உங்களுக்கு காது கொஞ்சம் பெருசா? இரண்டு பக்கமும் வாழைப்பூவை சொருகினால் தாங்குமா? ஆமாவா? வாங்க சார். உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கோம். இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்தோட டிக்கெட் உங்களுக்கு தமிழக அரசின் இலவச டிக்கெட் திட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
படத்தோட கதை என்ன? இருந்தாதானே சொல்றதுக்கு!
திரைக்கதை? அதை ஷூட்டிங் ஸ்பாட்லே பார்த்துக்கலாம்!
வசனம்? வெண்ணிற ஆடை மூர்த்தி இதைவிட நன்றாக எழுதியிருப்பார். படத்தோட நேர்த்தியான, கதைக்கு திருப்பத்தை தரக்கூடிய வசனமே இந்த விமர்சனத்தின் தலைப்பு.
இயக்கம்? சிம்புதேவன். இயக்குவதை காட்டிலும் நன்றாக கார்ட்டூன் போடுவார் என்று தெரிகிறது. படம் முழுக்க விரவியிருக்கும் ஷோலேபுரம், ஜெய்சங்கர்புரம், எம்.ஜி.ஆர் மணிக்கூண்டு, USA புரம், பஜனைக் கோயில் தெரு, பாஸ்மார்க், சப்பல்லோ ஹாஸ்பிட்டல் மாதிரியான நுணுக்கமான சித்தரிப்புகள் ஒரு கார்ட்டூனிஸ்ட்டால் மட்டுமே சிந்திக்க முடிகிற விஷயங்கள்.
ஹீரோ? ஸ்டார்ட்டிங்கில் ஜீரோ. பிக்கப் ஆக பிக்கப் ஆக யமஹா சைலன்ஸர் மாதிரி நல்ல சவுண்டு. நிழலைவிட வேகமாக சுடுவது போன்ற அடாவடிகளை லக்கிலூக் கேரக்டரில் இருந்து லவட்டியிருக்கிறார்கள். காமிக்ஸ்களில் கவுபாயை ரசித்தவர்கள் திருப்தியடைவது கொஞ்சம் கஷ்டம்தான்.
ஹீரோயின்? பத்மப்ரியா மெயின். சந்தியா சைட். லட்சுமிராய் மிடிள். மிடிள் ஹீரோயின் தான் மேட்டரே. லெக்பீஸ் நல்ல உயரம். தொப்புள் பீஸ் நல்ல அகலம். கொஞ்சம் மேலே வந்தால்.. லூஸ்ல விடுங்க. சென்சார்லே தட்டிடுவாங்க.
வில்லன்ஸ்? சாய்குமார் சகிக்கலை. நாசர் குயிக்கன் முருகன் ஷூட்டிங்கில் இருந்து அதே காஸ்ட்யூமில் கிளம்பி வந்திருக்கிறார். நத்திங் ஸ்பெஷல்! படத்தின் ஆகப்பெரிய மைனஸ் பாயிண்ட் மொக்கையான வில்லன்கள்!
இதுவரை இந்த விமர்சனத்தை வாசித்தவர்கள் படம் மொக்கை என்று அவசரப்பட்டு முடிவு கட்டிவிட வேண்டாம். யோசித்துப் பார்த்தால் ப்ளஸ் என்று சொல்ல பெரிய விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லைதான். ஆனாலும் இரண்டரை மணி நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு நிமிட இடைவெளிக்கு ஒருமுறையாவது வாய்விட்டு சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறேன் என்பதுதான் இரும்புக்கோட்டையின் அசலான வெற்றி!
மேஜிக் ஷோ என்பது வெங்காயம் உரிப்பது மாதிரி. காரியம் முடிந்தவுடன் வெறுமைதான் சூழும். ஆனாலும் ஷோவின் போது லைவ்லியான, ஜாலியான அனுபவம் கிடைக்குமில்லையா? இப்படம் தருவது அதே அனுபவத்தைதான்.
செவ்விந்தியத் தலைவனாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும், அவருடைய டிரான்ஸ்லேட்டரும் செய்யும் அலப்பறைகள் என்ன என்னவென்று வாயால் சொல்லியோ, எழுத்தால் எழுதியோ மாளாது. படத்தை பார்த்து தொலைத்தால் மட்டுமே அனுபவிக்க முடியும். பம்மல் கே. சம்பந்தம் சொன்னமாதிரி இந்தப் படத்தை ஆராயக்கூடாது. அனுபவிக்க வேண்டும்.
கதைநாயகனை வைத்து சிம்புதேவன் வெறுமனே காமெடி மட்டும் செய்ய விரும்பவில்லை. சமகால மாவீரனின் கதையையும் ஊடாக சீரியஸாக சொல்லிகிறார். வேண்டியவர்கள் எடுத்துக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வெறும் படமாக பார்த்து சிரித்துவிட்டு வெளியே வரலாம்.
கடந்த படத்தில் கடவுளால் வீழ்ந்த சிம்புதேவன், இந்தப்படத்தில் கவுபாயாக கம்பீரமாக எழுந்து நிற்கிறார்!
மேஜிக் ஷோ என்பது வெங்காயம் உரிப்பது மாதிரி. காரியம் முடிந்தவுடன் வெறுமைதான் சூழும். ஆனாலும் ஷோவின் போது லைவ்லியான, ஜாலியான அனுபவம் கிடைக்குமில்லையா? இப்படம் தருவது அதே அனுபவத்தைதான்.
பதிலளிநீக்கு//
நச்
Kalkura bhai..
பதிலளிநீக்குCongrats
என்ன யுவகிருஷ்னா உங்க பதிவுல நான் இப்போ பின்னூட்டம் போடலாமா.
பதிலளிநீக்குபடம் சூப்பர்.
அப்ப ஒருமுறை பார்த்துவிட வேண்டியது தான்.
பதிலளிநீக்குஉங்கள் விமர்சனம் சிறப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
மனோ
:)
பதிலளிநீக்கு///மேஜிக் ஷோ என்பது வெங்காயம் உரிப்பது மாதிரி. காரியம் முடிந்தவுடன் வெறுமைதான் சூழும். ஆனாலும் ஷோவின் போது லைவ்லியான, ஜாலியான அனுபவம் கிடைக்குமில்லையா? இப்படம் தருவது அதே அனுபவத்தைதான்.///
பதிலளிநீக்குநல்லா சொல்லி இருகீங்க ...!
திரைபடத்தை பார்பதாக ஒரு எண்ணம் இருந்தது, விமர்சனத்தின் முதல் பாதியை வசித்த பொழது பார்காமல் விடுவம் என்று ஒரு என்னம் வந்து போனது,விமர்சனத்தின் இரண்டாம் பாதியில்
பதிலளிநீக்கு//இரண்டரை மணி நேரத்தில் குறைந்தபட்சம் ஒரு நிமிட இடைவெளிக்கு ஒருமுறையாவது வாய்விட்டு சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறேன்//
என்று கூறி இருப்பதால் திரைபடத்தை பார்பதாகவெ எண்ணம். வாய்விட்டு சிரித்து நீண்ட காலம் ஆகிவிட்டது.
It's good to see Lucky to be back on form.
பதிலளிநீக்குஎன்னம்மா எலுதீக்கிற, முத வரிகளை படிக்க சொல்ல, சர்தான் இந்தப் படம் நட்டுக்கிச்சு போல எண்டுதான நினைச்சிகினேன், அப்பாலா படிக்க சொல்ல படம் குஜாலாகீதுன்னு சொல்லிக்கிறேன்னு தெர்யுதுப்பா.
பதிலளிநீக்குஇப்படிக்கு
மாயாண்டி குடும்பத்தார்
reading the first few passages gives a lot of negative impression about the film, your fans will get demotivated from watching this movie! Better say good things first. This film is much better than the likes of Sura!
பதிலளிநீக்கு-Karthik
ந ன் றி.
பதிலளிநீக்குநெசமாத்தான் சொல்லறியா?
பதிலளிநீக்குஎனக்கு படம் ரொம்ப ஏமாற்றமாக இருந்தது பாஸ்.
பதிலளிநீக்குpadam super thala
பதிலளிநீக்குஐயா!!! நீங்க நல்லவரா? கெட்டவரா? படம் நல்ல இருக்கா இல்லையா ? ஒரு மண்ணும் புரியல....
பதிலளிநீக்குஎன்ன வில்லத்தனம்! ஆரம்பத்துல கவுக்கற மாதிரி எழுதி முடிக்கும் போது தூக்கிட்டீங்க :)
பதிலளிநீக்குஸ்டைலு ஸ்டைலுதான்- இது
பதிலளிநீக்குலக்கி ஸ்டைலுதான்
NICE LINES : -//இந்தப் படத்தை ஆராயக்கூடாது. அனுபவிக்க வேண்டும்.// :))
பதிலளிநீக்குஉங்க TITLE-i மட்டும் படிச்சவங்க படம் பார்க்க மாட்டாங்க யுவா !! என்ன பண்ணறது ??
Oru "vimarasam" endrum mulu ulaippu illai( Ref: "Thaya pullaya aanalum vayum vayerum veraithane" ).
பதிலளிநீக்குPuthusu illai entralum "Muyarchikku valthukkal" endra varthai illaye ungal pathivil.
Solratha solliputten unga istam.
Rajkumar V.