20 ஜனவரி, 2014

ஜில்லா : பொது மன்னிப்பு

‘ஜில்லா’ பற்றிய முந்தைய பதிவு. இதை வாசித்துவிட்டு, இப்பதிவை வாசிப்பது நலம். இல்லாவிட்டால் close செய்துவிட்டு செல்வது அதைவிட நலம்.

இரவு வேளைகளில் மல்லிகைப்பூ வாசத்தை முகர்ந்துவிட்டால், சராசரித் தமிழன் காமவெறி மூடுக்கு ‘செட்’ ஆகிவிடுவான். அதைப்போலவே சினிமா ரசிகர்களுக்கு ‘ஃபெஸ்டிவல் மூட்’ என்று ஒன்றிருக்கிறது. தமிழில் இதை சரியாக புரிந்துக்கொண்ட நடிகர்கள் எம்.ஜி.ஆரும், ரஜினியும். இவர்களது பெரும்பாலான படங்கள் நூறு நாள், வெள்ளிவிழா கண்டது பொங்கல், முன்பு தமிழ்ப்புத்தாண்டாக இருந்த ஏப்ரல் 14 மற்றும் தீபாவளி தினங்களில் வெளியான திரைப்படங்களில்தான். கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் ரசிகர்கள் கொண்டாட தகுதியான படங்களாக பார்த்து இறக்குவது ஒரு கலை. அரை நூற்றாண்டுக்கும் மேலான திரையுலக அனுபவம் பெற்ற கமல்ஹாசனுக்கு இன்றுவரை கைவராத கலை. எம்.ஜி.ஆராகவும், ரஜினியாகவும் ஆக விரும்பும் இளைய தளபதி அவர்கள் இந்த கலையை கற்றுக்கொள்ள வேண்டுமென்று தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம். முன்பாக இதே பொங்கல் திருநாளில் திருப்பாச்சி, போக்கிரி என்று அவர் கொடுத்த ப்ளாக்பஸ்டர் ஹிட்டுகள் கூட அவருக்கு இந்த உள்ளொளி தரிசனத்தை ஏற்படுத்திவிடவில்லை என்பது அவலம்தான்.

ஒரு வழியாக ‘ஜில்லா’ பார்த்துவிட்டோம். முந்தைய ‘தலைவா’வை விட ஒரு மொக்கைப்படத்தை இளைய தளபதி கொடுத்துவிட முடியுமா என்று நாம் வியந்துக் கொண்டிருந்த வேளையில், அதைவிட சூப்பர் மொக்கையையே என்னால் தரமுடியுமென்று தன்னுடைய ‘கெத்’தை நிரூபித்து சாதனை புரிந்திருக்கிறார். முன்பு ‘ஆதி’யில் ஏற்பட்ட அதே விபத்துதான் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. ‘திருஷ்யம்’ கொடுத்த மோகன்லால் திருஷ்டி கழித்துக் கொண்டிருக்கிறார். ‘தளபதி’ ரேஞ்சு படமென்று கதை சொல்லி, இளைய தளபதியின் கேரியர் படகை கவிழ்த்துவிட்டார் இயக்குனர் நேசன். இந்த படம் ஏன் மொக்கை என்று விளக்குவதற்கு ஆயிரத்து இருநூறு பக்கங்கள் தேவைப்படும் என்பதால், இந்த மொக்கைப் பதிவையே வாசிக்கும் தைரியம் கொண்டவர்கள் ஒரு முறை ‘ஜில்லா’வை தரிசித்து தனிப்பட்ட தெளிவுக்கு வந்துவிடலாம்.

படத்தில் ஒரு காட்சி வருகிறது. காஜல், இளைய தளபதியை நோக்கி சொல்கிறார். “உன் மூஞ்சியையே இப்போ கண்ணாடியில் பார்த்தால் உனக்கு பிடிக்காது”. அப்படியெனில் படம் பார்ப்பவர்களின் நிலைமையை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுமாரான ஒரு கதையை ஜில்லாவின் கதையென்று நமது வலைத்தளத்தில் பிரசுரித்திருந்த கட்டுரையை வாசித்த லட்சக்கணக்கானவர்கள், “பரவாயில்லை மாதிரிதான் இருக்கும் போலயே” என்று முதல்நாளே போய் படம் பார்த்திருக்கிறார்கள். அவ்வாறு பார்த்து, அதன் காரணத்தால் மனம் பிறழ்ந்துப்போய் ஆயிரக்கணக்கானவர்கள் உளவியல் சிகிச்சை பெற்றுக்கொள்ள நாம் காரணமாகி விட்டோம். அதற்காக லக்கிலுக் ஆன்லைன் தளத்தை வாசிப்பவர்களிடம் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோருகிறோம். இனிமேல் மொக்கையா இருக்குமென்று நாம் யூகிக்கும் திரைப்படங்களுக்கு, படுமொக்கையான கதையையே முன்கூட்டி எழுதுகிறோம் என்று சத்தியப் பிரமாணம் செய்கிறோம்.

கடைசியாக, ஜில்லாவுக்கும் பிரஸ்தானத்துக்கும் என்ன சம்பந்தம் என்று மீண்டும் யாரேனும் கையைப் பிடித்து இழுக்க நினைத்தால் ரெண்டு படத்தையும் பேக் டூ பேக்காக டிவிடியில் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். உங்களுக்காக மீண்டும் மீண்டும் நானே தற்கொலை முயற்சியில் ஈடுபடவேண்டுமென்று நீங்கள் எதிர்ப்பார்ப்பதில் நியாயமே இல்லை. நீங்களும் தற்கொலைக்கு முனையலாம். உங்களாலும் முடியுமென்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது. ஒரு ரீமேக்கை ரீமேக் மாதிரி தெரியாமல் படம் எடுப்பதில் மட்டும் இயக்குனர் நேசன் பாஸ்மார்க் வாங்கியிருக்கிறார். ஜெயம் ராஜா இவரிடம் இந்த பாடத்தை மட்டும் டியூஷன் படிக்கலாம்.

21 கருத்துகள்:

  1. எவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்,,,,,,,,,,,,,ரொம்ப நல்லாயிருக்கு

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3:37 PM, ஜனவரி 20, 2014

    But film is hit Lucky! It has beaten Veeram in collections :)

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:44 PM, ஜனவரி 21, 2014

    kuppura vizhundhalum unga meesai la edhuvum ottala pola

    பதிலளிநீக்கு
  4. //முன்பு தமிழ்ப்புத்தாண்டாக இருந்த ஏப்ரல் 14//

    அப்பப்ப update ஆய்கொங்கன்னே......

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா4:04 PM, ஜனவரி 21, 2014

    ada paavi adhu poli vimarsanama :(

    Christo

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா6:17 PM, ஜனவரி 21, 2014

    Epovume Unga Target Vijay thana? Yen Matha actors na bayama?

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா7:00 PM, ஜனவரி 21, 2014

    boss... neenga ennathan mokka padam'nu sonnalum, padam super hit.

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா7:47 PM, ஜனவரி 21, 2014

    படம் எவ்வளவு மோசமா இருக்கட்டும். விஜய் மகா கேவலமான நடிகனா இருக்கட்டும். அதுக்காக படம் பார்க்காம படம் ரிலீஸ் ஆகிறதுக்கு முன்னாடி விமர்சனம்ன்ர பேர்ல முழு கதையையும் எழுதறது எந்த வகைல ஞாயம்? எப்படியோ போங்கப்பா. உங்களுக்கா புரிஞ்சா சரி.

    k. rahman

    பதிலளிநீக்கு
  9. For vijay and his father and his fans even SURA Is a BB .. so no wonder they calling Jilla a hit .. Suratics to Jillatics - get a life ..

    பதிலளிநீக்கு
  10. அது எப்படிங்க, சொல்லி வச்ச மாதிரி எந்த மொக்கைப் படத்துக்கும் பிரபல பத்திரிக்கை 41 க்கு கம்மியா மார்க் போடுறதேயில்லை? விஜய்யின் எழுச்சிக்கும்,வீழ்ச்சிக்கும் காரணம் ஒரே ஒருவர்.....எஸ்.ஏ.சந்திரசேகர்.

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா3:05 AM, ஜனவரி 23, 2014

    Just now i watched the movie. Its 2:55AM. As a common reviewer its far better & the collection also reflects the same. I know you XXX fucker you won't read this comment fully. You fucking ass hole stop writing the fucking reviews regarding movies. You XXX fucker, first stop comparing your fucking imagination with Telugu & Tamil movies. Before the release of the film, you ass hole wrote something about the movie on its own title which not even match a bit. First think about yourself. You are a fool who not even knows the abbreviation for TCP & wrote some fucking article about Internet. If you have some time just read a blog written by "OTTHTHISAIVU" Ramasamy who is pissing on your face. Idiot!

    பதிலளிநீக்கு
  12. மேலே பின்னூட்டமிட்டிருக்கும் நண்டு என்பவர் சுராவின் பேரனாம். சுராவின் ஆவி இந்த மூடனை மன்னிக்கட்டும் ;-)

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா12:07 PM, ஜனவரி 23, 2014

    ungalamathiri vijay haters jilla mokka'nu kathikitte irunga... but jilla super hit... it beaten veeram collections.

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா9:38 PM, ஜனவரி 28, 2014

    Thanipatta veruppai pada vimarsanathil comikka vendam. Oru mathamaka ungalblog I padikuren marravaiyilirunthu ithu tharathil kurainthullathu.

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா5:42 PM, ஜனவரி 29, 2014

    Y might be a Vijay hater...But im a neutral fan...i liked jIlla...itz entertaining..dats it....disppointing abt ur blogs nowadays....target only Vijay...itz very bad

    பதிலளிநீக்கு