9 செப்டம்பர், 2011
தோழர் ஷகீலா!
மன்மதப்புயல் ஷகீலா என்றாலே முகம் சுளிப்பவர்கள் கூட சனிக்கிழமை இரவுகளில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு 'சூர்யா டிவி' பார்ப்பதை கண்டிருக்கிறேன். ஷகீலா மிகவும் வெள்ளந்தியானவர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் எதிலுமே ‘வெளிப்படையாக' இருப்பவர் என்று சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க முயற்சித்த நமது பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் 'ஷகீலா' போன்ற நல்ல குணநலன்களோடு இப்போதும் ஒரு நடிகை இருப்பது ஆச்சரியமானது என்றும் அந்த நண்பர் சொன்னார்.
* ஷகீலா தனது பதினைந்தாம் வயதில் துணைநடிகையாக நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்'. சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது.
* ஷகீலாவின் குடும்பம் பொருளாதாரரீதியாக ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த காலக்கட்டம் அது. பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே “ச்சீய்” ரக படங்களில் அதன்பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.
* ”மறுமலர்ச்சி” என்ற மம்முட்டி நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருப்பார்.
* ஷகீலா நடித்த ‘கிணரத்தும்பிகள்' படம் மெகாஹிட்.
* ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆறுபடங்களாவது ஷகீலா நடித்து, அவை செம ஹிட் ஆக மலையாள திரையுலகமே அதிர்ந்தது. மம்முட்டி, மோகன்லால் படங்களின் வசூல் ஷகிலாவால் பாதித்தது. ஷகிலா படங்கள் வெளியாகிறதென்றால் மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதியை அப்போதெல்லாம் தள்ளி வைத்து விடுவார்களாம். ஷகிலா படங்களை முடக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முயன்றார்கள் என்று பேசப்பட்டது.
* ஷகீலா “ச்சீய்” ரக படங்களில் நடித்தாலும் அவருக்கு பாசில் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காமெடி வேடங்களில் நடிப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம்.
* ஷகீலா மன்மதப் புயலாக அறியப்பட்ட பிறகு தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் தலையைக் காட்டினார்.
* சினிமா இண்டஸ்ட்ரியில் "Cyclone" "லேடி லால்” போன்ற பெயர்களால் ஷகீலாவை குறிப்பிடுகிறார்கள்.
* 'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம்.
* ஷகீலா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் சில : 'ஆலில தோணி', 'மிஸ் சாலு', 'ஸ்நேகா', ‘சாகரா', 'அக்னிபுத்ரி', 'சவுந்தர்யலஹரி', 'பெண்மனசு', 'வீண்டும் துலாபாரம்' போன்றவை. இப்படங்களையே அடிக்கடி பெயர் மாற்றி, சில பிட்டுகளை சேர்த்து புதியப் படங்கள் போல ஆங்காங்கே திரையிடுவது வழக்கம்.
* மலையாளத் திரைப்படங்களில் இப்போது அவ்வளவாக ஷகீலா ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘மோனலிசா' திரைப்படம் மூலமாக (இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்) கன்னடத்திலும் கரைகடந்திருக்கிறது இந்தப் புயல்.
* இயக்குனர் தரணியின் படங்களில் ஷகீலாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. தரணி தெலுங்கில் இயக்கிய 'பங்காரம்' திரைப்படம் மூலமாக தெலுங்கிலும் ஒரு ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷகீலா.
* தமிழில் டப் செய்யப்படும் ஷகீலாவின் திரைப்படங்களுக்கான ப்ரீமியர் காட்சி பரங்கிமலை ஜோதியில் ஒரு காலத்தில் தவறாது காட்டப்பட்ட வந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சேச்சிக்குள் இத்தனை விசயமா!. ஆச்சிரியமான ஆராட்ச்சி.!@
பதிலளிநீக்குஷகீலா , கவுண்டருக்கு ஜோடியாகூட ஒருபடத்துல நடிச்சிருக்காங்க...
பதிலளிநீக்குஆமாம் பிரியன். படம் பெயர் ஜல்லிக்கட்டு. கல்யாணம் ஆகியும் வயசுக்கு வராத வித்தியாசமான கேரக்டரில் ஷகீலா நடித்திருப்பார்.
பதிலளிநீக்குதங்க தலைவிக்கு இத்தனை திறமைகளா?
பதிலளிநீக்குஇதை கண்டு பிடித்து வெளியிட்டதால் இன்று முதல் நீர் சகீலா கொண்டான் என்று அன்போடு அலைக்கபடுவீர் ........
அந்த படம் பெயர் என்ன என்று தெரியாது. ஆனால் அது ஜல்லிக்கட்டு இல்லை. ஜல்லிக்கட்டு சிவாஜி-ம் சத்யராஜ்-ம் நடித்தது
பதிலளிநீக்குஅந்தப் படம் பெயர் ஜல்லிக்கட்டு காளை. பிரபு, கனகா நடித்தது. பாடல்களும், கவுண்டர் காமெடியும் மட்டுமே உருப்படியாக இருக்கும்.
பதிலளிநீக்கு//'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம். //
பதிலளிநீக்குஇந்த அளவுக்கு வெளிப்படையானவர் என்று தெரியாமல் போய்விட்டது...
பெண்களை போகப்பொருளாக பார்க்கும்,முதலாளித்துவத்தின்
பதிலளிநீக்குநுகர்வு கலாசாரம் தான் சகீலா போன்றவர்கள் சீய் ரக
படங்களில் நடிக்க காரணம் என்பதை வருத்தத்தோடும்,
இயலாமையோடும்,ஆதங்கத்தோடும் பதிவு செய்கிறேன்.
(பின்னே,"தோழர் சகீலா" என்று பதிவு போட்டபின்
இப்படி ஒரு கமென்ட் போடலேன்னா எப்படி?)
repeattuuu???????????
பதிலளிநீக்கு"தோழர் ஷகீலா" வை ஒட்டித் தோளைக் காட்டி நிற்கிற படத்தில் 'தோழர்' அழகாக இருக்கிறார்.
பதிலளிநீக்குநடிக்க வந்த புதிதில் உடற்கட்டிலும் அழகாக இருந்தார். நான் வடக்கே திரிந்த காலங்களில் வாய்த்தவைதாம் அவர் படங்கள். தமிழ்நாட்டில் அந்த அளவுக்கு வெளிப்படையாக இல்லை. JHUTI MOHABBAT படம் இங்கே என்ன பெயரில் வந்தது?
"ஹே ஜும்பா ஜும்பா... ஹே ஜும்பா ஜும்பா...ஹே ஜும்பா ஜும்பா... ஹே ஜும்பா ஜும்பா..." என்ற கேப்டன் பிரபாகரன் படத்தில் வரும் பாடல் தேவையில்லாமல் பின்னணியில் கேட்டுத் தொலைக்கிறது. பாடல் கேட்கும் நேரத்தில் உங்கள் முகம் வேறு நிழலாடுகிறது. பாக்கியராஜ், ராமராஜன் மாதிரி டிஸ்கோ டான்ஸ் வேறு ஆடுகிறீர்கள்.
பதிலளிநீக்குhttp://www.youtube.com/watch?v=35TqxVzVVGg
ராஜ் டிவியின் இது போன்ற முயற்சிகளை வெகுவாகப் பாராட்டுகிறேன். நீங்கள் சொல்லிய வெகுளித்தனத்தை இதில் பாருங்கள் யுவா...
"இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்"
பதிலளிநீக்குஅறிவார்ந்த தோழர் லக்கியிடமிருந்து இப்படியொரு பிழையான கருத்து வெளிப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. சதா மொத்தமாக காட்டினால் கூட தோழர் ஷகீலாவின் கெண்டைக்காலுக்கு ஈடாக முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தாறுமாறான கோபத்துடன் பதிவு செய்கிறேன்!
நல்லது
பதிலளிநீக்கு"சதா மொத்தமாக காட்டினால் கூட தோழர் ஷகீலாவின் கெண்டைக்காலுக்கு ஈடாக முடியாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தாறுமாறான கோபத்துடன் பதிவு செய்கிறேன்! "
பதிலளிநீக்குFact... E C R!!! #Shakeeladaa