11 மே, 2010

லும்பினி!

சமூகநீதிக்கு குரல் கொடுக்கக்கூடிய இன்னொரு இணையத்தளம் தோழர்களால் தொடங்கப் பட்டிருக்கிறது : http://www.lumpini.in

நமக்கு உவப்பானதா, உவப்பற்றதா என்பது முக்கியமில்லை. ஆயினும் பொதுப்புத்திக்கு எதிரான மாற்று சிந்தனைகளுக்கு நல்ல களமாக லும்பினி அமையும் என்பதை எதிர்ப்பார்க்கலாம். வரும் காலத்தில் மிக முக்கியமான ஆக்கங்களை இத்தளத்தில் எதிர்ப்பார்க்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு இயக்கமாக இயங்கிய இலக்கியப் பத்திரிகையான நிறப்பிரிகையின் சில இதழ்கள் இந்த இணையத்தளத்தில் வாசிக்க கிடைக்கிறது.

பத்து நிமிடத்தில் பார்த்த பறவைப் பார்வையில் பார்த்ததில், தளத்தின் வடிவம் மிக சிறப்பாக, வாசிப்புக்கு ஏதுவாக இருப்பதை உணரமுடிகிறது. வழக்கமான இணையத்தள மரபுக்கு ஏற்ப இங்கும் திராவிடக்குரலுக்கு இதுவரை இடஒதுக்கீடு ஏதுமில்லை. அனேகமாக கீற்று மற்றும் வினவு தளங்களுக்கு மாற்றாக இத்தளம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. அடுத்தடுத்து இத்தளம் செயல்படும் விதத்தை வைத்தே எதையும் தீர்மானிக்க முடியும்.

லும்பினி ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகள்!

8 கருத்துகள்:

  1. லும்பினி என்ற பெயர் மிகவும் பரிச்சியமாக தெரிகிறதே

    பதிலளிநீக்கு
  2. பாத்துருவோம்... வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு
  3. //உடன்பிறப்பு 6:42 PM, May 11, 2010
    லும்பினி என்ற பெயர் மிகவும் பரிச்சியமாக தெரிகிறதே

    //

    லும்பினி பார்க் ஞாபகம் வருதா?? :)

    பதிலளிநீக்கு
  4. நல்மாற்றாக அதுவாவது அமையட்டும் யுவா. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ’நான் ஏன் திராவிட இயக்கத்தை நிராகரிக்கிறேன்?’ என்னும் ஜெயமோகனின் கட்டுரைக்கு மறுப்பாக பொதியவெற்பனின் கட்டுரைத் தொடர் இடம்பெற்றுள்ளதே?

    பதிலளிநீக்கு
  6. சுகுணா!

    பத்துநிமிட பறவைப் பார்வையில் பார்த்தது என்று சொல்லியிருக்கிறேன். இன்னும் முழுமையாக வாசிக்கவில்லை.

    அசாதி எழுதிய கட்டுரையின் நடை அபாரமாக இருந்தது. ஆயினும் ம.க.இ.க. தோழர்களை அர்ச்சித்து இந்த விஷயத்துக்காக 3, 4 கட்டுரைகள் என்பது ரொம்ப அதிகம். அந்நிகழ்வில் பேசியவர்களின் முழுப்பேச்சையும் கவின்மலர் எழுதியிருக்கிறார். ஓவர் போர்.

    இந்த கவிதை விவகாரத்தில் ம.க.இ.க.வினருக்கு ஏற்பட்ட கோபத்தில் கூடுதல் நியாயம் இருப்பதாக எனது எண்ணம்.

    ஜெயமோகனின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து கட்டுரை எழுதப்பட்டிருப்பது மகிழ்ச்சி. உடனடியாக வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வடிவமைப்பு நன்றாக உள்ளது. தமிழர் அறிவுத் திறம் வளர்வதற்கு உழைக்க வாழ்த்துக்கள்.

    அடையாளம் காட்டிய லக்கிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு