆறுதல். நீளமான, மெதுவான க்ளைமேக்ஸ். ஈரானியப் படங்கள் பார்ப்பதை தடைசெய்தால்தான் இந்திய திரைக்கதை ஆசிரியர்கள் உருப்படுவார்கள்.

இசை. வசனத்தைதான் கத்திப்பேசி காதுவலி ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றால் இசையும் கூடசேர்ந்து ஒத்து ஊதியிருக்கிறது. பாடகர்கள் எல்லாருமே பல டெஸிபல்கள் சாரீரத்தை கூட்டிதான் கத்தித் தீர்த்திருக்கிறார்கள். அருவிச்சத்தம் அபாரமானதுதான். அதையே டி.டி.எஸ்.ஸில் பன்மடங்கு ஒலிகூட்டி படம் முழுக்க கொடுத்துக் கொண்டேயிருந்தால் ரசிகர்கள் பாவமில்லையா?

அட்டகாசமான மேக்கிங். மிக மோசமான உள்ளடக்கம். மணிரத்னம் இனி படமெடுக்காமலேயே இருக்கலாம். நாங்களும் நாயகன், தளபதி, மவுனராகம், அக்னிநட்சத்திரம் புகழ்பாடியே காலத்தை ஓட்டலாம்.

இராவணன் - பத்து மடங்கு தலைவலி!

31 கருத்துகள்:

  1. மீ தி பர்ஸ்ட்

    படம், As Usual, மொக்கையா?

    பதிலளிநீக்கு
  2. மிக நேர்மையான விமர்சனம். நிறைய மைனஸ் ஹிட்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள். உங்களையும் so called ரசனை இல்லாதவர்கள் லிஸ்டில் சேர்க்கபோகிறார்கள். உஷார் !!!!!

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:27 PM, ஜூன் 19, 2010

    தோழர், சாருநிவேதிதா படம் குப்பை என விமர்சனம் எழுதுவாரா அல்லது ஹாலிவுட் ரேஞ்ச் என எழுதுவாரா? ஒரே கன்பியூசனா இருக்கு. எப்படி இருந்தாலும் பாருநிவேதிதா கோவணம் இன்னும் கொஞ்சநாளில் டுபாக்கூர் பதிவர்கள் கைகளில் தான். ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா12:32 PM, ஜூன் 19, 2010

    அப்போ ஜண்டு பாம் தியேட்டரில் இலவசமாக கொடுப்பாங்களா ?

    பதிலளிநீக்கு
  5. 'நேர்மையின் இலக்கணம்' தங்களின் திரை விமர்சனங்களில் மிலிர்கிறது. பிற விமர்சகர்கள் படித்தால்... தம்மைத்தாமே உணர்ந்துக்கொள்வார்கள். அப்பழுக்கற்ற சினதனைக்கு வாழ்த்துக்கள். நண்பரே! ‍-‍கடலூர்_கவுஸ்

    பதிலளிநீக்கு
  6. இராவணன் - பத்து மடங்கு தலைவலி!

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா1:30 PM, ஜூன் 19, 2010

    \\ திடீரென ஓரிரவில் அந்த தமிழ் இயக்குனர், இந்திய தேசிய இயக்குனர் ஆகிவிட்டார். \\
    மிகச் சரி..............

    இது மட்டும்தான், தற்போது அவரிடமிருக்கும் முக்கியக் குறைபாடு........

    பதிலளிநீக்கு
  8. ”திருநெல்வேலி என்று காதுகுத்துவது எந்த ஊர் ஞாயம்?”

    நீங்கள் திருநெல்வேலிப் பக்கம் வந்தது இல்லை போலும்!

    பதிலளிநீக்கு
  9. //கத்தி தொலைத்தாலும் பரவாயில்லை. புரியும்படியாகவாவது கத்தியிருக்கலாம்.தமிழ்படத்துக்கு தமிழில் சப்டைட்டில் போடவேண்டிய அவலநிலை இராவணனால் ஏற்பட்டிருக்கிறது//

    அத‌னாலென்ன‌ டைட்டில் ம‌ட்டும் த‌மிழில் இருந்தால் போதாதா??

    பதிலளிநீக்கு
  10. Ihvnt seen this movie yet but i agree with one point...i hve been telling this to my friends for a long time...Below is what i hve been yelling ( Yes ) for a long time...Mani lost his identity...lost his originality....as u said that emotions what i hve seen in my childhood films like mounaragam is just missing in Mani...Rajavoda ellam pochu...

    இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ஒரு இயக்குனர் இருந்தார். அவர் பெயர் மணிரத்னம். நடுத்தரக் குடும்ப உணர்வுகளை, சிக்கல்களை அழகாக படம்பிடிப்பார். இளையராஜா என்றொரு இசையமைப்பாளர் இருந்தார். அவரும், இவரும் இணைந்து தந்த படங்கள் இன்றுவரை சூப்பர்ஹிட்டு. மிகச்சரியாக பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, திடீரென ஓரிரவில் அந்த தமிழ் இயக்குனர், இந்திய தேசிய இயக்குனர் ஆகிவிட்டார். அதற்குப் பின்னர் அவர் ’அலைபாயுதே’ என்று ஒரே ஒரு தமிழ்ப்படம் எடுத்ததாக தெரிகிறது. இந்திக்காரத் தோழர்களே! எங்கள் ஊர் மணிரத்னத்தை மும்பையிலோ, டெல்லியிலோ பார்த்தால் கொஞ்சம் நினைவுப்படுத்துங்கள். சென்னை என்று ஒரு ஊரும் இந்தியாவுக்குள் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா7:00 PM, ஜூன் 19, 2010

    Hello Luckylook,
    Actually near tirunelveli there is a place kalakkad mundanthurai tiger reserve. It will be similar to what is shown in the film. Anyways good review...

    G Hariprasad

    பதிலளிநீக்கு
  12. ஐயய்யோ என்ன எல்லோரும் இப்படி தாக்குறீங்க, பாவம் வுடுங்கப்பா

    //அப்போ ஜண்டு பாம் தியேட்டரில் இலவசமாக கொடுப்பாங்களா?/// - தலைவலி மட்டும் தான் இலவசம்

    விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல

    பதிலளிநீக்கு
  13. //அதற்குப் பின்னர் அவர் ’அலைபாயுதே’ என்று ஒரே ஒரு தமிழ்ப்படம் எடுத்ததாக தெரிகிறது. //

    +1. அடிப்படை பிரச்சினை இது தான். பாம்பே இந்தியக் கரு என்றாலும் ரசிக்கி மாதிரி இருக்கும். அலைபாயுதே தவிர கடந்த 15 ஆண்டுகளில் உருப்படியாக ஒரு படமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  14. டுபாக்கூர்12:50 AM, ஜூன் 20, 2010

    ஹையா... நான் எதிர்பார்த்த மாதிரி தான் ரிசல்ட் வந்துருக்கு...
    இனியும் எவனாவது (சாரி, எவராவது) ரீமேக் படம் எடுத்தீங்க...?

    அப்புறம் நடக்குறதே வேற...

    -விஜயின் ரீமேக் படங்களால் நொந்து நூடுல்ஸ் ஆனோர்களின் சங்கம்.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா1:16 AM, ஜூன் 20, 2010

    "மணிரத்னம் இனி படமெடுக்காமலேயே இருக்கலாம். நாங்களும் நாயகன், தளபதி, மவுனராகம், அக்னிநட்சத்திரம் புகழ்பாடியே காலத்தை ஓட்டலாம்"


    மிக மட்டமான ஒரு கருத்து

    பதிலளிநீக்கு
  16. சரியாச் சொன்னீங்க.
    ரொம்ப கொஞ்சி கொஞ்சி
    பிள்ளையை கெடுக்கற
    பெற்றோர் மாதிரி
    ஊடகங்கள் கெடுத்து வச்சிருக்கு
    நம்ப மணியை.

    பதிலளிநீக்கு
  17. மணிரத்தினம்...கதையை பற்றி எல்லாம் மறந்து பல காலம் ஆகிவிட்டது...

    பதிலளிநீக்கு
  18. ம‌ணிர‌த்ன‌ம் அறிவுஜீவி இய‌க்குன‌ர், இந்திய‌ சினிமாவின் அடையாள‌மாய் என்றுமே இருந்த‌தில்லை என்ப‌து ச‌த்திய‌மான‌ உண்மை.

    ம‌ணியின் முத‌ல் வெற்றிப்ப‌ட‌மான‌ “மெள‌ன‌ ராக‌ம்” கூட‌ கே.பாக்கிய‌ராஜின் “அந்த‌ 7 நாட்க‌ள்” ப‌ட‌த்தின் அப்ப‌ட்ட‌மான‌ காப்பி. ஒரு க‌தாசிரிய‌ராக‌ கே.பாக்கிய‌ராஜின் கால் தூசுக்கு கூட‌ பெறாத‌ ம‌ணிர‌த்த‌ன‌த்தை சிற‌ந்த‌ ப‌டைப்பாளி என்று சில‌ர் கொண்டாடுவ‌து பேத‌மையிலும் பேத‌மை.

    “என‌க்கு ச‌ர்வ‌தேச‌ த‌ர‌த்திலான‌ இசை தேவைப்ப‌ட்ட‌தால் AR.ர‌குமானுட‌ன் இனைந்தேன் ம‌ற்ற‌ப‌டி ராஜாவுட‌ன் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லை” என்று ஒருமுறை ம‌ணிர‌த்ன‌ம் உள‌றியிருந்தார், இதுவா உண்மையான‌ ந‌ட்பு? உண்மையான‌ ந‌ட்பு என்ப‌து த‌ன்னுடைய‌ வ‌ள‌ர்ச்சியிலும் ந‌ண்ப‌னையும் கைய‌னைத்து செல்வ‌துதான். ராஜாவின் த‌ர‌த்தை ப‌ற்றி “ப‌ல்ல‌வி அனுப‌ல்ல‌வி”க்கு முன்ன‌ரே ம‌ணிர‌த்ன‌ம் க‌ண்ட‌றிந்திருந்தால் ம‌ணிர‌த்ன‌த்தை ஓர் அறிவுஜீவி என்று கொண்டாலாம். இளைய‌ராஜா ம‌ட்டும் இல்லை என்றால் ம‌ணிர‌த்ன‌ம் என்றோ ஒழிந்து போயிருப்பார்.

    ம‌ணிர‌த்தின் த‌னித்துவ‌ம் கூட‌ PC. ஸ்ரீ ராம் – ஆல் வ‌ந்த‌து (இருட்டுக்குள்ள‌ ப‌ட‌ம் எடுக்குற‌து).

    த‌மிழில் ம‌ணிர‌த்ன‌த்தின் க‌டைசி வெற்றிப்ப‌ட‌மான‌ அலைபாயுதேவின் க‌தைகூட‌ ம‌ணிர‌த்ன‌த்தின் சொந்த‌க்க‌தையில்லை. ப‌ழ‌ம்பெரும் க‌தாசிரிய‌ர் R.செல்வ‌ராஜிட‌ம் இருந்து வாங்கி த‌ன‌து பெய‌ரையும் அதில் ஒட்டிக்கொண்டார். அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் அலைபாயுதேவின் இந்திப்ப‌திப்பில் க‌தை: ம‌ணிர‌த்ன‌ம் என்று த‌ன‌து பெய‌ரை ம‌ட்டும் போட்டுக்கொண்டார்.ஒரு ப‌டைப்பாளிக்கு உரிய‌ குறைந்த‌ப‌ட்ச‌ நேர்மை கூட‌ இல்லாத‌வ‌ரை இந்திய‌ சினிமாவின் ச‌ர்வேதேச‌ முக‌ம் எனக்கொண்டாடுவ‌து அப‌த்த‌திலும் அப‌த்த‌ம்.

    பதிலளிநீக்கு
  19. மணிரத்னம் நமது ஆவலை பூர்த்தி செய்யவில்லை என்பதுதான் உண்மை. மற்றபடி படம் தலைவலி என்பதெல்லாம் ஓவர். உங்களையெல்லாம் கூட்டிப்போய் சன் பிக்சர்ஸ் படங்களை தொடர்ச்சியாக பார்க்க வைக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  20. அசோக் மூர்த்தி8:14 AM, ஜூன் 21, 2010

    அதுவும் அந்த வையாபுரி character எதுக்கு வெச்சாங்கனே புரியல .. ராமாயணத்தையும் உருப்படியா சொன்ன மாதிரி தெரியல .. ஆனா கதைய தவிர மத்த எல்லாமே பாராட்டப்பட வேண்டியது .. கடும் உழைப்பு !

    பதிலளிநீக்கு
  21. அப்பாடா எனக்கு படம் பார்த்து இதான் தோனுச்சு.. ஒரு வேளை எனக்கு படம் பார்க்க தெரியலையோன்னு தோணிடுச்சு.. ஆனால் நீங்களும் என்னை மாதிரிதான் கஷ்ட பட்டிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. அல்லது ராம் கோபால் வர்மா மாதிரி முழுக்க ஹிந்தி படங்கள் எடுக்க மும்பையில் போய் செட்டில் ஆகி விடுவது மிக நல்லது.தமிழாவது தப்பிக்கும்

    பதிலளிநீக்கு
  24. அலைபாயுதேக்கு அப்புறம் என் டைரக்டர் மணி ரத்னத்தை தேட வேண்டியுள்ளது.தமிழ் பேசும் ஹிந்தி படங்கள் எடுப்பதை இனிமேலாவது நிறுத்த வேண்டும்.வசனம் பல இடங்களில் புரியவில்லை என்பது நிஜம்.அருமையான தமிழ் எழுத பல வசனகர்த்தாக்கள் இருக்கும் நிலையில் சுகாசினியை பயன் படுத்துவது தமிழுக்கு செய்யும் துரோகம்.

    அல்லது ராம் கோபால் வர்மா மாதிரி முழுக்க ஹிந்தி படங்கள் எடுக்க மும்பையில் போய் செட்டில் ஆகி விடுவது மிக நல்லது.தமிழாவது தப்பிக்கும்

    பதிலளிநீக்கு
  25. Unbiased film review.

    Tamil audiences are so intelligent to give hit or flop to a film based on story & screenplay only and not on director base or stardom based.

    Director Shankar please take care of your robot prior to its release, as the kollywood sentiment says whatever film acted by Aish in Tamil will not succeed in box office ex, IRUVAR, JEANS, KANDUKONDEN KANDUKONDEN and now RAVANAN.

    பதிலளிநீக்கு
  26. nice review !

    Read mine here!
    Expecting ur feedback!

    Raavanan-Ten heads but no brain!

    http://theumeshblog.blogspot.com/2010/06/raavanan.html

    பதிலளிநீக்கு
  27. //"மணிரத்னம் இனி படமெடுக்காமலேயே இருக்கலாம். நாங்களும் நாயகன், தளபதி, மவுனராகம், அக்னிநட்சத்திரம் புகழ்பாடியே காலத்தை ஓட்டலாம்"//

    I second this. ஏதோ அவரே புரிஞ்சு நான் இனிமே படமெடுக்கறதிலே இருந்து ரிட்டயராகப்போறேன் அப்டின்னு ஸ்டேட்மெண்ட் விட்டுருக்காராமே. வெறும் பேச்சோட இல்லாம செயல்படுத்தட்டும்..

    பதிலளிநீக்கு