29 செப்டம்பர், 2011

காதலும், கழுதையும்!

முன்னபோனா
முட்டுது
பின்னவந்தா
உதைக்குது

மிஸ்டுகால்
பார்த்து ரிங்குனா
அப்பா இருக்கார்
அப்புறம் பண்ணு

சாயங்காலம்
பாக்கலாமா
சாரி அம்மாவோடு
கோயிலுக்கு போறேன்

நேத்து ஏன்
பார்க்க வரலை
நேரமில்லையா?
நெனைவு இல்லையா?

சிகரெட்டு புடிப்பியா
தண்ணி அடிப்பியா
செருப்பால அடிப்பேன்
தறுதலை

ப்ளூகலர் ட்ரெஸ்
நல்லாருக்கா?
ஏய் அந்த
ப்ளாக் சுரிதாரை
சைட் அடிக்காதே!

புது ரிசப்ஷனிஸ்ட்
என்னைவிட அழகா?
கண்ணை நோண்டிடுவேன்
முண்டக்கண்ணா

சம்பளம் வந்திடுச்சா
மாயாஜால் போலாமா
எம்ஜிஎம் போலாமா
எனக்கு சத்யம் கூட
ஓக்கேதான்

மாப்பிள்ளை
பார்த்திருக்காங்க
செம ஸ்மார்ட்
டேக் ஹோம் 80கே
எனக்கு டபுள் ஓகே

ம்ம்ம்ம்....
ஏற்கனவே கல்யாணம்
ஆனவன் இன்னொருத்தியை
காதலிப்பதை விட ஒரு
கழுதையை காதலிக்கலாம்

எச்சூஸ்மீ..
கீழ்ப்பாக்கம்
எந்த பக்கம்?

17 கருத்துகள்:

  1. //
    ம்ம்ம்ம்....
    ஏற்கனவே கல்யாணம்
    ஆனவன் இன்னொருத்தியை
    காதலிப்பதை விட ஒரு
    கழுதையை காதலிக்கலாம்
    //
    அனுபவமா ?

    பதிலளிநீக்கு
  2. அருமை..
    நகரத்து பெண்களே இப்படி இருப்பார்கள்..கிராமத்து பெண்கள் அன்பு காட்டுவது,காதலிப்பது போன்றவற்றில் நம்பக்கூடியவர்கள்..
    கிராமத்து பெண்களின் காதல் மறைமுகமானது, ஆனால் தூய்மையானது..பணம்,பாசாங்கு அவர்களை ஒன்றும் செய்யாது..அன்பு தான் அவர்களை பாடாய்படுத்தும்..
    கவிதை மிக அருமை..

    பதிலளிநீக்கு
  3. கழுதையை காதலிக்கலாம் ன்னு சொல்லிட்டீங்க... நாளைக்கு "ஒரிசா பசங்களும், ஒரு கழுதையும்" என்ற தலைப்போடு பேப்பர்ல செய்தி வந்திட போகுது :))

    பதிலளிநீக்கு
  4. சூப்பர் கவிதை.........

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  5. ஏற்கனவே கல்யாணம்
    ஆனவனை காதலிப்பதற்கு
    எருமையை காதலிக்கலாம்னு

    அந்த பொண்ணு எழுதின
    கவிதைய நீங்க படிச்சிங்களா

    பதிலளிநீக்கு
  6. அதான் கவிதை எழுத வரலையில்ல. வுட்டுட்டு போவ வேண்டியது தானே?

    பதிலளிநீக்கு
  7. ///எச்சூஸ்மீ..
    கீழ்ப்பாக்கம்
    எந்த பக்கம்? ////


    கவிதையை படிச்சதும் எல்லோருக்கும் இந்தக் கேள்வி தோன்றும்னு சொல்ல வர்றீங்களா?!

    பதிலளிநீக்கு
  8. //அறிவில்லாதவன் said...

    ஏற்கனவே கல்யாணம்
    ஆனவனை காதலிப்பதற்கு
    எருமையை காதலிக்கலாம்னு

    அந்த பொண்ணு எழுதின
    கவிதைய நீங்க படிச்சிங்களா//

    ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  9. அது எப்படிங்க ? இடமிருந்து வலம் எழுதுவதை மேலிருந்து கீழாக எழுதினால் அது கவிதையாகி விடுகிறது ? கவுஜ.. கவுஜ..

    பதிலளிநீக்கு
  10. கழுதை காலால உதிக்கும் ..ஆனா காதலன் கவிதையால உதட்சிடான் .

    ஆத்தாடி பாவாடை காத்தாட - பார்ட் 1

    பதிலளிநீக்கு
  11. அக்டோபர் மாத சிறகு இதழ் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
    http://siragu.com/

    இந்த இதழில் பல சிறப்பான கட்டுரைகள் வெளி வந்திருக்கின்றன.
    நண்பர்கள் படித்து உங்கள் கருத்தோகளை தெரிவியுங்கள்.
    மேலும் உங்கள் நண்பர்கள் வட்டாரத்திற்கு அனுப்பி வாசித்து கருத்துகள் தெரிவிக்கும்படி கேட்டு உதவி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. //எச்சூஸ்மீ..
    கீழ்ப்பாக்கம்
    எந்த பக்கம்?//

    நாலு தெரிஞ்ச நீங்க, இப்படி கேக்கலாமா ???? :) :) :)))))

    பதிலளிநீக்கு