11 நவம்பர், 2009

நல்லசிவம் செத்துட்டான், சதாசிவம் பொழைச்சிட்டான்!


ரெண்டு ரவுண்டு உள்ளே போனதும் நீரஜூக்கு ‘அது’ தேவைப்பட்டது.

“டேய் சத்ரூ. சிந்தனைக்கு நெப்போலியன். சிற்றின்பத்துக்கு?”

“வேணும்னா சொல்லுங்க அண்ணே. உடனே ஏற்பாடு பண்ணிடலாம். கைவசம் ஒரு பச்சைக்கிளி காண்டாக்ட் இருக்கு!”

நீரஜூம், சந்த்ருவும் பிரபல இயக்குனர்கள். நீரஜ் சீனியர் என்பதால் சந்துருவுக்கு அவன் ‘அண்ணே’. தண்ணியைப் போட்டால் சந்துரு எப்போதுமே நீரஜூக்கு சத்ரூ. இடம் : பல்லவர்கள் ஆண்ட மாமல்லபுரம். குறிப்பான இடம் : ஹோட்டல் பல்லவாஸ், ரூம் நம்பர் 13. சூழல் : அடுத்த படத்துக்கான டிஸ்கஷன். இருவருமே ஒரே இயக்குனரிடம் பணிபுரிந்தவர்கள் என்பதால், ‘ஈகோ’ பார்க்காமல் ஒருவரின் படத்துக்கு, இன்னொருவர் அசோசியேட்டாக வேலை பார்ப்பது சகஜம். இரண்டு பேருமே சொல்லிவைத்தாற்போல அவரவர் முதல் படத்தில், தங்களின் குருவான டைரக்டரையே ஹீரோவாக்கி படமெடுத்து வென்றவர்கள். ஓக்கே அட்மாஸ்பியர் போதும், சீனுக்கு வருவோம்.

“சத்ரூ.. பச்சைக்கிளின்னு சொல்றப்பவே உடம்பெல்லாம் ஜிவு ஜிவுன்னு ஏறுதுடா. சீக்கிரமா போனை போடு!”

“ரொம்ப அவசரப் படாதீங்கண்ணே. நானே கிளியைப் பார்த்ததில்லை. நம்ம சவுண்டு கொடுத்த காண்டாக்ட்டு அது. ரெண்டு மூணு வாட்டி போனில் பேசினதோட சரி. அடையார்லே இருக்கா. எப்படி இங்கன இந்த நேரத்துலே அங்கிட்டுருந்து கொத்திக்கிட்டு வர்றது?” – சவுண்டு ஒரு குணச்சித்திர/காமெடி நடிகர். வாய்ப்புகளுக்காக அவ்வப்போது இயக்குனர்களுக்கு இதுபோல ‘காண்டாக்ட்’ ஏற்படுத்தித் தருவதுண்டு.

“அதெல்லாம் பார்த்துக்கலாம்டா. நம்ம சித்தன் கிட்டே சொல்லிட்டா கார்லே அள்ளிப் போட்டுக்கிட்டு வந்துடமாட்டானா? அதிருக்கட்டும் பார்ட்டி எப்படி? செம்ம கண்ட்ரி வுட்டா?” – சித்தன் பிரபலமான சீரியல் நடிகன். சினிமாவில் கிடைக்கும் ஓரிரு துண்டுக் காட்சிகளுக்காக இதுபோன்ற சேவைகளை செய்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

சந்துரு சித்தனுக்கு போனைப் போட்டான். கோட்டூர்புரத்தில் ஷெட்யூல் முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்த சித்தனின் செல்போன் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்!’ என்று சிணுங்கியது. சந்துருவின் எண்ணைப் பார்த்ததுமே சித்தனுக்கு குஷி. ‘படம் ஏதாச்சும் கமிட் ஆயிடிச்சோ!’ சில்வர் ஸ்க்ரீன் கனவில் ஆன்ஸரை அமுக்கினான். “சொல்லு பங்காளி!”

“எங்கேடா இருக்கே சித்தா?”

“கோட்டூர்புரம்”

“அப்படியே காரை எடுத்துக்கிட்டு அடையார் போ. நான் சொல்ற அட்ரஸை நோட் பண்ணிக்கோ” அட்ரஸ் சொன்னான்.

“அங்கே ஏதாவது ஷூட்டிங்கா பங்காளி? ஏதாவது முக்கியமான கேரக்டர்லே நடிக்கணுமா?”

“அதெல்லாம் இல்லேடா. டிஸ்கஷனுக்கு நீரஜ் அண்ணனோட வந்தேன். தண்ணியைப் போட்டுட்டு அண்ணன் ரவுஸ் உட்டுக்கிட்டிருக்காரு. நான் சொல்ற அட்ரஸ்லே ஒரு பச்சைக்கிளி இருக்கும். அப்படியே கொத்திக்கிட்டு பல்லவாஸுக்கு வந்துடு. ரூம் நம்பர் தர்ட்டீன்!”

பயங்கர கடுப்பானான் சித்தன். ஏதோ சொல்ல வாயெடுத்தான். அதற்குள் நீரஜ் அவசரம் தாங்காமல் சந்துருவிடம் போனை பறித்துப் பேசினான். “சித்தா. அடுத்த படத்துலே உனக்கு செகண்ட் ஹீரோ கேரக்டர் கிரியேட் பண்ணியிருக்கேண்டா. ஆனா நல்ல ‘சீன்’ மாட்ட மாட்டேங்குது. அதுக்குதான் இந்த டிஸ்கஷன். தம்பி சொன்ன கிளியை பிக்கப் பண்ணிட்டு வந்துடு. காரைக் கிளப்பினதுமே, கிளி நங்குனு இருந்தா ‘சதாசிவம் பொழைச்சிட்டான்’னு எஸ்.எம்.எஸ். பண்ணு. சுமாராவோ, சப்பையாவோ இருந்தா ‘நல்லசிவம் செத்துட்டான்’னு மேசேஜ் பண்ணு! செல்லம், நேரத்துக்கு வந்துர்றா... உனக்கு சீன் புடிக்க தாண்டா இவ்ளோ உழைக்கிறோம்!” போனை கட் செய்தான்.

“நம்ம பய முக்கா மணி நேரத்துலே அள்ளிட்டு வந்துடுவான் பாரு. ஆரோக்கியமான கோழியான்னு கேட்டுதான் நமக்கு பிரியாணி சாப்புடறதே வழக்கம். அதனாலேதான் மெசேஜ் அனுப்பச் சொன்னேன்” – வறுத்த முந்திரியை விண்டு வாயில் போட்டான்.

ஐந்து நிமிடத்தில் சித்தனிடமிருந்து மெசேஜ் வந்தது.

“நல்லசிவம் பொழைச்சிட்டான்!”



இது வெறும் கதையென்றால், இத்தோடு நிறுத்திவிட்டிருக்கலாம். நான் கதை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்தாலும் நீங்கள் யாரும் நம்பப் போவதில்லை. இந்த கதையை எழுதிய கசுமாலம் க்ளூ கொடுக்காத போதிலும் நீரஜ், சந்துரு, சித்தன் எல்லோரையும் புத்திசாலித்தனமாக கண்டுபிடித்துவிடுவீர்கள். ஏற்கனவே கோடம்பாக்க ஆட்களின் போண்டா வாய்களுக்கு, சிலநாட்களாக இந்த ‘நல்லசிவம், சதாசிவம்’ கதை, அவலாக மெல்லப்பட்டு வருகிறது.

ஒன்று. கடுப்பில் வேண்டுமென்றே மெசேஜை மாற்றி அனுப்பி நீரஜை சித்தன் வெறுப்பேற்றியிருக்கலாம்.

இரண்டு. நிஜமாகவே சித்தனுக்கு கோர்ட் வேர்ட் குழப்பம் இருந்திருக்கலாம்.

மூன்று. சித்தனும் தண்ணியைப் போட்டு விட்டு மெசேஜ் செய்திருக்கலாம்.

எப்படியிருந்தாலும், நாம் யாரும் இதற்காக கவலைப்படுவதில் அர்த்தமில்லை. நீரஜூக்கும், சந்த்ருவுக்கு கொஞ்சநேர டென்ஷனை கொடுத்துவிட்டு, சித்தன் பத்திரமாக கிளியை இறக்கிவிட்டதாகவே தகவல். கிளி எப்படி இருந்தது என்றால் ‘நல்லசிவம் செத்துட்டான்’ – நீரஜ் ஃபுல் மூட் அவுட் - கிளியை தனக்கு காண்டாக்ட்டிய சவுண்டினை சபித்துக் கொண்டிருந்தானாம் சந்துரு ஆறாவது ரவுண்டு இறுதியில்.

“அப்பாலிக்கா இன்னா ஆச்சி? இஸ்த்துக்கீனே போரீயே. கதிய சீக்கிரமா முடி வாத்யாரே!” என்று யாரோ சொல்லுவது கேட்கிறது. முடிக்கிறேன், நீரஜின் பஞ்ச் டயலாக்கோடு.

“எது எப்படியிருந்தாலும் போடப்போறது நானில்லை. எனக்குள்ளே இருக்குற நெப்போலியன்!”

11 கருத்துகள்:

  1. //தங்களின் குருவான டைரக்டரையே ஹீரோவாக்கி படமெடுத்து வென்றவர்கள்.//

    படம் வெற்றி பெற்றுச்சா?

    பதிலளிநீக்கு
  2. “எது எப்படியிருந்தாலும் போடப்போறது நானில்லை. எனக்குள்ளே இருக்குற நெப்போலியன்!”


    தல, கொஞ்சம் வல்கரா இல்ல.

    பதிலளிநீக்கு
  3. ஆமாம் ஷிவா. ஆனாலும் ஒரிஜினல் டயலாக்கை மாற்றுவதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? :-(

    பதிலளிநீக்கு
  4. இது என்ன மாதிரியான கதை யுவா?

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    மஞ்சூர். இது சர்ரியலிஸக் கதை என்று சுலபமாக சொல்லிவிடலாம். ஆனால் கதையை எழுதிய கசுமாலத்துக்கு எந்த இஸமும் தெரியாது.

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா7:59 AM, நவம்பர் 14, 2009

    We did not expect this type of blog from you....

    பதிலளிநீக்கு
  7. அடங்கொப்புரானே! நான்லாம் உங்க பக்கத்துலகோட வரமுடியாது போலருக்கே?

    பதிலளிநீக்கு
  8. Ayya, nan valkaila oru pudippoda valthnukukittu irukken. please dont confuse me like this...



    "mental aanal nan poruupu illai nu neenga pottu iruntha" antha mental nanathaan iruppen.

    Rajkumar V.

    பதிலளிநீக்கு