ஃபேக்டரி சங்கு ஊதியது. கேண்டீன் நோக்கி தொழிலாளர்கள் அவசரமாகப் படையெடுத்தார்கள். வடை, பாயசத்தோடு ருசியான, தரமான சாப்பாட்டை இலவசமாகவே கொடுக்கிறது நிர்வாகம். கரும்பு தின்ன கூலியா? எப்போது சங்கு ஊதுமோவென்று காத்துக் கிடப்பார்கள் தொழிலாளர்கள்.
ஃபிட்டர் அன்பு இதுவரை கேண்டீனுக்கு வந்ததேயில்லை. சங்குச் சத்தம் கேட்டதுமே, சாப்பாட்டுப் பையை தூக்கிக் கொண்டு, வசதியான மரநிழல் நோக்கி ஓடிவிடுகிறான்.
“ஏண்டா. கேண்டீன்லே ப்ரீயாவே நல்ல சாப்பாடு போடுறானுங்க. என்னவோ வூட்டுலே தினமும் கறியும், மீனும் கட்டித்தர மாதிரி கேரியரைத் தூக்கிட்டு ஓடுறீயே?” தங்கம் அடிக்கடி இதே கேள்வியை கேட்பான். அன்பு பதில் சொன்னதில்லை. புன்னகையோடு கடப்பான்.
என்னத்தைதான் கட்டிக்கொண்டு வருகிறான்? தங்கமும், நண்பர்களும் ஒரு நாள் டிபன்பாக்ஸில் என்னதான் இருக்கிறது என்று திறந்துப் பார்த்தார்கள். புளித்தவாடையோடு தயிர்ச்சாதமும், தொட்டுக்கொள்ள மோர்மிளகாய் நான்கும்.
“அடப்பாவி. இதுக்கா கேண்டீனுக்கு வராம தங்கம் மாதிரி டிபன் பாக்ஸைத் தூக்கிட்டு ஓடுறான்? ஆயிரக்கணக்குலே சம்பளம் வாங்கி என்னத்தைப் பிரயோசனம்? வாய்க்கு ருசியா சாப்பிட மாட்டேங்கிறானே?”
அன்று டூல்ரூம் கண்ணனுக்கு பிறந்தநாள்.
“நம்ம செட்டுலே யாரும் இன்னிக்கு கேண்டீனுக்கு போவேணாம். எல்லாத்துக்கும் பாய்கடையிலே பிரியாணி ட்ரீட்” – காலையிலேயே அறிவித்து விட்டான்.
சாப்பாட்டு நேரம் வந்ததும், வழக்கம்போல அன்பு சாப்பாட்டுப்பையைத் தூக்கிக் கொண்டுச் செல்ல, கண்ணனுக்கு கோபம்.
“முரட்டு முட்டாளுடா நீயி. ஏதோ ஒரு நா ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா வெளியே சாப்பிடலாம்னு கூப்பிட்டா, இப்படி பிகு பண்ணுறே. போ. போய் உன் நாத்தம் புடிச்ச டிபன் பாக்ஸை கட்டிக்கிட்டு அழுவு. நாகரிகம் தெரியா ஜென்மம்” கத்தித் தீர்த்துவிட்டு, நண்பர்களோடு கிளம்பிவிட்டான்.
‘இவர்களுக்கு எப்படி புரியவைப்பது?’ அன்புக்கு தெரியவில்லை. டிபன்பாக்ஸில் இருப்பது வெறும் தயிர்சோறல்ல. அவனுடைய ஆத்தாவின் அன்பு என்பதை.
(நன்றி : தினகரன் வசந்தம்)
ஓவர் செண்டிமெண்ட் அப்பு !
பதிலளிநீக்கு'உலகத்தில், உண்மை பொய் அல்ல நன்மை தீமைதாம் உண்டு.'
பதிலளிநீக்குஇது எனக்கு என் மலையாளி நண்பர் ஒருவர் சொன்னது. பிறகு, இதே அளவீட்டால் கடவுள் முதற்கொண்டு எல்லாவற்றையும் பார்க்கப் பழகிவிட்டது.
அன்பின் தயிர்ச்சோற்றில் அப்படி என்ன நன்மை என்று புரியாமல் முழிக்கிறேன்!
நன்மையெல்லாம் எதுவுமில்லை சார். ஒரு செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட், அவ்ளோதான்!
பதிலளிநீக்குஎல்லாத்தையுமே தத்துவக்கண்ணாடி போட்டுத்தான் பார்க்கணுமா? :-)
//உலகத்தில், உண்மை பொய் அல்ல நன்மை தீமைதாம் உண்டு.'//
பதிலளிநீக்குஇப்போ இவை இரண்டும் கூட இல்லை..இருப்பது வெற்றி,தோல்வி மட்டுமே!
BTW கதை 1950 ஆம் ஆண்டு அம்புலிமாமாவில் வரவேண்டியது (factory என்பதை பள்ளி என மாற்றி விட்டு!)
அடடா. அம்மாவின் அன்பு தயிர் சோத்திலா இருக்கு ? அப்போ அம்மா சிக்கன் பிரியாணி, மீன் வருவல் இதெல்லாம் செஞ்சு தந்தா அவங்களோட பாசம் அதுல இருக்காதா ? வாழ்க தயிர் சோறு. ஒழிக இதர சாப்பாடுகள்.
பதிலளிநீக்குதமிழ் நாளிதழ்/வார இதழ்கலீல் இது போன்ற கதைகளை மட்டுமே பிரசுரிக்கப் படும்.
பதிலளிநீக்குநான் கூட எழுதலாம், அது கூட பிரசுரம் ஆகும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிற கதை.
பதிலளிநீக்குAgree with Sakthivel's comment - this is over sentiment Lucky
பதிலளிநீக்குWait till Anbu gets married - everything will change
பதிலளிநீக்குMudivu rommmmmba sapppu nnu iruku sir.Etho 90's story mathiri.Vithyasam romba illa.Ithu maathiri niraya 1 pakka kadhaikal padichuruken.
பதிலளிநீக்குசுமாராத்தான் இருக்கு... பாஸ் உங்ககிட்ட நிறையவே எதிர்பார்க்கிறோம்..
பதிலளிநீக்குI too feel this. It is very difficult to enjoy a good meal alone myself without my beloved family(Spouse & Parents).Avangala vittutu eppadi naama mattum vakkanai-a saapdrathu????
பதிலளிநீக்குthayin anbu theriyaathavanga(anubvichchavarkalukku mattumthaan theriyum).
பதிலளிநீக்குசுஜாதா விருது வாங்கிவிட்டு, இது மாதிரி எல்லாம் கதை எழுதாத ராசா!
பதிலளிநீக்குThayin Anbai arinthavan nanbarkalin natpai en mathikkavillai??? ;(
பதிலளிநீக்கு/*thayin anbu theriyaathavanga(anubvichchavarkalukku mattumthaan theriyum).*/
பதிலளிநீக்குஸ்ஸ்ஸ் அப்பா முடியல. தந்தையின் அன்பு இல்லாமல் இருக்கும். தாயிடம் இல்லாமல் இருக்குமா ? அம்மா இன்னிக்கு என் நண்பன் பிரியாணி ட்ரீட் கொடுக்குறான். எனக்கு அது சாப்பிடணும் போல இருக்குனு சொன்னா. முடியாது, நீ புளிச்ச தயிர் சோறுதான் சாப்புடணும்னு எந்த அம்மாவும் சொல்ல மாட்டாங்க.
உணர்ச்சிக்கு ஆட்படுகிற மனிதனாய் இருங்கள். உணர்ச்சிக்கு ஆட்படுகிற முட்டாளாய் இருக்காதீர்.
உங்கள் பதிவுக்கு நன்றி.தொடர்ருந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
>சுஜாதா ஆவி said...
பதிலளிநீக்குசுஜாதா விருது வாங்கிவிட்டு, இது மாதிரி எல்லாம் கதை எழுதாத ராசா!
ha ha ha :-)
" இந்த மாதிரி மோசமாக எழுதமுடியும்" எண்டு காட்டவா இப்படி ஒன்றைப் போட்டீர்கள்?
பதிலளிநீக்குகதையல்ல உணர்வு
பதிலளிநீக்குmudiyala, kaduppethurar your honour
பதிலளிநீக்குஇது நீங்க முதல்ல எழுதுன கதையா பாஸ்?
பதிலளிநீக்கு