26 டிசம்பர், 2009

2009


ஒவ்வொரு புதுவருடமும் மகிழ்ச்சி நிறைந்ததாக பிறக்கிறது அல்லது அவ்வாறு பிறப்பதாக நாம் கற்பிதமாகவாவது செய்துக் கொள்கிறோம். குறைந்தபட்சம் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒவ்வொருவரும் பாவனையாவது செய்கிறோம். மகிழ்ச்சியையும், கொண்டாட்டத்தையும் தவிர வேறெதற்கும் புத்தாண்டில் இடம்தர நாம் தயாரில்லை.

ஜனவரி முதல் நாளன்று கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு, கவலை தோய்ந்த முகத்தோடு எவரையும் கண்டதாக எனக்கு இதுவரை நினைவில்லை. ஆனால் கடந்த ஆண்டு பிறந்தபோது நான் இப்படித்தான் இருந்தேன். தலைமேல் இடிவிழுந்த சோகம் எனக்கு இருந்தது. முன்னதாக 2008 டிசம்பரில் பணியை ராஜினாமா செய்திருந்தேன், 31ந்தேதி வரை மட்டுமே வேலையில் இருந்தேன். 2009 ஜனவரி ஒன்று முதல் நான் வேலையில்லாத பட்டயதாரி.

நிச்சயமற்ற எதிர்காலம். உற்சாகத்தோடு வளைய வருவதை போல மற்றவர்களிடம் நடித்துக் கொண்டிருந்தேன். ‘விளம்பர உலகம்’ புத்தகம் வெளியான நேரமது. காட்ஃபாதர் பாரா வேறு நம்பிக்கை தருபவனாக என்னை குறிப்பிட்டிருந்தார். அவருக்கு என் மீது இருந்த நம்பிக்கை கூட என்மீது எனக்கே இல்லை.

முன்னதாக கடந்த இரண்டு வருடங்களில் வீட்டில் மருத்துவத்துக்கு பெரிய தொகை (‘எல்’களில்) செலவழித்திருந்தேன். சேமிப்பு முற்றிலும் கரைந்த நிலை. ஒன்பதாயிரம் ரூபாய் பர்சனல் லோன் மாதாமாதம் கட்ட வேண்டும். அரிசி, மளிகை வகையறாக்களுக்கு இறுக்கிப் பிடித்தாலும் குறைந்தபட்சம் நாலு ரூபாய் தேவை. பெட்ரோல், இத்யாதி உள்ளிட்ட என் செலவுகள் இரண்டு ஆவது வேண்டும். ஒன்றாம் தேதி ஆனால் பதினைந்து ரூபாய் கையில் இல்லாவிட்டால் செத்தேன். நல்லவேளையாக சொந்தவீடு என்பதால் வாடகைப்பிரச்சினை இல்லை.

2009, ஜனவரி ஒன்று. மீண்டும் பிறக்கிறேன். கண்விழித்து பார்க்கிறேன். உலகம் புதியதாக, கூடுதல் மொக்கைகள் நிறைந்ததாக தெரிகிறது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தேன். என்ன நடந்தாலும் அழுது வடியக்கூடாது. சுயகழிவிரக்கம் மட்டும் வந்துவிடவே கூடாது.

ஆறுதல் தர கவுதம் சார் இருந்தார். நான் ராஜினாமா செய்தேன் இல்லையா? அந்த நிறுவனத்தில் ஒரு பிரிவுக்கு தலைவராக பணியாற்றியவர். பத்திரிகையாளர். கிடைத்த வேலைகள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார். அவருக்கு கட்டுப்படி ஆகிறது என்றால் போஸ்டர் ஒட்டவும் தயங்கமாட்டார். கல்லாக இருந்தால் கூட சிற்பம் செதுக்கிவிடலாம். நான் வெறும் களிமண். என்னை அழகான பொம்மையாக உருவாக்கியவர்.

பிப்ரவரியில் இருந்து அவரோடு பணி. ஒரு எட்டுக்கு எட்டு அறையில் நான் மட்டுமே பணியாளன். கிடைத்த வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். கவிதை எழுதினேன். கானா எழுதினேன். கிசுகிசு எழுதினேன். பாராளுமன்றத் தேர்தலின் போது ஒரு கட்சிக்கு (எனக்கு எதிர்க்கட்சி) வேலைபார்த்தேன், அந்தக் கட்சியின் சாதனைகள் என்று பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினேன். அறுபது சதவிகிதம் எழுத்துப்பணி. நாற்பது சதவிகிதம் எல்லாப் பணிகளும். என்னுடைய குறைந்தபட்சத் தேவையான ‘பதினைந்து’க்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் கவுதம் சார் பார்த்துக் கொண்டார்.

இடையில் கிழக்குக்காக இன்னொரு புத்தகத்தையும் செதுக்கி, செதுக்கி எழுதிக் கொண்டிருந்தேன். ‘விஜயகாந்த்!’

விஜயகாந்த் தேர்தலில் வென்று ஜனங்களை வாழவைப்பாரோ இல்லையோ தெரியாது. என்னை வாழவைத்துவிட்டார். என்னுடைய கட்சி சார்பு தெரிந்திருந்தும், நம்பிக்கையோடு கிழக்கு கொடுத்த அசைண்மெண்ட் அது. அப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் புன்முறுவலோடு வாசகன் படித்தாக வேண்டும் என்று எனக்கு நானே ஒரு எல்லையை தீர்மானித்துக் கொண்டேன். அதுவரை எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு பாணியை உடைத்தாக வேண்டும். கிடைத்த ரெஃபரென்ஸ் எல்லாவற்றையும் கிரகித்துக் கொண்டு, பட்டுக்கோட்டை பிரபாகர் பாணியில் நாவலாக நூலை எழுதினேன்.

அந்நூல் ஒரு நாவல். சோகங்களும், சாதனைகளுமாக மிக சீரியஸாக எழுதவேண்டிய விஜயகாந்தின் வாழ்க்கையை துள்ளலும், கும்மாளமுமாக எழுதினேன். பதிப்பகம் வெளியிடுமா என்று தெரியவில்லை. புனைவுகளில் அவர்களுக்கு பெரிய ஆர்வமில்லை. புனைவு மாதிரி வரலாறு. என்ன செய்வார்களோ என்று நினைத்தேன்.

நானே எதிர்பாராவிதமாக அந்நூலை கிழக்கு கொண்டாடியது. அட்டகாசமான அட்டைப்படத்தோடு வெளிவந்த ‘விஜயகாந்த்’தான் என்னுடைய விசிட்டிங் கார்ட். பேரரசு பாணியில் கமர்ஷியலாக தொடர்ந்து எழுதலாம் என்று நம்பிக்கை கொடுத்த புத்தகம். முதல் புத்தகம் ஜஸ்ட் பாஸ் என்றால், விஜயகாந்த் எனக்கு சூப்பர்ஹிட். அதுவரை எழுத்து என்றால் வார்த்தை, வீரியம், லொட்டு, லொசுக்கு என்று தடுமாறிக் கொண்டிருந்தவனுக்கு ஃபார்முலா பிடிபட்டது. ‘நீ இலக்கியம் எதையும் படைக்க வேண்டியதில்லை. இப்போதைக்கு அத்துறை பிழைத்துப் போகட்டும். அறுபது வயசுக்கு மேலே பார்த்துக் கொள்ளலாம்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

மே மாதம் இறுதியில் தமிழ்மொழி பிறந்தாள். 2009ன் ஆரம்ப மாதங்கள் தந்த சோர்வும், சோம்பலும், நிச்சயமின்மையும் மறைந்து நிஜமான மகிழ்ச்சி மனதுக்குள் பூக்கத் தொடங்கியது.
குமுதம் ரிப்போர்ட்டரில் தொடர் எழுதும் வாய்ப்பு கிடைத்தது, நன்றி விஜயகாந்த். ஓரளவுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளை சமாளிக்க முடிந்தது. ஜூலை மாதம் வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியது. முழுநேரப் பத்திரிகையாளனாகி விட்டேன். நிச்சயமான எதிர்காலம். நிறைவான வருமானம்.

அடுத்த ஐந்து மாதங்களாக மூச்சுவிட நேரமின்றி வேலை. உழைப்புக்கு ஏற்ற பலனை கைமேல் உணரமுடிகிறது. குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த சைபர்கிரைம் புத்தகமாக கிழக்கு வெளியீடாக வெளிவந்திருக்கிறது. வாழ்க்கையின் மோசமான ஆண்டாக துவங்கிய 2009, ஆண்டிறுதியில் ஆசுவாசம் வழங்கியிருக்கிறது.

இவ்வருடத்தின் ஒவ்வொரு நொடியும் எனக்கு தோள்கொடுத்த நட்பான அதிஷாவை அடுத்த ஆறு ஜென்மங்களிலும் கூட மறக்க முடியாது. சோர்வுறும்போதெல்லாம் ‘வருதப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே, என்னிடம் வாருங்கள்!' என்று மத்தேயு.. மன்னிக்கவும் பாரா சொல்கிறார். அப்புறமென்ன கவலை?

2010 புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக வரவேற்க எனக்கு இப்போது ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

53 கருத்துகள்:

  1. உங்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் ஆரம்பத்தை, போராட்டத்துடன் தொடங்கி அதில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்.

    அப்புறம் இந்த வார குமுதத்துல ஞாநி.....

    ஹீ.ஹீ..எங்களுக்கும் பொழுது போகனும்ல :)

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு எப்படி 2009ஓ, அதே போல எனக்கு 2010 ஆரம்பித்திருக்கிறது. பிரச்சினையுடந்தான் இருக்கிறேன். உங்கள் காரணங்களில் பாதி எனக்கும் இருக்கு. பதிவை படிச்சு முடிச்ச பின்னாடி எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருச்சுங்க. 2010 உங்களுக்கு இன்னும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்!

    கவுதம் பத்தி எழுதினதுக்கு நன்றி! அவர் கூட இருந்தா ஆயிரம் யானை பலம் சேர்ந்து இருக்கிறா மாதிரி எண்ணம்.

    பதிலளிநீக்கு
  3. எனக்கு யார் வேலை கொடுப்பா, என்னோட தகுதிக்கு இந்த வேலையெல்லாம் செய்ய முடியாது என்று சோம்பித் திரிபவர்களுக்கு சாட்டையடி கொடுப்பது மாதிரியான கட்டுரை இது யுவா.

    //‘நீ இலக்கியம் எதையும் படைக்க வேண்டியதில்லை. இப்போதைக்கு அத்துறை பிழைத்துப் போகட்டும். அறுபது வயசுக்கு மேலே பார்த்துக் கொள்ளலாம்’ என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.//

    தேர்ந்தெடுத்த வழி இப்போதைக்கு சரியானதே என்றாலும் அறுவது வரையெல்லாம் காத்திருக்காமல் சீக்கிரமே அந்தப் பக்கமும் ஒரு ராஜநடை போட வாழ்த்துகள்.

    கட்டுரையைப் படிக்கும்போது சொல்லத் தோன்றிய ஒரே வாக்கியம் - I salute you.

    பதிலளிநீக்கு
  4. நெகழ்ச்சியான,உண்மையான பதிவு..

    உங்கள் விஜயகாந்த் புத்தகத்தை சமிபத்தில் தான் வாங்கி படித்தேன்..அதற்கு பின் இப்படி ஒரு போராட்டமா..

    புத்தாண்டு வாழ்த்துகள்..இனி வெற்றியும் புகழும் எப்பொழுதும் தங்களுடன் குடியிருக்கட்டும்...

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் லக்கி! வாழ்க்கையில் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!

    இளா!

    எல்லாமே கடந்துப் போகும்!

    பதிலளிநீக்கு
  7. //2008 டிசம்பரில் பணியை ராஜினாமா செய்திருந்தேன், 31ந்தேதி வரை மட்டுமே வேலையில் இருந்தேன். 2009 ஜனவரி ஒன்று முதல் நான் வேலையில்லாத பட்டயதாரி.//

    2010 ஜனவரி ஒன்று முதல் நானும். :)

    2010 எனக்கு போராட்டக்களமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  8. வாழ்த்துகள் யுவா.

    அதிஷாவுக்கும் நன்றிகள்.

    தமிழ் மொழிக்கு எனது ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  9. லக்கி,

    உங்கள் எழுத்துக்கள் வலிமை கொண்டவை.

    வாழ்த்துக்கள் 2010 க்கு.

    உங்களின் தோழன் அதிஷாவுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. புத்தாண்டு வாழ்த்துகள் யுவா.

    எழுத்து இழுத்துச் செல்கிறது. பலருக்கு ஆதர்சம் நீங்கள். எஞ்ஜாய் த லைஃப் மேடி!

    பதிலளிநீக்கு
  11. ///‘லக்கிலுக்கா – டூ மச்சி’ என்று சொல்லுபவர்கள் 2009 டிசம்பர் வரை பொறுக்கவும் //
    :)
    ஸ்மைலியை பார்த்ததுமே, மொக்கைப் பின்னூட்டம் என்று ரிஜெக்ட் செய்துவிட வேண்டாம். இந்த ஸ்மைலி ஆணவ ஸ்மைலி :)//

    இது பாராவின் அந்தப் பதிவில் உங்களை விமர்சித்தவருக்கு நீங்கள் சொன்ன ப்தில்.

    U DONE IT!

    பதிலளிநீக்கு
  12. உணர்வு வயப்பட்ட நிஜம் மிளிர்கிறது எழுத்துகளில். வாழ்த்துகள் லக்கி.!!

    பதிலளிநீக்கு
  13. நன்றி பீர்! உங்களுக்கு நல்ல தோழர்களும், வழிகாட்டிகளும் அமைய வாழ்த்துகள்!

    நன்றி பட்டர்பிளை, காவிரி, பரிசல், தாமிரா.

    பதிலளிநீக்கு
  14. பின்னூட்ட ரிலீசர்7:28 PM, டிசம்பர் 26, 2009

    ;-)

    ஆணவ ஸ்மைலிதான் இதுவும்!

    இப்படி ஒரு நண்பன் கிடைத்ததற்க்காக!

    பதிலளிநீக்கு
  15. உங்க்ச்ளுக்கு இப்படி ஒரு பிண்ணணியா?
    நான் எதிர்பார்க்கவில்லை

    பதிலளிநீக்கு
  16. நண்பா!!! பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  17. ஆச்சரியம்..

    எதிர்கருத்து உள்ளவர்களும்கூட லக்கி என்ன சொல்லியிருப்பார் என்ற ஆதங்கத்துடன் வாசிக்ககூடிய எழுத்து உங்களினுடையது...

    காலமும் இடமும் நேரமும் கடந்து போய்க்கொண்டிருக்கையிலேயே நம்பிக்கையை விடாமலிருந்து மனம்திறந்ததற்க்கு... குரு அதிஷாவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. கிருஷ்ணா,

    வெற்றிக்கு பின்னால் இருக்கும் நிகழ்வுகளை சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும். உங்களிடம் இருப்பது நன்கு தெரிந்ததே! நல்லவர்களுக்கு கஷ்டம் வரும், பின் தெளிவும் வரும்; நல்ல நட்புடையோர் எதற்கும் கவலைப்படத்தேவையில்லை; .... நிறைய விஷயங்கள் உங்கள் இடுகையில்!

    அதிஷா! உங்கள் நன்பிற்கு என் வணக்கம்.

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  19. உங்களுக்கும் அதிஷாவிற்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  20. Lucky,

    I regularly read your blog from 2004 and I realy like you and enjoy your writtings (may be I am also DMK).

    Hats off lucky fight to end thats my policy. I started my life from zero and I am now in a good position...........

    never give up

    Subbu

    பதிலளிநீக்கு
  21. yo lucky,

    is the phone number you mentioned in your blog is correct?

    Some body talking in hindi.... when I dialed the number ......

    Subu

    பதிலளிநீக்கு
  22. வாழ்த்துக்கள் &

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  23. இதெல்லாம் ஒண்ணுமே இல்ல லக்கி உனக்கு.. இன்னும் பல உயரங்கள் தொட நெஞ்சார வாழ்த்தும்..

    பதிலளிநீக்கு
  24. வாழ்த்துக்கள் லக்கி!
    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்!

    S.Ravi
    Kuwait

    பதிலளிநீக்கு
  25. பின்னூட்ட ரிலீசர், அமர், தமிழ்வெங்கட், வினையூக்கி, கும்கி, பிரபாகர், பாலராஜன்கீதா, சுப்பு, சாமி, ராஜகோபால், கேபிள், ரவி, ப்ரூனோ...

    நன்றி!

    பதிலளிநீக்கு
  26. புத்தாண்டு வாழ்த்துகள் லக்கி !!

    நல்ல கட்டுரை ...எழுத்தில் லேசா சாரு ஸ்டைல் தெரியுது :)

    பதிலளிநீக்கு
  27. பிளாக் என்ற விசிட்டிங்கார்டை வைத்து எப்படி வாழ்கையில் முன்னேற வேண்டும் என்பதில் நீங்கள் ஒரு முன்னோடி லக்கி!

    மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. போராடிப் பெற்ற புதுவாழ்வில் மேலும் பல வெற்றிகளைக் குவிக்க புத்தாண்டு வாழ்த்துகள் !! நாளை நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருந்தால் வானமும் வசப்படும் என்பதை வாழ்ந்து காட்டி இங்கு பதிந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. 2009 - ஒரு நல்ல அலசல்! 2010-ன் இறுதியிலும் இப்படி ஒரு மகிழ்ச்சியான பதிவை வெளியிட வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். படிக்கும்போதே நீங்கள் அடைந்த உணர்ச்சிகளை அடைய வைத்த கட்டுரை. ஆனால் தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளராக ஜெயிப்பதை விட கூடுதலான சவாலான வேலைகள் காத்திருக்கின்றன என்பதை மறந்து விட்டு இதிலேயே அயர்ந்து போய்விட வேண்டாம். உங்கள் தகுதிக்கேற்ற எல்லைகள் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்று தோன்றினால், சில்லறை வேலைகளில் இறங்க மாட்டீர்கள் ( உதா: ஓட்டம்னா ஓட்டம் அப்படியொரு ஓட்டம் - தலைப்பும் கிழே இருந்த அந்த வரியும்)
    மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வேகம் சரியான முறையில் பண்பட்டு பயன்படட்டும்

    பதிலளிநீக்கு
  31. நீங்கள் மேலும் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் யுகி!

    உங்கள் வளர்ச்சி பாராட்ட பட வேண்டிய ஒன்று!

    மயிலாடுதுறை சிவா....

    பதிலளிநீக்கு
  32. மனமார்ந்த வாழ்த்துகள் லக்கி. வரும் ஆண்டு உங்களுடையது தான் . கலக்குங்கள்.

    பதிலளிநீக்கு
  33. உங்களுடைய பதிவுகள் ஒரு மாதிரி சுய தம்பட்டமாக இருப்பதாக ஒரு உண்ர்வில் படிப்பவன் நான்..

    ஆனா.. நீங்க எழுதுனதுலேயே இதுதாங்க சூப்பர் பதிவு..

    இயல்பான நடை.. நம்பிக்கை ஜெயித்த கதை..

    கதையல்ல நிஜம் (அழும்மா அழு அல்ல).. உண்மையான கதையல்ல நிஜம்..

    2010..11..இந்த மாதிரி நெறயா ஆண்டுகள் வெயிட்டிங்கி..

    வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  34. லக்கி!
    //ஜனவரி ஒன்று முதல் நான் வேலையில்லாத பட்டதாரி//

    இதுக்கு என்ன அர்த்தம்?! நிச்சயமா புதசெவி!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

    பதிலளிநீக்கு
  35. கார்த்திகேயன் நன்றி.

    அனானிமஸ்! சாரு எனக்கு கடவுள் மாதிரி.

    குசும்பன், மணியன் நன்றி!

    ரவிபிரகாஷ் சார்! ஊக்கத்துக்கு நன்றி!

    மூக்கு சுந்தர்! நன்றி. என்னை துல்லியமாக அவதானிக்கிறீர்கள். ‘ஓட்டம்னா ஓட்டத்தை' ஓடித்தான் கடக்க வேண்டும். பாதிதூரம் கடந்துவிட்டேன்.

    சர்வேசன், ஐகாரஸ், மயிலாடுதுறை, வெங்கட்ரமணன் நன்றி.

    பட்டம் டிகிரி என்பதுபோல, பட்டயம் என்றால் டிப்ளமோ.

    பதிலளிநீக்கு
  36. கடைக்குட்டி நன்றி!

    பார்வைகள் பெரும்பாலும் ஒற்றைத்தன்மை கொண்டவை. பரிமாணங்களை சரியாக அளவிட திராணியில்லாதவை.

    அதுவுமில்லாமல் சுயதம்பட்டம் என்பது தவறல்ல. சுயமோகத்தை விட அது தேவலை ரகத்தை சேர்ந்தது அல்லவா?

    பதிலளிநீக்கு
  37. 2010 புத்தாண்டை மகிழ்ச்சிகரமாக வரவேற்க எனக்கு இப்போது ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. //

    மிக்க மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  38. கடைக்குட்டி நன்றி!

    பார்வைகள் பெரும்பாலும் ஒற்றைத்தன்மை கொண்டவை. பரிமாணங்களை சரியாக அளவிட திராணியில்லாதவை.

    அதுவுமில்லாமல் சுயதம்பட்டம் என்பது தவறல்ல. சுயமோகத்தை விட அது தேவலை ரகத்தை சேர்ந்தது அல்லவா//


    தப்புதான்.. கேட்டது தப்புதான்... :-)

    பதிலளிநீக்கு
  39. அற்புதமான அனுபவங்கள். பாராட்டத்தக்க சாதனை.
    உங்களிடம் கவனிப்பதற்கும், கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கிறது லக்கி. :)
    -விபின்

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் யுவன்,
    உங்கள் எழுத்துக்களை நீண்ட காலமாக படித்து வருகிறேன்.. (இங்கே பின்னூட்டம் இடுவது இதுதான் முதல் முறை)..
    சென்ற வாரம் சென்னை வந்திருந்தபோதுதான், புதிதாக இருக்கிறதே என்று "புதிய தலைமுறை" இதழை வாங்கிப்படித்தேன்.. மாலன் தலைமையில் நீங்களும், அதிஷாவும் இணைந்து பங்களிக்கின்றீர்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்தேன்.. உங்கள் எழுத்துலக பணி மென்மேலும் சிறப்புற எனது வாழ்த்துக்கள்..

    "புதிய தலைமுறை" அதிக மக்களைச் சென்றடைய இன்னும் கூடுதலாக விளம்பரம் செய்யலாமே.. இப்படி ஒரு இதழ் வெளிவர ஆரம்பித்திருப்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது...

    பதிலளிநீக்கு
  41. // என்ன நடந்தாலும் அழுது வடியக்கூடாது. சுயகழிவிரக்கம் மட்டும் வந்துவிடவே கூடாது.//

    நீங்கள் ஜெயித்துக் கொண்டிருப்பதற்கான சூத்திரம் இதில் அடங்கியுள்ளது.

    ஜெயத்தை தக்க வைப்பதற்கானது... "என்ன நடந்தாலும் ஆர்ப்பாட்ட சிரிப்பு கூடாது. சுயதம்பட்டம்/சுயமோகம் மட்டும் கூடவே கூடாது."

    ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்! மேன்மேலும் வளர்க!!

    பதிலளிநீக்கு
  42. வாழ்த்துகள் லக்கி. இவ்வருடம் இனிதே அமையவும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  43. dear lucky,
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  44. புத்தாண்டு வாழ்த்துகள்.

    நான் கூட 2006 புத்தாண்டில் செய்த முதல் காரியம் காலை உணவுக்காக ரூம் மேட்டிடம் 20 ரூபாய் கடன் வாங்கியது தான். வேலை இல்லாமல் மடிப்பாக்கம் பாலாஜி பவனில் ஒரு தோசை சாப்பிட்டே (ரு.10) உடம்மை வளர்த்த காலம். இவ்வளவு மோசமாக தொடங்கிய 2006ல் தான் வேலை என்ற ஒன்று கிடைத்தது.

    உங்களுடைய இரண்டு புத்தகங்களையும் படித்த அனுபவத்தை சொல்கிறேன்..

    விளம்பர உலகம் - படிக்க வேறு எதுவுமே இல்லாத பொது மட்டும் எடுத்து படித்து ஒரு வழியாக முடித்த புத்தகம்.

    விஜயகாந்த் - போன்று வாங்கிய முதல் நாளே விறுவிறு என முடித்த புத்தகம்.

    சைமர் கிரைம் - எனக்கு முன்பே இந்த புத்தகத்தை வாங்க வேண்டும் என என் தந்தை உத்தரவு போட்டுள்ளார். புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  45. Lucky,

    I can see the struggles of Human mind in your writing..

    Nice..Please continue your cheerful writing as it is your strength..

    பதிலளிநீக்கு