27 செப்டம்பர், 2011

மொக்கை ஃப்லிம் க்ளப்

2007 இறுதியா அல்லது 2008 ஆரம்பமா என்று சரியாக நினைவில்லை. மொக்கைப் படங்களின் படுதீவிர ரசிகர்களான நானும், தோழர் கிங் விஸ்வாவும் திடீரென அறச்சீற்றம் கொண்டோம். உப்புமா படங்களை மக்கள் தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பதில்லை. திருட்டு டிவிடியிலோ அல்லது டிவியிலோ பார்த்துத் தொலைத்து விடுகிறார்கள். மொக்கைப்பட தயாரிப்பாளர்களின் வீட்டு கேஸ் ஸ்டவ்வில் பூனைகள்தான் தூங்குகிறது. ஏதாவது செய்யணும் பாஸூ.

இந்த சீரிய சிந்தனையின் விளைவாகதான் தொடங்கப்பட்டது மொக்கை ஃப்லிம் க்ளப். எத்தகைய மரண மொக்கைப் படமாக இருந்தாலும் சரி. முதல் நாளே தியேட்டருக்குச் சென்று, சூப்பர் ஸ்டார் படங்களுக்கான ஆரவாரத்தோடு ரசிப்பது என்பதை எங்கள் கொள்கையாக வரையறுத்தோம். தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று மொழிபாகுபாடின்றி மொக்கைப்படங்களை ஆதரிப்பது என்பதாக சபதமும் மேற்கொண்டோம். குறிப்பாக தோழர் கிங்விஸ்வா தெலுங்கு மொக்கைப்படங்களின் தீவிர வெறியர். பிரின்ஸ் மகேஷ்பாபுவின் ஒக்கடு ரிலீஸ் ஆனபோது அவரது ஈமெயில் ஐடி பிரின்ஸ்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக இருந்தது. நாகார்ஜூனாவின் ‘கிங்’ ரிலீஸின் போது கிங்விஸ்வா@ஜிமெயில்.காம் ஆக உருமாறியது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மரணமொக்கைப் படங்களாக தேர்ந்தெடுத்து, கண்டுகளித்து வலைப்பூவில் விமர்சனம் எழுதி, மற்றவர்கள் தாலியறுப்பது எங்கள் திட்டம்.

உன்னத நோக்கத்தோடு தொடங்கப் பெற்றாலும், ஆரம்பத்தில் க்ளப் ரொம்ப மொக்கையாகவே செயல்பட்டது. ஆளே இல்லாத தியேட்டர்களுக்கு போய் எக் பஃப்ஸ் சாப்பிட்டோம். பிற்பாடு தோழர் அதிஷாவும் எங்கள் க்ளப்பில் இணைந்தபிறகு சூடு பிடிக்க ஆரம்பித்தது. உட்லண்ட்ஸ், காசினோ, மோட்சம், பைலட், கிருஷ்ணவேனி, அண்ணா, கே.கே.நகர் விஜயா போன்ற ரெண்டுங்கெட்டான் தியேட்டர்கள்தான் எங்களுக்கு வேடந்தாங்கல். மொக்கைப் படங்கள் என்று தேர்ந்தெடுத்துப் பார்க்கும் சிரமத்தை எங்களுக்கு தராமல், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் எல்லாப் படங்களுமே மொக்கையாக அமைந்துவிட்ட காரணத்தால், தேர்ந்தெடுக்கும் பணி சுளுவானது. இன்றுவரை நாங்கள் பார்த்த படங்களிலேயே சிறந்த மொக்கைப் படமாக ‘பொக்கிஷம்’ விளங்குகிறது (கருமாந்திரத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் பார்த்தோம் என்பது குறிப்பிடத்தக்கது).

அதற்குப் பிறகு எங்களது வட்டம் விரிவடைந்தது. கவிஞர் தா.பி. அவராகவே கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு வந்து சேர்ந்தார். அதிர்ஷ்டவசமாக அவர் வந்தபிறகு தொடர்ச்சியாக நாங்கள் பார்த்த படங்கள் அனைத்துமே ‘சன்பிக்சர்ஸ் கலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும்’ படங்கள் என்பதால் மொக்கை சூடு பிடித்தது. சன்பிக்ஸர்ஸின் படங்கள் அவரது கவிதைகளைவிட மொக்கைகளாக அமைந்ததை கவிஞரால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை தோறும், நாங்கள் போன் செய்து கூப்பிடும்போது கவிஞருக்கு டைபாய்டும் வந்து தொலைத்தது. கோயமுத்தூரிலிருந்து புளிச்சோற்றை மூட்டை கட்டிக்கொண்டு டாக்டர் அ.கொ.தீ.க.வும் சென்னைக்கு வந்து, அவ்வப்போது மொக்கைப்பட ஜோதியில் கலந்துகொண்டார். பைலட் தியேட்டருக்கு அழைத்துப்போய் ஹாலிவுட் தமிழ் டப்பிங் மொக்கைகளை ரெண்டு பீஸு சாம்பிள் காட்டியதிலிருந்து, அலுவலகரீதியாக கூட இப்போதெல்லாம் டாக்டர் சென்னைக்கு வருவதில்லை.

சமீபத்தில் ஆறு மாத காலத்துக்கு முன்பாக நம் க்ளப்பில் இணைந்தார் சூப்பர் ஸ்டார் தியேட்டர் டைம்ஸ். இயல்பாகவே இவரிடம் மொக்கைத்தன்மை கைகூடி இருந்ததால், எங்கள் க்ளப்பின் அசைக்க முடியாத ஆணிவேராக அமைந்தார். தமிழ்ப்படம் பார்ப்பதாக இருந்தாலும் கூட இவருக்கு சப்-டைட்டில் அவசியம். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஸ்பானிஷ், பிரெஞ்சு, மாண்டரீன் என்று எந்த மொழியுமே இவருக்குப் புரியாது என்பதுதான் இவருடைய ஸ்பெஷாலிட்டி. படுசோகமான காட்சிகளில் விழுந்து விழுந்து சிரிப்பதும், வயிற்றைப் பதம் பார்க்கும் காமெடிக் காட்சிகளை உருகிப் போய்ப் பார்ப்பதுமாக இவரது ரசனையே அலாதியானது.

எங்கள் டீமுக்கு லேட்டஸ்ட் வரவு நரேன். அல்பசினோ, ராபர்ட் டீநீரோ, டிண்டோ ப்ராஸ் என்று ஆங்கிலமாய் அலட்டிக் கொண்டிருந்தவரை, “வாய்யா முனி பார்க்கலாம்” என்று உட்லண்ட்ஸுக்கு தள்ளிக்கொண்டு போனோம். இப்போது ‘மங்காத்தா ஈஸ் த பெஸ்ட் மூவி இன் த வேர்ல்டு. ஒய் ஐ சே திஸ்...’ என்று பெசண்ட் நகர் பரிஸ்டாவில், பீட்டர்களோடு பீலா விட்டுக் கொண்டிருக்கிறார்.

மொக்கை ஃப்லிம் க்ளப்புக்கு இதுவரை பொருளாதாரரீதியான பிரச்சினைகள் ஏதும் வந்து தொலைக்கவில்லை. ஏனெனில் ஒன்று முதல் பத்து தேதிகளுக்குள் 50 ரூபாய் டிக்கெட், பத்து முதல் இருபது தேதிகளுக்குள் 30 ரூபாய் டிக்கெட், இருபது முதல் முப்பது தேதிக்குள்ளாக இருந்தால் 10 ரூபாய் டிக்கெட் என்று பக்காவாக பட்ஜெட் போட்டு படம் பார்க்கிறோம்.

க்ளப்பில் சேர விரும்பும் திரைப்பட ஆர்வலர்கள் திறந்தமனதோடு வரவேற்கப்படுகிறார்கள். ஒரே ஒரு கண்டிஷன். இந்த க்ளப்பின் உறுப்பினர் கடுமையான மொக்கைச்சாமி என்பதற்கான போதுமான சான்றிதழ்களும், சம்பவங்களும், தரவுகளும் அவசியம்.

எங்கள் மொக்கை ஃப்லிம் க்ளப் சோர்வில்லாமல் இயங்கிவருவதற்காக, மிகச்சரியான இடைவெளிகளில் குருவி, வில்லு, வேட்டைக்காரன், காவலன் என்று மொக்கைப்படங்களாக நடித்துத் தள்ளுபவரும், எங்களை வாழவைக்கும் தெய்வமுமான டாக்டர் அணிலுக்கு கோடானுகோடி நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

லேட்டஸ்ட் மொக்கை டிப்ஸ் : மொக்கைப் படங்களுக்கு சிகரமாய் லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் ஹாலிவுட் தமிழ் டப்பிங் திரைப்படம் ஏலியன்ஸ் விஸ் அவதார். இப்படத்தைக் காணநேரும் மொக்கைரசிகர்களுக்கு நெஞ்சிலிருந்து (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) ரத்தம் வழிவது நிச்சயம். படம் பார்க்கும்போது கையில் பஞ்சும் அவசியம். எனவே, காணத்தவறாதீர்கள்!

29 கருத்துகள்:

  1. motcham pakkam vandha neenga.. Yean kosappettai mahalakshmi theatre ku vandhu power star naditha LATHIKA vai parkala.. Indha theatre la 175 naal naanga vetrikaramaaga ooti enga mokkai thanmaiyin aalumaiayi nirubithom..! Innum Saravana-Balaji nu otteri la kodi katti rendu theatre irukku..! Namma club formku munbirundhe perum sevai seidhu kondu irukku.. Marandhurathinga..!

    பதிலளிநீக்கு
  2. மொக்கை கிளப்பில் மருத்துவ செலவுக்கு பணம் தருவீர்களா?

    பதிலளிநீக்கு
  3. குசேலனை பத்து தடவை பார்த்து ரசித்தேன்.... அங்கத்தவர் ஆக இந்த தகுதி போதுமா?

    பதிலளிநீக்கு
  4. ஐயோ பாவம் விஜயை விட்டுடுங்க சார்

    பதிலளிநீக்கு
  5. //"மொக்கை ஃப்லிம் க்ளப்"//

    நானும் இதுல சேந்துக்கலாமா?

    பதிலளிநீக்கு
  6. சிரித்துக் கொண்டே படித்தேன். //எல்லாப் படங்களும் மொக்கையாக வருவதால் எங்கள் வேலை சுளுவானது//

    ஹா ஹா.

    பதிலளிநீக்கு
  7. அண்ணன் நன் வீராசாமி படத்த முதல் நாள் தியேட்டர்ல போய் பாத்துருக்கேன் இந்த தகுதி போதுமா கிளப்ல சேரதுக்கு

    பதிலளிநீக்கு
  8. கிளப்-ல் சேருவதற்கு ஃபார்ம் எங்கு கிடைக்கும்...???

    பதிலளிநீக்கு
  9. நானும் முழுமனதோடு சேர்கிறேன்.
    அஜித்தின் ரெட் படத்தில் இருந்து தொடங்கி , சிம்புவின் அலை ,தனுஷின் மாப்பிள்ளை , விஜயின் எல்லா படங்களும் பார்த்த தகுதி எனக்குண்டு.

    ஒரு விஷயம் ? தளபதியை அணில் என்று அழைக்கும் காரணம் என்ன கிருஷ்ணா ? புது உறுப்பினருக்கு ஏற்பட்டுள்ள இந்த ஐயத்தை விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. நானும் வரலாம்னு இருக்கேன்..

    நான் மொக்கை என்பதற்கு ஆதாரம் தேவையா என அறியப்படுத்துங்கள்.

    வேலாயுதத்தில் இருந்து இணைந்துக் கொள்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  11. தலைவா.. நான் லத்திகா பார்த்திருக்கிறேனே.. ஹி..ஹி..

    பதிலளிநீக்கு
  12. லத்திகாவுல டாக்டருக்கு ஒரு செம ரொமான்ஸ் சீன் இருக்கும்.. இண்ட்ரோவே அதுதான்.. ஹி,,ஹி..

    பதிலளிநீக்கு
  13. "நெஞ்சிலிருந்து (ஸ்பெல்லிங் மிஸ்டேக்)"... ஹா ஹா.

    "குருவி, வில்லு, வேட்டைக்காரன், காவலன்..." சுறாவை விட்டுட்டீங்களே பாஸ். நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அணில் கடலில் இருந்து டால்பின் மாதிரித் தத்தித் தத்தி வரும் அந்த ஆ"ரம்ப"க் காட்சிக்காகச் சொத்தையே எழுதி வைக்கலாமே.

    பதிலளிநீக்கு
  14. wow , excellent writing yuva . . .
    i really enjoyed . . . cant stop laughing , yuva rockzssss . .

    பதிலளிநீக்கு
  15. Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.

    Oh my god , இங்க இது வேற இருக்கா?
    இத பார்க்காம நான் கமெண்ட் போட்டுடேனே . .
    இதுகாகதானே நான் ஒரு பதிவே போட்டேன் . .

    ஏன் கமெண்ட் மொடேரசியன் ? ( why comment moderation? )

    லிங்க் : http://rockzsrajesh.blogspot.com/2011/03/why-comment-moderation.html

    பதிலளிநீக்கு
  16. தலைவரின் வீராச்சாமி படத்தை பாட்டு கூட ஓட்டாமல் 7-8 தடவை (K TVல் பார்த்தது இந்தக் கணக்கில் வராது) பார்த்திருப்பேன். வானத்த போல, நரசிம்மா, தவசி போன்ற படங்கள் என் ஆல் டைம் பேவரைட். வீராச்சாமி குறுந்தகடு (original) கேட்டு lakshman shruthi கடை ஊழியர்களால் தூக்கி வெளியே கடாசப்பட்டவன்...

    இந்த தகுதி போதுமானதாக இல்லையென்றால், அடுத்த பின்னூட்டத்தில் இன்னும் சிலவற்றை குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. நம்ம கார்க்கி இந்த கிளப்ல உறுப்பினர் இல்லையா?

    பதிலளிநீக்கு
  19. பதிவுக்கு நன்றி........
    தொடர்ந்து எழுதுங்கள்.....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  20. மொக்கைகளின் அகில உலக சூப்பர் ஸ்டார்
    சீனிவாசனின் லத்திகா வை
    அவரோட சிரிப்புக்காக ௧ 1 தடவ
    அவரோட மூக்கு ,சண்டைகக பாத்து
    2 தடவ பாத்தேன் இது போதுமா
    மொக்க கிளப் ல சேரதுக்கு

    பதிலளிநீக்கு
  21. டூக்குடு விமர்சன பதிவிலேயே சந்தேகம் வந்தது... யார்ரா அந்த அணில் என்று... இன்றுதான் தீர்ந்தது... அணில் - பெயர்க்காரணம் கூறுக.

    பதிலளிநீக்கு
  22. உங்களுக்கு ஓர் எச்சரிக்கை.. கார்க்கி தனியா உங்ககிட்ட பேசணும்னு கூப்பிட்டா போயிடாதீங்க... கொலவெறியோட உங்கள தேடறதா கேள்வி..

    பதிலளிநீக்கு
  23. வாழ்த்துக்கு நன்றி !!!
    இப்படிக்கு,
    அணில் ரசிகர் மன்றம் தலைவர் (& அவங்க அப்பப்பா..)

    அப்பா பாத்துகோ இப்படி கூட மக்களை குஜால் பண்ணலாம்..

    பதிலளிநீக்கு
  24. //****ஒரு விஷயம் ? தளபதியை அணில் என்று அழைக்கும் காரணம் என்ன கிருஷ்ணா ? புது உறுப்பினருக்கு ஏற்பட்டுள்ள இந்த ஐயத்தை விளக்குவீர்கள் என்று நம்புகிறேன்.***************//

    ஹனுமார்க்கு அணில் உதவியதை போல அம்மாவின் வெற்றிக்கு நாமும் ஒரு காரணம்னு பேட்டி கொடுத்தார் மருத்துவ தளபதி திரு விஜய்

    பதிலளிநீக்கு
  25. unga article padu mokka vera yethavathu try pannunga

    பதிலளிநீக்கு
  26. என்னை விட்டுட்டு 'Force' பாக்க போன கிளப் நாகரீகம் தெரியாத மொக்கை நண்பர்களுக்கு....

    நான் ஊருக்குப்போறேன்.....

    பதிலளிநீக்கு
  27. என்னை விட்டுட்டு Force படம் பாக்கப்போன மொக்கை நண்பர்களே...

    ஒன்னு சொல்றேன்...


    நான் ஊருக்கு போறேன்...

    பதிலளிநீக்கு