9 நவம்பர், 2009

மழைப்பாக்கம்!


உங்களுக்கு மழையை ரொம்பவும் பிடிக்குமா? தூறத் தொடங்கியதுமே கவிதை எழுத பேனாவைக் கையில் எடுத்துவிடுபவரா?

தோழர் ஆதவன் தீட்சண்யாவின் ‘வேறு மழை’ கவிதையை வாசியுங்கள்...

மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.

* - * - * - * - * - * - * - * - * - *

காலையில் கே.டிவி.யில் ‘பாட்டுக்கு நான் அடிமை’ ஓடிக்கொண்டிருந்தது. கவுண்டமணி-பாண்டு கோஷ்டியின் காமெடிக்குத்து சலிக்கவே சலிக்காது. இசைஞானியின் இசையில் பாடல்கள் தேன். ராமராஜனை வைத்துக்கூட முழுநீள காமெடி கேரக்டரில் சப்ஜெக்ட் எடுத்த இயக்குனர் ஷண்முகப்ரியனின் லேட்டரல் திங்கிங்குக்கு பிக் சல்யூட். படத்தில் ஒரே ஒரு குறை. கதாநாயகி ரேகா. முதிர்கன்னி தோற்றத்தில் அவர் பாவாடைத் தாவணியோடு வருவது கடுப்பு.

* - * - * - * - * - * - * - * - * - *

ஆச்சரியமான விஷயம். முப்பது மணி நேரத்துக்கும் மேலாக மழை அடித்து நொறுக்கியும் கூட இன்னமும் மடிப்பாக்கம் நகரத்திலிருந்து துண்டாகிவிடவில்லை. அதுபோலவே நகரின் ரயில்வே கிராசிங் சப்வேக்கள் நிரம்பிப் போய் போக்குவரத்து ஸ்தம்பித்து விடவில்லை.

நான்கைந்து மணிநேரம் மழைபொழிந்தாலே வெள்ளமாகிவிடும் சென்னை, இம்முறை மழையை கம்பீரமாக வரவேற்றிருக்கிறது. குறிப்பாக தென்சென்னை பளிச். தி.நகர் ஜி.என். செட்டிசாலை மற்றும் வடசென்னையில் சில பகுதிகள் தான் விதிவிலக்கு. இதுபோன்ற மழைக்கு நான்கைந்து நாட்கள் ஸ்ட்ரைக் விடும் வியாசர்பாடி, பெரம்பூர் சப்வேக்கள் கூட விரைவாக இயல்புக்கு திரும்பிவிட்டது.

பெரிய மேஜிக்கெல்லாம் ஒன்றுமில்லை. மழைக்கு முன்பாக கால்வாய்கள் இப்போது தான் ஒழுங்காக தூர்வாரப்பட்டிருக்கிறது. குறிப்பாக மாம்பலம் கால்வாய், பக்கிங்காம் கால்வாய், வேளச்சேரி ஏரி கால்வாய் ஆகியவற்றை தூர்வாரும் பணி, நேர்மையான காண்ட்ராக்டர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் போலிருக்கிறது.

கடந்த வருடமே பாஸ் மார்க் வாங்கிவிட்ட திமுக அரசு, தேர்தலுக்கு முன்பாக பர்ஸ்ட் கிரேடில் தேறிவிடும் என்ற நம்பிக்கை வருகிறது.

* - * - * - * - * - * - * - * - * - *

மழைநேரத்தில் அடிக்கடி உச்சா வருவதைப்போல, அடிக்கடி தம் அடிக்கவேண்டும் என்ற உணர்வும் இயல்பாகவே அடிமனதிலிருந்து நாதவெள்ளம் மாதிரி ஊற்றெடுக்கும். நனைந்தப்படியே பெட்டிக்கடைக்குச் சென்று ஒரு கிங்ஸ் வாங்கி வாயில் வைத்து, தீப்பெட்டியை எடுத்து பற்றவைத்தால்... ம்ஹூம்.. சிக்கிமுக்கி கல்லை வைத்து தேய்த்துக்கூட நெருப்பினை பற்றவைத்து விடலாம். லைட்டாக நனைந்துப்போன நம் தீப்பெட்டிகள் பற்றவே பற்றாது. எனவே, மழைக்காலத்தில் மட்டுமாவது நமுத்துப்போன தீப்பெட்டிகளுக்குப் பதிலாக, அட்லீஸ்ட் மட்டமான பத்துரூவாய் சைனிஸ் லைட்டரையாவது பொட்டிக்கடை அதிபர்கள் கைவசம் வைத்திருக்குமாறு, அடாத மழையிலும் விடாது தம்மடிப்போர் சங்கத்தின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்.

* - * - * - * - * - * - * - * - * - *

இந்தப் பதிவின் தலைப்புக்கு சொந்தக்காரர், மறைந்த தென்கச்சியார்.

17 கருத்துகள்:

  1. No comments yet?
    என்னாச்சு லக்கி சார்?

    கடைசி வரி :(
    R.I.P

    போக்குவரத்து வசதியெல்லாம் எப்படி இருக்கு சார்? போரூர்ல ஆட்டோக்கள் எல்லாம் கூட ஏழரை மணிக்கப்புறம் காணவில்லை. பஸ் பாதிக்கு பாதி தான் விடுறாய்ங்க..

    பதிலளிநீக்கு
  2. பதிவு போட்டதுமே பத்து கமெண்ட்ஸ் வர நானெல்லாம் மொக்கைப் பதிவன் இல்லையே வெங்கிராஜா.. இப்போ ப்ரமோஷன் வாங்கிட்டோமில்லை? :-)

    நமக்கு எப்பவுமே இரட்டைச்சக்கர போக்குவரத்து வசதி தான். என்ன மழையடிச்சாலும் கடமை சிரமேற்கொண்டு முடிக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  3. /பெரிய மேஜிக்கெல்லாம் ஒன்றுமில்லை. மழைக்கு முன்பாக கால்வாய்கள் இப்போது தான் ஒழுங்காக தூர்வாரப்பட்டிருக்கிறது. /

    ஓ...இதான் விஷயமா!!
    போனதடவை ஒரு கார் மூழ்கி இருந்த இடத்திலே இப்போ தேங்கியிருக்க தண்ணீர் லெவலை பார்த்து மழை கம்மி போல-ன்னு நினைச்சுக்கிட்டேன்! :))

    பதிலளிநீக்கு
  4. போட்டோவுல டெரர் காமிக்கிறீங்கோ பாஸ் :))))

    பதிலளிநீக்கு
  5. சேண்டல் முல்லை, பின்னூட்டத்துக்கு நன்றி. பப்பு பாப்பாவுக்கு ஸ்கூல் லீவா?

    வேற கோணத்துலே பார்த்தா நாம கொஞ்சம் டெர்ரரான ஆளுதான் ஆயில்யன். ஸ்ட்ரெயிட் ஆங்கிள்ல பார்த்தாதான் சிரிப்பு போலிஸ் மாதிரியிருப்போம் :-)

    பதிலளிநீக்கு
  6. கம்பெனி பின்னூட்டங்களுக்கு பதில் சொல்ல ஆரம்பித்திருப்பது நல்ல மாற்றம். வாழ்க மழையுடன்.

    பதிலளிநீக்கு
  7. ரவி பின்னூட்டத்துக்கு நன்றியோ நன்றி! :-)

    பதிலளிநீக்கு
  8. பின்னூட்டத்திற்கு பின்னூட்டம் போடுறதை நிறுத்தியதும் பின்னூட்ட வரவு குறைந்ததால் வந்த மாற்றமா லக்கி ;-)?

    பதிலளிநீக்கு
  9. கேவிஆர்!

    பின்னூட்டங்களை பற்றி கவலைப் படாததால் தான் தைரியமாக தமிழ்மணத்தில் இருந்து வெளியே வர முடிந்தது. என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அதைத் தீர்மானிப்பது பின்னூட்டங்கள் அல்ல.

    பின்னூட்டங்களுக்கு பதில் அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் நேரத்தோடு சம்பந்தப்பட்ட விஷயம்.

    பதிலளிநீக்கு
  10. நீங்க தமிழ்மணத்தில் இருந்து வெளியில் வந்தது தெரியாது லக்கி. நான் “அடிக்கடி படிப்பவை”ன்னு ஒரு லிஸ்ட் போட்டு அங்கே உங்களுடைய புதிய பதிவு தெரிந்தால் வந்து படிப்பேன். அவ்வளவே.

    பின்னூட்ட மேட்டர்

    //யுவகிருஷ்ணா 1:14 PM, October 27, 2009
    ரவி!

    :-)

    கேள்வி கேட்டா பதில் சொல்லலாம்.

    ‘கலக்கல் பதிவு’ன்னு பின்னூட்டம் போட்டா அதுக்கு பதில் சொல்லணுமா? நாம பதிவு போட்டாலே அது கலக்கலா தானே இருக்கும்?

    அப்புறம், பதிவில் இருப்பது நம் கருத்து. பின்னூட்டத்தில் வெளிப்படுவது பின்னூட்டவாதிகளின் கருத்து. ஏதாவது விவாதத்துக்கான தேவை இருந்தாலொழிய, பதிவு எழுதுபவர் பின்னூட்டங்களில் விளையாடுவது என்பது ‘பின்னூட்டக் கயமைத்தனம்’ ஆகிவிடும் என்பது நம்முடைய பாலிஸி.

    அமிதாப்பச்சன் பின்னூட்டங்களுக்கு பதில் சொல்லுவது குறித்து மகிழ்ச்சி. அவர் பின்னூட்டக் கயமைத்தனம் செய்கிறாரா என்பதை அவரது வலைப்பதிவை வாசித்துதான் சொல்லமுடியும்//

    ரவிக்கு இப்படி பதில் சொன்ன லக்கி இன்று பின்னூட்ட கயமைத்தனம் செய்ததால் வந்த கேள்வியே :-)

    பதிலளிநீக்கு
  11. கே.வி.ஆர்!

    அதுதான் சொன்னேனே.. நேரம் தொடர்பான விஷயம் என்று. இப்போதும் சொல்கிறேன். பின்னூட்டங்களுக்கு நான் சொல்லும் பதில்கள் (?) ஐந்து பைசாவுக்கும் பிரயோசனம் இல்லாதவை :-)

    பதிலளிநீக்கு
  12. லக்கி புரொமோஷனுக்கு பார்ட்டி எப்ப..?:)

    பதிலளிநீக்கு
  13. //என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். //
    எங்களுக்கும் தெரியும்.. மரத்துல பாதி இருக்கீங்க.. :-))))
    இன்னும் உயரம் தொட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. கிருஷ்ணா, வேளச்சேரி ஏரி கால்வாய் தூர் வார ஆரம்பித்து 6 மாதங்களாக வேலை நடக்கிறது...தான். ஆனா எப்படி இப்படி தீடீரென்று இவ்வளவு நல்லவங்களா மாறிட்டாங்க எல்லாரும் பார்த்தால், :) துணை முதல்வர் அடுத்த தேர்தலுக்கு தென் சென்னை தேர்ந்துதெடுத்து இருப்பதாக மக்கள் வேளச்சேரி முழுக்க பேசிக்கொள்கிறார்கள்.. உங்களுக்கு இது பற்றி கண்டிப்பாக தெரிந்து இருக்குமே?

    ஆயிரம் விளக்கு என்ன ஆகறது..

    நிற்க, எங்கள் ஏரியா. .அதான் ஏஜிஎஸ் காலனி எப்பவும் போல தண்ணியில மூழ்கி த்தான் இருக்கு..என்ன போன வருடம் போல் படகு இன்னும் விடலை.. :(

    பதிலளிநீக்கு
  15. கவிதாக்கா!

    நல்ல விஷயங்கள் நடந்தா நாலு பேரு பாராட்டுவாங்க. ஐந்தாவது ஆளு ஏதாவது குறுக்குத்தனமா இதுமாதிரி சொல்லத்தான் செய்வாங்க.

    வேளச்சேரி மட்டுமல்ல. சென்னை முழுக்கவே ஓரளவுக்கு மாநகராட்சி உருப்படியாக பணியாற்றியிருக்கிறது. கடந்த மழை சீசனில் முதல்வர் ஏகத்துக்கு எக்கியதின் விளைவு இது.

    வேளச்சேரியில் தளபதி நின்னாருன்னா, அது நல்ல விஷயம் தானே? வரவேற்போம்.

    பதிலளிநீக்கு
  16. //பின்னூட்டங்களை பற்றி கவலைப் படாததால் தான் தைரியமாக தமிழ்மணத்தில் இருந்து வெளியே வர முடிந்தது. என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். அதைத் தீர்மானிப்பது பின்னூட்டங்கள் அல்ல//
    உண்மைதான் யுவா.
    நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்கின்றீர்களோ இல்லையோ, தினமும் காலை, மாலை, இரவு மூன்று வேளையும் நான் தேடிச்சென்று படிப்பது உங்கள் வலைப்பூவும், சாருவின் வலைப்பூவும்தான்.
    மற்ற நண்பர்களின் பதிவுகளை தமிழ்மணம், தமிழிஷ் மூலமாக படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. கேபிள் பதிவில் ஆட்சி ரொம்ப மோசம் என்று தான் எழுதி இருந்தார் நீங்க இப்படி எழுதி இருக்கீங்க. யாரைத்தான் நம்புவதோ?

    பதிலளிநீக்கு