இந்தியனையும், ரமணாவையும் ஒரு பாட்டிலில் போட்டு குலுக்கி, லைட்டாக கலர் சேர்த்து, ப்ரீஸரில் வைத்து அரைமணி நேரம் கழித்து எடுத்தால் சில்லென்று கனகவேல் கதை ரெடி! ஷூட்டிங்கில் சூடாக்கி, திரையரங்குகளில் பரிமாறிக் கொள்ளலாம். திரைக்கதைக்கு? இருக்கவே இருக்கிறார் எண்பதுகளின் எஸ்.ஏ.சந்திரசேகர். சட்டத்தை தூக்கி, விட்டத்தில் மாட்டி, உண்டிவில்லில் - மன்னிக்கவும் - ஏ.கே.74 துப்பாக்கியில் குறிபார்த்து காட்சிக்கு காட்சி கச்சிதமாக அடித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
கரண் - கண்களுக்கு கீழே கருவளையம். அக்னிநட்சத்திரம் காலத்து பிரபு மாதிரியே அச்சு அசலாக இருக்கிறார். அநீதியை கண்டு கண்களை இறுக மூடி திறந்தால், கிராபிக்ஸில் இரத்தச் சிவப்பு. கோபக்கார இளைஞன் என்பதால் ரொமான்ஸில் கோட்டை விடுகிறார். நெருக்கமாக ரொமான்ஸ் செய்யும் ரேஞ்சுக்கு ஹீரோயினும் கும்மென்று இல்லை. பட்ஜெட். பட்ஜெட்.
படத்தின் பலவீனமே பட்ஜெட்தான். படத்தில் வரும் டிவி லைவ் ஷோ கூட வசந்த் டிவியில்தான் என்றால் பட்ஜெட் எந்தளவுக்கு லோ என்று புரிந்துகொள்ள முடிகிறது. இரண்டு பாடல் காட்சிகள் தாய்லாந்தில். அனேகமாக ஹீரோ ஹீரோயினோடு, டைரக்டரும், கேமிராமேனும், நடன இயக்குனரும் என்று ஐந்தே ஐந்து பேர் ஷூட்டிங்குக்கு போயிருப்பார்கள் போலிருக்கிறது. எக்ஸ்ட்ராஸ் கூட இல்லை.
கொடுத்த காசுக்கு இதுபோதுமென்று ஹிட்மேக்கர் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கக் கூடும். சுத்தும் பூமி பாட்டு தேவலை. மின்சாரமே சூப்பர்ஹிட். மற்றதெல்லாம் சும்மா லுலுவாயிக்கு. பின்னணியில் காது கிழிந்து இரத்தம் கொட்டுகிறது. அதுபோலவே கேமிரா. டிராலி கூட இல்லாமல் படமாக்கியிருப்பார்களோ என்று சந்தேகம் வருகிறது. விறுவிறுப்பான காட்சிகள் கூட கேமிரா கோணங்களால் அசமஞ்சமாக தெரிகிறது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்ற தொழில்நுட்பம் தமிழ் சினிமாவுக்கு காதலன் காலத்திலேயே வந்துவிட்டதை யாராவது இயக்குனர் கவின்பாலாவுக்கு நினைவுபடுத்தியிருக்கலாம். தொழில்நுட்ப அடிப்படையில் இப்படம் இருபது ஆண்டுகள் பின் தங்கியிருக்கிறது.
வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை. பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஒருவேளை இவருக்கு மட்டும் தயாரிப்பாளர் கூடுதல் சம்பளம் கொடுத்திருக்கலாம்.
“களை எடுக்கலேன்னா பயிரும் சேர்ந்து அழிஞ்சுடும்”
“நீங்க களைங்கறீங்க. போலிஸ் கொலைன்னு சொல்லுதே”
“அப்போன்னா கார்ப்பரேஷன்லே கொசு மருந்து அடிக்கறவனெல்லாம் கொலைகாரனா?”
அனேகமாக கலைஞரின் சில பல படங்களுக்குப் பிறகு நீளமான கோர்ட் காட்சிகள் இப்படத்தில்தான் வந்திருக்குமென்று தெரிகிறது. இருபத்தைந்துக்கு இருபத்தைந்து சைஸ் கோர்ட். பட்ஜெட். பட்ஜெட். படத்தின் களமே கோர்ட் தானென்பதால் வசனகர்த்தா தன்னுடைய பேனாவுக்கு ஆயிரக்கணக்கான ரீஃபில்களை பயன்படுத்தியிருக்கக் கூடும். படத்தின் இரண்டாம் பாதி கைத்தட்டல்களை முழுக்க முழுக்க தன்வசப்படுத்திக் கொள்கிறார் வசனகர்த்தா.
நகைச்சுவைக்கென்று தனி டிராக் இல்லாததால் வில்லனை வைத்தே புத்திசாலித்தனமாக சமாளித்திருக்கிறார்கள். “நீ படிச்சு லாயரானவன். நான் படிக்காமலே கிரிமினல் ஆனவன்” என்று வில்லத்தனமாக காமெடி செய்கிறார் கோட்டா சீனிவாசராவ். க்ளைமேக்ஸில் மெரீனா பீச். பிரியாணி சகிதம் உண்ணாவிரதம் என்று ஓவர் கலாய்ப்பு. சிந்து நதியை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பக்கோரி சாகும்வரை உண்ணாவிரதமாம். தூள் எஃபெக்ட். சம்பத் ஆண்மையான, அழகான இரண்டாவது வில்லன். ஓவர் புத்திசாலி லாயரான இவர், க்ளைமேக்ஸில் உணர்ச்சிவசப்பட்டு கத்தியைத் தூக்குகிறார் என்பதில் கேரக்டர் லாஜிக் அவுட் ஆகிறது.
கதை, வசனத்தில் கச்சிதமாக ஈடுபாடு காட்டிய டீம் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். மீசையையும், தாடியையும் ஒட்டிக்கொண்டால் அது மாறுவேடம். மாறுவேடத்தில் டான்ஸ் என்பதெல்லாம் எம்.ஜி.ஆர், ராமராஜன், அர்ஜூன் என்று பலரும் செய்து சலித்துப்போன விஷயங்கள். அதுபோலவே சஸ்பென்ஸ் விஷயத்திலும் இயக்குனர் ரசிகனுக்கு சுருக்குமுடி போடவேண்டும். பேரரசு இதில் கில்லி. மாறாக இப்படத்தில் முடிச்சு போட்டதுமே, ரசிகன் சுலபமாக அவிழ்த்துவிடும் வண்ணம் பலவீனமான முடிச்சுகள்.
பட்ஜெட், இசை, திரைக்கதை, கேமிரா என்று பலவீனமான விஷயங்கள் பல இருந்தாலும், படத்தின் மையப்புள்ளியான மசாலா நல்ல காரமாக இருப்பதால் இரண்டரை மணிநேரம் திரையரங்கு இருக்கையில் அமர்ந்து படத்தை பார்க்க முடிகிறது. சுறாக்களும், சிங்கங்களும் தமிழ் சினிமா ரசிகனை கடித்து, குதறி படுகாயப்படுத்தும் சினிச்சூழலில் முழுமையாக பார்க்கும்படி ஒரு படத்தை தந்திருப்பதில் அறிமுக இயக்குனர் கவின்பாலா தேறுகிறார்.
கனகவேல் பார்க்க!
பின்னூட்ட தியேட்டர் டிஸ்கி :
பதிலளிநீக்குநேற்று மாலை உதயம் தியேட்டரில் படக்குழுவினரும் ரசிகர்களோடு படம் பார்த்தார்கள். தமிழகம் முழுக்க பெருவாரியான நகரங்களில் நல்ல ரெஸ்பான்ஸாம். திருச்சி, செங்கல்பட்டில் மட்டும் மாஞ்சாவேலு, கனகவேலுவை தாண்டி ஓடுகிறாராம்.
கரணின் அடுத்த படமான தம்பி வெட்டோத்தி சுந்தரம் பட டீமும், இப்படத்தின் ரிசல்ட்டுக்காக உதயம் தியேட்டர் வாசலில் தவம் கிடந்தார்கள். ஹவுஸ்ஃபுல் போர்ட் மாட்டியதும்தான் அவர்களுக்கு நிம்மதி.
:)))
பதிலளிநீக்குகார்க்கி!
பதிலளிநீக்கு:)))
paakkalaam
பதிலளிநீக்குநொடியில் நோக்க ...
பதிலளிநீக்குஇந்த கலை படைப்பை தைரியமாக பார்த்தும், 'பாரா'வுக்கு "பாரா" வாழ்த்தி எழுதி இருப்பதாய் பார்த்தால் பரமார்த்த குரு ஆனந்தம் அடைவார்.
பதிலளிநீக்கு(கீழே ஸ்மைலி போட்ருக்கேன்)
:)))
கார்க்கி!
பதிலளிநீக்குயுவகிருஷ்ணா!!!!
:)))
பட்ஜெட் பின்னூட்டம் ;)
பதிலளிநீக்குDialogues by Paa.rajaram 9as per cable sankar blog).I guess Paa. rajaram is a blogger.
பதிலளிநீக்குராம்ஜி யாஹூ!
பதிலளிநீக்குஇது எனக்கு புதிய செய்தி. வலைப்பதிவர் ஒருவர் சினிமாவில் வசனம் எழுதுமளவுக்கு முன்னேறுவது என்பது பெரிய சாதனை. பா.ராஜாராம் அவர்களின் வலைத்தள முகவரி இருந்தால் தயவுசெய்து தரவும்.
அருமையான விமர்சனம் தோழர். என்னுடைய விமர்சனத்தையும் படிக்கவும். அதை எடுத்துக்கொண்டு உளியோடு நாளை தஞ்சாவூர் புறப்படுகிறேன் நீங்களும் வருகிறீர்களா தோழர்!
பதிலளிநீக்குhi sorry
பதிலளிநீக்குthe dialogue writer name is Paa.Ragavan (not rajaram).
http://cablesankar.blogspot.com/2010_05_01_archive.html
// யுவகிருஷ்ணா said...
பதிலளிநீக்குராம்ஜி யாஹூ!
இது எனக்கு புதிய செய்தி. வலைப்பதிவர் ஒருவர் சினிமாவில் வசனம் எழுதுமளவுக்கு முன்னேறுவது என்பது பெரிய சாதனை. பா.ராஜாராம் அவர்களின் வலைத்தள முகவரி இருந்தால் தயவுசெய்து தரவும்//
:-)) இது உங்களுக்கே ஓவரா தெரியலையா! ;-)
//வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை. பட்டையைக் கிளப்பியிருக்கிறார். //
பதிலளிநீக்குஅட்ரா சக்கை ...............அட்ரா சக்கை ...............அட்ரா சக்கை ...............
// படத்தின் இரண்டாம் பாதி கைத்தட்டல்களை முழுக்க முழுக்க தன்வசப்படுத்திக் கொள்கிறார் வசனகர்த்தா. //
அட்ரா சக்கை ...............அட்ரா சக்கை ...............அட்ரா சக்கை ...............
// கதை, வசனத்தில் கச்சிதமாக ஈடுபாடு காட்டிய டீம் //
அட்ரா சக்கை ...............அட்ரா சக்கை ...............அட்ரா சக்கை ...............
//தமிழகம் முழுக்க பெருவாரியான நகரங்களில் நல்ல ரெஸ்பான்ஸாம்.//
அட்ரா சக்கை ...............அட்ரா சக்கை ...............அட்ரா சக்கை ...............
Congrats...
பதிலளிநீக்குநல்ல பதிவு,
பதிலளிநீக்குநன்றி பா.ராகவன்.
//வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை.//
பதிலளிநீக்குலக்கி,உங்க குருவை இந்தளவுக்கு கலாய்க்ககூடாது :)
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
சுறாக்களும், சிங்கங்களும் தமிழ் சினிமா ரசிகனை கடித்து, குதறி படுகாயப்படுத்தும் சினிச்சூழலில் முழுமையாக பார்க்கும்படி ஒரு படத்தை தந்திருப்பதில் அறிமுக இயக்குனர் கவின்பாலா தேறுகிறார்.
பதிலளிநீக்கு:)
கனகவேல் காக்கா! :)
பதிலளிநீக்கு" பாரா காக்க"
பதிலளிநீக்குநல்ல பதிவு,
பதிலளிநீக்குநன்றி பா.ராஜாராம்
//வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை. பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஒருவேளை இவருக்கு மட்டும் தயாரிப்பாளர் கூடுதல் சம்பளம் கொடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்கு//
இதுக்கு மேல படிக்க முடியல, நிறுத்திக்கிறேன்.
முருகா சரணம்
பதிலளிநீக்கு\\ராம்ஜி_யாஹூ said...
பதிலளிநீக்குDialogues by Paa.rajaram 9as per cable sankar blog).I guess Paa. rajaram is a blogger.\\
\\Blogger யுவகிருஷ்ணா said...
ராம்ஜி யாஹூ!
இது எனக்கு புதிய செய்தி. வலைப்பதிவர் ஒருவர் சினிமாவில் வசனம் எழுதுமளவுக்கு முன்னேறுவது என்பது பெரிய சாதனை. பா.ராஜாராம் அவர்களின் வலைத்தள முகவரி இருந்தால் தயவுசெய்து தரவும்.\\
முடியல.....
I guess பா.ராஜாராம் அவர்களது வளைத்தள முகவரி, www.bloggerpara.net
//ராம்ஜி_யாஹூ said...
பதிலளிநீக்குhi sorry
//
பாவம் யார் பெத்த புள்ளையோ....:))
பைலட்டில் நானும் இன்னொரு பதிவரும் பார்த்த போது மொத்தமே 49 டிக்கெட் தான். இதில் உலகெமெங்கும் பெருத்த வரவேற்பு என்பது :)
பதிலளிநீக்கு//இது எனக்கு புதிய செய்தி. வலைப்பதிவர் ஒருவர் சினிமாவில் வசனம் எழுதுமளவுக்கு முன்னேறுவது என்பது பெரிய சாதனை. பா.ராஜாராம் அவர்களின் வலைத்தள முகவரி இருந்தால் தயவுசெய்து தரவும்.//
பதிலளிநீக்குயுவா, கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நல்ல பதிவு நன்றி பத்ரி
பதிலளிநீக்கு((வசனம் யார் எழுதியது என்று தெரியவில்லை. டைட்டிலை சரியாக கவனிக்கவில்லை. பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஒருவேளை இவருக்கு மட்டும் தயாரிப்பாளர் கூடுதல் சம்பளம் கொடுத்திருக்கலாம்.
பதிலளிநீக்கு))
ஏப்பா,நீ சொம்படிக்கறவன்னு தெரியும்..ஆனால் இவ்வளவு ஓப்பனா சொம்படிக்க வேண்டாம்ல..பாரு எத்தன பெரு டவுசர அவுக்கறாங்க..
ஏனுங்க,
பதிலளிநீக்குதமிழ் இந்து தளத்தில சொல்லி இருக்கிற யுவகிருஷ்ணா நீங்கதானுங்களா ?
வேற்றுக்கிரகவாசிகள்: வீண் வதந்திகளா? அறிவியல் உண்மையா?
அண்மையில் படித்தவற்றில் மிகவும் அயர்ச்சியை தந்தது “புதிய தலைமுறை” இதழில் வெளியாகியிருந்த “அறிவியல்” கட்டுரை “அந்நியர்கள் படையெடுத்து வருகிறார்களா?” (மாலன் & யுவகிருஷ்ணா, “அந்நியர்கள் படையெடுத்து வருகிறார்களா?”, புதிய தலைமுறை, 20 மே 2010).