9 ஜனவரி, 2014

ஜில்லா

ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை மருமகளை மோகன்லால் திருமணம் செய்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பேக்கரி டீலிங்’ ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார். இதனால் அவரது அடுத்த அரசியல் வாரிசாக மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒரு ஆண், ஒரு பெண் என்று இரண்டு குழந்தைகளின் தாயான பூர்ணிமா பாக்யராஜை மோகன்லால் மணந்துக்கொண்டு வாக்குறுதியை காப்பாற்றுகிறார். பூர்ணிமாவின் மகன் தான் இளைய தளபதி விஜய். பிற்பாடு மோகன்லாலுக்கும் அவருக்கும் இன்னொரு உருப்படாத மகன் பிறக்கிறான். மகத்.

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து மாநில அளவில் பெரிய மனிதராகிறார் மோகன்லால். கட்டிவர சொன்னால் வெட்டிவர தயாராக வளர்ந்து நிற்கிறார் விஜய். ஆனால் மகத்தோ வெட்டியாக ஊர் சுற்றிக்கொண்டு, கண்ணில் படும் பெண்களை ரேப் செய்துக்கொண்டு, டோபு அடித்துக்கொண்டு வெளங்காவெட்டியாக உருவெடுக்கிறார்.

அரசியலில் விஜய்க்கு மோகன்லால் முக்கியத்துவம் கொடுப்பதை ஆரம்பத்திலிருந்தே மகத் விரும்பவில்லை. இளைஞரணித் தலைவர் பதவியை விஜய்க்கு தருவதை கடுமையாக எதிர்க்கிறார். ஆனாலும் மோகன்லால் விஜய்யைதான் அரசியலில் வளர்க்க விரும்புகிறார். ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்று அப்பா தன்னை வெறுப்பதாக கருதிக்கொள்ளும் மகத் , கடுப்பாகி ஹாஃப் ஹாஃபாக சரக்கடித்து, ஃபுல் போதையில், மோகன்லாலிடம் பணிபுரியும் பாஷா என்பவரின் மகளை கதறக் கதற...

இந்த அடாத செயலுக்காக மகத்தை தண்டிக்க வேண்டுமென்று விஜய் போர்க்கொடி தூக்குகிறார். விஜய்யை போட்டால்தான் தான் உயிரோடு இருக்க முடியுமென்று மகத் அவர் மீது கொலைமுயற்சியை நடத்துகிறார். விஜய் இதிலிருந்து தப்பிக்க, மிருகமாக மாறிவிட்ட மகத் என்ன செய்கிறோம் என்பது புரியாமல் பூர்ணிமாவின் மகளையும் (அதாவது விஜய்க்கு டைரக்ட், மகத்துக்கு இன்டைரக்ட் அக்காவை), அவரது கணவரையும்கூட போட்டுத் தள்ளிவிடுகிறார். அக்காவை இழந்த விஜய் எரிமலையாய் வெடிக்கிறார். தன்னுடைய மகளை கற்பழித்துக் கொன்ற மகத்தை ஒழிக்க வேண்டுமென்று விஜய்யோடு மோகன்லாலின் நம்பிக்கைக்குரிய சகாவான பாஷாவும் கரம் கோர்க்கிறார். மகத்தை போட்டுத் தள்ளுகிறார் விஜய்.

தூங்கிவிடாதீர்கள். ட்விஸ்ட் மிச்சமிருக்கிறது.

இதுவரை படத்தில் காட்டப்பட்டது மாதிரி மோகன்லால் அவ்வளவு பெரிய யோக்கிய கொண்டையெல்லாம் கிடையாது. தன் ரத்தத்தில் பிறந்த மகனான மகத்தை நன்றாக வாழவைக்க, விஜயை ஒரு பலியாடாகதான் வளர்த்துக் கொண்டிருந்தார். விஜய்யின் ஒரிஜினல் தந்தை அரசியல் கலவரத்தால் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதும் பொய். அவரை கொன்றவரே மோகன்லால்தான் என்று பழைய கதைகளை தெரிந்த பாஷா சொல்கிறார்.

க்ளைமேக்ஸ்.

மோகன்லாலை பார்க்க வருகிறார் விஜய். இவரை எதிர்கொள்ள முடியாமல் கூசிப்போகும் மோகன்லால், “நல்லவன், கெட்டவன் பாகுபாடெல்லாம் உலகத்தில் இல்லை. இலட்சியங்களை அடைய அனைவரும் சிறு சிறு தவறுகளை செய்தவர்கள்தான்” என்று தன்னுடைய கடந்தகால தவறுகளுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறார். விஜய்யிடம் தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் போட்டு கொடுத்துவிட்ட பாஷாவை போட்டுத் தள்ளுமாறு ஆணையிடுகிறார். அதை மறுக்கும் விஜய், மோகன்லாலின் காலில் விழுந்து வணங்கி “யார் என்ன சொன்னாலும் நீ மட்டும்தான் என் அப்பா. என்னோட ஒரிஜினல் அப்பன் இப்போ உயிர்பிழைச்சி வந்தாலும் கூட, உன்னைதான் என் அப்பனா ஏத்துப்பேன். ஏன்னா நீ என்னை அப்படி வளர்த்திருக்கே” ரேஞ்சுக்கு எட்டு, பத்து நிமிஷத்துக்கு முழம் முழமாய் செண்டிமெண்டை கொட்டி வசனம் பேசுகிறார். அவரும், பாஷாவும் சில்லவுட்டாக தனியாக இருக்கும் மோகன்லாலை விட்டுக் கிளம்புகிறார்கள்.

இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.

2007ல் ‘பிரஸ்தானம்’ என்கிற பெயரில் சாய்குமார், சர்வானந்த் நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் இது. தமிழில் இதுதான் ‘ஜில்லா’வாகிறது. பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும். சாய்குமாரின் நடிப்பு மட்டும் நன்றாக பேசப்பட்டது. அவருக்கு அவ்வருடத்துக்கான ஃபிலிம்பேர், நந்தி விருதுகள் இப்படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. சில காலம் முன்பு இப்படம் ‘பதவி’ என்கிற பெயரில் டப் ஆகி தமிழிலும் ரிலீஸ் ஆனது. வந்த சுவடே யாருக்கும் தெரியவில்லை.

பின்னணி இப்படியிருக்க, ‘வேலாயுதம்’ ஷூட்டிங்கில் ஜெயம் ராஜாவின் உதவியாளராக இருந்த நேசன் சொன்ன மதுரைப் பின்னணி கதை ரொம்பவும் பிடித்துப்போய் ‘ஜில்லா’வில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டதாக கதையளக்கிறார்கள். தெலுங்கு ரீமேக் என்று சொல்லிக் கொள்வதற்கு என்ன தயக்கமென்று தெரியவில்லை. தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல. நேசன் ஏற்கனவே ‘முருகா’ என்கிற படத்தையும் இயக்கியிருக்கிறார். விஜய்க்கு நல்ல ஸ்க்ரிப்ட் கேட்க தெரியவில்லை. தமிழில் விஜய் நடித்தால் ஷ்யூர் ஹிட் என்று சொல்லிக்கொள்ளக் கூடிய ஏராளமான படங்கள் சமீபமாகவே தெலுங்கில் வந்திருக்கின்றன. அப்படியிருக்கையில் அரதப்பழசான சப்ஜெக்ட்டுகளை ஏன்தான் குறிவைத்து தேர்ந்தெடுக்கிறாரோ தெரியவில்லை.

27 கருத்துகள்:

  1. பெயரில்லா4:23 PM, ஜனவரி 09, 2014

    why to unveil the entire plot before the release day ? isn't it cheap ?

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா4:29 PM, ஜனவரி 09, 2014

    s ramakrishnanukku oru nyayam,Jilla vukku oru nyayama?ennathaan kodigal puralum cinemavaga irundhalum releasekku munnadi thavirthirkalam..s ramakrishnanukku nernthathu periya aniyayam na..jilla vukku neengal seivadhu chinna aniyayam..

    பதிலளிநீக்கு
  3. // பாலகிருஷ்ணாவின் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான ‘சிம்மா’ ரிலீஸ் ஆன தேதியில் பிரஸ்தானமும் ரிலீஸ் ஆகித் தொலைத்ததால் படுதோல்வி அடைந்தது. வேறு தேதியில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் தோல்வி அடைந்திருக்கும்// ROFL

    உண்மையாகவே இது தான் கதையா? டிக்கெட்டும் வாங்கியாச்சு :(

    amas32

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா5:28 PM, ஜனவரி 09, 2014

    Yuva , I am waiting for VEERAM review. Arvind

    பதிலளிநீக்கு
  5. padam parthaple eluthirukinga???? padam parthutingala???

    பதிலளிநீக்கு
  6. boss vijay idhula police vararu appo adhu enna scene la vararu nu sonna unga kadhai konjam porandhum illa ne kapsa uduraenu enaku nalla theriyum

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா8:59 PM, ஜனவரி 09, 2014

    review change pannu pa...original review came

    பதிலளிநீக்கு
  8. ஜி இதெல்லாம் கொஞ்சம் உங்களுக்கே ஓவரா இல்ல.....

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா9:45 PM, ஜனவரி 09, 2014

    Gud one, Prasthanam (Telugu) released in 2010 not 2007...!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா10:19 PM, ஜனவரி 09, 2014

    padam therumma therratha?

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா12:44 AM, ஜனவரி 10, 2014

    மோகன்லால் - 'பசும்பொன்' சிவகுமார்

    பதிலளிநீக்கு
  12. please check this site http://tamilrockers.net/index.php/topic/24640-ஜில்லா-திரை-விமர்சனம்

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா5:51 AM, ஜனவரி 10, 2014

    //தெலுங்கில் ஹீரோவுக்கு ஜோடியில்லை. இதில் சேர்த்திருக்கிறார்கள் போல.//.
    There is a pair. They have two songs.. One is duet and another one in college..

    பதிலளிநீக்கு
  14. // இளைய தளபதியின் லாங் டயலாக்கை கேட்டு உலகத்தையே வெறுத்துவிட்ட மோகன்லால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சாகிறார்.//

    இந்த படத்தை பார்த்த நமக்கும் இது ஏதாவது குறியீடா?...

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா8:26 AM, ஜனவரி 12, 2014

    Yuva ithu thevayaa..Padathukum intha kathaikum sammandham illa.. bulb bulb :)

    பதிலளிநீக்கு
  16. யோவ் லூசு படம் பார்த்துட்டு நீ என்ன வேணும்னாலும் கழுவி ஊத்து இப்பிடி படம் பாக்காம விமர்சனம் எழுதுறியே அதுவும் ரிலிஸ் ஆகுறதுக்கு முந்துன டேட்ல உனக்கெல்லாம் அறிவே இல்லையா. விமர்சனம் எழுதுரதுக்குனு ஒரு தர்மம் இருக்கு நீ அதையும் மீறி இதுதா கதை அப்பிடுனு கூவுற க்ளைமக்ஸ் கூட விட்டு வைக்கல இப்படி கேவலமா எழுதுறதுக்கு இந்த பிளாக் அ தயவுசெஞ்சு நீயே மூடிடு

    பதிலளிநீக்கு
  17. படம் பார்த்துவிட்டு விமர்சனம் எழுது.படதுக்கும் உங்கள் கதைக்கும் சம்மதமே இல்லை.

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா11:39 AM, ஜனவரி 16, 2014

    ungaloda blog enoda fav...but neenga Jilla va pathi soli iruka vishayam 100% nonsense....prasthanam thelugu movie kum intha jilla kum entha sambatnhamum ila...nan 2 movie um pathutean...ethuku ivlo build up...nee vangara 5 r 10 paisa kasuku ithu thevaya...also udaney Vijay pathi oru blog...continius ah flop nu solra....last 4 films continuously hit except thalaiva...athuvum govt pana game nala poiduchu...so movie pakkamaley build up dututhutu iruka...ena polappu ithellam....

    பதிலளிநீக்கு
  19. //*யோவ் லூசு படம் பார்த்துட்டு நீ என்ன வேணும்னாலும் கழுவி ஊத்து இப்பிடி படம் பாக்காம விமர்சனம் எழுதுறியே அதுவும் ரிலிஸ் ஆகுறதுக்கு முந்துன டேட்ல உனக்கெல்லாம் அறிவே இ*ல்லையா. விமர்சனம் எழுதுரதுக்குனு ஒரு தர்மம் இருக்கு நீ அதையும் மீறி இதுதா கதை அப்பிடுனு கூவுற க்ளைமக்ஸ் கூட விட்டு வைக்கல இப்படி கேவலமா எழுதுறதுக்கு இந்த பிளாக் அ தயவுசெஞ்சு நீயே மூடிடு*//
    You rightly deserve this remark.Do not think too much of yourself.You are a empty vessel, That's why you are making more noise.
    V.Sudharshan

    பதிலளிநீக்கு