28 டிசம்பர், 2009

கமல் எஃபெக்ட்!


* 1978ல் கமல்ஹாசன் சிகப்பு ரோஜாக்களில் நடித்தார். சைக்கோ கொலைக்காரன் வேடம். ஓராண்டு கழித்து ‘சைக்கோ ராமன்' என்பவர் பிடிபட்டார். தமிழகத்தில் பெண்களை குறிவைத்து நடத்தப்படும் சைக்கோ கொலைகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட பெருமை சைக்கோ ராமனையே சேரும்.

* 1988ல் கமல் வேலையில்லாத இளைஞனாக ‘சத்யா' திரைப்படத்தில் நடித்தார். வேலையில்லாத இளைஞர்களை அரசியல்வாதிகள் தங்கள் சுயநலங்களுக்கு இரையாக்குவதை தோலுரித்துக் காட்டிய படம் அது. 89-90களில் இந்திய இளைஞர்கள் பலரும் அதே பிரச்சினையை சந்தித்தார்கள். நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் கூந்தல் விரித்து ஆடியது.

* 1992ல் தேவர்மகன். சாதிமோதல் குறித்த சூடான படம். 93ல் தென்மாவட்டங்களில் படத்தில் சித்தரிக்கப்பட்ட பல காட்சிகள் நிஜமானது.

* 1994ல் மகாநதி. பைனான்ஸ் நிறுவனங்கள் அப்பாவிகளை ஏமாற்றுவது குறித்த கதை. 1996ல் பைனான்ஸ் நிறுவனங்களின் பித்தலாட்டம் வெட்டவெளிச்சமானது.

* இந்து-முஸ்லிம் பிரிவினை மற்றும் வன்முறைகளை அப்பட்டமாக காட்சிகளாக்கிய ஹேராம் 2000ஆம் ஆண்டில் வெளிவந்தது. படத்தில் இடம்பெற்ற காட்சிகள் இரு ஆண்டுகள் கழித்து குஜராத்தில் ‘லைவ்' ஆனது.

* 2003 ஏப்ரல் 14ல் அன்பே சிவம் வெளியானது. ‘சுனாமி வரும்' என்று கமல் வசனம் பேசினார் (வசனம் : மதன்). அச்சொல்லே தமிழர்களுக்கு புதியது. 2004 டிசம்பரில் நிஜமாகவே வந்து தொலைத்தது.

* 2006ல் வேட்டையாடு விளையாடு. இரட்டை சைக்கோ கொலையாளிகள் குறித்த த்ரில்லர். படம் வெளிவந்து மூன்று மாதங்கள் கழித்து நொய்டா இரட்டை கொலையர்கள் மொகிந்தர் மற்றும் சதிஷ் பிடிபட்டார்கள்.

- சுற்றில் வந்த சுவாரஸ்யமான மின்னஞ்சலின் தமிழாக்கம். எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்கப்பா என்று மலைக்க வைக்கிறது இல்லையா?

20 கருத்துகள்:

  1. //* 2003 ஏப்ரல் 14ல் அன்பே சிவம் வெளியானது. ‘சுனாமி வரும்' என்று கமல் வசனம் பேசினார் (வசனம் : மதன்).//

    வரும் என்று சொல்லவில்லை

    தனுஷ்கோடியில் வந்தது என்றார்

    புகைப்படம் எடுத்த அவர் தந்தை மரணமடைந்தார் என்றார்

    பதிலளிநீக்கு
  2. தசாவதாரத்திற்கு பின் தொற்று நோய்களான பன்றிக்காய்ச்சல் பறவைக்காய்ச்சல் வந்ததையும் சேர்த்திருக்கலாம் ;-)

    பதிலளிநீக்கு
  3. எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறாங்க தோழரே..!

    பதிலளிநீக்கு
  4. ப்ரூனோ!

    ”அப்போன்னா சுனாமி வரும்னு சொல்ல வர்றீங்களா? அதெல்லாம் சான்ஸே இல்லை சார்” - மாதவன்

    “வரும். நிச்சயமா வரும்” - கமல்

    இப்படியே வசனம் இருப்பதாக நினைவு.

    பதிலளிநீக்கு
  5. இல்லை

    அதற்கு முன்னர்

    அவர் தந்தை புகைப்பட கலைஞர் என்றும் தனுஷ்கோடியில் பனை அளவு உயர அலையை புகைப்படம் எடுத்தார் என்றும் வசனம் வரும் (என்று ஞாபகம்)

    பதிலளிநீக்கு
  6. அப்போ யார் அந்த Common Man? எந்த ஊருல நடக்கப்போவுது?

    பதிலளிநீக்கு
  7. :-)) எத்தினி வாட்டி படிக்கிறது தல?

    பதிலளிநீக்கு
  8. எல்லாம் சரி. தேவர் மகன் ஒரே சாதிக்குள்ளேயே 2 பங்காளிகளுக்குள் வரும் பிரச்சனை. அது ஒன்றும் 2 சாதிக்களுக்கு இடையே மோதல் பற்றிய படம் அல்ல. ரைட்டு விடுங்க..forward தானே.சல்தா ஹை..

    பதிலளிநீக்கு
  9. உங்கள் சிந்தனை யாருக்கும் வராது.. அருமை.. சுத்தி போடச் சொல்லுங்க.. கண்ணு படப்போகுது.. என் பதிவுக்கு அழைகிறேன்.. வாங்க..

    பதிலளிநீக்கு
  10. புலவர்களுக்குள் சர்ச்சை வேண்டாம். இங்கிருக்கிறது விடை.
    http://www.youtube.com/watch?v=wJYUtLwLXVU
    லக்கி, நீங்கள் சொல்லும் வசனம் இருப்பதாக தெரியவில்லை.
    மற்றும், கமல் (அல்லது மதன்) சுனாமி எதிர்காலத்தில் வரும் என்று ஆரூடம் எதுவும் சொல்லவில்லை. ஒரிசாவில் சுனாமி வருவதுண்டு என்பதகாவே வசனம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. இல்லை யுவா, Dr . ப்ரூனோ சொன்னதுதான் சரி

    சுனாமி வந்தது என்றுதான் சொல்வார்.

    பதிலளிநீக்கு
  12. புத்தாண்டு வாழ்த்துக்கள் .................. நல்ல தமிழாக்கம் :)

    பதிலளிநீக்கு
  13. லக்கி, இந்த வசனத்துக்கு பின்னால் ஒரு நிஜ கதை யிருக்கிறது. கொல்லப்புடி சீனிவாசராவ் என்று ஒரு விருது வருடா வருடம் இங்கே சென்னையில்கொடுக்க படுக்கிறது அது வேறு யாருமில்லை. அவ்ர் ஒரு முதல் பட இயக்குனர். அவரின் படப்பிடிப்பின் போது அலைகளை படமெடுப்பதற்காக விசாகபட்டினத்தில் காத்திருந்த போது பெரிய அலை வந்து அவரை தூக்கிக் கொண்டுபோனது. அதை பேஸ் செய்து எழுதபப்ட்ட வசனம் தான் அது.

    சில விஷயங்களை சொல்லும் போது அதை மாற்றியோ.. அல்லது சின்ன சின்ன விஷயங்களை சேர்த்தோ சொல்வது தான் சினிமாவுக்கு இயல்பு. அவர்கள் என்ன ஆவண படுத்த ஆவணப்படமா எடுக்கிறார்கள்..?

    பதிலளிநீக்கு
  14. சரி சரி சண்ட போடதீங்க ஏட்டையா

    பதிலளிநீக்கு
  15. //லக்கி, இந்த வசனத்துக்கு பின்னால் ஒரு நிஜ கதை யிருக்கிறது. கொல்லப்புடி சீனிவாசராவ் என்று ஒரு விருது வருடா வருடம் இங்கே சென்னையில்கொடுக்க படுக்கிறது//

    கொல்லப்புடி சீனிவாசராவ் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் கேபிள். காமராஜர் அரங்கத்தில் வருடாவருடம் இவர் பெயரில் விருது வழங்கப்படுவதை கண்டிருக்கிறேன். முழு கதையும் தெரியாது. யாராவது பதிவிட்டால் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  16. இது பழைய மெசேஜ்னா.. அப்டி சொல்லலாம்னு வந்தேன்..

    ஆனா..

    //லக்கி, இந்த வசனத்துக்கு பின்னால் ஒரு நிஜ கதை யிருக்கிறது. கொல்லப்புடி சீனிவாசராவ் என்று ஒரு விருது வருடா வருடம் இங்கே சென்னையில்கொடுக்க படுக்கிறது அது வேறு யாருமில்லை. அவ்ர் ஒரு முதல் பட இயக்குனர். அவரின் படப்பிடிப்பின் போது அலைகளை படமெடுப்பதற்காக விசாகபட்டினத்தில் காத்திருந்த போது பெரிய அலை வந்து அவரை தூக்கிக் கொண்டுபோனது. அதை பேஸ் செய்து எழுதபப்ட்ட வசனம் தான் அது. //

    ச்சே.. cable ROCKS!!!!!

    நீங்க சொன்ன மாதிரி யாராவது முழுக் கதைய எழுதுனா நல்லா இருக்கும்தான்..

    பதிலளிநீக்கு
  17. //அவரின் படப்பிடிப்பின் போது அலைகளை படமெடுப்பதற்காக விசாகபட்டினத்தில் காத்திருந்த போது பெரிய அலை வந்து அவரை தூக்கிக் கொண்டுபோனது//

    an interesting scoop.. the hero of that film [prema pustakam]is Ajith & that is his first film before amaravathi..

    பதிலளிநீக்கு
  18. Krishna
    As Natraj and Cable Shankar pointed out there are logical errors in this forwarded email. But I want to add one more (good one??):
    If you watch carefully, in his most of movies, he stressed importance of hand washing (example Sathileelavathi, Vasul Raja MBBS and Virumandi etc). When Bird and Swine Flu started spreading many Governments advertised about the importance of hand washing through Mass media and Schools.

    பதிலளிநீக்கு
  19. மெயிலில் வராத ஒன்று...

    1993ல் கலைஞன் படத்தில் சைக்கோ டாக்டர் ஒருவர் கொலைகள் பல செய்வார் - 1995/96 ல் நாவரசு கொலை வழக்கில் டாக்டர் ஜான் டேவிட் சிக்கினார்

    பதிலளிநீக்கு
  20. தனிமடல்

    அய்யா சாமி உங்களுக்கு என் மேல என்ன கோபம் இருந்தாலும் த்யவு செய்து மன்னிச்சிடுங்க...தாங்க முடியல...தயவு பன்னுங்க..

    பதிலளிநீக்கு