6 நவம்பர், 2009
கண்டேன் காதலை!
சில ஃபிகர்களை பார்த்ததுமே உள்ளங்காலில் முத்தமிட வேண்டும் என்று எனக்கு தோன்றும். உங்களுக்கு தோன்றியிருக்கிறதா? ‘கண்டேன் காதலை’ தமன்னாவைப் பார்த்ததுமே இவ்வுணர்வு தோன்றுகிறது. அந்தக் காலத்து சில்வர் ஃப்ளஸ் பைக் மாதிரி படத்தின் முதல் பாதி முழுக்க லொட லொடத்துக் கொண்டேயிருக்கிறார். சுவாரஸ்யமான லொடலொடப்பு.
வெகுநாட்கள் கழித்து தமிழில் கச்சிதமான ஒரு குடும்பப்படம்.
பரத், தமன்னாவுக்கு நேரெதிர் கேரக்டர். உம்மணாம்மூஞ்சி. நடிப்புக்கான ஸ்கோப் குறைவு. விருத்தாச்சலம் நைட் ஃபைட்டில் மட்டும் அசால்ட்டான உடல்மொழியில் பழைய பரத். இரண்டாம் பாதியில் சிக்ஸர் அடிக்க வேண்டிய காட்சிகளை கூட பரிதாபமாக தேவுகிறார்.
ஏற்கனவே பூவேலி, மேட்டுக்குடி மற்றும் எண்ணற்ற படங்களில் பார்த்த பல காட்சிகள் ரிப்பீட்டுகிறது. ஆனாலும் க்ரிஸ்ப்பான திரைக்கதையில் இயக்குனரின் கைவண்ணம் மிளிருகிறது. நகைச்சுவை, செண்டிமெண்ட், காதல், கலாட்டாவெல்லாம் கரெக்ட்டான மிக்ஸிங். சன் டிவியில் திரும்ப திரும்ப ஒளி-ஒலிபரப்பப்பட்டு பாடல்கள் பழக்கமாகி விட்டதால், படம் பார்க்கும்போதும் இனிக்கிறது.
டிரெயினை தமன்னா ‘மிஸ்’ செய்துவிட்ட அந்த ஓரிரவிலேயே ஒளிப்பதிவாளரின் முழு உழைப்பும் வீணாகிவிட்டதால், ஊட்டியை தேமேவென்று காட்டுகிறார். மெகாசீரியலை நினைவுபடுத்தும் ஃபேமிலி காட்சிகளை, சந்தானத்தை வைத்து புத்திசாலித்தனமாக ஈடுகட்டியிருக்கிறார் இயக்குனர் கண்ணன். தமிழுக்கு வெற்றிகரமான இன்னொரு ஜனரஞ்சக இயக்குனர் தயார்.
சந்தானம் காமெடி கதையோடு ஒட்டிவந்தாலும், அந்த ‘பிட்டு’ சீன் மட்டும் தாமரை மேல் தண்ணீர் போல பட்டும் படாமல் நிற்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இருந்த பார்வை மாறியிருக்கிறது. முன்பு ஹீரோயின் ஹீரோவை மட்டுமே காதலிக்க வேண்டும். வேறொருவனை காதலிப்பது மாதிரியான படங்களை பாலச்சந்தரால் மட்டுமே எடுக்க முடியும். இப்படத்தில் ஹீரோயினுக்கு ஹீரோ மீது க்ளைமேக்ஸில் தான் காதல் வருகிறது. அதுவும் தன்னுடைய காதலன் பேசிக்கொண்டேயிருக்கும் போது மல்லிகை மலர்வது மாதிரி மென்மையாக பரத் மீது தமன்னாவுக்கு காதல் மலரும் காட்சி க்ளாஸ்.
இறுதிக்காட்சியிலும் தேவையில்லாத பரபரப்புக் காட்சிகளை சேர்க்காமல் நறுக்கென்று முடித்திருப்பதில், ரசிகர்களின் மென்னியை சரியாக இயக்குனர் பிடித்திருப்பது தெரிகிறது.
கண்டேன் காதலை - காதல் கரையேற்றுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அண்ணே நல்லா வாசிக்குறீங்க......
பதிலளிநீக்குபித்தன் :))
பதிலளிநீக்குயோவ், தமன்னா மாதிரி ஒரு அட்டு பிகரை பற்றி இப்படி ஒரு வர்ணணையா ? படத்தில் அவரது லொடலொடப்பு எந்த ஒரு ரசிகருக்கும் எரிச்சல் தரும்.
காப்பி அடிங்க. ஆனால் அட்டைக்காப்பி அடிக்காதீங்கடா என்று கொலைவெறியோடு லக்கிலுக் எழுதியிருப்பான் என்று வந்தால்.
யுவக்ருஷ்ணா. அவ்வ்.
Jab we met innum nalla irundhadhu!!! santhanam comedy thaan idhulla extra!! adhulla rendu paerum pinniruppaanga!!!
பதிலளிநீக்குLuckylook's blog is hacked I guess. Someone in the name of our lucky is writing dry blogs in the past weeks..The decling number of comments (single digit) shows it !!
பதிலளிநீக்குLucky strike back with your unique style !!!
thanks for the review...
பதிலளிநீக்குyou cant please everyone with your writings or films...
thanks for the review. you cant please everyone while writing or with a film...
பதிலளிநீக்குEven I liked thamanna's character (not in 2nd half). I didn't expect she would perform like this. Nice movie.
பதிலளிநீக்குhai lucky
பதிலளிநீக்குi know it is a remake of jab we met. i am yet to see this film. by the way from the still
" where comes Theni 120kms in NH45 "
i do not know. (Continuity mistake ?)
tamil cinemavil ithellam sagajamappa.
ithukku poi alatikalama
you cannot please everybody. yes correct but after your joining at "pudhiya thalaimurai" i saw your writings a little bit improved (polished manner)and not your funny harsh comments (which most of the readers expect from your writings ) keep it up. bye sundar g
dear lucky
பதிலளிநீக்குi am yet to see this remake of jab we met.
from the still
" where comes Theni 120kms in NH 45"
i do not know.
tamil cinemavil ithellam sagajamappa
ithukku poi alatikkalama
bye
sundar g ch 91
தமன்னாவ போய்....
பதிலளிநீக்குஅடப்போங்கண்ணே.... இதுல என்ன உள் குத்தோ... :-)
காஸ்ட்லி எழுத்தை ஏன் இலவசமா கொடுக்கணும்னு நினைச்சுட்டீங்க போலருக்குது. :)
பதிலளிநீக்குமொக்கை படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம் தேவையா?
பதிலளிநீக்குஇப்படிக்கு ஓபனிங் ஷோ பார்த்து நொந்தவன்....
லக்கி உங்க பார்ம் எங்க போச்சு ?? கொஞ்ச நாட்களாகவே உங்களின் எழுத்துகளின் ஒரு வித தொய்வு அல்லது வேறு பாதையில் நீங்கள் சென்று கொண்டு இருப்பது போல இருக்கிறது.
பதிலளிநீக்குபழைய லக்கியை பார்க்க முடியுமா ?
kadaen kadhalai film is not a good film.
பதிலளிநீக்குReally 9s film
பதிலளிநீக்குKudambathoda paaka koodiya padam
differentana story
Nalla entertimentana film