அலப்பறையான ஆள் அவர். டி.எஃப்.டி. படித்தவர். ஒளிப்பதிவாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். மன்னிக்கவும் ஒளி ஓவியராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். மனிதருக்கு கொஞ்சம் இலக்கிய முகமும் உண்டு. அவ்வப்போது அதிரடியான அறிக்கைகள் மூலமாக தமிழகமெங்கும் அறியப்பட்டவர்.
ஆசீர்வதிக்கப்பட்ட ஒருநாளில் திடீரென இவரும் இயக்குனராகி விட்டார். முதல் படத்தின் முதல் நாள் ரிசல்ட்டை பார்த்து முந்திரிக்காட்டுக்கே மூட்டைக் கட்டிக் கொண்டு ஓடிவிடலாமா என்று நொந்துப் போனார். அதிசயத்தக்கவண்ணம் அப்படம் லேட் பிக்கப் ஆகிவிட, கோலிவுட் சிகப்பு கம்பளம் விரித்து ஒளி ஓவியரை இயக்குனராக வரவேற்றது.
அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்கள் 'புக்' ஆக ஒளிஓவியர் கண்மண் தெரியாமல் ஆடினார். ஏதோ ஒரு படத்துக்கு லொக்கேஷன் பார்க்க சென்றார். லொக்கேஷன் என்றால், ஓவியர் மனதுக்குள் சித்தரித்து வைத்த ஒரு வீடு. ஏகப்பட்ட வீடுகளை பார்த்தும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லையாம்.
கடைசியாக ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சுற்றிப் பார்த்த ஓவியர் அசிஸ்டண்டிடம், “ஏண்டா என்னோட லட்சுமி (எடுக்கப்போகும் படத்தின் கதாபாத்திரம்) குடியிருக்க இந்த கந்தாயம்தான் ஒனக்கு கிடைச்சுதா?” என்று எகிறியிருக்கிறார். அருகில் எளிமையானத் தோற்றத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் நின்றுக் கொண்டிருந்திருக்கிறார். ஓவியருக்கு அவர்தான் உரிமையாளர் என்று தெரியாது.
கோபமடைந்த வீட்டு உரிமையாளர் பதிலுக்கு ஓவியரிடம் கத்தியதுதான் ஹைலைட். “ஏன்யா முப்பது வருஷமா எம்பொண்டாட்டியே குடியிருக்குற வீடு இது. உன் லஷ்மி நாளஞ்சி நாள் வெறும் ஷூட்டிங்குக்கு குடியிருக்க மாட்டாளா?”
ஒளி ஓவியர் பதில் பேசாமல் தலைதெறிக்க திரும்ப ஓடிவந்துவிட்டாராம்.
சூப்பர் !!
பதிலளிநீக்குடக்கர் பச்சானா :)
பதிலளிநீக்கு"ஆனந்தமான" பதிவா லக்கி ?
பதிலளிநீக்குunrelated question - 2007 posts எல்லாம் காணுமே? migrate பண்ணலியா?
பதிலளிநீக்கு;))
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா...
பதிலளிநீக்குமனசு விட்டு சிரிச்சேன் தலைவா !!!!!
பச்சான் .............. பத்திரம் கோட்ட விட்டுடாதிங்க படபிடிப்ப ............
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் .......
hmm....
பதிலளிநீக்குநண்பரோட மாமனார் தான் அந்த அழகான படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்தவர். இவருக்கு கொடுக்க வில்லை என்றால் அந்த மூவேந்தர்களில் ஒருவர் எடுத்த கைஎழுத்துப் படத்தை அவர் எடுத்திருப்பார். படம் கிடைக்கும் வரை தான் கும்பிடு போடுவார்கள் என்பது இவருக்கும் பொருந்தும்
பதிலளிநீக்குஇனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குooralavukku otha karuthudaiya nanbargalai kurai solvathu alaga? aduvum cinema kisu-kisu baniyel. idharku chalra adikka cila nanbargal. idu sariya lucky? nandri.
பதிலளிநீக்கு\\“ஏன்யா முப்பது வருஷமா எம்பொண்டாட்டியே குடியிருக்குற வீடு இது. உன் லஷ்மி நாளஞ்சி நாள் வெறும் ஷூட்டிங்குக்கு குடியிருக்க மாட்டாளா?”// இப்படித்தான் சாமான்ய மனிதர்களிலும் அபாரமான வசனகர்த்தாக்கள் ஒளிந்திருக்கிறார்கள்! சூப்பரப்பு!
பதிலளிநீக்குஒளி ஓவியர்,நல்ல கலைஞர் என தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்.
பதிலளிநீக்கு