19 டிசம்பர், 2009
வேட்டைக்காரன்!
ஒரு வழியாக இந்த ஆண்டின் நிஜமான சூப்பர்ஹிட் கடைசியாக வந்தேவிட்டது. நான் கவனித்த வகையில் பொதுவாக ஆண்டின் இறுதியில் வெளியாகும் படங்கள் வசூலில் சோடை போவதில்லை. முந்தைய உதாரணங்கள் : காதலுக்கு மரியாதை, பில்லா. 600 பிரிண்டுகள் போடப்பட்டு வெளியாகியிருக்கும் வேட்டைக்காரன் வசூல் வேட்டையாடப் போகிறான் என்பதில் சந்தேகமேயில்லை. மூன்று வருடங்களுக்குப் பிறகு இளையதளபதி நிஜமான நூறாவது நாள் விழா காணப் போகிறார்.
என்ன மாஸ்? என்ன ஸ்டைல்? என்ன மேனரிசம்? என்ன உடல்மொழி? – தமிழ் திரையுலகில் விஜய்யின் இடத்தை இட்டு நிரப்ப விஜய்யால் மட்டுமே முடியும். திருமலைக்கு பிறகு யோசிக்காமல் டிக் அடிக்கவைக்கும் பக்கா ஸ்டைலான கமர்சியல் விஜய். காதலியின் எதிரில் காலால் கோலம் போடும்போதும் சரி, காட்டுத்தனமாக வில்லன்களை புரட்டியெடுக்கும் போதும் சரி. தி ஒன் அண்ட் ஒன்லி விஜய்! – ஆனால் லக்கிலுக்கைப் போலவே இவரும் +2வில் அரியர்ஸ் வைக்கும் வயதுடையவர் என்ற பாத்திரப்படைப்புதான் கொஞ்சம் ஓவர்.
அனுஷ்கா. எத்தனையோ இடங்களில் நீர்த்திவலைகளை பார்த்திருப்பீர்கள். ஈரமான அனுஷ்காவின் இடுப்பில் பார்க்கும்போது ஒரு சின்ன நீர்த்துளி கூட எத்தனை பேரழகு? எத்தனையோ இடுப்புகளை இந்த தமிழ்கூறும் நல்லுலகம் கண்டு களித்திருக்கலாம். ஆனால் எந்த இடையைக் காட்டிலும் அனுஷ்காவின் இடையே அதிசிறப்பு வாய்ந்தது என்பதை வேட்டைக்காரனை கண்டவர்கள் அறியலாம். தமன்னாவின் இடுப்பில் கூட கண்ணுக்கு தெரியாத லேசான மடிப்பை கண்ணை சுருக்கி உஷாராக உற்றுப் பார்த்தால் உணர்ந்து விடலாம். ஸ்டீம் அயர்னில் நீட்டாக இஸ்திரி செய்யப்பட்ட சிலுக்குத்துணி மாதிரியான இடுப்பு அனுஷ்காவுக்கு. ஏதேனும் அழகுப்பல்கலைக்கழகம் இடைத்தேர்வு நடத்தினால் டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆவார் என்பதில் சந்தேகமில்லை. முப்பதை நெருங்குகிறாராம். யோகா டீச்சராயிற்றே? சிக்கென்று இருக்க சொல்லியா தரவேண்டும்?
டைட்டிலில் ‘ஜூனியர் விஜய்’ என்று வரும்போது தியேட்டரில் எழும் விசில் சத்தம் விண்ணை கிழிக்கிறது. ஆனால் சீனியர் விஜய் ரேஞ்சுக்கு வருவதெல்லாம் ரொம்ப கஷ்டம். நடனத்துக்கான சீனியர் விஜய்யின் உழைப்பை, மைக்கேல் ஜாக்சனின் உழைப்போடு மட்டுமே ஒப்பிடலாம். அவர் அசால்ட்டாக போடும் ஸ்டெப்கள் பலவும் எலும்புமுறிவை உருவாக்கக் கூடியவை.
ஏற்கனவே கன்னாபின்னா ஹிட் அடித்துவிட்ட பாடல்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. படமாக்கம் அபாரம். குறிப்பாக ‘கரிகாலன் காலைப் போல’ அட்டகாசம். பாடல்களை கலக்கலாக படம் பிடித்திருக்கும் அறிமுக இயக்குனர் பாபுசிவன் படமெடுக்கவும் கொஞ்சம் கற்றுத் தேர்ந்தால் பரவாயில்லை. முதல் பாதி பாட்ஷா ரேஞ்ச் என்றால், இரண்டாம் பாதி குருவி ரேஞ்ச். இயக்குனரின் ஸ்டாக் முழுக்க பர்ஸ்ட் ஹாஃபிலேயே தீர்ந்துவிடுகிறது. செகண்ட் ஹாஃபில் சீன் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.
இடைவேளைக்குப் பிறகு விஜய் ஹீரோ என்பதை இயக்குனர் மறந்துவிட்டாரோ? வில்லனான சலீம்கவுஸ் சக்கைப்போடு போடுகிறார். அவரது இதழோர கேலிப்புன்னகை, ஆஸ்கர் வாங்கிய ஹாலிவுட் ஹீரோக்களுக்கே சவால் விடக்கூடியது. சலீம்கவுஸை விஜய் ஹேண்டில் செய்யும் காட்சிகள் சப்பையான ஐடியாக்கள். க்ளைமேக்ஸ் சுத்தமோ சுத்தம்!
வேட்டைக்காரன் – ரசிகர்களின் இதயங்களை நச்சென்று வேட்டையாடுகிறான்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
neenga padatha paraturingala..thitturingala... ethu varaikum nan padicha vimarsanathulayae ungalodan romba romba padatha paratti solli erukku...
பதிலளிநீக்குAre you serious?
பதிலளிநீக்குSir, sema comedy sir neenga..
பதிலளிநீக்குYesterday i watched this movie at mayajaal.. come'on its really worst. nothing there..i liked pokiri very much. Nothing is there in this movie. You are making other peoples to waste their money and time. i know you wont allow this comment.. but still i want ensure my people safety..
Sankar
நீங்க விஜய் ரசிகரா? அனுஷ்கா ரசிகரா?
பதிலளிநீக்குஅனுஷ்கா. எத்தனையோ இடங்களில் நீர்த்திவலைகளை பார்த்திருப்பீர்கள். ஈரமான அனுஷ்காவின் இடுப்பில் பார்க்கும்போது ஒரு சின்ன நீர்த்துளி கூட எத்தனை பேரழகு? எத்தனையோ இடுப்புகளை இந்த தமிழ்கூறும் நல்லுலகம் கண்டு களித்திருக்கலாம். ஆனால் எந்த இடையைக் காட்டிலும் அனுஷ்காவின் இடையே அதிசிறப்பு வாய்ந்தது என்பதை வேட்டைக்காரனை கண்டவர்கள் அறியலாம். தமன்னாவின் இடுப்பில் கூட கண்ணுக்கு தெரியாத லேசான மடிப்பை கண்ணை சுருக்கி உஷாராக உற்றுப் பார்த்தால் உணர்ந்து விடலாம். ஸ்டீம் அயர்னில் நீட்டாக இஸ்திரி செய்யப்பட்ட சிலுக்குத்துணி மாதிரியான இடுப்பு அனுஷ்காவுக்கு. ஏதேனும் அழகுப்பல்கலைக்கழகம் இடைத்தேர்வு நடத்தினால் டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆவார் என்பதில் சந்தேகமில்லை. முப்பதை நெருங்குகிறாராம்//
பதிலளிநீக்குதலைவா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :)நான் படிச்சதிலேயே இது தான் சூப்பர் விமர்சனம்
அனுஷ்கா
பதிலளிநீக்குஎத்தனையோ இடங்களில் நீர்த்திவலைகளை பார்த்திருப்பீர்கள். ஈரமான அனுஷ்காவின் இடுப்பில் பார்க்கும்போது ஒரு சின்ன நீர்த்துளி கூட எத்தனை பேரழகு? எத்தனையோ இடுப்புகளை இந்த தமிழ்கூறும் நல்லுலகம் கண்டு களித்திருக்கலாம். ஆனால் எந்த இடையைக் காட்டிலும் அனுஷ்காவின் இடையே அதிசிறப்பு வாய்ந்தது என்பதை வேட்டைக்காரனை கண்டவர்கள் அறியலாம். தமன்னாவின் இடுப்பில் கூட கண்ணுக்கு தெரியாத லேசான மடிப்பை கண்ணை சுருக்கி உஷாராக உற்றுப் பார்த்தால் உணர்ந்து விடலாம். ஸ்டீம் அயர்னில் நீட்டாக இஸ்திரி செய்யப்பட்ட சிலுக்குத்துணி மாதிரியான இடுப்பு அனுஷ்காவுக்கு. ஏதேனும் அழகுப்பல்கலைக்கழகம் இடைத்தேர்வு நடத்தினால் டிஸ்டிங்ஷனில் பாஸ் ஆவார் என்பதில் சந்தேகமில்லை. முப்பதை நெருங்குகிறாராம்.
யுவகிருஷ்ணா - அனுஷ்கா ரசிகர்.
பல இடங்களில் என்னோடு ஒத்துப் போகிறீர்கள்.
பதிலளிநீக்குநல்ல விமர்சனம்.
(வாழ்க அனுஷ்கா புகழ்.வளர்க - ச்சே - குறைக அவரது இடுப்பு!)
படத்தில கதை இருக்கா ?
பதிலளிநீக்குலக்கி லொள்ளூ இது தானா?
பதிலளிநீக்குஅன்புள்ள Lucky,
பதிலளிநீக்குஉங்களிடம் இருந்து இவ்வளவு மலிவான,போலியான
பொய்யான விமர்சனத்தை எதிர் பார்க்கல்லை.
இன்னும் நேர்மையான தைரியமான எதிர் பார்த்தேன்.
எந்த விதமான முயற்சி இல்லாமல் (like சூர்யா,விக்ரம்& evan அஜித் (வரலாறு))dance தவிர எந்த திறமையும் இல்லாமல் நம்மையெல்லாம் முட்டாளாக்கும் விஜய் மாதிரியான களைகளை
ஒழித்தால் தான் தமிழ் சினிமா உருப்படும்.
அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் உலக கொடுமை.
ATM,வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.
விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை
ஆனா நாங்க மாறி விட்டோம்.
டப்பா படம்.
வாவ்....எவ்வளவு விரிவான விமர்சனம்,
பதிலளிநீக்குயப்பா என்ன நடை , தூள் , " யுவ" "கிருஷ்ண" ரசித்து பதிவிட்டுள்ள
அனுஷ்காவின் இடை
பாராட்டி எழுதுனதுக்கு தேங்க்ஸ்! ஆனாலும், உள்ளுக்குள்ள ஒரு டவுட்... நீங்க இந்தப் படத்துக்கு கோ-புரொடியூசரா?
பதிலளிநீக்குகுரங்கோடு விளையாடிய அனுஷ்கா
பதிலளிநீக்குhttp://southcine.blogspot.com/2009/12/cute-anushka-playing-with-monkey.html
சத்தியமாவா சொல்லுத..
பதிலளிநீக்குஎதோ....
சத்த
வாய ஊது.... பாக்கலாம்...
- சென்னைத்தமிழன்
ஊரே ஒரு மாதிரி எழுதி இருக்கு, இங்க வேற மாதிரி இருக்கு.
பதிலளிநீக்குஒருவேளை 'மகன்' டிவி குடும்ப சப்போர்டர் ங்கறதால இப்படியா ?
ஐயோ ஐயோ... :-)
பதிலளிநீக்கு//Anonymous said...
பதிலளிநீக்குSir, sema comedy sir neenga..//
அனானி அவர்களே, உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக யாருக்குமே பிடிக்க கூடாது என்று நினைப்பது ஃபாஸிசம்.
உங்க சமூக நலனை உங்கள் பெயரிலே வந்து செய்ங்க.
வந்த விமர்சனங்களிலேயே இதுதான் மகா நக்கலான விமர்சனம் :)
பதிலளிநீக்குஅப்ப படத்தை பார்க்கலாம்னு சொல்ரீங்களா..!! நான் டிவில போடுவாங்கல்ல பொங்கலுக்கு - அப்ப பாத்துகலாம்னு வூட்ல சொல்லி வச்சிருக்கேன்..!!
பதிலளிநீக்குboss padam super.
பதிலளிநீக்குvijay is back.
padam mulukka visil than.
super super super
பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குதிரு. அகோரி! இன்னமும் உங்களுக்கு ட்ரீட்மெண்ட் முடியவில்லையா?
//திரு. அகோரி! இன்னமும் உங்களுக்கு ட்ரீட்மெண்ட் முடியவில்லையா?//
பதிலளிநீக்குஎங்கங்க ....
இது மாதிரி படம் ...
உங்க தலைவர் அறிக்கை ...
அப்பப்ப இதுமாதிரி உங்க பதிவு ...
இவ்ளோ சோதனைகளை தாண்டி .... எப்படி ....
அய்யா லக்கி,நீங்க நல்லவரா கெட்டவரா?கல்லூரி நாட்களில் தெரியாத்தனமாக மொக்கை படங்களை பார்க்க நேர்ந்தால் அந்த கடுப்பில் பில்டப் கொடுத்து ஹாஸ்டலில் இருக்கும் நண்பர்களில் 10 பேரையாவது அந்த படத்தை பார்க்க வைக்கும் பழக்கம் எனக்கு உண்டு.உஙகளுக்கும் அதே பழக்கம் இருக்கும் போல தெரிகிறது.ஹீரோக்கள் கையை காலை ஆட்டுவதை பார்த்து விசிலடிப்பவர்களின் எண்ணிகை குறைந்து கொண்டு வருவதை சுப்ரமணியபுரம்,பசங்க,நாடோடிகள் போன்ற படங்களின் வெற்றி உணர்த்தினாலும் விஜய் போன்றவர்கள் திருந்தப்போவதில்லை.விமரிசனம் என்பது நடுநிலையாக இருக்க வேண்டும்.விஜய் ரசிகனின் பார்வையில் இருந்து படத்தை பற்றி எழுதிவிட்டு அதை விமரிசனம் என்ற தலைப்பில் வெளியிடக்கூடாது.பெரிய நடிகர்களின் படம் என்றால் நமக்கேன் வம்பு என்று 41 மதிப்பெண்களை வழங்கும் விகடனின் விமரிசனத்தை மிஞ்சிவிடும்போல இருக்கிறது உங்கள் விமரிசனம்.
பதிலளிநீக்குமொக்கை படம். இவ்வள்வு நாள் நீங்கள் ஏதோ விசயவாதி திரைப்படங்கள் பற்றி ஏதாச்சும் தெரியும்மினு நெனச்சுகிட்டு இருந்தேன்...மிகப் பெரிய தவறு...
பதிலளிநீக்கு//நடனத்துக்கான சீனியர் விஜய்யின் உழைப்பை, மைக்கேல் ஜாக்சனின் உழைப்போடு மட்டுமே ஒப்பிடலாம். அவர் அசால்ட்டாக போடும் ஸ்டெப்கள் பலவும் எலும்புமுறிவை உருவாக்கக் கூடியவை.//
பதிலளிநீக்குநெஜமாலுமா!!!!!!
நம்பமுடிய வில்லை ????
சத்தியமா சொல்லுறேன்.... என்னோட வயிதெரிச்சல் உங்கள சும்மா விடாது... 100 ரூபாய்க்கு ஏதோதோ பண்ணி இருக்கலாம்... வெட்டியா போச்சே... உங்க விமர்சனத்த நம்பி இனி படமே பாக்க கூடாது போல!
பதிலளிநீக்குரசிகர்களின் பார்வையில் வேட்டைக்காரன்
பதிலளிநீக்குவிஜய் ரசிகன்: படம் செம சூப்பர். விஜய் நோ சான்ஸ். விஜய் பண்ற காமெடி எல்லாம் பட்டய கிளப்புது. ஐநூறு நாள் கண்டிப்பா ஓடும்.
அஜித் ரசிகன்: என்னய்யா படம் இது? கையால குத்தி கல் உடைக்கிறார்??? அந்த அருவியில் குதிக்கிற சீன் நல்ல காமெடி!!! சாமிகிட்ட மட்டும் தான் சாந்தமா பேசுவாராம். எனக்கு என்னமோ போன படங்களில் கிடைச்ச ஆப்பு தான் இப்போ அவரை சாந்தமா பேச வச்சு இருக்குனு தோணுது. அசல் வரட்டும். வேட்டைக்காரன் சட்னி ஆகிடுவான். பாருங்க.
ரஜினி ரசிகன்: தலைவரை காப்பி அடிக்குறதை இவர் நிறுத்த போவது இல்லை என்பதை நிரூபிக்கும் இன்னொரு படம். விஜய் தம்பி ஆட்டோ ஓட்டினா பாட்ஷா ரஜினி ஆகிட முடியுமா? கால கொடுமை.
கமல் ரசிகன்: எலி வேட்டைக்கு சாரி, புலி வேட்டைக்கு போறவன் எல்லாம் மருத நாயகம் ஆகிட முடியுமா? வரட்டும். அப்போ தெரியும் யார் மாஸ் என்று?
சூர்யா ரசிகன்: டான்ஸ் மட்டும் ஆடினால் போதுமா? நடிக்க வேண்டாமா? அரைச்ச மாவு புளிச்ச வாசம் அதான் இந்த வேட்டைக்காரன்
சராசரி சினிமா ரசிகன்: படம் மொக்கை தான். ஆனால் வில்லு, குருவிக்கு எவ்வளவோ மேல்.போக்கிரி படம் கிளைமாக்ஸ் தவிர்த்து பத்து தடவை பார்த்து இருக்கேன். அது நல்லா இருந்தது. ஆனால் இதுல ஏதோ ஒண்ணு பெருசா குறைஞ்சு போச்சு. முதல் பாதி போர் அடிக்காம போச்சு. ரெண்டாம் பாதி காதுல மட்டும் இல்லை காலுக்கும் சேர்த்து பூ சுத்துறாங்க. ஆனா படம் நல்லா ஓடும். தெனவாட்டு படத்தை ஓட வச்ச சன் டிவிக்கு இதை ஓட வைக்கிறது என்ன பெரிய கஷ்டமா?
இந்த இடுகையை படிச்சதிலிருந்து ஒரே குழப்பம்..பிளீஸ் ஆன்சர் தி பாலோயிங்..
பதிலளிநீக்குஇந்த இடுகையை காமெடிக்காக எழுதினீங்களா..இல்லை சீரியஸாவே எழுதினீங்களா?
நீங்க வேட்டைகாரனை அல்லது எங்களை வைச்சு ஏதும் காமெடி கீமடி பண்ணிடலேயே?
அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me
vettaikaran is a typica vijay film and tamil masala film... so obviously elalrukum pudikum danae expect ulaga padam pakkum bloggers..
பதிலளிநீக்குநான் இன்னும் படத்தை பார்க்கல, உங்க விமர்சனத்தை பாசிடிவா எழுதியதற்கு நன்றி !
பதிலளிநீக்குஅனானிகள் தங்கள் இஷ்ட்டதிற்கு பின்னுட்டோம் இடுவது சரியல்ல ...
Sorry to say - This review shows your understanding about movies - we expected that you would have better understanding about atleast commercial movies. This movie is trash.
பதிலளிநீக்குAfter a long period, from our house, we as a family went to view Vettaikaran after reading your post on the film. We enjoyed watching the movie since we are daily stressed in our jobs. After returning from the film, I am writing this comment as I re-read your post. While I was watching the movie, and while watching the stills in Raj Theatre, Saidapet, I was reminded of your post. So post-watching the film, the links provided in your post and the comments thereon provided much insights about the film especially Anushka (I would not have known the name of the heroine if I had not read your post). My 12-year old son asks me what is the name of the heroine which I answered but he also asked me in the theatre what were her previous films. Now I have come to know but he is fast asleep. Tomorrow I have to educate him.
பதிலளிநீக்குLong live your educative services to the society. By the by what is this steam iron?
- Ashok R
rajashokraj@yahoo.com
Brother,
பதிலளிநீக்குMy honest 2 cents..
Even if i am bribed i cant write such a review..
Vettaikaran is bad,Your review is very very bad..
சார், செம காமெடி சார் நீங்க.
பதிலளிநீக்குஒரு குப்பையை இவ்வளவு சீரியஸா நல்ல இருக்குன்னு சொல்ல முடியுமா.
இதுக்கு பேர்தான் தமிழில் 'வஞ்சபுகழ்ச்சி அணி'
//முதல் பாதி பாட்ஷா ரேஞ்ச் என்றால், இரண்டாம் பாதி குருவி ரேஞ்ச். இயக்குனரின் ஸ்டாக் முழுக்க பர்ஸ்ட் ஹாஃபிலேயே தீர்ந்துவிடுகிறது. செகண்ட் ஹாஃபில் சீன் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.//
பதிலளிநீக்குநண்பர்களே!
இதுதான் படத்தின் ஒட்டுமொத்த விமர்சனம். மத்த விஷயங்கள் எல்லாம் ஒட்ட வைத்தவை.
சரியாகதானே விமர்சித்திருக்கிறேன்? அப்புறம் என்ன எல்லோருக்கும் காண்டு? :-(
ungakitta irundhu ippadi oru vimarsanam varumnu naan yaedhir paarkalai... konjam nadunilayaa sollunga sir...
பதிலளிநீக்குடிசம்பர் 18ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸானது. நேற்றுடன் அப்படம் 30 நாட்களைத் தொட்டுள்ளது. ஆனால் அதற்குள் 40 நாட்கள் போஸ்டரை ஒட்டி விட்டனர்...
பதிலளிநீக்குhttp://gallery.oneindia.in/main.php?g2_itemId=1509148