10 ஜனவரி, 2014

இளைய தளபதி விஜய்

நேற்று இரவு மடிப்பாக்கத்தில் ’மாட்டினா மரண அடி கய்ஸ்’ குழுவினர் இளைய தளபதி விஜய்க்கு கட்டவுட் வைத்து பாலாபிஷேகமும், தேனாபிஷேகமும் செய்துக் கொண்டிருந்தார்கள். காலையில் கட்டவுட்டையும் காணவில்லை. கய்ஸையும் காணவில்லை.

அதை விடுங்கள்.

என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரிந்த ரகசியம்தான். எல்லோருக்கும் சொல்லிவிடுகிறேன், பிரச்சினையில்லை.

எம்.ஜி.ஆர், கமலுக்கு பிறகு நான் ரசிக்கும் நடிகர் விஜய்தான். இளைய தலைமுறை நடிகர்களிலேயே விஜய் அளவுக்கு தோற்றப்பொலிவும் (அச்சான தமிழ் முகம்), நடனம், சண்டை, நடிப்புத் திறமையும் கொண்ட நடிகர் வேறு யாருமில்லை. ஆனால் தன்னுடைய potential என்னவென்று தெரியாமல், அநியாயத்துக்கு கேரியரை வீணடிப்பவரும் வேறு யாருமில்லை. நடனம் ஆடத்தெரியாத, முகத்தில் சரியாக ரியாக்‌ஷன் காட்டத்தெரியாத சூர்யாவெல்லாம் கூட விஜய்யை மிஞ்சிய நடிகராக பார்க்கப் படுவது ’நிஜமான’ விஜய் ரசிகனான என்னைப் போன்றவர்களுக்கு எத்தகைய மனத்துன்பத்தை தருமென்பதை சொல்ல வேண்டியதில்லை.

ஐம்பதாவது படம் என்பது ஒரு நடிகருக்கு மைல்கல்லான விஷயம். அதற்கு எப்படிப்பட்ட சப்ஜெக்ட்டை, எப்படிப்பட்ட இயக்குனரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். பிரபு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த கடைசிக்காலத்தில் அவரை வைத்து ஓரிரு சுமார் படங்கள் கொடுத்த ராஜ்குமாரையா இயக்குனராக ஒப்பந்தம் செய்வார்கள்? கேட்டால் ஏதோ நியூமராலஜி பார்த்து இயக்குனரை தேர்ந்தெடுத்ததாக சொல்கிறார்கள். ஆரம்பத்தில் விஜய் படங்கள் ஃப்ளாப் ஆகும்போதெல்லாம், அதற்கு காரணம் அவரது அப்பா எஸ்.ஏ.சி. என்று அசால்ட்டாக சமாதானம் சொல்லிக் கொண்டிருக்க முடிந்தது. நாற்பது வயதைத் தொட்டு விட்ட நிலையிலும் இன்னமும் அப்பாவுக்கு அடங்கிய அமுல் பாப்பா என்று அவரை சொல்லிக் கொண்டிருந்தோமானால் அதைவிட பகுத்தறிவுக்கு புறம்பான விஷயம் வேறொன்றும் இருந்துவிட முடியாது.

விஜய்யின் நேரடிப் போட்டியாளரான அஜீத்துக்கு இம்மாதிரி பிரச்சினைகள் ஏதுமில்லை. நடிப்போ, நடனமோ எதுவுமே அவருக்கு அவசியமில்லை. அஜீத் படம் மொக்கை என்றாலும் கூட, அஜீத் ரசிகர்கள் படத்தில் ‘தல மட்டும் சூப்பர்’ என்று திருப்திப்பட்டுக் கொள்வார்கள். மாறாக விஜய்யின் மோசமான படங்களில்கூட, விஜயின் பெர்ஃபாமன்ஸ் சூப்பராக இருந்தாலும் (உதா : குருவி, வில்லு, சுறா) ஒட்டுமொத்தமாகவே மக்கள் தூக்கியெறிந்துவிடுகிறார்கள்.

ரீமேக்தான் தன்னை கரை சேர்க்கும் என்று விஜய் ஒரு குருட்டு நம்பிக்கை வைத்திருக்கிறார். போக்கிரியால் நிகழ்ந்த விளைவு இதுவென்று நினைக்கிறேன். திருப்பாச்சி, துப்பாக்கி என்று அவரை தூக்கிவிட்ட படங்களை ஏன் மறக்கிறார் என்று தெரியவில்லை.

இளையதளபதி இப்போது இருக்கும் ரேஞ்சுக்கு எப்படி இயக்குனராக நேசனை தெரிவு செய்தார் என்பதே புரியவில்லை. ஆர்.பி.சவுத்ரி தன்னுடைய மகன் ஜீவாவுக்கு கூட நேசனை தேர்ந்தெடுத்திருக்க மாட்டார். அதுவும் தெலுங்கில் சர்வானந்த் நடித்த கேரக்டருக்கு இங்கே எப்படி இளையதளபதி நடிக்க முடியும். இந்த கேரக்டரில் நடிக்க விமல், சிவகார்த்திகேயனெல்லாமே கூட யோசிக்க மாட்டார்களா? 'ஜில்லா சூப்பர்’ என்று ரெண்டு மூன்று அணில் குஞ்சுகள் கூவலாம். இது இயல்பானதுதான். குசேலன் வந்தபோது கூட தமிழின் மிகச்சிறந்த படம் என்று ரஜினி ரசிகர்கள் சிலர் இணையத்தில் விமர்சனம் எழுதினார்கள். ஆனால் யதார்த்தம் என்று இருப்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதால் நஷ்டம் நமக்குதான்.

சரி, ரீமேக்தான் என்று முடிவு கட்டி விட்டாலும், அங்கே மகேஷ்பாபு ஹாட்ரிக் ஹிட் கொடுத்திருக்கிறார். பவன் கல்யாண் ஹாட்ரிக் ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த ஆறு படங்களில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து தொலைத்திருக்கலாமே? ‘தூக்குடு’வில் இளையதளபதி நடித்திருந்தால் இங்கே போக்கிரியின் ரெக்கார்ட் எல்லாம் தூள் தூள் ஆகியிருக்காதா? பாட்ஷா என்றொரு படம். ஜூனியர் என்.டி.ஆரின் மாஸ்டர்பீஸ். அதை தமிழில் எடுத்தால் விஜய்யை தவிர வேறு யாருமே செய்ய முடியாது. ‘அத்தாரிண்டிக்கி தாரேதி’ என்று பவன் கல்யாண் படம். ஆக்‌ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என்று சென்ற ஆண்டு ஆந்திராவையே அசைத்துப் பார்த்த படம். இங்கே விஜய் நடித்தால், தமிழின் அதிகபட்ச வசூலை எட்டிப் பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு.

இதையெல்லாம் இளையதளபதி பரிசீலனை கூட செய்ததாக தெரியவில்லை. அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஃப்ளாப் கொடுத்துக் கொண்டிருந்தாலும் தளபதியின் சம்பளம் மட்டும் ஏறிக்கொண்டே போகிறது. இப்படியே போனால் எந்தவொரு தயாரிப்பாளரும் விஜய்யை வைத்து படமே எடுக்க முடியாது. அவரே சொந்தமாக எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். தொண்ணூறுகளின் இறுதியில் லோ மற்றும் மீடியட் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் அமுதசுரபியாக விஜய் இருந்தார். பட்ஜெட்டுக்கும், சப்ஜெக்ட்டுக்கும் ஏற்றமாதிரி சம்பளத்தை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வாங்குவார் என்பார்கள். ரஜினி, கமல் படங்கள் எண்ணிக்கையில் குறைந்திருந்தாலும், விஜய் என்கிற மாஸ் நடிகரால் இண்டஸ்ட்ரி நன்றாக வாழ்ந்துக்கொண்டிருந்த காலம் அது. அந்த பொற்காலம் திரும்பாதா என்று அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைஆர்வலர்களும் ஏங்குகிறார்கள்.

11 கருத்துகள்:

  1. // ’நிஜமான’ விஜய் ரசிகனான என்னைப் போன்றவர்களுக்கு எத்தகைய மனத்துன்பத்தை தருமென்பதை சொல்ல வேண்டியதில்லை.// முதல்ல காசு கட் பண்ணிப்போடனும்..!! விஜய் ரசிகராமில்ல...

    பதிலளிநீக்கு
  2. தூக்குடு படத்தை பார்க்கும் போது ஏனோ விஜய் நடித்தால் செம மாஸ் ஆக இருக்கும் எனத் தோன்றியது. அதே போல பாட்ஷா, சீதம்மா, அத்தாரண்டி போன்ற நல்ல படங்கள் இருக்கும் போது விஜய்க்கு தேர்வு செய்ய தெரியாமல் போனது ஏனோ?. இனி ரீமேக் என்றால் பயப்படலாம்.

    பதிலளிநீக்கு
  3. ”குசேலன் வந்தபோது கூட தமிழின் மிகச்சிறந்த படம் என்று ரஜினி ரசிகர்கள் சிலர் இணையத்தில் விமர்சனம் எழுதினார்கள்.”

    ஹா ஹா.... மும்பை எக்ஸ்பிரஸ் , மன்மதன் அம்பு சூப்பர் என கமல் ரசிகர்கள் எழுதினார்களே? மறந்து விட்டீர்களா? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா12:50 PM, ஜனவரி 11, 2014

      மும்பை எக்ஸ்பிரஸ் ? அதுக்கு என்ன குறச்சல் .பாஸ் நீர் கருந்த்தேள் கிட்ட சினிமா விமர்சனம் படி ங்க . சாருகிட்ட படிச்சா ஒன் சைடாட்தான் எழுத முடியும்.நெறய வளருனும் தம்பி, அவ்சரப்படத ஓ கே?

      நீக்கு
  4. VaitheriChal ?.padamplab anal non appave sonnen enpathu ! HIT anal rasigargalai sabippathu ! Eppadiyo unga polappum nadakkuthu !

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா3:03 PM, ஜனவரி 10, 2014

    பிச்சை எதுக்கு டென்சன் ஆகுறாரு ? இவர்தான் குசேலன் உலக படம் என்று உளறிகிட்டு இருந்தவரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா12:43 PM, ஜனவரி 11, 2014

      சரியா சொன்னீர்கள் அவருக்கு கமல் மேலே [சாரு போல] ஏதோ கடுப்பு போல.அவ்ரு பிளாக்குலயும் இப்பிடிதான் உளறிகிட்டு இருக்கராரு.ஒரு வேள விஸ்வரூபம் படத்துக்கு அப்புறம் இப்பிடி ஆயிட்டாருன்னு தோனுது’சரியா?,,,,,,,

      நீக்கு
  6. பெயரில்லா10:06 AM, ஜனவரி 11, 2014

    first jilla'va pathutu vandhu review pannunga boss... padam super'a irukku...

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா8:42 PM, ஜனவரி 11, 2014

    yapppaaaaaaaaaaaaaa............

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா10:19 PM, ஜனவரி 11, 2014

    Padam marana mokkai. I think we have to start seeing all movie of the so called Tamil Big Heroes. Their headweight has become so high, that in 4-5 days, by releasing it in so many theaters, before the word of mouth spreads, they can recover the money. Unless, there is some kind of movement to ignore all movies of these stupid guys, they wont correct, they will be arrogant. Our first reaction, thought of watching the Ajith movie, now we cancelled it. Spread the word, start ignoring these idiots.

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா10:20 PM, ஜனவரி 12, 2014

    please don't lie, u r not a vijay fan. watch jilla first and say about vijay.

    பதிலளிநீக்கு