17 மே, 2010

நட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே!

முன்பெல்லாம் தமிழ்மணம் நட்சத்திரம் என்று சொன்னால் ஒரு கெத்து இருந்தது என்பது உண்மைதான். நானெல்லாம் கூட தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக அங்கீகரிக்கப்பட்ட பின்னரே கொஞ்சம் பரவலாக தெரிந்தேன். அப்போதெல்லாம் பதிவர்கள் தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர அழைப்பு கடிதம் வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். குசும்பன் போன்ற பதிவர்கள் சும்மானாச்சுக்கும் யாருக்காவது தமிழ்மணத்தில் இருந்து அஞ்சல் போடுவதைப் போல போட்டு ஃபேக் நட்சத்திர அழைப்பு அனுப்பி கலாய்ப்பார்கள். அதெல்லாம் கனாக்காலம்.

நர்சிம், கேபிள்சங்கர், அகநாழிகை, வால்பையன், அதிஷா, தண்டோரா போன்ற நிறைய நிஜமான ‘ஸ்டார்' பதிவர்கள் நட்சத்திரங்கள் ஆனதே இல்லை எனும்போது பாமரன், க.சீ.சிவக்குமார் போன்றவர்கள் நட்சத்திரங்களாகக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு பதிவே போடாமல் நட்சத்திர சாதனை நிகழ்த்தியதுகூட உண்டு. சிலர் இருமுறை கூட நட்சத்திரத்தமான அதிர்ஷ்டமும் நடந்ததுண்டு. நட்சத்திரப் பதிவர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற விஷயம் இன்னமும் சிதம்பர ரகசியமாகதான் இருக்கிறது.

கடந்தவார நட்சத்திரம் தமிழ்சசி. கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக பதிவுகளில் இருந்து விலகியிருந்தவர். தமிழ்மணத்தின் அட்மின்களில் ஒருவர் நட்சத்திர வாரத்தில் வந்ததுமே கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. அந்த இன்ப அதிர்ச்சி இந்த வாரமும் தொடர்கிறது. சித்தார்த்த 'சே' க்வாடா என்ற பதிவர் நட்சத்திரமாகியிருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. இவரும் தமிழ்மண அட்மின்களின் ஒருவரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தாலும் ஒன்றும் பிரச்சினையில்லை.

என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால் நட்சத்திர அன்பர் 2009 அக்டோபரில் இந்த வலைப்பூவை தொடங்கி ஒரே ஒரு பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து ஐந்து நாட்களுக்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மூன்றாவது பதிவை நட்சத்திர வாரத்தில் இடுகிறார். நல்ல வேகம்தான். இவரிட்ட இரண்டே பதிவுகளின் தரத்தில் நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம். ஆனால், ஒரு சின்ன சந்தேகம். ஒரு பதிவர் புதியதாக வலைப்பூ தொடங்கி தமிழ்மணத்தில் இணைக்க வேண்டுமானால் குறைந்தது மூன்று பதிவுகளாவது தமிழில் எழுதியிருக்க வேண்டும் என்றொரு விதி இருப்பதாக நினைவு. ஆனால் இரண்டே இரண்டு பதிவுகளை மட்டுமே எழுதியவர் எப்படி தமிழ்மண நட்சத்திரம் ஆக முடியும்? சரி. விதியை விடுங்கள். விதிகள் எல்லாமே உடைக்கப்படுவதற்காக ஏற்படுத்தப்படுபவைதானே?

எனக்கு ஒரு ‘ஸ்டார்' வலைப்பதிவரை தெரியும். ஆங்காங்கே அடர்த்தியாக பின்னூட்டமிடுவார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பின்னூட்ட சுனாமியாக இருந்தவர். அமெரிக்காவில் இருந்து வந்த அவரை ஒருமுறை நேரில் சந்தித்து குசலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சம்பிரதாயத்துக்காக எல்லா பதிவர்களிடமும் சொல்வது மாதிரி, “அண்ணே உங்க பதிவையெல்லாம் படிச்சிருக்கேன். அட்டகாசம்” என்று அப்பாவித்தனமாக சொன்னேன். “அடப்போய்யா. எனக்கெங்கே வலைப்பூ இருக்கு? சும்மா ஒரு அக்கவுண்ட் ஸ்டார்ட் பண்ணி வெறுமனே பின்னூட்டம் மட்டும்தானே போட்டுக்கிட்டிருக்கேன்!” என்றார். அப்போதுதான் அவருக்கென்று ஒரு வலைப்பூவே இல்லாதது தெரிந்து என்னை நானே நொந்துகொண்டேன். இப்போதும் கூட அவருக்கென்று வலைப்பூ எதுவும் இல்லையென்று தெரிகிறது.

அடுத்தவார நட்சத்திரமாக அவரைத் தேர்ந்தெடுக்கலாம். நட்சத்திரமாவதற்கு வலைப்பூவெல்லாம் இருப்பது ஒரு முக்கியமா என்ன? நாம் நட்சத்திரம் என்று யாரையாவது நினைத்தால் நட்சத்திரமாக்கி அழகு பார்த்துவிட வேண்டியதுதான். சொல்ல மறந்துவிட்டேனே. இந்த வலைப்பூ இல்லாத பின்னூட்ட சுனாமியின் பெயர் சுடலைமாடன். அவரும் கூட அட்மினாகதான் இருக்கிறார். ஹாட்ரிக் அடிக்க அருமையான வாய்ப்பு.

“நீதான் இப்போது தமிழ்மணத்திலேயே இல்லையே? தமிழ்மணப்பட்டையைக் கூட தூக்கிவிட்டாயே? நீ ஏன் இதையெல்லாம் பேசுகிறாய்?” என்று பராசக்திபட க்ளைமேக்ஸில் வக்கீல் சிவாஜியை பார்த்து கேட்டதுமாதிரி நீங்கள் யாராவது பின்னூட்டத்தில் கேட்கலாம். நானும் சிவாஜி மாதிரிதான் பதில் சொல்லவேண்டும். “நான் தமிழ்மணத்தில் இல்லையென்று நினைத்துக் கொண்டிருந்தாலும் என் பதிவுகள் ‘எப்படியோ' தமிழ்மணத்தில் கொஞ்சநாளாக வந்து தொலைத்துக் கொண்டிருக்கிறது. இது பெரிய தொல்லையாக போகிறது. இப்படியெல்லாம் பேசினால் 'அது' மாதிரி வராமல் சுத்தபத்தமாக செய்துவிடுவார்கள் இல்லையா?”

35 கருத்துகள்:

  1. குருஜி!

    ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க! பழைய லக்கியைப் பார்க்கிறேன், கலக்கல்.

    பிரபாகர்...

    பதிலளிநீக்கு
  2. எனக்கென்னமோ இந்த சே குவாராவை கண்டால் பெயரில்லாதவர் போல தோன்றுகிறது...ஹிஹி...

    பை த வே ஒரு ஹிஸ்டரி கொஸ்டின் நீங்கள் நட்சத்திரமாக இருந்த காலம் என்ன ?

    பதிலளிநீக்கு
  3. சொந்த செலவுல சூன்யம் வெச்சுக்கிறாங்கப்ப்பா. என்னமோ போங்க... வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. வால்பையன் ஏற்கனவே நட்சத்திரமாக இருந்திருக்கிறார் என நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. கேபிள் சங்கர் நட்சத்திரப் பதிவர் ஆனா சமயம் காலையில் மாலையில் றன்று இரண்டு வேலையும் பதிவு போட்டார்.காலையில் புதுசு மாலையில் ஆறிப் போனது.கேபிள் சங்கருக்கு பதில் வேறு பெயர் வேண்டும் என்றால் நான் என் பயறை பரிந்துரை செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. கேபிள்சங்கர் இருந்திருக்காரா என்பது மறந்துவிட்டது. வால்பையன் நட்சத்திரமானது இல்லை என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. வால்பையன்,நரசிம்,தண்டோரா,அதிஷா நட்சத்திரம் ஆகவில்லை என்று நினைக்கிறேன்.ஒருவேளை தற்போது உள்ள சூழ்நிலையில் நட்சத்திரமாக மாற நன்றாக எழுத வேண்டுமோ.

    பதிலளிநீக்கு
  8. நிமல்!

    நான் 2006 ஏப்ரலில் இருந்து எழுதிவருகிறேன். தமிழ்மண நட்சத்திரன் ஆனபோது சுமார் 150 பதிவுகள் எழுதியிருந்தேன். madippakkam.blogspot.comலிருந்து luckylookonline.com-க்கு மாறியபோது ஒரு தொழில்நுட்ப குறைபாடு (குறைபாடு என் அறிவுக்கு) காரணமாக ஒட்டுமொத்த பதிவுகளையும் இழந்து, ஜிமெயில் ஆர்க்கீவ்ஸில் இருந்து பழைய பதிவுகளை எடுத்து புதுப்பித்து வருகிறேன்.

    நண்பர் சித்தார்த்த சேகுவாடா மாதிரி திடீர் நட்சத்திரம் ஆனதில்லை!

    பதிலளிநீக்கு
  9. / தொழில்நுட்ப குறைபாடு/
    இந்த மாதிரி குறைபாடு பழத்தை சாரு புழிஞ்சு குடிக்கிறவங்களுக்கு மட்டும் வருதே எப்படி?

    பதிலளிநீக்கு
  10. //இந்த மாதிரி குறைபாடு பழத்தை சாரு புழிஞ்சு குடிக்கிறவங்களுக்கு மட்டும் வருதே எப்படி?//

    பார்க்கிறவங்களோட காட்சி குறைபாடுதான் இதற்கு காரணம். எல்லாமே மஞ்சளாதான் தெரியுதில்லையா? :-)

    பதிலளிநீக்கு
  11. நானும் உங்களை திடீர் நட்சத்திரம் ஆனதாக சொல்லவில்லை.

    நான் உங்களை லக்கிலுக்காக madippakkam.blogspot.comலிருந்து யுவகிருஷ்ணாவாக luckylookonline.com வரை வாசித்துக்கொண்டுதானிருக்றேன்.

    பதிலளிநீக்கு
  12. //நட்சத்திரப் பதிவர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற விஷயம் இன்னமும் சிதம்பர ரகசியமாகதான் இருக்கிறது.//
    எனக்கு தெரிஞ்சு போச்சு ......
    இது கூடவா தெரியல ......நட்சத்திர,ராசி-யா வச்சு தான் ..

    பதிலளிநீக்கு
  13. ரொம்ப நாளா நானும் யோசிச்சிகிட்டிருக்கேன் நட்சத்திர பதிவருக்கான தகுதிகள் என தமிழ்மண நிர்வாகம் ஏதேனும் வைத்திருக்கிறதாவென....

    அது இப்ப இல்லை என்றாகிவிட்டது.

    அதனால் தான் சமீபத்திய நட்சத்திரங்களுக்கு பின்னூட்டங்களும் குறைந்துவிட்டதோ!

    பதிலளிநீக்கு
  14. சமீப காலத்து நட்சத்திர தேர்வை பார்த்து இன்னொரு சந்தேகமும் தோன்றியது:

    ”இந்த வார நட்சத்திரத்தின் இடுகைகளை படிக்காதீர்கள் “

    என்று சொல்வதற்காக நட்சத்திரமாக தேர்வு செய்கிறார்களோவென.

    பதிலளிநீக்கு
  15. அப்படி போடு அருவாளை..

    பதிலளிநீக்கு
  16. நல்ல பதிவு நன்றி கோயிஞ்சாமி

    பதிலளிநீக்கு
  17. இதைப்பற்றி இந்த அளவுக்கு யோசித்தது இல்லை.
    யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

    பதிலளிநீக்கு
  18. ஏனுங்க நான் கூடத் தான் நட்சத்திரம் ஆனேன். நான் தமிழ்மண அட்மின் குழுவில் இல்லையே?? ஆள் இல்லாத கடைக்கு ஒரு வருஷமா டீ ஆத்திகிட்டு இருந்தேன், அதுக்கப்புறம் தான் ஒரு 4 பேரு படிக்க ஆரம்பிச்சாங்க.

    ஆனாலும், ஒரு ரெண்டு வாரமா தமிழ்மண அட்மின் குழுவில் இருக்கிறவங்க எழுதுறது கொஞ்சம் இல்ல நெம்பவே நெருடலாத்தேன் இருக்குது...

    பதிலளிநீக்கு
  19. முன் நவீனத்துவம்:
    நற்சத்திர பதிவராக நிறைய உழைக்க வேண்டும்.
    நிறைய வாசிக்க வேண்டும். படுத்து உக்காந்து புரண்டு புரண்டு
    வாசிக்க வேண்டும். கண்ணீர் வரவைக்கும் பதிவுகள் எழுதி தள்ள வேண்டும்.

    நவீனத்துவம்:

    ஒரு பதிவு எழுதியவர் எல்லாம் தமிழ் மண நட்சத்திரம்
    ஆவது உலக மகா அயோக்கியத்தனம்.

    பின் நவீனத்துவம்:

    ஒரு பதிவு எழுதி டயர்டாகி போனவரை வாரம் ஐந்து பதிவு எழுதியே ஆக வேண்டும்
    என்று கழுத்தில் கத்தி வைப்பது தான் நட்சத்திர அந்தஸ்து.

    பின்னல் நவீனத்துவம்.

    அட்லீஸ்ட் தமிழ்மணத்துல ஓட்டாவது போடுங்கப்பா!!!!

    பதிலளிநீக்கு
  20. //யுவகிருஷ்ணா

    வால்பையன் நட்சத்திரமானது இல்லை என்றே நினைக்கிறேன்.//

    லக்கி, உங்களிடம் பேசிய பிறகு,
    வால்பையனிடமும் உறுதிப்படுத்திக் கொண்டேன். ஒரு வருடம் முன்பே அவர் நட்சத்திரமாக இருந்திருக்கிறார்

    தொடக்கத்தேதி: மார்ச் 02, 2009
    நட்சத்திரம்: வால்பையன்

    நன்றி

    பதிலளிநீக்கு
  21. என் பார்வையில் ஒருவர் நல்ல எழுதினார் என்றால் முதல் நாளே கூட நட்சதிர பதிவர் ஆக்கலாம்.
    .நல்ல என்பதன் பொருள், வாசகருக்கு வாசகர் வேறு படும்

    வலை மனைகளிலும் தாலுகா அலுவலகம், கோடம்பாக்கம் உதவி இயக்குனர்கள் போன்ற சீனியாரிட்டி சிஸ்டம் வேண்டாமே.

    பதிலளிநீக்கு
  22. //என் பார்வையில் ஒருவர் நல்ல எழுதினார் என்றால் முதல் நாளே கூட நட்சதிர பதிவர் ஆக்கலாம்.
    .நல்ல என்பதன் பொருள், வாசகருக்கு வாசகர் வேறு படும்//

    இது தான் - பின்னுக்கு பின் ஒரு பின் நவீனத்துவமா ?

    குழப்புறீங்களே....சத்தியமா புரியல....

    //நல்ல என்பதன் பொருள், வாசகருக்கு வாசகர் வேறு படும்//


    ஒருவேளை நம்ம பதிவுக்கு நாமளே வாசகரா இருக்குறதுக்கும் மத்தவங்க வாசகரா இருக்குறதுக்குமுள்ள வேறுபாடா

    பதிலளிநீக்கு
  23. அதிஷா said...
    நல்ல பதிவு நன்றி கோயிஞ்சாமி



    Yov Nalla COmment ..
    Sirikamudiyalayah

    பதிலளிநீக்கு
  24. என்னை பொறுத்தவரை அதை பெரிய விஷயமாக ஆக்கியதே உங்களை போல சில நன்றாக எழுதும் பதிவர்கள் தான். நீங்க மட்டும் சொல்லுங்க, நம்ம www.wiki.org.in -ல ஒவ்வொரு பதிவர்க்கும் ஒரு தனி பக்கத்தை ஒதுக்கி தருகிறேன். தனி நபர்களே அதில் நட்ச்சத்திர அந்தஸ்தை போட்டு கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  25. MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
    அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
    Feel பண்ணக்கூடாது..

    பதிலளிநீக்கு
  26. அட.. அவங்க அரிப்புக்கு ஒண்ணா கூடி காசு போட்டு மாறி மாறி சொறிஞ்சிக்கிறாங்க.

    அது அவங்க வீடு சார்.. ஏன் உங்களுக்கு இலை போடச் சொல்றீங்க?

    தமிழ்மணம் என்பது சில Elitist people தங்களது ஈகோவின் பசியை தீர்த்துக்கொள்ளும் லயன்ஸ் க்ளப் போன்ற ஒரு நிறுவனம்.

    நீ..யார்? அதில் போய் மரியாதையை கேட்பதற்கு? பணம் போட்டிருக்கிறாயா? அல்லது குறைந்த பட்சம் அவர்களுக்கு சொறிந்தாவது விட்டிருக்கிறாயா?

    ப்ளட்டி நான்சென்சு!

    புள்ள குட்டியை படிக்க வெய்யுங்க பாஸ்!!

    பதிலளிநீக்கு
  27. நர்சிம், கேபிள்சங்கர், அகநாழிகை, வால்பையன், அதிஷா, தண்டோரா போன்ற நிறைய நிஜமான ‘ஸ்டார்' பதிவர்கள் நட்சத்திரங்கள் ஆனதே இல்லை எனும்போது பாமரன், க.சீ.சிவக்குமார் போன்றவர்கள் நட்சத்திரங்களாகக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு பதிவே போடாமல் நட்சத்திர சாதனை நிகழ்த்தியதுகூட உண்டு. --//

    நல்ல கமென்ட்..லக்கி..

    பதிலளிநீக்கு
  28. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க லக்கி!

    ஏன் இந்த ரெண்டு வாரமா அவங்க அட்மின்ல இருக்கிற ஆட்களா போடுறாங்க?

    இந்த ரெண்டு வாரமும் ரொம்போ முக்கியம்.

    இந்த மே மாதத்தில் ஈழம் சம்பந்தமான பதிவுகளைத் தேடி பெரும்பாலோர் தமிழ்மணத்துக்கு வருவார்கள்.

    அவர்களுக்கு என்ன செய்தி சொல்ல வேண்டும் என்பதைத் தீர்மானிக்க விரும்புகிறது தமிழ்மணம் நிர்வாகம்.

    புரிகிறதா? அது பதிவுகளை திரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்டது அல்ல!

    தனது முதலீட்டாளர்களின் கருத்துக்களை பரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.

    முதலீடு இந்தியாவிற்கு எதிரான கருத்தாக்கத்தை உண்டாக்குவதற்கு என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை!

    பதிலளிநீக்கு
  29. //ராம்ஜி_யாஹூ said...
    என் பார்வையில் ஒருவர் நல்ல எழுதினார் என்றால் முதல் நாளே கூட நட்சதிர பதிவர் ஆக்கலாம்.
    .நல்ல என்பதன் பொருள், வாசகருக்கு வாசகர் வேறு படும்

    வலை மனைகளிலும் தாலுகா அலுவலகம், கோடம்பாக்கம் உதவி இயக்குனர்கள் போன்ற சீனியாரிட்டி சிஸ்டம் வேண்டாமே.
    //

    திருப்புகழைப் பாடப்பாட வாய்..

    பதிலளிநீக்கு
  30. ..//யுவகிருஷ்ணா said...
    வால்பையன் நட்சத்திரமானது இல்லை என்றே நினைக்கிறேன்//..

    மன்னிக்கவும் யுவா -
    வியாழன், பிப்ரவரி 26, 2009 முதல் ஞாயிறு, மார்ச் 8, 2009 வரை

    பதிலளிநீக்கு
  31. ருத்ரனைக் கூட நட்சத்திரமா அறிவிச்சிருந்தாங்க இல்லை? அதைக் கொஞ்சம் ப்ரீ மெச்சூரோன்னு நினைச்சேன். ஆனா சீனியாரிட்டிக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒரு நார்ம் வெச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன்.

    http://kgjawarlal.wordpress.com

    பதிலளிநீக்கு