4 டிசம்பர், 2009

‘அட் ஃபைவ் இன் தி ஆஃடர்நூன்’

இந்த வாரம் நிச்சயம்!
மழையை செய்வோம் அலட்சியம்!!



ஈரானிய இயக்குனர் சமீரா மக்மல்பாஃப் (ஸ்பெல்லிங் : Samira Makhmalbaf) -ஆல் 2003ஆம் ஆண்டு இயக்கப்பட்ட படம் ‘அட் ஃபைவ் இன் தி ஆஃடர்நூன்’. தாலிபான்கள் ஆப்கனில் வீழ்ந்தப்பிறகு கல்வி கற்க நினைக்கும் ஒரு இளம்பெண்ணைப் பற்றிய விறுவிறுப்பான கதை.

ஆப்கன் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்குப் பிறகு காபூலில் முதன்முதலாக படம் பிடிக்கப்பட்டது இப்படம்தான். பிரெஞ்சு - ஈரானிய கூட்டுத்தயாரிப்பு இது.

கிழக்கு டூரிங் டாக்கீஸில் பதிவர்களுக்கான உலகப்பட வரிசையில் வரும் ஞாயிறு, 06-12-2009 மாலை ஐந்தரை மணிக்கு திரையிடப்படும் படமும் இதுவே. முதன்முதலாக இங்கே ஒரு பெண் இயக்குனரின் திரைப்படம் திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை.

உரையாடல் அமைப்பு சார்பாக மாதத்தின் முதல் ஞாயிறு நடக்கும் இந்த உலகப்படக்காட்சி இம்முறை முதல் வாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் நடத்தப்பட முடியவில்லை. இரண்டாவது வாரம் வருணபகவான் கருணை காட்டியதால் ஒத்திவைக்கப்பட்டு மூன்றாவது வாரம் திட்டமிடப்பட்டது. எதிர்பாராவிதமாக பதிவர் ஒருவரின் இல்லத்தில் நிகழ்ந்த துயரநிகழ்ச்சியால் நவம்பர் மாத உலகப்பட திரையிடல் ஒட்டுமொத்தமாக நடத்தப்பட முடியவில்லை.

எனவே டிசம்பர் முதல்வாரமான இந்த ஞாயிறு அடாது மழையடித்தாலும் விடாது காட்சிப்படுத்துவோம் என்று பத்ரியும், பைத்தியக்காரனும் உறுதியாக இருக்கிறார்கள். இனி வழக்கம்போல மாதத்தின் முதல் ஞாயிறே படம் திரையிடப்படும்.

பதிவர்கள் அனைவரும் சுற்றமும், நட்பும் புடைசூழ வந்திருந்து ரசிக்கலாம். பதிவர் அல்லாதவர்களும் வந்து படம் பார்க்க வரவேற்கப்படுகிறார்கள்.

6 கருத்துகள்:

  1. இவரின் மற்ற ஒரு படைப்பான The Apple பார்த்திருக்கிறேன்.

    இரானிய இயக்குநர்களின் மிகவும் கவர்ந்தவர்களுள் இவரும் ஒருவர்.

    ஆனால் ஞாயிறு அன்று வெளியூரில் இருப்பேன். சென்னையில் இருந்தால் கண்டிப்பாக வருவேன்..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  2. சூர்யா அண்ணாச்சி!

    அனேகமா எனக்குத் தெரிஞ்சு அதிகமா படங்கள் பார்த்த ஆளு நீங்க மட்டும்தான். ஒரு ஐயாயிரம் படம் பார்த்திருப்பீங்களோ?

    பதிலளிநீக்கு
  3. தம்பி யுவா, கிண்டல் பண்ண வில்லையே..??

    கணக்கில்லை... ஆனால் அவ்வளவு இருக்காது..

    பதிலளிநீக்கு
  4. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை எதிர்பார்க்கலாமா?

    பதிலளிநீக்கு
  5. இன்னும் படத்தையே பார்க்கலை இஸ்மாயில்! :-(

    பதிலளிநீக்கு