28 மே, 2010

கே.எஃப்.சி. சிக்கன்!

“ப்ரெட் பீஸ் மாதிரி சாஃப்ட். செம டேஸ்ட்” என்று இந்திய நகர்ப்புற மேல்தட்டு இளசுகளின் நாக்குக்கு மோகம் கூட்டுவது கே.எஃப்.சி. சிக்கன். நவீன வேலைப்பாடுகளோடு வடிவமைக்கப்பட்ட ரெஸ்டாரண்டுகள், பரிமாற சுறுசுறுப்பான இளைஞர்கள், உச்சஸ்தாயியில் ஒலிக்கப்படும் மேற்கத்திய இசை, டேபிள் முழுக்க இளசுகளின் ஆக்கிரமிப்பு என்று ஒவ்வொரு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுமே பார்ட்டி மூடில் பரவசமாக இருக்கின்றன. சாப்பிட வருபவர்களை சத்தம் போட்டு அதிரவைத்து வரவேற்பதிலேயே கே.எஃப்.சி.யின் கஸ்டமர் கேர் தொடங்கிவிடுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது கே.எஃப்.சி. சிக்கனில்?

“அது மட்டும் சீக்ரட்!” என்று சிரிக்கிறார்கள் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள். கே.எஃப்.சி. சிக்கன் உடம்புக்கு நல்லதாம். பதினோரு விதமான மசாலா சேர்மானம் டேஸ்ட்டுக்கு உதவுவதுடன், உடல்நலத்துக்கும் கேரண்டி தருகிறது என்கிறார்கள். இந்த சேர்மான விகித பார்முலா வேறு யாருக்குமே தெரியாதாம். கே.எஃப்.சி.யின் சீக்ரட் எக்ஸ்க்யூடிவ்களுக்கு மட்டுமே தெரியுமாம். எனவே, சிக்கன் சமைக்கும் அந்த பார்முலாதான் கே.எஃப்.சி.யின் ஸ்பெஷல்.

“இதெல்லாம் சும்மா. பொதுவாக சிக்கனை பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும், கே.எஃப்.சி.யில் பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும் சற்று வேறுபாடு உண்டு. அதுவுமில்லாமல் 200 டிகிரி செல்ஸியஸ் வெப்ப அளவில் ஒரு நிமிடம் பொறிக்க வைத்து, பிறகு 120 டிகிரி செல்ஸியசுக்கு வெப்பநிலையை குறைப்பார்கள். சர்க்கரை, மாவு, மிளகு, உப்பு – இதுதான் இவங்க சொல்ற சீக்ரட் பார்முலா” என்று வில்லியம் பவுண்ட்ஸ்டோன் என்பவர் பிக் சீக்ரட்ஸ் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

1930ல் சாண்டர்ஸ் என்பவரால் அமெரிக்காவில் சிறியளவில் துவக்கப்பட்டது இந்த தொழில். மடமடவென்று வளர்ந்து முப்பது வருடங்களில் அமெரிக்காவிலும், கனடாவிலும் 600 கிளைகளாக பெருகியது கே.எஃப்.சி. இன்றைய தேதியில் கிட்டத்தட்ட நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான கிளைகளோடு ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறது. உலகின் பெரிய உணவு நிறுவனங்களில் கே.எஃப்.சி.க்கு தனியிடம் உண்டு. ஓராண்டுக்கு சராசரியாக நூறு கோடி கோழிகள் கே.எஃப்.சி. கடைகளில் உயிரிழப்பதாக சொல்கிறார்கள்.

கே.எஃப்.சி.யில் பிரதானம் வறுத்த சிக்கன் தானென்றாலும், கிளைகள் அமைந்திருக்கும் நாடுகளுக்கேற்ப அந்தந்த பகுதியின் ஸ்பெஷல் உணவுகளையும், தங்களது டிரேட் மார்க் சுவையில் தருகிறார்கள். சாண்டர்ஸ் ஆரம்பித்த காலத்தில் வறுத்த கறியும், உருளை ப்ரெஞ்ச் சிப்ஸும் மட்டும்தான் ஸ்பெஷல்.

இந்தியாவிலும் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பிஸ்ஸாஹட் ரெஸ்டாரண்டுகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அதற்கு எதிரில் அமையுமாறு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுக்கு இடம் பார்க்கிறார்கள். இதென்ன லாஜிக் என்றே புரியவில்லை.

21 கருத்துகள்:

  1. //KFC, Pizza hut//

    ஒரு தாய் பிள்ளைகள்.

    http://en.wikipedia.org/wiki/Yum!_Brands,_Inc.

    பதிலளிநீக்கு
  2. கோழிகளின் தசைகள் செயற்கையாக வளர ஸ்பெசல் ஊசி போடுகிறார்களாம்.

    இப்பதிவையும் பாருங்கள்.
    http://www.hollywoodbala.com/2010/01/food-inc-best-of-2009-06.html

    அன்புடன்,
    www.narumugai.com

    பதிலளிநீக்கு
  3. இதை எழுதறதுக்கு முன்னாடி.. அதிஷா கிட்ட டேஸ்ட் எப்படின்னு கேட்டிருக்கலாமே??

    வாந்தியெடுத்த மாதிரி சாப்பாடு. அதுக்கு டேஸ்ட் வேறயா?

    நாசமா போறவனுங்க.

    பதிலளிநீக்கு
  4. USA people are now avoiding KFC. So, they are spreading their wings in countries like India where there is no value to HUMAN LIFE.

    பதிலளிநீக்கு
  5. எனக்கு அந்த டேஸ்ட் பிடிக்கலை லக்கி. முன்பு பெங்களூரூவில் அந்த கடையை அடித்து நொறுக்கினார்கள் . நமக்கு நல்ல எண்ணெய் போட்டு மணக்கும் நாட்டுக்கோழிதான்

    பதிலளிநீக்கு
  6. PETAன்னு ஒரு அமைப்பு இருக்கே அவங்களுக்கும் இந்த KFC மாதிரி கடைகளுக்கும் ஆகவே ஆகாது

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா9:41 PM, மே 28, 2010

    Narumugai ezhuthiya link paarungal... Food Inc.. ellarum paarka vendiya oru padam.

    If there is evil in this world, it is MONSANTO corporation which has almost poisoned the food system in the US (Monsanto, as expected claims otherwise. one has to remember this is the same company that manufactured 'AGENT ORANGE' and introduced chemical warfare on a large scale)

    And KFC, etc.. are none but consumers of by-products from the eco-system driven by Monsanto.

    Everyone, especially farmers, should watch Food Inc to understand where we exactly we should NOT take our country.

    பதிலளிநீக்கு
  8. அமெரிக்காவில் சீந்த ஆள் இல்லை. நம்ம வூரில் வந்து பிலிம் காட்டிகொண்டிருக்கிரார்கள் !

    பதிலளிநீக்கு
  9. எனக்குத் தெரிந்து மெக் டொனால்ட்ஸ் எங்கிருக்கிறதோ அதற்கு எதிரில் கே.எப்.சி. இருக்கிறார் போல தான் வைத்துக் கொள்கிறார்கள் - உலகின் பல இடங்களில் (நான் பார்த்த வரை!)

    அதே போல கே.எப்.சி.யில் ஆரம்பத்தில் வரு கோழி பீஸ்கள் மட்டும் தான் கிடைத்துக் கொண்டிருந்தன. மெக்டொனால்ட்ஸ்காரர்கள் கே.எப்.சி. மாதிரியே காப்பி அடித்து வறுகோழித் துண்டுகளை விற்பனை செய்ய ஆரம்பித்த உடன், கே.எப்.சி.யில் பர்கர்கள் அறிமுகப்படுத்தப் பட்டன. இப்போத், கோழி மட்டுமின்றி இறால், மீன் போன்ற சகல ஜீவராசிகளின் வறு துண்டுகளும் கே.எப்.சி.யில் கிடைக்கும். (கொரியாவில் நாய்க் கறித் துண்டு கிடைக்குமா என்று செந்தழலார் தான் சொல்ல வேண்டும்!)

    கே.எப்.சி.யில் கொடுக்கும் சில்லி சாஸ் ஒரு தனி டேஸ்ட். உருளைக்கிழங்கு பொரியலோடு ( ) அதை சாப்பிட்டால் செம்ம டேஸ்ட்.

    மெக்டொனால்ட்ஸில் கோக் கொடுத்தால், கே.எப்.ஸி.யில் பெப்ஸி இருக்கும். இங்கே பெப்ஸி என்றால் அங்கே கோக்!

    கே.எப்.சி.யை எதித்து மேலை நாடுகளில் பெரும் போராட்டம் எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறார்களே!

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா10:16 AM, மே 29, 2010

    என் அலுவலகத்துக்கு மிக அருகில் கேப்சி ரெஸ்டாரண்ட் சென்னையில் உள்ளது. மதிய உணவு ஒரு கப் சாப்பாடு, ரெண்டு பீஸ் கோழி வறுவல், ஒரு சின்ன கப் சாஸ் மாதிரியான ஒன்று, ஒரு பெப்சி 155ரூபாய் புடிங்கிட்டானுவ.

    டேஸ்ட் ஓகே. ஆனால் கொடுத்த பொருளுக்கு உண்டான விலை இல்லை. ஏன் போனோம் என்றாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  11. If u know more about KFC and McDonalds See Food.Inc Documentary Movie and their preparation of chicken is in most dirtiest way.

    http://www.hollywoodbala.com/2010/01/food-inc-best-of-2009-06.html

    http://www.hollywoodbala.com/2010/01/food-inc-best-of-2009-062.html

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா3:20 PM, மே 29, 2010

    //Hygiene
    In February 2007, a KFC/Taco Bell outlet in New York City was found to be rat infested. A video showing the rats running wild inside the restaurant was shown on television news bulletins around the world, as well as disseminated on the internet via sites such as YouTube.[64]
    Two KFC outlets in Sydney, Australia, were fined record amounts for having unhygienic food preparation areas. Inspectors found layers of grease and dirt, as well as evidence of vermin. The KFC stores had been repeat offenders, and had ignored previous warnings to keep their restaurants clean. They were charged with 11 breaches of food hygiene laws.[65]
    In 2009, a KFC outlet in Leicester Square, London was charged with 13 food hygiene charges by officials from Westminster Council, claiming a mouse was seen running across the floor and flies buzzed around their heads at the premises.[66]
    See also
    //

    Site:http://en.wikipedia.org/wiki/KFC

    பதிலளிநீக்கு
  13. //கே.எப்.சி.யில் கொடுக்கும் சில்லி சாஸ் ஒரு தனி டேஸ்ட். உருளைக்கிழங்கு பொரியலோடு ( ) அதை சாப்பிட்டால் செம்ம டேஸ்ட்.
    ///

    அப்படீங்களா???

    அந்த டேஸ்ட் எப்படி வந்ததுன்னு தெரிஞ்சா... சாப்பிட்டதெல்லாம்... அப்பவே.. எல்லா வழியிலும் வெளிய வந்துடும். தெரிஞ்சிக்க விருப்பமா?

    பதிலளிநீக்கு
  14. அமெரிக்காவில் எனக்குத் தெரிஞ்சி.. கீழ்தட்டு மக்கள் மட்டுமே போகும் இடம் இது.

    நம்மூர்ல அதை மேல்தட்டு சீன் காட்டுறானுங்க.

    பதிலளிநீக்கு
  15. சைவம் சாப்பிடும் நான் வேறு வழியில்லாமல் ஒரு நாள் இந்த கடை ஃப்ரெஞ்ச் ஃப்ரை திங்க (அதுவும் அசைவம் தான், மிருக கொழுப்புல சமைப்பாங்க) மறுநாள் பேதி புடுங்கியது.

    எனக்கே இந்த நெலமைன்னா ரெண்டு பக்கெட் சிக்கன் சாப்பிட்ட என் நண்பர்களோட கதையை சொல்லனுமா??

    பதிலளிநீக்கு
  16. KFC-ம், Pizza Hut-ம் ஒரே க்ரூப் தான். அதனால்தான் இடம் ஒன்றாக இருக்குமாறு...
    ஆனால் இந்த சாப்பாடு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மக்களே, எச்சரிக்கையாக இருக்கவும் (சொந்த செலவில் சூனியம் தேவையா?).

    பதிலளிநீக்கு
  17. அமெரிக்காவில் எனக்குத் தெரிஞ்சி.. கீழ்தட்டு மக்கள் மட்டுமே போகும் இடம் இது.

    நம்மூர்ல அதை மேல்தட்டு சீன் காட்டுறானுங்க.////

    அங்கே இரவு என்றால் இங்கு பகல்.
    அங்கு பகல் என்றால் இங்கு இரவு.

    ஒரு சாப்பாடு மொழி உண்டு - சிக்கனில் எது செய்தாலும் ருசிக்கும். KFC விதிவிலக்கல்ல.தன்னுடைய மதிப்பை நினைத்தால் கோழியே தனிக்கடை வைத்துவிடும்.

    பதிலளிநீக்கு
  18. //கே.எஃப்.சி. சிக்கன் உடம்புக்கு நல்லதாம். பதினோரு விதமான மசாலா சேர்மானம் டேஸ்ட்டுக்கு உதவுவதுடன், உடல்நலத்துக்கும் கேரண்டி தருகிறது என்கிறார்கள்.//

    காலையிலே சிரிக்க வைக்காதீங்க லக்கி.

    இந்த காமெடிய யார்கிட்டயும் சொல்லவேணாம்னு சொல்லுங்க.

    மாயவரத்தான் ரிப்பிட்டு

    ஹாலி பாலா இதை பத்தி உங்களுக்கு தெரியாதா என்ன? ஏன் சொல்லவேயில்ல?

    பதிலளிநீக்கு
  19. ஹாலிவுட் பாலா.. இந்த ஜல்லியை வேறெங்காவது சென்று அடித்துக் கொள்ளவும்.

    அமெரிக்காவில் கீழ்த்தட்டு மக்கள் மட்டும் தான் சென்று சப்பிடுவார்கள் என்று யார் சொன்னது?

    உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் நீங்கள் மேல்தட்டு என்றும் அங்கே செல்பவர்கள் எல்லாம் கீழ்த்தட்டு என்றும் கதையளக்க வேண்டம்.

    அதுவுமின்றி, நம்மூரிலேயே, ஹோட்டலிலில் தோசையை விளக்குமாறு கொண்டு தான் சுடுவார்கள் என்று கதை கட்டும் ஆட்களையெல்லாம் பார்த்திருக்கிறேன். ஹாலிவுட் வரை அந்த ஆசாமிகள் செல்வார்கள் என்பது இப்போது தான் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  20. http://www.meattradenewsdaily.co.uk/news/040510/usa___ffc_results_expected_.aspx

    பதிலளிநீக்கு
  21. கீழ்தட்டு மக்கள் மட்டுமே போகும் இடம் இது.

    நம்மூர்ல அதை மேல்தட்டு சீன் காட்டுறானுங்க.////

    பெருமைக்கு பீ திங்கரமதிரி இருக்குனு.
    உண்மை, அமெரிக்காவில் பணம் உள்ளவன் காய்கறி, மீன் என்று உடம்புக்கு நல்ல உணவுக்கு செலவு செய்கிறான். அதாவது பணம் வர வர ஹெல்தியா சாப்பிடறான்.
    நம்மூர்ல அதை மேல்தட்டு பணம் வர வர பிழ்ழா, கபக் சபிடரத்தை பெருமைய நினைக்கிறான். என் நண்பன் நம்மூர்ல பர்கர் சாப்பிடும் போது சொன்னான்.... பெருமைக்கு பீ திங்கரமதிரி இருக்குனு.

    பதிலளிநீக்கு