5 செப்டம்பர், 2011

நம்புங்கள், இது அரசு ஆரம்பப் பள்ளி!

தலைமை ஆசிரியரின் நீண்ட கல்வித்துறை அனுபவமும், துணை ஆசிரியரின் இளமைத் துடிப்பான செயல்வேகமும்இணைந்து, தமிழகத்தின் குக்கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியை சர்வதேச தரத்துக்கு உயர்த்தியிருக்கிறது!

கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் இருக்கிறது காரமடை. அங்கிருந்து சிறுமுகை செல்லும் பாதையில் ஐந்து கிலோ மீட்டர் பயணித்தால் வரும் குக்கிராமம் இராமம்பாளையம். 900 பேர் வசிக்கும் இக்கிராமம் ஜடையம்பாளையம் பஞ்சாயத்தின் கீழ் வருகிறது. கோவையிலிருந்து 38 கிலோ மீட்டர் தூரம்.

இங்கிருக்கும் ஆரம்பப் பள்ளி 1930ல் அரசு நலப்பள்ளியாக தொடங்கப்பட்டது. வைரவிழா கண்ட இப்பள்ளிக்கு சில ஆண்டுகளாக முன்பாக ஒரு பெரிய சோதனை. கிராம மக்கள் பலரும் இப்பள்ளியை புறக்கணித்து, தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க ஆரம்பித்தார்கள்.

தற்போது ஈராசிரியர் பள்ளியாகச் செயல்படும் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் என்.சரஸ்வதி. உதவி ஆசிரியர் டி.பிராங்க்ளின். பொருளாதார ரீதியாக ஏழைகளாக இருந்தாலும் வீம்பாக அரசுப்பள்ளியை புறக்கணித்து, தனியார் பள்ளியை நாடி மக்கள் செல்வதை இவர்கள் கவலையோடு பார்த்தார்கள்.

பெரிய மாற்றம் ஒன்று ஏற்படாவிட்டால், வைரவிழா கண்ட பள்ளியின் நிலை கவலைக்கிடமாகி விடும். அரசுச் சொத்துகளை அன்னியமாக பார்க்கும் மனோபாவம் அவ்வூர் மக்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்குமே இருக்கிறது. இப்பள்ளி தங்களுடைய சொத்து, இதை பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறையை மக்களுக்குள் விதைக்க வேண்டும்.

என்ன செய்யலாம்?

ஆசிரியர் பணி என்பது வெறுமனே போதித்தல் மட்டும்தானா என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழுந்தது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலரும், தங்கள் பணி தாண்டி நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரமாக இருக்கிறார்கள். அரசின் கீழ் பணிபுரியும் நாம், இந்தப் பள்ளியை மேன்மையான நிலைக்கு கொண்டு வந்தால் என்ன?

56 வயதாகும் தலைமையாசிரியர் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெறப்போகிறார். துணை ஆசிரியரோ 35 வயது இளைஞர். தலைமுறை இடைவெளி இவர்களை விலக்கிடவில்லை. மாறாக தலைமை ஆசிரியரின் நீண்டகால கல்வி அனுபவமும், உதவி ஆசிரியரின் சாதிக்க வேண்டும் என்கிற லட்சிய வெறியும் இன்று இராமம்பாளையம் பள்ளியை சர்வதேசத் தரம் கொண்ட பள்ளியாக உயர்த்தியிருக்கிறது. ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை இயங்கும் இராமப்பாளையம் ஊராட்சி ஒன்றிட்யத் தொடக்கப் பள்ளியில் தற்போது 34 குழந்தைகள் படிக்கிறார்கள்.

“நகர்ப்புற பள்ளிகளைக் காட்டிலும் தரமான கல்வியை, கட்டமைப்பை கிராமப்புற மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. நாங்கள் பணிபுரியும் இந்தப் பள்ளியையையே முன்மாதிரிப் பள்ளியாக உருவாக்கிவிட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருவரும் ஆலோசித்தோம். அதுதான் ஆரம்பப் புள்ளி” என்கிறார் தலைமையாசிரியர் சரஸ்வதி.

எங்கே ஆரம்பித்தார்கள்?

தங்களுடைய ‘சீக்ரட் ஆஃப் சக்ஸஸை’ வெளிப்படையாக போட்டு உடைக்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின்.

“முதலில் இந்தப் பள்ளியில் ஒரு மாற்றம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்கிற நம்பிக்கையை மக்கள் மனதில் விதைக்க முடிவெடுத்தோம். எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக இயங்கிவரும் பள்ளி என்றாலும், இங்கே ஆண்டுவிழா நடந்ததே இல்லை.

2009ல் முதன்முதலாக ஊர் பொதுமக்களை கூட்டி ஆண்டுவிழா நடத்தினோம். தங்கள் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகளை கண்டவர்களுக்கு நம் குழந்தைகள் இத்தனை திறமையானவர்களா என்று ஆச்சரியம். வெளியூர்களிலிருந்து தன்முனைப்பு பேச்சாளர்களை அழைத்துவந்து அந்நிகழ்ச்சியில் பேசவும் வைத்தோம்.

முதன்முறையாக பள்ளி சார்பாக இப்படி ஒரு விழா நடந்ததை கண்ட மக்கள், ‘என்னப்பா விஷயம்?’ என்று அக்கறையாக கேட்க ஆரம்பித்தார்கள். எங்கள் கனவை சொன்னோம். ‘நல்ல விஷயம்தானே? செஞ்சுடலாம்’ என்றார்கள்.

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு கிராமக் கல்விக்குழு உண்டு. அவர்களும் எங்களோடு கைக்கோர்க்க, அனுமதிக்கு போய் நிற்கும்போதெல்லாம் தொடக்கக் கல்வி அலுவலர் ஊக்குவிக்க, இன்று எல்லோரும் அதிசயப்படும் பள்ளியை ஊர்கூடி அமைத்திருக்கிறோம்”

நாலு பாராவில் பிராங்க்ளின் சொல்லிவிட்டாலும் ஆசிரியர்களின் இரண்டாண்டு கடினமான திட்டமிடுதலும், உழைப்பும், கல்விக்குழு மற்றும் கிராமமக்களின் பங்களிப்பும் இவ்வெற்றிக்குப் பின்னால் இருக்கிறது.

பளிச்சென்று சர்வதேசத் தரத்துக்கு ஒப்பாக இருக்கும் வகுப்பறை, கணினிப் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, தலைமைத்துவப் பயிற்சி, தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களை வாசிக்கப் பழக்கப் படுத்துதல் என்று போதிப்புத் தரத்தில் அயல்நாட்டுப் பள்ளிகளோடு போட்டிப்போடும் கல்வித் தரத்தையும், கட்டமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள், கழுத்தணி (tie), காலணி (shoe), பெல்ட், அடையாள அட்டை, ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் இணைப்புக் கையேடு (Dairy) அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது.

இங்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு எங்கேயும் இவர்களுக்கு முன்மாதிரி (reference) இல்லை. ஒரு வகுப்பறை எப்படியிருந்தால் நன்றாகயிருக்கும் என்று ஆசிரியர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக சுத்தமான கழிப்பறைகள் உருவாக்கித் தந்திருக்கிறார்கள். சுற்றுச்சுவர் கட்டும் பணி இன்னும் பாக்கியிருக்கிறது. மேலும் கொஞ்சம் நிதி சேர்ந்தால், இன்னும் சில கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.

பல லட்சம் செலவாகியிருக்குமே, இவற்றுக்கெல்லாம் ஆன செலவை எப்படி சமாளித்தார்கள்?

முதல் பங்களிப்பை ஆசிரியர்கள் இருவருமே செலுத்த, கல்விக்குழுவின் ஒத்துழைப்போடு ஊர் மக்கள் செலவினை பங்கிட்டுக் கொண்டார்கள். இந்த முன்மாதிரிப் பள்ளியை உருவாக்க இதுவரை ஆன செலவு தோராயமாக இரண்டரை லட்சம் மட்டும் தானாம்.

கடந்த ஜூன் 15ஆம் தேதி பணிகள் முடிந்து திறப்புவிழா எளிமையாக நடந்தது. இது ஒரு சாதனை என்கிற நினைப்பு அங்கே யாருக்குமே இல்லை. வெளியே தெரிந்தால், அனைவரும் கண்காட்சி போல பள்ளியைக் காண வந்துவிடுவார்களோ, அதனால் குழந்தைகளின் கவனம் சிதறுமோ என்று கவலைப்படுகிறார்கள் ஆசிரியர்கள்.

சரி, இந்த மாற்றங்களால் என்ன பலன்?

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் திரும்பவும் இந்தப் பள்ளிக்கு வருகிறார்கள். “எல்லாமே முற்றிலும் இலவசமா, தனியார் பள்ளியை விட தரமான கல்வி இங்கே கிடைக்கிறப்போ, நாங்க எதுக்கு தனியாருக்கு போகணும்? நாலாவது வரைக்கும் மெட்ரிக்குலேஷனில் படிச்ச என் பொண்ணு யாழினையை, ஐந்தாவதுக்கு இங்கேதான் சேர்த்திருக்கேன்” என்கிறார் சரஸ்வதி வடிவேலு. வேறென்ன வேண்டும்?

தொடக்கக் கல்வி அலுவலகம் மூலமாக, இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரனுக்கு தெரியவந்திருக்கிறது. அவர் ‘திடீர் விசிட்’ அடித்து பள்ளியை சுற்றிப் பார்த்து பாராட்டியிருக்கிறார். “கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போறாருன்னா, நிஜமாவே நாங்க நல்ல விஷயம்தான் பண்ணியிருக்கோமுன்னு புரியுது” என்கிறார்கள் கிராம மக்கள்.

“ஆசிரியர்கள் மாறக்கூடியவர்கள். ஆனால் கிராமமும், பள்ளியும் நிரந்தரமாக இங்கேயே இருக்கக் கூடியவை. பள்ளி, கிராமத்தின் சொத்து என்கிற உணர்வு ஒவ்வொரு கிராமத்தவருக்கும் வேண்டும். முன்பெல்லாம் பள்ளியில் என்ன நடந்தாலும், அதைப்பற்றி மக்களுக்கு பெரிய அக்கறை இருந்ததில்லை. இப்போது சுவரில் யாராவது கிறுக்கினாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்களை மக்களே தட்டிக் கேட்கிறார்கள். எங்கள் மக்களுக்கு கிடைத்த இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்துக்கும் பரவவேண்டும். அடுத்து வரும் ஆசிரியர்களிடமும் இதே அர்ப்பணிப்பை நாங்கள் உரிமையாக தட்டிக் கேட்போம்” என்கிறார் கல்விக்குழு உறுப்பினரான ஆர்.மகேஷ்.
தமிழகத்தின் எல்லாக் கிராம ஆரம்பப் பள்ளிகளையும் இதேபோல செய்ய முடியாதா?

“தாராளமாக செய்யலாம். அந்தந்த கிராம மக்கள், கல்விக்குழு, ஆசிரியர்கள் அனைவரும் சேர்ந்து செய்தால் செய்யலாம். இராமம்பாளையம் பள்ளியை முன்மாதிரியாகக் கொண்டு இப்போதே பணியை ஆரம்பித்தால் கூட, அடுத்த ஆண்டு தமிழகம் முழுக்க 40 சதவிகிதப் பள்ளிகளை இந்த தரத்தை எட்டச் செய்யலாம்” என்கிறார் காரமடை ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.ராஜேந்திரன்.

இதே தரத்தை தொடர்ச்சியாக பரமாரிக்க, கணிசமான நிதி தேவைப்படும். பள்ளியின் தரம் உயர, உயர மாணவர் சேர்க்கை அதிகமாகும். கூடுதல் செலவுகள் ஏற்படும். அதற்கு என்ன ‘ஐடியா’ வைத்திருக்கிறார்கள்?

“ரொம்ப சுலபம். இந்த ஊரில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று வேலை பார்ப்பவர்கள், அரசு வேலைகளில் இருப்பவர்கள், தனியார் நிறுவனங்களில் நல்ல பதவிகளில் இருப்பவர்கள் என்று குறைந்தது நூறு பேரை பட்டியலிட்டு வைத்திருக்கிறோம். இவர்களை வைத்து ‘இராமம்பாளையம் முன்னாள் மாணவர்கள் அமைப்பு’ ஒன்றினை உருவாக்க உத்தேசித்திருக்கிறோம். இவர்களிடம் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயை நன்கொடையாகப் பெறுவது சுலபம். இதன் மூலம் வருடத்துக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும். இப்போதிருக்கும் தரத்தை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்ள இந்த தொகையே மிக அதிகம்” என்கிறார் துணை ஆசிரியர் பிராங்க்ளின். நல்ல ஐடியாதான்.

ஊர் கூடி தேர் இழுத்தால் என்ன பயன், இதுபோல ஒரு பள்ளியை உருவாக்க முடிந்தால், காலாகாலத்துக்கும் ஊர் பெயரை உலகம் பேசுமே?


பள்ளியில் என்னென்ன வசதிகள்?

• மாணவர்கள் குழுவாக அமர்ந்து பாடம் கற்க வட்ட மேசைகள்
• புத்தகங்கள் வைக்க இடவசதியோடு கூடிய நாற்காலிகள்
• தமிழ் – ஆங்கில நூல்கள் அடங்கிய நூலகம்.
• டி.வி.டிகள் அடங்கிய டிஜிட்டல் நூலகம்
• கம்ப்யூட்டர்
• தொலைக்காட்சி – டிவிடி ப்ளேயருடன்
• அறிவியல் ஆய்வு மற்றும் கணிதம் தொடர்பான உபகரணங்கள்
• செயல்வழி கற்றல் அட்டைகளை வாசிக்க வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ள அலமாரிகள்
• ஒலி-ஒளி அமைப்புகள்
• மாணவர்கள் எழுதிப்பலக கீழ்மட்ட பச்சை வண்ணப்பலகை
• படைப்பாற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு காட்சிப்பலகை
• சுத்திகரிக்கப்பட்ட வெந்நீருடன் கூடிய குடிநீர் வசதி
• காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு கண்ணாடி சன்னல்கள்
• குழந்தைகளை கவரும் வகையில் சுவர் ஓவியங்கள்
• உயர்தர தள கட்டமைப்பு
• ஒலிபெருக்கியோடு கூடிய உட்கூரை
• வேலைப்பாடுகள் நிறைந்த மர அலமாரிகள்
• அவசரக்கால வழி, தீயணைப்புக் கருவி, முதலுதவிப் பெட்டி

(நன்றி : புதிய தலைமுறை)

79 கருத்துகள்:

  1. தனியார் மேம்பட்ட பள்ளிகளின் தரத்திற்கு ஏற்றாற்போல் உருவாக்கிய விதத்தில் இவர்களின் உழைப்புக்கு தலை வணங்குதல் ஒன்றே சாலசிறந்தது..

    பதிலளிநீக்கு
  2. ஆசிரியர் தினமான இன்று, இந்த உன்னதமான பணியை மேற்கொண்ட இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் குறுஞ்செய்தி வழியாக உங்கள் வாழ்த்தினை தெரிவிக்கலாமே?

    தலைமை ஆசிரியர் சரஸ்வதி : 9952164582
    உதவி ஆசிரியர் பிராங்க்ளின் : 9942472672

    பதிலளிநீக்கு
  3. லக்கி, மனம் நிறைந்த பதிவு. இது போன்ற ஆசிரியர்களை வெளிச்சம் போட்டு காட்டுங்கள். உங்களது பதிவு எங்கள் பள்ளியை இன்னும் சீர்செய்யும் பணியில் எங்களை இன்னும் முன்னேறச் செய்யும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. ராமச்சந்திரன்!

    உங்கள் பள்ளியை சீரமைக்கும் பணிக்கு இராமம்பாளையம் ஆசிரியர்களிடமும் நீங்கள் ஆலோசனை கேட்கலாம். பணம் வசூலிப்பது தொடர்பான அதிரடி யோசனைகள் அவர்களிடம் இருக்கிறது :-)

    பதிலளிநீக்கு
  5. நானும் வாழ்த்துச் செய்தி அனுப்பிவிட்டேன் :))மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  6. yuva, u r always great,bcoz u always concern about the society, keep it up

    பதிலளிநீக்கு
  7. அருமையான வேலையை செய்திருக்கிறாய் யுவா...

    பதிலளிநீக்கு
  8. இந்த உலகை புரட்டிபோடும் நெம்புகோல் தனிமனிதர்களிடம் இல்லை என நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை..

    Excellent Yuva

    பதிலளிநீக்கு
  9. நெகிழ்ச்சியாக இருக்கிறது யுவகிருஷ்ணா. இந்த மாதிரி ஆசிரியர் இருந்தால் கல்வி வளம் கண்டிப்பாக செழிக்கும். ஆசிரியப் பயிற்சி முடித்திருக்கும் எனக்கும் பின்னாளில் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் போது கண்டிப்பாக இந்த முயற்சிகளை மேற்கொள்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. //ஆசிரியர் தினமான இன்று, இந்த உன்னதமான பணியை மேற்கொண்ட இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் குறுஞ்செய்தி வழியாக உங்கள் வாழ்த்தினை தெரிவிக்கலாமே?

    தலைமை ஆசிரியர் சரஸ்வதி : 9952164582
    உதவி ஆசிரியர் பிராங்க்ளின் : 9942472672//

    எதுக்கு எஸ் எம் எஸ்
    போன் செய்து இருவரிடமும் பேசினேன். அவர்களின் பணிக்காக வாழ்த்தினேன்

    இந்த கட்டுரைக்காக யுவகிருஷ்ணாவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. எல்லா முயற்ச்சியும் தனி மனிதர்களால் தான் நிகழ்த்த படுகிறது.அது மற்றவர்களால் கவனிக்க படும் போது உயர்த்தபடுகிறது.

    பதிலளிநீக்கு
  12. மிக்க மகிழ்ச்சி, இவர்களது சேவை தமிழ்நாடு முழுதும் தேவை. இந்த ஒரு பள்ளியோடு நின்று விடாமல் இவர்கள் பல பள்ளிகள் சென்று இந்த சேவையை புரிய வேண்டுமென நான் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். ஆசிரியருக்கு என் நன்றிகள்.
    இப்படிக்கு
    Chandru

    பதிலளிநீக்கு
  13. இருவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டேன்.
    புதிய தலைமுறைக்கு நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல காரியம் செய்துவருகிறார்கள். நீங்களும் செய்துகொண்டு இருக்கிறீர்கள். வாழ்க!

    ஆசிரியர் இருவருக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பச் சொன்னமைக்கு நன்றி! அனுப்பிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  15. நல்லாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள். அறியச் செய்த உங்களுக்கு நன்றி லக்கி.
    இப்பள்ளி இப்போது தன்னிறைவு அடைந்து விட்டதா? நடப்பாண்டுக்கு இன்னும் ஏதாவது தேவை இருக்கிறதா என்று தெரியுமா?
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  16. இங்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு எங்கேயும் இவர்களுக்கு முன்மாதிரி (reference) இல்லை. ஒரு வகுப்பறை எப்படியிருந்தால் நன்றாகயிருக்கும் என்று ஆசிரியர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

    அருமையான பதிவு.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு! நெஞ்சார்ந்த பாராட்டுகள், ஆசிரியர்களுக்கும், உழைத்த அனைவருக்கும். பதிவிட்ட உங்களுக்கும். :)

    பதிலளிநீக்கு
  18. மிக்க மகிழ்ச்சியான செய்தி. இதைப் போல் எல்லா பள்ளிக்கூடங்களும் சிறப்பாக செயல்பட என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த ஆசிரியர் தின நாளில் இந்த தலைமை ஆசிரியருக்கும், துணை ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. சிலிர்க்க வைக்கும் சாதனை. அதனை வெளியுலகத்துக்கு எடுத்துச் செல்லும் நல்ல கட்டுரை. Congratulations.

    பதிலளிநீக்கு
  20. படிக்கும் போதே சந்தோஷமாக இருக்கு.
    அவர்களுக்கு வாழ்த்துகள்.பதிவிட்டு
    தெரியபடுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. Awesome!! I am from mettupalayam and I live in bangalore... Never heard of this before!!!! Mind blowing...

    Hats off to you guys!!!

    பதிலளிநீக்கு
  22. கல்விக்குழு என்று ஒன்று இருப்பதே இதுவரை தெரியாது!

    பதிலளிநீக்கு
  23. பாராட்டப்படவேண்டிய பள்ளி, நிர்வாகிகள். மணம் நிறைந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. பாஸ்டன் ஸ்ரீராம், இன்னும் அவர்களுக்கு கொஞ்சம் நிதியுதவி தேவைப்படுவதாகவே தெரிகிறது. ஆசிரியர் பிராங்க்ளின் எண் : 9942472672. நீங்களே நேரடியாகப் பேசிப் பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  25. நல்ல செய்தி. குறுஞ்செய்தி மூலம் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம்,

    உண்மையிலேயே நல்லது செய்ய

    வேண்டும் என நினைப்பவர்கள்,

    தேவையற்ற பொருளை வாங்கி

    பணத்தை வேஸ்ட் செய்யாமல்

    நம்மால் முடிந்ததை இது போல்

    கிராம பள்ளிக்கு கொடுத்து

    உதவலாமே. குறிப்பாக பண்டிகை

    காலங்களில் பட்டாசு, இன்னும் பல

    தேவையற்ற பொருள்களில் காசை

    வீணாக்காமல் பள்ளிகளுக்கு சென்று

    தேவையானப் பொருட்களை வாங்கிக்

    கொடுக்கலாம். பெரும்பாலான மக்கள்

    சீட்டு, மற்ற எதிலாவது போட்டு

    ஏமாறாமல் இதுப்போல் நல்ல

    காரியங்கள் செய்யலாமே.


    நன்றி,

    chitra.sekaran@gmail.com

    பதிலளிநீக்கு
  27. ஆசிரியர் தினமான இன்று, இந்த உன்னதமான பணியை மேற்கொண்ட உங்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்!!
    மிக்க மகிழ்ச்சியான செய்தி..,யுவகிருஷ்ணா!!!

    எல்லா முயற்ச்சியும் தனி மனிதர்களால் தான் நிகழ்த்த படுகிறது.அது மற்றவர்களால் கவனிக்க படும் போது உயர்த்தபடுகிறது.

    இதைப்போல், தமிழ்நாடு முழுதும் எல்லா பள்ளிக்கூடங்களும் சிறப்பாக செயல்பட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இந்த ஆசிரியர் தின நாளில் இந்த தலைமை ஆசிரியருக்கும், துணை ஆசிரியருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    Sorry for re-publishing the same post in my blog without your permission, I got it from GTN Group email.

    http://dmk-jobs.blogspot.com/2011/09/blog-post_05.html

    http://dmk-jobs.blogspot.com/2011/09/blog-post_05.html

    பதிலளிநீக்கு
  28. Its really nice to see this kind of changes..Soon things will change everywhere...Good start all the best...

    பதிலளிநீக்கு
  29. Yuva,
    please try to refer their names to the appropriate authority for geting "Nallasiriyar viruthu" for their Hardwork and peactical thinking and innovations.
    maduraisuki

    பதிலளிநீக்கு
  30. அருமையான விஷயம்...... வாழ்த்துக்கள் அந்த ஆசிரியர்களுக்கு, இதுபோன்று தமிழம் முழுதும் வரவழி வகுப்போம்.....!

    பதிலளிநீக்கு
  31. ரொம்ப அழகா சொல்லிருகீங்க. இப்படி அணைத்து அரசு பள்ளிகளும் வளர்ந்தால் நலமாக இருக்கும். நாங்கள் படிக்கும் போது இத்தகைய வசதிகள் இல்லை. ஏன் பள்ளியே பகுதி நேரம் தான் நடைபெறும். பள்ளிகள் குறைவு அதற்க்கு காரணமாக அமைந்தது. பகிர்வுக்கு நன்றி....

    பதிலளிநீக்கு
  32. அன்புள்ள யுவகிருஷ்ணன்,
    இந்த கட்டுரையை படித்து முடிக்கும்போது கண்ணீர் விடாத வாசகர்களே இருக்க முடியாது.அற்புதம்.இதை விட ஆசிரியர் தினத்திற்கு யாரும் மரியாதையை செலுத்த முடியாது.
    எனக்கு ஒரு சிறு ஐயம.இது நீங்கள் புதிய தலைமுறை இதழில் எழுதியதா?இல்லையெனில் இதை எழுதியவர் யார்?
    உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
    வணக்கம்.

    பதிலளிநீக்கு
  33. hard work, strong decision, contribution, cooperation, perfection and god grace make the school with teachers to attain the peak.

    பதிலளிநீக்கு
  34. Awesome Job. Hats off to everyone who has been a part of this achievement. Tks for bringing this to everybody's notice.

    பதிலளிநீக்கு
  35. Hats off to everyone who has been a part of this achievement. Tks for bringing this to everyone's notice.

    பதிலளிநீக்கு
  36. இங்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு எங்கேயும் இவர்களுக்கு முன்மாதிரி (reference) இல்லை. ஒரு வகுப்பறை எப்படியிருந்தால் நன்றாகயிருக்கும் என்று ஆசிரியர்கள் ஆசைப்பட்டதை எல்லாம் செய்திருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  37. Great job, they may be pioneer for others.

    Thanks for this post.

    பதிலளிநீக்கு
  38. My wishes for your desired goals achieved by the Teachers and also to the people who have supported for there commitment , involvement and contribution. In our country if the people have proper communication we can implement this kind of attitudes to every departments e.g like hospital, education, agriculture.
    Regards
    Karthik

    பதிலளிநீக்கு
  39. very great and my hearty congratulations to that school teachers for their dedication and hardwork.
    Before seeing this message , i also started annual day and sports day in our village (thenpazhanchi, madurai)elementary school.
    After seeing this message, i am still motivated. I will inform to our village school teachers about this school.
    But still many teachers are not interested. " pasanga" moview also almost told about this. Sports day and annual day will show the students talent.

    I started giving donation Rs1000 every year. I hope, oneady our village school also will become like your school.

    பதிலளிநீக்கு
  40. great work, I heard about that when i was studied in SRI Ramakrishna mission

    பதிலளிநீக்கு
  41. i am surpraised to see this. they should be awarded nicely. words are not enough to congragulate them. we should donate and tell others also to do something useful . great teachers! welldone!

    பதிலளிநீக்கு
  42. Great charity work. I am very happy that still humanity exists in the form of such service-minded people. I am ready to help such people. rajeshlane@gmail.com

    பதிலளிநீக்கு
  43. ரொம்ப நல்லது

    பதிலளிநீக்கு
  44. its a really gud job...hats off both of the teachers...do well ur jobs nt only here the credit wil reach u soon...im also came from the government school n colleges..i have the some ideas to rebuild my schools in higher levels..thx to gave a awareness to everyone....

    பதிலளிநீக்கு
  45. யுவகிருஷ்ணா,
    கட்டுரைக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்!!
    இரு ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு எங்கள் அமைப்பின்(http://sites.google.com/site/mitrahands/happenings-௧) மூலம் முடிந்த உதவிகள் செய்வதாக வாக்களித்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  46. Hats off to the teacher. Let this hardwork spread through out the country

    பதிலளிநீக்கு
  47. neengal thaan oru unmayaana tamizan anna; kaaranam ippadi oru kalvi uruvaaki irukkireergale ungalukku oru vanakkam; neengal thaan "KALVI KULA MAANIKKAM"


    ippadikki

    sadhasivam

    பதிலளிநீக்கு
  48. neengal thaan "KALVI KULA MAANIKKAM"


    UNGALUKKU ORU VANAKKAM



    ippadikku

    sadha

    பதிலளிநீக்கு
  49. Great.. Nothing is impossible...! They are the living legends.. I understand their difficulties to achieve this...

    Good job.. Keep it up..!

    பதிலளிநீக்கு
  50. அருமை...பாராட்ட வார்த்தையில்லை..இப்படியெல்லாம் ஈடுபாட்டோடு நல்லது செய்யும் இவர்கள் அனைவருக்கும் ஒரு வழிகாட்டி...நமக்கென்ன என்று இல்லாமல் ஏதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ள தலைமை ஆசிரியை மற்றும் துணை ஆசிரியரையும் வாழ்த்த வார்த்தையில்லாததால் வணங்குகிறேன்..உங்கள் சேவை சிறக்க இறை அருள் கிட்டட்டும்..

    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  51. Here is also a government school like this in Pattathi palayam, Mulanur union Thiruppur district. our wishes to all the teachers.

    பதிலளிநீக்கு
  52. சூப்பர் மிகவும் நல்ல விசயம்.


    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  53. Mazhalai il asai konden nalla kalvi vendumendru kidaikavillai, andru panam illaye endru varundhinen. Indru panam mattume kalviyanadhu padippillai Oor adhangam. Ungal palli il Ippadi oru munnetrama Manam kulirndhadhu, Nalai Pookkum Malarukku Kalvimanam dhondratum Endrum ungal sevai dhodarattum anbudan vazhthukirom.

    பதிலளிநீக்கு
  54. unmailae intha palliyil irunthu nichiyam thalai sirantha vallunargal, thalaivargal, naatai mun nadathi sellum perarivu kondavargalaga ippalliyil padikum maanavargal vilanguvargal endru aani tharamaga koorugiren athu mattum allamal antha kiramamae sianthu vilangum endru nanudaya karuthukalai pathivu seigiren

    பதிலளிநீக்கு
  55. பெயரில்லா12:59 PM, மே 08, 2012

    superb.........
    Awesome........

    பதிலளிநீக்கு