வங்கக் கடலோரம் துயில் கொண்டிருக்கும்
தங்கத் தலைவனின் நூற்றி மூன்றாவது பிறந்தநாள் இன்று.
தங்கத் தலைவனின் நூற்றி மூன்றாவது பிறந்தநாள் இன்று.
“இந்தியா ஒரு துணைக்கண்டம். இது ஒரு தனி நாடு, ஒரே நிர்வாகத்தால் ஆளப்பட வேண்டிய நாடு என்று யாரும் வாதம் புரியமுடியாது. ஐரோப்பா 32 நாடுகளாக பிரிக்கப்பட்டிருப்பதைப் போல இந்திய துணைக்கண்டமும் தனித்தனி நாடுகளாக நிர்வகிக்கப்பட வேண்டும். ஆரிய ஆதிக்கத்தின் காரணத்தாலே தான் இந்தியா என்ற பெயரில் இக்கண்டம் தனியொரு நாடாக இருக்கிறது. ஆரிய ஆதிக்கம் மற்ற இனத்தவரின் நல்வாழ்வை நசுக்கியிருக்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் கட்டாயமாக ஒரே நாடாக வாழவேண்டுமென்று திணிக்கப்படுகிறார்கள். இதனால் புரட்சிகளையும், குழப்பங்களையும் தவிர்க்க இயலாது.
குழப்பங்களையும், போராட்டங்களையும் தவிர்க்க வேண்டுமானால் இனவாரியாக இக்கண்டம் தனித்தனி நாடாக பிரிக்கப்பட வேண்டும். அசோகர், கனிஷ்கர், சமுத்திரகுப்தர் போன்ற பேரரசர்களின் காலத்தில் கூட ‘இந்தியா' என்ற பெயரில் ஒரே நாடாக இக்கண்டம் இருந்ததில்லை. இந்திய துணைக்கண்டம் பல்வேறு நாடுகளாக பிரிக்கப்பட்டால் ஒவ்வொரு நாடும் தனக்கிருக்கும் வளங்களை கொண்டு பொருளாதாரரீதியாக இலகுவாக முன்னேற முடியும். ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வொரு தனி நாடிருந்தால் எல்லா இனமுமே சமமான முன்னேற்றத்தை பெற இயலும். சமத்துவம் மலரும். ஒரு இனத்தின் ஆதிக்கத்தில் இன்னொரு இனம் வாழவேண்டிய நிலை இருந்தால் வன்முறை தான் மிஞ்சும். வன்முறைகளிலிருந்து மக்களை காக்க பிரிவினை அவசியப்படுகிறது.”
1940ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பேரறிஞர் அண்ணா துரை பேசியதின் சாராம்சம் இது. விருப்பு வெறுப்பின்றி இதை வாசித்துப் பார்த்தோமானால் 71 ஆண்டுகளுக்கு முன்பாக அண்ணாவுக்கு இருந்த தீர்க்கதரிசனத்தை உணரலாம்.
காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை 1909ஆம் ஆண்டு காஞ்சிபுரத்திலே ஒரு கீழ்நடுத்தர குடும்பம் ஒன்றில் பிறந்தவர். காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்த காலத்திலேயே ஆங்கிலம் மற்றும் தமிழில் அவருக்கு அபார புலமை இருந்தது. நவயுவன், பாலபாரதி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலத்தில் வெளிவந்த ஜஸ்டிஸ் என்ற நாளிதழின் துணையாசிரியாக பணிபுரிந்த அனுபவமும் அவருக்குண்டு. தந்தை பெரியாரின் விடுதலை பத்திரிகையில் பட்டை தீட்டப்பட்டப் போது தான் வைரமாய் மின்னினார் பேரறிஞர் அண்ணா.
அண்ணாதுரைக்கு திருப்புமுனை தந்தது திருப்பூர். 1934ஆம் ஆண்டு தந்தை பெரியாரை அவர் சந்தித்தது இங்கே தான். பெரியாரை சந்தித்தபின் தனது பேச்சாற்றல், எழுத்தாற்றல் அனைத்தையும் சுயமரியாதை இயக்கத்திற்கு காணிக்கையாக்கினார். நூல்கள் வாசிப்பிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த பேரறிஞர் அண்ணா, வீட்டுக்கு ஒரு நூலகம் அவசியம் இருக்கவேண்டுமென தமிழர்களை வற்புறுத்தினார். தமிழர்களுக்கு வாசிப்புப் பழக்கம் குறைவு என்று குறைபட்டுக் கொண்டவர் எழுதியதைப் பாருங்கள்.
“இந்த நாட்டிலே நம்மவர் வீடு கட்டுவர், அதிலே பல அறைகளும் அமைப்பர். மாட்டுக்கொட்டகை ஒரு பால், பொக்கிஷ அறை ஒருபால், சமையலறை மற்றொருபால். மற்றெதை மறக்கினும் ஆண்டவனுக்குப் பூசை செய்ய அறை அமைக்க மட்டும் மறவார். ஆனால் அறிவூட்டும் ஏடுகள் நிறைந்த படிப்பறையைப் பற்றிய பகற்கனவும் காணார். படிப்பறை மிகவும் முக்கியமானது. அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடியதன்று. ஆயினும் அது அவர்தம் சிந்தனையில் தோன்றாது”
அறிஞர் அண்ணாவின் எழுத்துலக ஆளுமை அப்போது சினிமாவுக்கு பரவியது. திராவிட சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் சினிமாவில் கொடிகட்டிப் பறக்க அச்சாரம் போட்டவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவுக்கு முன்பான தமிழ் சினிமாவில் “அவா வருவா, இவா ஊதுவா” என்ற அளவிலேயே தமிழ் இருந்தது. அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு, வேலைக்காரி திரைப்படங்கள் பெரியளவில் வெற்றி கண்டன. மேடைத்தமிழை சினிமாவுக்கும் கொண்டு சென்ற பெருமை அறிஞர் அண்ணாவையே சாரும். இவரைப் பின் தொடர்ந்து நுழைந்த திராவிட சிந்தனையாளர்கள் இயல்புத்தமிழையும் பிற்பாடு சினிமாவுக்கு கொண்டு வந்தார்கள்.
எழுத்து, பேச்சு என்று அலுவலக அறைக்குள் மட்டுமே தமிழர்களுக்கான அண்ணாவின் சேவை நின்றுவிடவில்லை. அதையும் தாண்டி விலைவாசி உயர்வு எதிர்ப்பு மறியல் போராட்டம், மும்முனைப் போராட்டம், கட்டாய இந்தி பதினேழாவது மொழிப் பிரிவு சட்ட நகல் எரிப்புப் போராட்டம் என பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் அண்ணா.
1949ஆம் ஆண்டு திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாக தி.மு.கழகத்தை தொடங்கினார். கழகம் தொடங்கி பதினெட்டாவது ஆண்டில் 1967ல் தமிழகத்தின் ஆட்சிப்பீடத்தை அலங்கரித்தது. அப்போது இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளாத மாநிலமாக தமிழகம் தான் இருந்தது. உலகளவில் ஒரு பிராந்திய கட்சி பொன்விழா கொண்டாடியும் மக்கள் மத்தியில் வலுவாக, செல்வாக்காக இருக்கிறதென்றால் அது அறிஞர் அண்ணா தொடங்கிய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே.
1967ஆம் ஆண்டிலிருந்து 69ஆம் ஆண்டுவரை மிகக்குறுகிய காலம் மட்டுமே முதலமைச்சராக அறிஞர் அண்ணா இருந்தார். இதற்குள்ளாகவே மதராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர்மாற்றி அழகுத்தமிழை அரசாட்சி ஏற்றினார். இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டை உலகம் வியக்குமளவுக்கு சிறப்பாக சென்னையில் நடத்திக் காட்டினார். கலப்புத் திருமணத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சட்ட அங்கீகாரம் அளித்தார். தென்னாட்டு பெர்னாட்ஷா என்று பேராசிரியர் கல்கியால் புகழப்பட்டார்.
பிப்ரவரி 2, 1969ல் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள். உலகளவில் ஒருவரின் மறைவுக்கு மிக அதிகமான பேர் கூடியதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலம் பதிவாகியிருக்கிறது. தமிழ் வளர, தமிழர் தம் வாழ்வுயர காலமெல்லாம் பாடுபட்ட தலைவனின் இறுதி ஊர்வலத்துக்கு இவ்வளவு பேர் திரண்டதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்?
அகில இந்திய வானொலியில் தலைவர் கலைஞர் கதறிய உலகப்புகழ் பெற்ற “அண்ணா, எம் இதய மன்னா” கவிதாஞ்சலியை இங்கே கேட்கவும்.
பேரறிஞர் அண்ணா சுமாராக ஓவியமும் வரைவார். அவரது ஓவியங்களில் சில :
லக்கி,
பதிலளிநீக்குமுதல் கமெண்டே இப்படி வரும் என்று வருத்தபடாதீர்கள்.
தி.மு.க. விசுவாசியான உங்களிடமிருந்து இதற்க்கு பதில் எதிர்பார்க்கிறேன்.
சட்ட சபையில் அண்ணாவின் "பர்சனல் லைப்" பற்றி கேள்வி வந்தபோது அண்ணாவின் பதில் இப்படி இருந்தது என்று கேள்வி பட்டேன்.
இது உண்மையா என்று உங்களுக்கு தெரிந்த மூத்த தி.மு.க. தொண்டர்களிடம் கேட்டு பதில் சொல்லவும்.
கேள்வி:
நீங்கள் நேற்று அந்த நடிகையின் வீட்டிற்கு போயிருந்தீர்களாமே?
அண்ணாவின் பதில்:
நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை.
இது உண்மையாகவே நடந்ததா என்று எனக்கு தெரியாது. ஏனென்றால் அப்போது நான் பிறக்க வில்லை.
இது வயதான ஒருவர் என்னிடம் சொன்னது. கலைஞரை பற்றி நிறைய சொன்னார். அது தனி விஷயம்.
எனக்கும் நான் கேள்விப்பட்டவரை அண்ணா அவர்கள் மிகவும் நல்லவர்.
ஆனால் இந்த கேள்வி பதில் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.
உங்களிடமிருந்து பதில் எதிர்பாக்கிறேன்.
செங்கொடிகளும் அண்ணாதுரையின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றனர்!
பதிலளிநீக்குhttp://rsyf.wordpress.com/2011/09/15/annadurai/
ஓவியங்களைப் பார்த்துச் சிரிப்பு வந்தது. அண்ணா தன் பத்து வயதுக்கு முன்பு வரைந்தவைகளோ? அந்த வண்ண ஓவியத்தின் color sense-ஐப் பாராட்டலாம்.
பதிலளிநீக்கு''பிப்ரவரி 2, 1969ல் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள்.''
பதிலளிநீக்குஇந்த உடான்ச ரீல இன்னும் எத்தன வாட்டி தான் ஓட்டி காண்பிப்பீங்க.. மக்கள் இப்பல்லாம் ரொம்ப படிச்சி தெளிவா இருக்காங்க. இதுல வேற நீர் இப்ப பத்திரிக்கை தொழிலில் ஜல்லி அடிச்சிகினு இருக்கீர். காலத்துக்கு தகுந்த மாதிரி உங்க ரீல கொஞ்சம் யோசிச்சி மாத்தி ஓட்ட பாருங்க. போரடிக்காதீங்க சார்.
சூரியன் அய்யர் அவர்களே!
பதிலளிநீக்குபேரறிஞர் அண்ணாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினார்கள் என்று நாங்கள் சொல்லவில்லை.
கின்னஸ் புத்தகம், இங்கிலாந்து பதிப்பு 1986, பக்கம் 219ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
@ Suriyan - check this link http://en.wikipedia.org/wiki/List_of_largest_peaceful_gatherings_in_history
பதிலளிநீக்குlucky is right i guess.
//நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை.
பதிலளிநீக்கு//
லக்கி இந்த கமெண்டுக்கு உங்க பதில் என்ன?
Mr.Suryan Iyer, if at all lucky made false statement,what is there to oppose that point?, what you try to say from that,Is that point really hurts you? he told somany special things about anna, why you guys developing the vengeance.
பதிலளிநீக்குbeautiful post...
பதிலளிநீக்குThe 1971 census states that TN population at that was 4.11 crs. So, we can assume that in 1969 it could be around 4 crs. Now if the procession was around 1.5 crs, thats roughly 1 in every 3 persons in TN at that time. HHmmmm.... now it is left to anybody's intelligence...
பதிலளிநீக்குஆவருடைய எழுத்தும் பேச்சும் பலரை கவர்ந்தது போல் எனக்கும் பிடித்தவையே. ஆனால் அவரே நீங்கள் குறிப்பிட்டிருந்த 1940ன் நிலையை 1960களில் மாரற்றிக்கொண்டதாக கேள்வி.
பதிலளிநீக்குசரித்திரத்தில் உள்ளது போல் இன்றைய நாட்டின் எல்லைகள் அமைக்கப்பட வேண்டுமென்றால் எந்த காலகட்டத்தை பார்ப்பது. Nation formation is an evolutionary process. ஒன்றாய் இருந்த நாடுகள் பிரிந்திருக்கின்றன பிறந்த நாடுகள் சேர்ந்திருக்கின்றன அதே ஐரோப்பாவில்.
sir Annony...
பதிலளிநீக்குit should be true as a man kind
why cant u get that broker to help me..
நல்ல பதிவு.
பதிலளிநீக்குபேரறிஞர் அண்ணா-வை பற்றி தெரிந்து கொண்டோம்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
\\உலகளவில் ஒரு பிராந்திய கட்சி பொன்விழா கொண்டாடியும் மக்கள் மத்தியில் வலுவாக, செல்வாக்காக இருக்கிறதென்றால்\\
பதிலளிநீக்குஎந்த பதிவு போட்டாலும் உங்க ட்ரேட்மார்க் குசும்ப மட்டும் விட மாட்றீங்களே... உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சதே இந்த காமெடிதான்...
எனக்கும் இந்த பானுமதி மேட்டர பத்தி ரொம்ப நாளா டவுட் உண்டு... தங்களின் பதில் என்னவோ ?
people wanting to know abt celeb's personal life shows how crooked we are... wtf u do by knowing whether he f****d that actress r not.. is it affecting you or anybody...??? if he has done anything wrong to the public or people you can very well question him... we should stop peeping at others bedroom...
பதிலளிநீக்குvelila romba nallavanga mathiri pesurathu.. illa naan epdi irunthalum celeb's disciplined-a irukkanum nu nenaikirathu ... romba kashtam...
Hi Anony,
பதிலளிநீக்குAfter reading your comment, i conclude that you are the only perfect gentleman in this world. I also presume that you never see "matter film", never see a girl, never show any interest on others personal life.
wow...what a great personality you are.
Nobody has used the word whether he f....d the actress. Only you are using that word. This shows that how crooked you are.
The question asked here is (indirectly), whether he is 100% clean and eligible as a role model. Nobody asked the photos or movie here.
People like you are very dangerous than others.
I think yuva should write about you (clean person) instead of writing Anna, M.K and others.
//it should be true as a man kind
பதிலளிநீக்குwhy cant u get that broker to help me..//
Arunlog mama,
Why do you want to meet the broker?
You want to learn broker business or you want to meet the same actress.
It is too late. Almost more than 40 years over. That broker won't be alive and the actress as well.
Go and watch some .... movies or try your local broker.
Thairiyam irundhal ithaiyum podungal http://www.vinavu.com/2009/09/16/annadurai/
பதிலளிநீக்குபல்வேறு தேசிய இனங்கள் கட்டாயமாக ஒரே நாடாக வாழவேண்டுமென்று திணிக்கப்படுகிறார்கள் அதனால் புரட்சி வருமென்று என அண்ணா சொன்னது தீர்க்கதரிசனம்தான். ஆனால் அது 1940, இப்போது 2011-ல் அதன் அப்டேடட் வெர்சன் தேவைபடுகிறது. பரமகுடியில் தமிழக போலிஸ் செய்த அராஜகம், ஆரிய படையின் அக்கிரமத்திற்கு எவ்வித்தினம் குறைந்தது அல்ல. எனவே தேசிய இனம் என தற்போது உருவாக்கப்பட்ட கருத்தை விட்டு 3000 ஆண்டுகளாய் இருக்கும் சாதி எனும் உண்மை இனங்களின் அடிப்படையில் நாடு பிரிக்கப்பட்டால்தான் தலித்களுக்கு பிறசாதிகளிடமிருந்து விடுதலைகிட்டும். தமிழ்மொழி பேசுவோர் ஒன்னுக்கும் மேற்பட்ட நாடுகளில் வசிப்பது தவறில்லை.ஐரோப்பாவில்கூட மொழி அடிப்படையில்மட்டும் நாடுகள் பிரிக்கப்படவில்லை. உதாரணமாக ஜெர்மன் மொழி பேசுவோர் ஜெர்மனியில் மட்டுமல்லாது பெல்ஜியம், சுவசர்லாந்து, ஆஸ்திரியா நாடுகளில் இருப்பது குறிப்பிட்டத்தக்கது,
பதிலளிநீக்குடிஸ்கி;இதை சொந்த பெயரில் எழுதினால் இனவெறியன்னு சொல்லிடுவாங்க. ஆனா திராவிடன்னா மட்டும் இன சமத்துவமாம் என்ன செய்ய?
people wanting to know abt celeb's personal life shows how crooked we are... wtf u do by knowing whether he f****d that actress r not.. is it affecting you or anybody...??? if he has done anything wrong to the public or people you can very well question him... we should stop peeping at others bedroom...//
பதிலளிநீக்குWe do not want to know about celebritie's personal life but only about our leader's. what is wrong in that? For everything you point to Western world like Anna did. In this issue, west expects their leaders to be impeccable so that they can be good inspiration for the people, so we are!
Very Nice
பதிலளிநீக்குTN was also divided politically as pandya ,chera and chozha.Does that mean tamils were not one people.India was never a single administrative unit.but neither was TN
பதிலளிநீக்குSridhar
//Hi Anony,
பதிலளிநீக்குAfter reading your comment, i conclude that you are the only perfect gentleman in this world. I also presume that you never see "matter film", never see a girl, never show any interest on others personal life.
wow...what a great personality you are.
Nobody has used the word whether he f....d the actress. Only you are using that word. This shows that how crooked you are.
The question asked here is (indirectly), whether he is 100% clean and eligible as a role model. Nobody asked the photos or movie here.
People like you are very dangerous than others.
I think yuva should write about you (clean person) instead of writing Anna, M.K and others.//
i never said i'm good and clean... i said.. what do you achieve by knowing the personal life of celebs....and fyi.. nobody will be 100% clean n perfect.. if you want to have a leader or role model who is 100% clean n perfect you're never gonna find one...
//எனக்கும் நான் கேள்விப்பட்டவரை அண்ணா அவர்கள் மிகவும் நல்லவர்.
ஆனால் இந்த கேள்வி பதில் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது.//
ithil uruthuvatharku enna irukkirathu... aduthavara thunburuthatha varai ellarum nallavar thaan... if both r interested .. let them do .. whats hurting us... ????
everyone of us trying to judge other person based on our standards...we should change that attitude... when i say 'we' it inclues me as well...
//We do not want to know about celebritie's personal life but only about our leader's. what is wrong in that? For everything you point to Western world like Anna did. In this issue, west expects their leaders to be impeccable so that they can be good inspiration for the people, so we are!//
பதிலளிநீக்குimpeccable--- i presume it as truthful.. coz.. west want their leaders to be truthful... they never dictate or judge their leaders personal life... eg sarkozy, clinton (it became an issue coz she raised the complaint)
நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை.
பதிலளிநீக்குஅறிஞர் அண்ணாவின் பேரன்களில் ஒருவர் என்னுடைய நண்பர், அவர் கூறியது- அண்ணாவிற்கு நிறைய பெண் தொடர்புகள்...அவரின் சொத்துக்கள் இழந்ததும் இதனால் தான்.
அரசியல்லே இதுல்ளோம் சாதாரணம் அப்பா...
@கொங்கு நாடோடி
பதிலளிநீக்கு//அறிஞர் அண்ணாவின் பேரன்களில் ஒருவர் என்னுடைய நண்பர்//
அந்தோ பரிதாபம்!!
உங்களைபோய் அவர் நண்பன் என்று நினைத்திருக்கிறாரே
//அவரின் சொத்துக்கள் இழந்ததும் இதனால் தான்//
ஆமா பேரறிஞர் அண்ணா அவர்கள் பல கப்பல்கள், வானூர்திகள் வைத்து தொழில் செய்தாரு எல்லாத்தையும் இழக்க?
//
பதிலளிநீக்குகேள்வி:
நீங்கள் நேற்று அந்த நடிகையின் வீட்டிற்கு போயிருந்தீர்களாமே?
அண்ணாவின் பதில்:
நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவரும் இல்லை. அவள் ஒன்றும் படி தாண்டா பத்தினியும் இல்லை
//
இதை பற்றி விளக்கம் கேட்கிறார் ஒரு ஆனானி ஆம் தன் பெயரை கூட இவர் காட்டிகொள்ள மாட்டார்!!
அப்படி ஒரு விசயம் நடந்ததா இல்லயை என்பது வேறு
ஆனால் அவர் சொன்ன பதில்தான்
இன்றுவரை விமர்சிக்கபடுகின்றன
அதாவது அண்ணா அவர்கள் அதை உங்ளிடமே விட்டுவிடுகிறேன் என்று சொல்வதாகபடுகிறது.
எதை இவர்கள் தவறு என்று நினைத்து கேட்கிறார்களோ
அதை அவர் செய்ததாக அவர் சொல்லலவில்லை.
மேலும் அதை செய்வதாயினும் தவறுயில்லை எனபதையும் சொல்லுகிறார்.
இவரை கேள்வி கேட்கும் இவர்கள்
ஏன் பல பெண்களுடன் சுகம் கொள்ளும்
கிருசுணனை ஏன் கேள்வி கேட்பதில்லை?
ஏன் இன்னமும் மக்கள் கிருசுணனை கடவுகளாக வணங்க வேண்டும்,
ஒரு பக்தையுடன் கடவுள் உடல் உறவு கொள்கிறார்
என்றால் என்ன மாதிரியான கடவுகாக இருக்க முடியும்,
முதலில் அதை திருத்துங்கள் அப்பறம் மனிதர்களை திருத்தலாம்.
அப்பறம் ஐந்துபேருடன் குடும்பம் நடத்தும்
பாஞ்சாலி பத்தினியாம் என்ன கொடுமைடா.
இராமர் கடவுளாம் ஆனால்
மனைவின் கற்பில் சந்தேகப்பட்டு தீ குளிக்க சொல்லுகிறான் என்ன ஒரு வேடிக்கை
முதல்ல கடவுளுக்கு விடையை காணுங்க அப்பறமா மனிதர்களை பார்ப்போம்.