7 செப்டம்பர், 2011

2ஜி – அரசுக்கு 7000 கோடி லாபம்!

கடந்த ஆண்டு நாம் ‘ஸ்பெக்ட்ரம்’ குறித்து எழுதியிருந்தபோது, நீதிவான்கள் பலரும் கய்யோமுய்யோவென்று கத்தினார்கள். ஸ்பெக்ட்ரம் ஊழலில் இருந்து உனக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்றெல்லாம் குதித்தார்கள். இந்திய ராணுவத்திடம் சும்மா ஒப்புக்கு இருந்த அலைவரிசையை பெற்று, நிறுவனங்களுக்கு விற்றதின் மூலமாக அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தார் அ.ராசா என்பது நம்முடைய அப்போதைய வாதமாக இருந்தது.

2008ஆம் ஆண்டு 122 விண்ணப்பதாரர்களுக்கு 22 வட்டங்களில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது அரசுக்கு கிடைத்த வருவாய் 12,386 கோடிகள். சி.ஏ.ஜி. அறிக்கையோ இந்த ஒதுக்கீட்டை ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடிகளுக்கு விற்றிருக்க முடியும் என்று ஒரு கற்பனைத் தொகையை குன்ஸாக அடித்துவிட்டது. மத்திய அமைச்சர் கபில்சிபல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏதுமில்லை என்று அப்போதிலிருந்தே கரடியாக கத்தி வருகிறார். மாறாக பி.ஜே.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சி.ஏ.ஜி. அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்கு நெருக்கடி தர அ.ராசா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பின்னர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, இன்றுவரை திகார் சிறையில் இருக்கிறார்.

நீதிமன்றத்தில் அரசின் கொள்கை முடிவையே தான் அமல்படுத்தியதாக தொடர்ச்சியாக அ.ராசா வாதிட்டு வருகிறார். இந்த கொள்கை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல, முந்தைய பா.ஜ.க. ஆட்சிக்காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டதுதான் என்பதை போதிய தரவுகளோடு வாதிடுகிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சமர்ப்பித்த குற்றப்பத்திரிகையில் ‘உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம்’ பாணியில் 30,000 கோடி ரூபாய் அரசுக்கு இந்த ஒதுக்கீட்டால் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கு முன்பாக TRAI-யிடம் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று எல்லா கோணங்களிலும் ஆராய்ந்து சொல்லும்படி கேட்டிருந்தது. TRAI இழப்புத் தொகையை சொல்வதற்கு முன்பாகவே அவசர அவசரமாக குற்றப்பத்திரிகையில் பெரும் தொகையை சி.பி.ஐ. குறிப்பிட்டிருக்கிறது.

இப்போது TRAI பலவகைகளில் இந்த ஒதுக்கீட்டை ஆராய்ந்து விற்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலையின் விலையை ரூ.5,500 கோடியிலிருந்து, ரூ.9,500 கோடியாக வரையறுத்து சொல்லியிருக்கிறது. இதன் அடிப்படையில் பார்க்கப் போனால் அ.ராசாவால் அரசுக்கு ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.7,000 கோடி வரை லாபம் என்று தெரிகிறது. மேலும் ஏலமுறையில் விற்பனை செய்ய பரிந்துரை எதையும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகத்துக்கு செய்யவில்லை என்பதையும் TRAI தெளிவுபடுத்தியிருக்கிறது.

ராசா குற்றவாளியல்ல, மிகத் திறமையாக, சாதுர்யமாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு விற்பனையில் நடந்துகொண்ட அமைச்சர், இந்த ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாயை ஏற்படுத்தித் தந்தவர் என்பதை TRAI மூலமாக இப்போது கொஞ்சம் தாமதமாகவே அறிந்துகொள்ள முடிவது வேதனையானது.

எந்த தொழில்நுட்ப அறிவுமின்றி தயாரிக்கப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கை வந்தவுடனேயே ஒண்ணே முக்கா லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று வானுக்கும், பூமிக்குமாக எகிறிக் குதித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது வாய் உள்ளிட்ட ஒன்பது ஓட்டைகளையும் அடைத்துக்கொண்டு அமைதிகாத்து வருவது வெட்கக்கேடானது. நிமிடத்துக்கு நாலு ஃப்ளாஷ் நியூஸ் ஓட்டிக்கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது காத்துவருவது அப்பட்டமான, அயோக்கியத்தன மவுனம்.

செய்யாத குற்றத்துக்காக ஒரு திறமையான அமைச்சர் அரசியல்வாதிகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் என்று பலதரப்பின் நெருக்கடிக்கு பலிகடா ஆக்கப்பட்டிருப்பது, அவர் பிறந்த சாதியினாலோ என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. இங்கே ஜனநாயகம் வாழுகிறது என்று சொன்னால், நம்புபவன் இரு காதுகளிலும் சாமந்திப்பூ வைத்தவனாக இருக்க வேண்டும். தன்னை நிரூபித்து விரைவில் தகத்தாய தங்கமாக, சிங்கமாக தமிழ் மண்ணுக்கு வருகை தரவிருக்கும் வருங்கால மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அ.ராசாவுக்கு முன்கூட்டிய வாழ்த்துகள்!

தர்மம், தாமதமானாலும் வெல்லும்!

54 கருத்துகள்:

  1. may be you are right in a way. but i think u should also accept and speak the fact that rasa & co has earned some money from it..

    பதிலளிநீக்கு
  2. அநியாயத்தை எதிர்ப்பவன்7:34 PM, செப்டம்பர் 07, 2011

    tears in my eyes

    பதிலளிநீக்கு
  3. இன்னுமா இந்த உலகம் நம்மள நம்பிகிட்டிருக்கு !

    பதிலளிநீக்கு
  4. முதல் முறையாக படிப்பதால் சரியாக புரியவில்லை... அப்பனா, ராசா எந்த தவற்ம் செய்யவில்லை என்பது தான் உண்மையா?... மேலும் வலுவானா ஆதாரம் இருந்தால் பின்சேர்க்கவும்...

    பதிலளிநீக்கு
  5. Interesting. If time permits, please post the details how Swan Telecom can able sell a portion of their allocation for such an enormous amount and able to post 200%-300% profit.

    பதிலளிநீக்கு
  6. கண்ண தொறந்திட்டிங்க சாமி... நான்கூட தப்பா நினைச்சிட்டேன்... பகிர்வுக்கு நன்றி அண்ணே! :))

    பதிலளிநீக்கு
  7. இந்த கட்டுரையை எழுதியது யுவகிருஷ்ணாவா இல்லை கலைஞரா ? ஏனெனில் தப்பு செய்துட்டு எல்லாவற்றையும் சொல்லி தப்பிக்க முடியலன்னா கடைசில சாதியவோ/மதத்தையோ சொல்லி தப்பிக்க நினைப்பது தான் அவரோட புத்தி . தவறு செய்தவனெல்லாம் நான் இந்த சாதி , இந்த மதம் என்பதனால் தான் என் மீது பழி போடுகிறார்கள் என்று சொல்ல ஆரம்பித்தால் என்ன செய்வது ? . இவ்வளவு விசயங்கள் உங்களுக்கே தெரிந்திருக்கே ,அவருக்காக வாதாடுன வக்கீலுக்கு இது தெரியாதா ? . இது உண்மைன்னா அவரை கோர்ட்டே விடுதலை பண்ணியிருக்குமே . அவரு வெவரமா செயல்பட்டு லாபம் ஈட்டி கொடுத்தார்னு சொல்றீங்களே அப்ப ஏன் அவ்வளவு வெவரமான மனுஷன் இந்த மாதிரி ஒரு ஊழல் குற்றத்துல சிக்குனாரு .ஊழல் குற்றம் அவர் மீது சொல்லபட்ட பிறகு சுமார் 1 வருடம் அந்த பதவில இருந்தாரே அப்போதே அவர் நல்லவர்னு நிரூபிக்க வேண்டியது தானே . குற்றம் செய்யலனு சொல்லிட்டே இருந்துட்டு பிறகு ஏன் ராஜினாமா செய்யனும் . கடைசியா ஒன்னு அவர் ஜாதி ஆழுங்க எல்லாரையுமா ஊழல்வாதிங்கன்னு சொல்லி உள்ள வைச்சாங்க . சொல்றதுக்கு காரணம் இல்லைனா உடனே ஜாதிய இழுக்க வேண்டியது அந்த கேடுகெட்ட அரசியல்வாதிங்கதான்னா. நீங்களுமா?? ( இந்த கருத்து இங்கு இடம்பெற அனுமதிப்பீங்கனு நம்புறேன் )

    பதிலளிநீக்கு
  8. how come then 3g was selled at high cost and 2g at very low costhow come then 3g was selled at high cost and 2g at very low cost

    பதிலளிநீக்கு
  9. நீர் ஒரு கடைந்தெடுத்த திராவிட முட்டாள்தான் என்பதை மறுபடி மறுபடி நிரூபிக்கிறீர்! இதைத்தான் அவாக்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  10. யுவகிருஷ்ணா அண்ணாவா இதை எழுதியது... நம்பமுடியவில்லை. உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பேன் ஆனால் அதிகம் கருத்து போட்டது இல்லை.ஹும்...... உங்கள் மேல் இருந்த மதிப்பு கொஞ்சம் ஏன் அதிகமே ஆட்டம் காணுது பாஸ். வாழ்க உங்கள் முகா பாசம்.

    பதிலளிநீக்கு
  11. நம்பும்படியாக இல்லை ... இன்னும் இதற்கு வலு சேர்க்கும் விதத்தில் மேலும் தகவல்களை தந்தால் நன்றாக இருக்கும்....

    பதிலளிநீக்கு
  12. Really...i regret recommending you to my friends ! sorry your profile is way too low to support a scum like Raza...hmmmm

    பதிலளிநீக்கு
  13. //how come then 3g was selled at high cost and 2g at very low costhow come then 3g was selled at high cost and 2g at very low cost///

    ரெண்டு வெரல நீட்டுங்க. அப்புறம் மூனு வெரல நீட்டுங்க. எது பெரிசு ?

    பதிலளிநீக்கு
  14. dei yuvakrishna ..A.Raja onnoda jaathikkarangirathala avanukku support panriya.?

    பதிலளிநீக்கு
  15. ராசா எந்த ஊழலும் செய்யவில்லை என்றால் சாதிக் ஏன் தற்கொலை செய்யவேண்டும்.உங்களிடம் எழுத்து திறமை உள்ளது அதனை வீனடிக்காமல்,ராம்சேரி இட்லி பற்றியும்,ஆரம்ப பள்ளியின் சாதனை பற்றியும் எழுதவும்

    பதிலளிநீக்கு
  16. //how come then 3g was selled at high cost and 2g at very low costhow come then 3g was selled at high cost and 2g at very low cost//

    Are you asking this question with any sense?

    As per your statement above 3G was sold at high cost - because it is 3G (with more advanced technology with voice, data & video etc...)

    2G can be used only for voice communications and it is out of date when Raja sold it. 3G has more advanced technology with voice, video and data (internet).

    பதிலளிநீக்கு
  17. அய்யா லாபம் வந்தது என்னவோ உண்மை தான். அது பற்றி இரு வேறு கருத்து இல்லை, ஆனால் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று முடிவு எடுத்து க்யூவில் யார் நிற்கிறார்களோ அவர்களுக்கு தான் புளியோதரையும், பொங்கலும் என்று எந்த ஒருவிதமான அலுவலக நடைமுறைகளையும் பின்பற்றாமல் தோராயமான கணக்குபடி ரூ. 1,76,000/- ஆட்டையை போட்டு விட்டதற்காக தான் உள்ளே இருக்கிறார் , இந்த லாபம் முறையாக டெண்டர் விட்டு யார் எடுத்திருந்தாலும் வந்திருக்கும் என்பதையும் உணரவும் தலைவா
    நட்புடன்
    ராகவேந்திரன்,தம்மம்பட்டி

    பதிலளிநீக்கு
  18. கேட்குறவன் கேனபயலா இருந்தா கேப்பையில நெய் வடியுதுன்னு சொல்லுவாங்களாம். யுவா , உங்க வசதிக்கு பல விசயங்களை மறைச்சிட்டு எழுதுனா ராசா ஊழல் செய்யலேன்னு எல்லோரும் நம்பனும். ஊரறிய பண்ணின அப்பட்டமான ஊழல். ஐந்தாவது படிக்கிற சின்ன பையன் கணக்கு போட்டாலும் ஊழல் இல்லேன்னு சொல்ல முடியாது. நீங்க வேற நல்ல விசயங்களை எழுத முயற்சி பண்ணுங்க.

    பதிலளிநீக்கு
  19. தோழர்களே!

    தரவுகளின் அடிப்படையில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன். உங்களிடம் இதற்கு எதிர்வினை இருந்தால் - முடிந்தால் - பதிவு செய்யுங்கள். அதைவிட்டு விட்டு வெறுமனே ஜல்லியடிப்பது உங்களது அறிவுப்போதாமையையே பறைசாற்றுகிறது :-)

    பதிலளிநீக்கு
  20. தலைவனக்கு ஏற்ற தொண்டன். நீங்களும் அமைச்சரானால் கொள்ளை அடிப்பீர்கள் என்று தெரிகிறது.
    கருணாநிதியின் ஆளுமையை பார்த்து முதன் முறையாக பயப்படுகிறேன்.
    வாழக திராவிட இயக்கம்.

    பதிலளிநீக்கு
  21. உ . சரவணன் அவர்கள் சொன்னதையே நானும் சொல்றேன்

    பதிலளிநீக்கு
  22. யுவகிருஷ்ணா we didnt expect this from you. This shows ur love towards ur party, but you have betrayed ur followers by giving such false/hidden info's.

    பதிலளிநீக்கு
  23. "ராஜீவ் காந்தி இருந்திருந்தால் மூன்று தூக்கு தண்டனை கைதிகளையும் காப்பாற்றி இருப்பார்", என்று முக சொன்னாரே, அதற்கும் இந்த பதிவிற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா?

    பதிலளிநீக்கு
  24. நீங்கள் சொல்லுவது உண்மைதான் , அரசுக்கு 7,000 கோடி லாபம்தான் , ஆனால் ஊழல் எதுவும் பண்ணாமல் சரியான முறையில் விற்று இருந்தால் அரசுக்கு ஒரு லட்சம் கோடி லாபம் வந்திருக்கும் , அதை எல்லாம் ராசா & கோ ஏப்பம் விட்டதுக்குதான் இப்ப திகார்ல விட்டு ரிவீட் அடிக்கிறாணுக ...

    பதிலளிநீக்கு
  25. எதிர்வினை எப்படி இருந்தாலும் அதற்கு உங்கள் பதில் இதுதானே..

    \\தோழர்களே!

    பின்னூட்டங்களில் வந்திருக்கும் பல எதிர்வினைகள் ரொம்ப ரொம்ப சப்பையாக இருக்கிறது. திரும்ப திரும்ப பேசியதையே பேச வேண்டுமா என்று அலுப்பாகவும் இருக்கிறது.\\

    ஏன் லேட்டா வந்த.... ஆமா சார் லேட்டாயிடுச்சு.... டைப் பதில்தான் கூறுவீர்கள்.
    \\செய்யாத குற்றத்துக்காக ஒரு திறமையான அமைச்சர்..\\
    ஆமாமா... பின்ன தானைத்தலைவர் வழிவந்தவரல்லவா... அதான் ‘திறமையா’ கொள்ளை அடிச்சிருக்கார்..
    முதலில் நீங்கள் அந்த பதிவுக்கு வந்த
    எதிர்வினைகளுக்கு பதில் சொல்லிவிட்டு பின் இங்கு வாருங்கள்..

    பதிலளிநீக்கு
  26. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/telecom/2g-loss-government-gained-over-rs-3000-crore-trai/articleshow/9891650.cms

    பதிலளிநீக்கு
  27. Mr. Yuva, ungalukku politics sari varala....neenga pesaama "Anil", "Pura", fiction, lottu losukkunnu short story-yae try pannunga...........

    பதிலளிநீக்கு
  28. "திமுகவுக்கு வாய்த்த தொண்டர்கள் மிகவும் திறமைசாலிகள்"

    பதிலளிநீக்கு
  29. யுவா, உங்களுடைய சமூக அக்கரையுள்ள கட்டுரைகளுக்கு மட்டும் எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  30. யுவா,
    உங்க பரம்பரையே மு.க.பக்தர்கள் என்று நீங்களே சொன்ன பின்பு நீங்கள் எழுதுவதை எப்படி நம்புவது?இந்த கட்டுரைக்கு ஆதாரம் என்ன என்று லின்க் கொடுங்கள் முதலில்.எனக்கு தெரிந்து எந்த மீடியாவிலும் இந்த செய்தியே வரவில்லை!

    பதிலளிநீக்கு
  31. நல்ல செய்தி தமிழன் தலை நிமிர்ந்து நின்றால் சரி .

    பதிலளிநீக்கு
  32. ‎2G loss? Government gained over Rs 3,000 crore: TRAI

    2G லைசென்ஸ் வழகியத்தில் எந்த இழப்பும் இல்லை, மாறாக அரசுக்கு சுமார் 7000 கோடி லாபம் கிடைத்துள்ளது

    2G லைசென்ஸ் வழகுவதில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று டெலிகாம் துறையில் அடிப்படை புரிதல் இல்லாத ஆடிட்டர் தயாரித்த அறிக்கையை நம்பிய படித்த அறிவு ஜீவிகள் இப்போது, அந்த துறையில் நிபுணத்துவமும், அறிவும் பெற்ற வல்லுநர் குழுவை கொண்டு TRAI அளித்துள்ள அறிக...்கையை குறித்து ஒரு பேச்சையும் காணோம்..

    TRAI அறிக்கை படி, 2G லைசென்ஸ் வழகியத்தில் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை, மாறாக உபயோகபடுத்தாமல் இருந்த 2G அலைகற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு சுமார் 7000 கோடி லாபம் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது...அவற்றை ஏல முறையில் விற்பனைசெய்யவும் எந்த பரிதுரையையும் செய்யவில்லை என்று TRAI தெரிவித்துள்ளது.

    அவர்களுக்கு பிடிக்காதவர்கள் குறித்து எந்த செய்திவந்தாலும் ஆதாரம் இல்லை என்றாலும், பொய் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபடும் அவாள் ஊடகங்கள்,அவற்றை உண்மைத்தன்மையை ஆராயாமல் அப்படியே நம்பும் மக்கள் கூட்டமும் ,இந்த முக்கியமான செய்தியை குறித்து ஒரு மூச்சையும் விடகாணோம்...

    எப்படி விடுவார்கள், ஊடகங்களும், சிலரும் சேர்த்து ஊதி ஊதி பெரிதாக்கிய 2G பலூன், வெகு சீகிரமாக ஒன்றுமில்லாமல் ஆகபோகிறது...ஆனால் இதற்கும் இந்த கும்பல் எதாவது ஒரு சப்பை கட்டு கட்டுவார்கள்.

    இவர்கள் ஆதாரம் இல்லாமல் ஒரு குற்றசாட்டை கூறுவார்களாம். சிபிஐயும்,கோர்ட்டும்,இல்லாத ஆதாரத்தை கொண்டு தண்டனையை கொடுக்கவேண்டும் என்று கூச்சல் இடுவார்கள்...

    பொய் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவாள் ஊடகங்கள், இப்போது கள்ள மவுனம் சாதிப்பது ஏன் ?

    இப்படி இல்லாததை எல்லாம் நடந்ததாக சொல்லி மக்களை ஏமாற்றி அதிகாரத்தை கைப்பற்றுவதை பார்க்கும்போது, பண்டையகாலத்தில் அரசர்களுக்கு எதையோ .........கொடுத்து அதிகாரத்தை "சிலர்" கைப்பற்றியதாக கூறபடுவது போல உள்ளது.

    http://economictimes.indiatimes.com/news/news-by-industry/telecom/2g-loss-government-gained-over-rs-3000-crore-trai/articleshow/9891650.cms

    பதிலளிநீக்கு
  33. உங்கள் கட்டுரையில் எழுதப்பட்டவை சரியென்றே கணிக்கிறேன். காரணங்கள்: 1) முதலில் கணக்கிட்ட மத்திய கணக்காயத்திலிருந்து, இப்பொழுது கணக்கிட்டிருக்கும் அமைப்பு வரை நஷ்டமாகச்சொல்லப்பட்டிருப்பதோ, லாபமாகச்சொல்லப்பட்டிருப்பதோ கணிப்புதானன்றி நிச்சயமாகக் கணக்கிடக்கூடியதல்ல.குற்றம் சொல்வது எளிது. நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படவேண்டும். அதற்குமுன் ராஜாவை குற்றவாளியென்றே முடிவு செய்வது முறையல்ல. பிகு: நான் திமுக, அதிமுக இரண்டையும் பிடிக்காதவன்.

    பதிலளிநீக்கு
  34. நிமிடத்துக்கு நாலு ஃப்ளாஷ் நியூஸ் ஓட்டிக்கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது காத்துவருவது அப்பட்டமான, அயோக்கியத்தன மவுனம். வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  35. அண்ணே. இந்த கட்டுரைய அப்படியே ஒரு கல்வெட்டா செதுக்கி, நம்ம அறிவாலயம் வாசலில் வைத்து விட்டீர்கள் என்றால், உங்களுக்கு பின் வரும் திமுக தொண்டர்கள் அதை படித்து தெளிவடைவார்கள்.

    பதிலளிநீக்கு
  36. Do not worry about what people write in the name of response. You continue to write what you think is right.

    பதிலளிநீக்கு
  37. உங்கள் கருத்தில் நான் உடன் படுகிறேன் யு கி.

    இதுவே இவர் "உயர்சாதி இந்துவாக" இருந்து இருந்தால் அவரை கைது செய்து இருப்பார்களா?

    நல்லப் படியாக அவர் வெளியே வரவேண்டும்.

    நன்றி
    மயிலாடுதுறை சிவா...

    பதிலளிநீக்கு
  38. இதில் காமடி என்னன்னா மொத்தமா கொள்ளை அடிச்சவனுங்க சுதந்திரமா காத்து வாங்கிகிட்டு இருக்காங்க, ஆனா பதிவர்களின் பார்வையும் ஊடகங்கல்ன் பார்வையும் புறங் கைய நக்கினவன பாத்துகிட்டு இருக்குது என்பது தான்..

    http://reverienreality.blogspot.com/2011/05/2-g-spectrum-where-does-buck-stop.html

    பதிலளிநீக்கு
  39. உண்மையை சொன்னால் நம்புமா உந்த உலகம்?
    காலம் பதிலை சொல்லத்தான் போகிறது .
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  40. அய்யா என் கேள்விக்கு பதிலே காணோமே?
    1.ஏன் சாதிக் பாஷா கொல்லப்பட்டார்?
    ௨.ஏன் கனிமொழி ராசாவை மந்திரியாக்க போனில் பேரம் பேசினார்?
    ௩.இது ட்ராய் கொடுத்த பதில் அதாவது 3000-7000 கோடி.நீங்க அதிகபட்ச மதிப்பை போட்டு திமுக அல்லகைன்னு காட்டுஈங்க!!
    ௪.ட்ராய் அமைப்பே மத்திய அரசின் எடுபிடி!!அதை மறந்துடாதீங்க!!

    பதிலளிநீக்கு
  41. அறிவுப்போதாமை?எழுதியது அறிவுப்பபேதமை?

    பதிலளிநீக்கு
  42. உண்மை தெரியாமல் நான் பொறம்போக்கு மாதிரி நடந்து கொண்டேன். ராஜாவின் காலை கழுவி ஊற்றி குடித்தால் கூட என் பாவம் தொலையாது. நானே என் செருப்பை கழற்றி என்னை ஆயிரம் முறை அடித்துக் கொள்கிறேன். எல்லா வலைப்பூவிலும் ஆபாச கமெண்டு போட்ட பாவத்துக்கு வலைப்பதிவர்கள் காலில் விழுந்து வணங்குகிறேன். பீ மிதித்த செருப்பால் அடித்து என்னை மன்னித்து விடுங்கள்.

    பதிலளிநீக்கு
  43. திறமையாக எழுதுறீங்க. ஆனால், ஒரு நியாயமான ஒதுக்கீடுக்கு, முந்தய ஆட்சி காலத்தில் இருந்த நடைமுறையை பின்பற்றி மட்டுமே செய்த கடமைக்கு, எதுக்கு சார் கோடி கணக்குல லஞ்சம்? கலைஞர் டிவி-க்கு 200 கோடி வந்தது கூட போன ஆட்சியாளர்கள் வாங்கியதோட தொடர்ச்சிதான் என்று வாதாடுவீங்களா? எல்லா இடத்திலும் லஞ்சம் பரவி இருக்குறப்ப ஒரு சிலரை பழித்து/குற்றம் சுமத்தி/தண்டிப்பது தவறுன்னு சொல்ல வரிங்களா?

    பதிலளிநீக்கு
  44. திருச்சிக்காரன்9:01 PM, செப்டம்பர் 09, 2011

    லக்கி... சரியான கருத்து...

    நீதி மன்றம் ஏன் இன்னும் ராஜாவை விடுதலை செய்யவில்லை என்று கேட்கிறார்கள். ராஜா விசாரணைக் கைதியாகத்தான் தற்போது ஜெயிலில் உள்ளார். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து முடித்த மறுகணம் அவர் ஜாமீனில் வந்து விடுவார். வரலாற்றில் இல்லாத வகையில் மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யும் ஒரே வழக்கு இதுவாகத்தானிருக்கும். இது பொருளாதரக் குற்றம். ஜாமீன் மறுக்கவே முடியாது. விசாரணையைக் காரணம் காட்டித்தான் இத்தனை நாள் உள்ளே வைத்திருக்கிறார்கள்.

    1,76,000 கோடி என்று சொன்னார்களே, சிபிஐ 30,000 கோடி இருக்கலாம் என்று சொல்கிறதே, ஆனால், 9000 கோடி வரை அரசுக்கு நிச்சயமாக இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லியிருக்கிறது. அப்படியானால், 1,69,000 கோடி எங்கே என்று சிஏஜியைக் கோர்ட்டில் ஏற்ற வேண்டியது தானே? அதைச் செய்யாமலிருக்கிறார்கள்.

    9000 கோடி இழப்பு எப்படி ஏற்பட்டிருக்கிறது என்று சிபிஐ கணக்கிட்டிருக்கிறதென்றால், ஸ்வான் டெலிகாம் மற்றும் எடிசாலட் வரவுசெலவுகளில் பங்குகளை விற்ற வகையில் அவர்கள் சம்பாதித்தது, அது அரசுக்குத் தானே வந்திருக்க வேண்டும் என்பது அவர்கள் கணக்கு.

    உதாரணமாக, ரிலையன்ஸ் பங்கு ஒன்றை வெளியீட்டின் போது 10 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். 3 மாதம் கழித்து, அது சந்தையில் 1500 ரூபாய்க்கு விற்று நீங்கள் ஒரு பங்குக்கு 1490 ரூபாய் சம்பாதித்தால் அது அப்படி ரிலையன்ஸிற்கு இழப்பாக முடியும். அது மாதிரிதான் இதுவும்.

    இது கோர்ட்டில் நிற்காது... நிச்சயம் நிற்காது.

    பதிலளிநீக்கு
  45. limit your words for idli, vada, kesari , uppuma. Do not try these

    பதிலளிநீக்கு
  46. அய்யா
    technical வகையில் முறைகேடு செய்யும் வல்லமை படைத்தவர்கள் , பகவதி படத்தில் வரும் வடிவேலு காமெடி போலே
    `இது உங்கள் சொத்து `--- நான் படிச்சா இது உங்களோட சொத்து ஆயிடும் , நீங்க படிச்சா இது என்னோட சொத்து ஆயிடும்.,
    பிரபல வக்கீல் ராம் ஜெத் மலானி , கனிமொழிக்கு வாதிடும் போது கூட , எல்லா தப்புகளுக்கும் காரணம் ராசா தான்,- கனிமொழி மீது எந்த தப்பும் இல்லை என்று தான் வாதாடினார்.
    கலைஞர் டிவி ,க்கு பணம் வாங்கியது , அதை உடனே திருப்பி கொடுத்து விட்டோம் என்றது , யாரிடம் திருப்பி கொடுத்தார்கள் அதற்க்கான ஆவணங்கள் எதுவுமே இல்லாதது.
    2g பற்றி நன்கு தெரிந்து நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாவற்றிலும் மண்ணாசை , பொன்னாசை , மிகுந்து நாட்டுக்கு செய்த துரோகம் ஆகும்.
    என்னை போன்ற சாதாரண மனிதர்களுக்கே இவர்களுடைய பணம் பாராளுமன்ற தேர்தலில் எப்படி பாய்ந்தது என்று தெரியும் போது , பத்திரிக்கை , அரசியல் சம்பந்த பட்டவர்களுக்கு தெரியாமல் இருக்குமா, வெளியே என்றாவது தெரியாமல் போகுமா?

    சிறிதும் தவறு செய்யாத ஒரு மத்திய மந்திரியை , நீதி மன்றம் இத்தனை நாள் காவலில் வைக்க முடியுமா?
    சற்றே சிந்தியுங்கள் - அதுவும் பெரிய அதிகாரத்தில் அந்த கட்சி தலைவர் இருக்கும் போது ?

    ஆயிரம் அண்ணா ஹசாரே வந்தாலும், மெத்த படித்தவர்களை திருத்துவது கடினம் ,
    இந்த பதிவு , நிறைய கமெண்ட்ஸ் வரும் என்பதற்காக போடப்பட்டதாகவே உணர்கிறேன்,

    பதிலளிநீக்கு
  47. இதுவரை நான் மாமா வேலை பார்த்து வந்தேன். இனிமேல் திருந்தி வாழ நினைக்கிறேன். நான் நல்லபடியாக வாழ வலைப்பதிவர்களிடம் மடிப்பிச்சை ஏந்துகிறேன். எனக்காக நிதி திரட்டி எனக்கு ஒரு கவுரவமான தொழில் உருவாக்கித்தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  48. இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல

    - அப்போ ஏன்டா 2Gல 1.76 லட்சம் கோடி இழப்புன்னு வாய் கூசாம பொய் சொன்னிங்க...

    "Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG

    நேற்று வெளியான கிருஷ்ணா கோதாவரி பெட்ரோலிய ஒதுக்கீடு, ஏர் இண்டியாவிற்கு விமானம் வாங்கியது போன்றவற்றிற்கான CAG ஆடிட்டர் அறிக்கைகளில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி, எந்தவிதமான இழப்பு தொகையையும் குறிபிடப்படவில்லை. ஏன் அவ்வாறு அரசாங்கத்திற்கான இழப்பு தொகையை கணக்கிட்டு குறிப்பிடபடவில்லை என்று CAGயை கேட்டதற்கு,இழப்பை கணக்கிடுவது சிஏஜியின் (CAG) வேலையல்ல,அது தணிக்கைகாண வரைமுறைக்குள் வராது (ஆடிட் ஸ்கோப்) என்று CAG தலைமை ஆடிட்டர் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்த அறிக்கைகளை CAG வெளியிடும்போது எந்தவிதமான டிவி கேமேரக்களோ, நேரடி ஒளிபரப்பையோ CAG செய்யவில்லை.

    ஆனால், 2G குறித்த CAG அறிக்கையில்,அதில் எந்தவிதமான தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் இதே CAG 1.76 லட்சம் கோடி இழப்பு என்று எந்த அடிப்படையில் (ஆடிட் ஸ்கோப்) அறிவித்தது ?...மேலும் 2G குறித்த அறிக்கையை டிவி கேமேரகளுடன் நேரடி ஒளிபரப்பையும் செய்தது. இந்த ஆதாரம் அற்ற CAG அறிக்கையை அடிப்படையாக கொண்டுதான், ஏதோ திமுக 1.76 லட்சம் கோடி கொளையடிது விட்டதுபோல, குறிபிட்ட பிரிவினரின் மீடியாக்கள் தொடர் பொய் பிரச்சாரம் செய்தன,இதை நம் மக்கள் நம்பும் மாதிரி தொடர் பிரச்சாரம் செய்யப்பட்டது.

    இவற்றை பார்க்கும்போது, இது ஏதோ ஒரு பெரிய சதி திட்டத்தின் ஒரு பகுதியாக சிஏஜி 2G விஷயத்தில் வரம்பை மீறி செயல்பட்டிருப்பது தெரிகிறது. அந்த சதித்திட்டம் 15 வருடங்களுக்கு மேலாக மத்தியில் திமுக ஒரு முக்கிய கட்சியாக இருப்பதை பொறுகாமலா அல்லது செல்போன் கட்டணங்களை குறைத்து, செல்போன் தொழிலில் ஒரு தரப்பின் ஆதிக்கத்தை கட்டுபடுத்தி அணைத்து தரப்பினரும் பயன்பெறும்வண்ணம் செய்ததை பொறுகாமலா என்று தெரியவில்லை. இன்னும்கூட சிலர் இதை புரிந்துகொளாமல் இருகின்றனர்.


    CAG officials justified the absence of a specific figure on estimate of losses, especially in the KG Basin contract, saying they were beyond the audit norms. "Estimating loss was not within the scope of our audit," Rekha Gupta, Deputy CAG, said.

    There were no TV cameras and live telecast as the CAG briefed media about three audit reports tabled in Parliament -- the audit of oil exploration contracts, especially of KG Basin given to Reliance Industries, the aircraft purchase for Air India/Indian Airlines and their integration

    http://timesofindia.indiatimes.com/india/Has-CAG-given-up-its-tough-posture/articleshow/9928525.cms

    பதிலளிநீக்கு
  49. hai blog super sir.

    enna ungalukku enn intha polappu.

    ippadi oru article eluthunakku murungai marathu uchanik kompula thooku pottu savalam.

    ungalukkum potti vanthurucha???

    appadina innum eluthunga eluthikitta irunga. valka pananayakam

    பதிலளிநீக்கு