21 மே, 2010

கோலிவுட் கோடைமழை!

ஆச்சரியமான விஷயம். கோலிவுட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இன்று ஐந்து படங்கள் வெளியாவதாக சொல்கிறார்கள். இப்போதெல்லாம் தீபாவளிக்கே கூட மூன்று அல்லது நான்கு படங்கள் வருவதே பெரிய விஷயமாகிவிட்டது. 87 தீபாவளி நினைவுக்கு வருகிறது. பத்தொன்பது படங்கள். ம்.. அதெல்லாம் அந்த காலம்!

கடந்த ஒரு மாதமாகவே புதுப்படங்கள் நிறைய வந்தாலும், வசூல் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதே உண்மை. இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் கடந்தவாரம் அதிகபட்ச வசூலை ஈட்டிக் கொண்டிருப்பதே ‘சுறா’ தானென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பர்ஸ்ட் ரன் அடிப்படையில் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்கள் மொத்தம் எட்டு. சென்னையிலேயே அவற்றின் தற்போதைய வசூல் நிலவரம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

அங்காடித்தெரு - ஏழுவார முடிவில் ஒண்ணேமுக்கால் கோடி. திரையரங்குகளில் நாற்பது சதவிகித இருக்கைகள் கூட நிரம்பாத நிலையில் வேறு வழியின்றி ஓட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா - பதினோரு வார முடிவில் ஐந்தேமுக்கால் கோடி. அனேகமாக இந்த வருடத்தின் முதல் சூப்பர்ஹிட் படம் இதுதான். ஓபனிங்கிலேயே மொத்தமாக அள்ளிவிட்டதால் அரங்குகள் காத்தாடிக் கொண்டிருக்கிறது. நூறாவது நாள் போஸ்டர் ஒட்டும் வரை ஓட்டியாக வேண்டிய கட்டாயத்தில் திரையரங்குகள்.

பையா - ஆறுவார முடிவில் ஐந்து கோடி. விதாவ-வுக்கு இணையான வசூல். இன்று 50வது நாள். ஐ.பி.எல். காய்ச்சலைத் தாண்டி வெற்றி கண்டது இப்படத்தின் சாதனை. இன்னமும் பாதி இருக்கைகள் நிறைவதால் ஓடிக் கொண்டிருக்கிறது.

கோரிப்பாளையம், குருசிஷ்யன் - ஒரு வார முடிவில் கால் கோடி கலெக்‌ஷன். இதற்கு மேல் செல்ஃப் எடுக்க வாய்ப்பில்லை.

குட்டிப்பிசாசு - ஒரு வார இறுதியில் முப்பது லட்சத்தை வசூல் தாண்டியிருக்கிறது. லோபட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இருமொழிப்படமான குட்டிப்பிசாசு இவ்வளவுதான் அதிகபட்சமாக வசூலிக்க முடியும்.

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் - ஒருவார முடிவில் அரைகோடியை வசூல் அனாயசமாக தாண்டியிருக்கிறது. ஆவரேஜ் தானென்றாலும் லாரன்ஸ் ஹீரோவாக நடித்தப் படத்துக்கு இது எதிர்பார்க்க முடியாத வசூல்தான். மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களில் ஒரு காட்சி, இரண்டு காட்சியாக வெளியிடப்பட்ட இப்படம் இரண்டாவது வாரத்தில் இருந்து காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு ஓட்டப்படுகிறது.

சுறா - இரண்டுவார முடிவில் இரண்டே முக்கால் கோடி. விஜய் மேஜிக். தென்சென்னையில் காத்தாடிக் கொண்டிருக்கும் இப்படம் வடசென்னையின் மகாராணி, ஐட்ரீம்ஸ்களில் வார இறுதியில் ஃபுல் ஆகிறது. இன்னும் கொஞ்சம் முக்கினால் அதிகபட்சமாக ஒன்று அல்லது ஒன்றரை ’சி’ பார்க்கலாம்.

இன்று வெளியாகும் படங்களில் கனகவேல் காக்க, மாஞ்சாவேலு ஆகியவற்றுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஓபனிங் கிடைக்கக்கூடும். இப்படங்கள் சுமாராக இருந்தாலும் கூட ஹிட் அடிக்கலாம். கொல கொலயா முந்திரிக்கா, மகனே என் மருமகனே படங்களுக்கு எந்த கேரண்டியும் இல்லை. குற்றப்பிரிவு நன்றாக இருக்கும் பட்சத்தில் கருப்புக் குதிரையாக முன்னணிக்கு வரலாம்.

தீபாவளி, பொங்கல் ரிலீஸ் படங்கள் இப்போதெல்லாம் காலைவாரிவிட்டு விட்ட நிலையில் ஓரளவுக்கு வசூலை தந்துகொண்டிருந்த கோடை ரிலீஸும் இவ்வருடம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ‘சிங்கம்’ வரும்வரை எதுவும் பரபரப்பாக நடந்துவிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

12 கருத்துகள்:

  1. ஈர்க்குச்சி என்று நம்மை எண்ணும் பேர்க்கு..

    தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. "துரோகம்" படத்த பத்தி எதுவுமே சொல்லாம "நம்பிக்கை துரோகம்" பண்ணிட்டீங்கலே ...

    பதிலளிநீக்கு
  4. மதுரையிலிருந்து....2:26 PM, மே 21, 2010

    தோழர் லக்கி!

    \\விண்ணைத்தாண்டி வருவாயா - பதினோரு வார முடிவில் ஐந்தேமுக்கால் கோடி. \\

    \\பையா - ஆறுவார முடிவில் ஐந்து கோடி. விதாவ-வுக்கு இணையான வசூல். \\

    இரண்டில் பையா-தான் அதிக வசூல், எங்கள் ஊரில் விதாவ 15 நாட்களைக் கூடத் தாண்டவில்லை...........

    பையா இன்னும் 3,4 அரங்குகளில், மாலைக் காட்சிகள் பெரும்பாலும் அரங்கு நிறை காட்சிகளாகப் போய்க் கொண்டிருக்கிறது.

    \\விதாவ-அனேகமாக இந்த வருடத்தின் முதல் சூப்பர்ஹிட் படம் இதுதான்.\\

    அப்படியானால் ’தமிழ்ப் படம்’?

    பதிலளிநீக்கு
  5. நண்பர் மதுரையிலிருந்து...

    தமிழ்ப்படம் ஹிட். சூப்பர் ஹிட் அல்ல.

    பதிலளிநீக்கு
  6. லக்கி சார்,

    ஆஹா! எனக்கும் நன்றாக நினைவிருக்கிறது. 1987 இல் கிட்டத்தட்ட 105 படங்கள் வெளி வந்தன. தீபாவளிக்கு வெளியானவற்றில் சில: பாலச்சந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' ( நினைவிருக்கிறதா, அடி வங்காளக் கடலே?), ஏவிஎம்மின் 'மனிதன்', மணிரத்னமின் 'நாயகன்', ஸ்ரீதரின் நதியா படமொன்று (இனிய உறவு பூத்தது) , கலைஞர் எழுதிய 'பழ வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப் போறேன் ' என்ற பாடல் வரும் படம், (புயல் பாடும் பாட்டு?) கலைஞர் எழுதிய மற்றொரு 'சட்டம் ஒரு விளையாட்டு' ..... சொல்லிக் கொண்டே போகலாம் !

    எனக்குத் தெரிந்து 'குட்டிப்பிசாசு' குறைந்த பட்சம் மூன்று மொழிகளில் (தமிழ், தெலுங்கு , கன்னடம்) வெளியாகி உள்ளது!

    நன்றி!

    சினிமா விரும்பி

    பதிலளிநீக்கு
  7. பின்னூட்டத்துக்கு நன்றி சினிமா விரும்பி சார்!

    எஸ்.ஏ.சி. இயக்கிய சட்டம் ஒரு விளையாட்டு படத்தில் இளையவயது விஜயகாந்தாக நம் இன்றைய இளையதளபதியும் நடித்திருந்தார். கலைஞர் வசனத்தில் இளையதளபதி என்ற செய்தியே பலருக்கும் புதியதாக இருக்கும். அப்போதெல்லாம் கலைஞர் வசனம் எழுதினால் படம் ஓடும். இன்று தியேட்டரை விட்டு ஓடுகிறது :-(

    பதிலளிநீக்கு
  8. நல்ல பதிவு நன்றி கோயிஞ்சாமி No 741

    பதிலளிநீக்கு
  9. கோயிஞ்சாமி குருப் , " கனக வேல் காக்க" படத்தின் விமர்சனத்தை விரைவாக எழுதவும். எப்படியும் ஓசி டிக்கெட்டல தான் பாத்திருப்பீங்க......

    பதிலளிநீக்கு
  10. வழக்கம் போலவே உங்களின் முத்திரை அலசல்..

    www.narumugai.com
    நமக்கான ஓரிடம்

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா3:09 AM, மே 26, 2010

    http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/05/25-exhibitors-impose-red-card-vijay-films.html

    பதிலளிநீக்கு